செவ்வாய், 19 அக்டோபர், 2010

காதல் வார்த்தைகளை அள்ளி வீசி பள்ளி மாணவிகளை ஏமாற்றும் இளைஞர்கள்!!

நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர்.



நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா?

இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒரு விதபதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர்.



விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூசன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.



வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள்.



பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள்.

அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா...? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள்.



காலையில் பெற்றோர் வந்து பஸ் அனுப்பி வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள்.

உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.



ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர்.



அதோடு மட்டுமல்லாமல் சில வக்கீர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள்.



படிப்பு சுமையே மாணவி களை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.



காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.



அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் சட்டவாரியம் வழக்கு!

பாப்ரி மஸ்ஜித் நில வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்திருக்கிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோயில் கமிட்டி, நிர்மோகி அகாரா, பாபர் மசூதி கமிட்டி ஆகிவற்றுக்கு வழங்க வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது.இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயல் கமிட்டிக் கூட்டம் லக்னௌவில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு வாரியத்தின் தலைவர் மௌலானா ரபே ஹாஸ்னி நட்வி தலைமை வகித்தார். அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது."அலாகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்டிருக்கும் தடைகளை அகற்றுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது இந்திய முஸ்லிம்களின் உரிமை" என இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்ததாகவும். அதனால், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பிரச்னையை பேச்சுமூலம் சுமுகமாகத் தீர்ப்பதற்கு முகமது ஹாசிம் அன்சாரி மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் வரவேற்பில்லை.

குறுஞ்செய்திகளை(SMS) 6 மாததிற்கு சேமிக்குமாறு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

செல்பேசிகளின் வாயிலாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை குறைந்தது 6 மாதத்திற்காவது சேமித்து வைக்குமாறு செல்பேசி நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.செல்பேசிகளின் வாயிலாக பரிமாறிக்கொள்ளப்படும் குறுஞ்செய்திகள் பாதுகாப்புத் தொடர்பான தேவைகளுக்கு அத்தியாவசியமானது என்றும், அதனை குறைந்தது 6 மாத காலத்திற்குச் சேமித்து வைப்பது அவசியம் என்றும் உளவு அமைப்புகள் கருதுவதால் இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தியா முழுவதும் 70 கோடிப் பேர் செல்பேசிகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் நாள் ஒன்றிற்கு 13 முதல் 15 ஆயிரம் கோடி குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது குறிப்பிட்ட எண்களில் பரிமாறிக்கொள்ளப்படும் குறுஞ்செய்திகளை மட்டும் ‘சட்டப்பூர்வ’மாக உளவு அமைப்புகள் ஆய்வு செய்கின்றன.
ஆனால் அது போதவில்லை என்ற காரணத்தால் எல்லா குறுஞ்செய்திகளையும் 6 மாதத்திற்கு சேமித்து வைக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இது தங்களுடைய இயக்கச் செலவை கடுமையாக அதிகரிக்கும் என்று கூறியுள்ள செல்பேசி நிறுவனங்கள், இதற்கு ஆகும் செலவை தாங்கள் பயனாளர்களிடமிருந்தே வசூவிக்க வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளனவாம்.செல்பேசி மற்றும் தொலைபேசி தொடர்பான தனிமைக் கொள்கையை சட்டப்பூர்வமாக அரசு வரையறை செய்ய வேண்டும் என்று அரசிடம் செல்பேசி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

இதுமட்டுமின்றி, செல்பேசியில் அழைப்பவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை 50 மீட்டர் சுற்றளவிற்குள் துல்லிமாகக் கண்டுபிடிக்கும் இ911 அதி நவீன வசதிகளை எல்லா செல்பேசி டவர்களிலும் பொறுத்துமாறும் செல்பேசி நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாம். இந்த அதிநவீன கருவி தற்போது அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது பொறுத்தப்படும் செல்பேசி கோபுரத்திறகு அருகிலுள்ள மற்ற இரு கோபுரங்களோடு ஒரு முக்கோண கோட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அந்த செல்பேசி கோபுரத்திற்கு வரும் அழைப்பைக் கொண்டு, அழைப்பவர் எங்கிருந்து அழைக்கிறார் என்பதையும், அழைக்கப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதையும் துல்லியமாக அறிய முடியும் என்றும், இதனைக் கொண்டு, குற்றச் செயல் கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கொள்ளை, தீ, அவசர உதவி ஆகியவற்றையும் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கருவி ஒவ்வொன்றின் விலையும் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டாலர்கள் ஆகும் என்றும், நமது நாட்டிலுள்ள நான்கரை இலட்சம் செல்பேசி கோபுரங்களிலும் இதனைப் பொறுத்துவதற்கு ஆகும் செலவினால் தங்களுடைய இயக்கச் செலவு 50 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறியுள்ள செல்பேசி நிறுவனங்கள், இத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனவாம்.

சமூகங்களும், கோத்திரங்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக மாத்திரமே!

"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்". (அல்குர்ஆன் 49:13)