ஞாயிறு, 10 அக்டோபர், 2010
வடக்குமாங்குடி ஜமாஅத் ஒரு பார்வை.......
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்காவை சேர்ந்த வடக்குமாங்குடி ஓர் சிறிய கிராமமாக திகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய குடும்பங்களை சுற்றி இன்ன பிற சமுதாய மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த ஊரின் கடந்த கால வரலாற்றை பார்தோமையானால் சில சங்கடமும் மகிழ்ச்சியும் இருக்கும் அதன் வரிசையில் இந்த சிறிய விளக்கத்தை நாம் அறிவோம். இந்த ஊர் ஜமாஅத் தலைவராக கடந்த காலங்களில் இருபது வருடத்திற்கு மேல் பள்ளிக்குடத்தார் யூசுப் ராவுத்தர் என்பவர் இருந்து வந்தார்கள் அந்த காலங்களில் இந்த ஊருக்கு என்று சில பெருமைகள் உண்டு.ஹிந்து முஸ்லிம் என்று அனைவரின் பிரச்சனைகளையும் இவரிடம் சொல்லித்தான் தீர்த்து வைப்பார்கள்.காவல் நிலையம் செல்லும் பேச்சிற்கே இடம் இல்லாத காலமாக இருந்து வந்தது இவர் சொல்லும் சொல்லிற்கு கட்டுப்பட்டு இந்த ஊரின் நலனுக்காக பாடுபட்டார்கள்.இவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தன்னுடைய தலைவர் பொறுப்பை இன்று அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவராகவும் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவராகவும் இருக்கின்ற சுலைமான் பாட்சா அவர்களிடம் ஒப்படைத்து விட்டு யூசுப் ராவுத்தரும் சில காலம் கழித்து இறந்தும் விட்டார்கள் . அதன் பின் ஊரும் ஒற்றுமையோடு திகழ்ந்தது சிறிய,பெரிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் ஜமாஅத் தலைவர் முன்னின்று தீர்த்து வைப்பார்கள் இது தான் காலந்தொட்டு நடந்து வந்தது .கடந்த 2004ம் ஆண்டு இந்த ஊரில் இருக்கின்ற சிலர் ஜமாஅத் கணக்கு வழக்குகளை கேட்க ஆரம்பித்தார்கள் அவர்களிடமும் ஜமாத்தார்களின் முன்பாகவும் கணக்குகளை சமர்பிக்காமல் கணக்குகேட்பவர்களை அடையாளம் கண்டு இவர்கள் எல்லாம் தவ்கீது வாதிகள் என்று அன்றைக்கு இருந்த 13 பேரை மட்டும் ஊர்நீக்கம் என்ற பெயரில் நீக்கினார்கள் அதற்கும் நாம் ஒன்றும் சொல்லாமல் தனி ஜமாத்தாக செயல் பட ஆரம்பித்தோம் அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையால் இன்று நூறுக்கும் மேற்பட்ட தவ்கீத் வாதிகள் தனி ஜமாத்தாக செயல் படும் அளவிற்கு இரண்டு இடத்தில் தொழுகை நடைபெறும் சூழ்நிலை இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தான் சுலைமான் பாச்சாவை சில ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பிடிக்காமல் போக (தவ்கீத் வாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்) என்று சிலரின் தவறான எண்ணத்தோடு அவரின் பதவியை ராஜினாமா செய்ய நேரிடுகிறது. பிறகு ஒரு பொம்மை ஜமாத்தாக சிலரை தெரிந்தேடுக்கிரார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில் செயல் பட முடியாது இவர்கள் பெயர் தாங்கிய நிர்வாகிகள் தான். ஆனால் இவர்களை நிர்வகிக்கும் பொறுப்பு வடக்குமங்குடி ஜமாத்தை சேர்ந்த துபாய் நிர்வாகிகள் தான் .ஊரில் இருக்கும் ஜமாஅத் நிர்வாகம் ஒரு டம்மியான பொம்மைநிர்வாகமாகத்தான் செயல் பட முடியுமே தவிர இவர்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத சூழ் நிலை இன்று நிகழ்ந்து வருகிறது. இந்த ஊரில் இருக்கும் தவ்கீத் ஜமாத்தின் இல்லங்களில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் இந்த ஊர் நிர்வாகிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் அப்படி மீறி கலந்து கொண்டால் உடனே அவர்களையும் ஊர் நீக்கம் செய்து விடுவார்கள், சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் இருக்கின்ற சமையல் தளவாட பொருள்கள் கூட வாடகைக்கு தவ்கீத் வாதிகளுக்கு கொடுக்க மாட்டார்கள் ஏன் என்றால் (அது எல்லாம் இவர்களின் பாட்டன் பூட்டன் சொத்து என நினைத்து) .அண்மையில் முன்னாள் தமிழ்நாடு தவ்கீது ஜமாஅத் கிளை நிர்வாகி முகம்மது ஆரிப் என்பவர் இறந்ததற்கு கூட வந்தவர்கள் அமருவதற்கு கூட பள்ளிவாசல் நாற்காலி கொடுக்க கூடாது என தீர்மானம் போட்டவர்கள் தான் இந்த ஊர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் ஜனாஸா தொழுகை நடத்த பள்ளிவாசலில் இடம் கிடையாது என சொல்லி ஜனாசாவையும் புறம் தள்ளியவர்கள் தான் இந்த ஜமாஅத் நிர்வாகிகள் பிறகு காவல் துரையின் கவனத்திற்கு கொண்டு சென்று அதே பள்ளியின் வெளிபக்கத்தில் வைத்து நம்முடைய சகோதரர்கள் தொழுகை நடத்தி அடக்கம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது... த மு மு க மற்றும் த த ஜ வை ஏற்றுக்கொள்ளாத இந்த ஜமாஅத் நிர்வாகிகளை நாம் என்ன சொல்வது? கூடிய விரைவில் இந்த ஜமாத்தை வக்ப் வாரியத்தில் சேர்த்தால் இதை போன்ற பிரச்சனைகள் வராமலிருக்கும். வக்ப் முறைப்படி தேர்தல் நடந்து அதிலே த மு மு க, த த ஜ போன்ற அமைப்பின் உறுப்பினர்கள் அந்த ஜமாத்தில் அங்கம் வகித்தால் இதை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் ..த மு மு க , மற்றும் த த ஜ வை சேர்ந்தவர்கள் இந்த ஊர் விசயத்தில் ஒற்றுமையாக இருந்து விரைவில் இந்த ஊர் ஜமாத்தை வக்ப் வாரியத்தில் சேர்ப்பதற்கு ஆவணம் செய்ய சில யோசனைகளை ganyelahi@yahoo.com என்ற ஈமெயில் முகவரிக்கு தங்களின் யோசனைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.வெளி உலகம் தெரியாத சிலர் இந்த ஜமாத்தின் நிர்வாகிகளாக இருப்பதுதான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பதையும் சற்று புரிந்துக்கொள்ள வேண்டும்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)