திங்கள், 25 அக்டோபர், 2010

அனைத்து கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்குண்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ் எனப்படும் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும், தடை செய்யவும் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேஷ மாநில காங்கிரஸ் தலைவி ரிதா பகுகுணா ஜோஷி நிருபர்களிடம் பேசுகையில் இவ்வேண்டுகோளை  குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத அமைப்பின் மீது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில், தயங்காமல் இந்த இயக்கத்தைத் தடை செய்யவேண்டும்" என்றார் ரிதா.


2007 அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் பெருந்தலைவர் ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படுவது குறித்து அவர் சொல்லும்போது, "அநேகமாக, எல்லா இனக்கலவரங்களிலும் இவர்களோ, இவர்களின் துணை அமைப்புகளோ காரணமாய் உள்ளன" என்றார் ஜோஷி.


நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து நாசவேலை செய்யும் ஆர் எஸ் எஸ் ஹைதரபாத் மக்கா மசூதி, ஜெய்ப்பூர். சம்ஜாதா வண்டி உள்ளிட்ட குண்டுவெடிப்புகளிலும் பங்கேற்றுள்ளதாக விசாரணை ஆணையங்கள் சுட்டியதைக் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.......

ராஜீவ் சிலை அவமதிப்பில் என் மீது அபாண்டம்: கூட்டணி உறவு பாதிக்காது; திருமாவளவன் பேட்டி

திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 21-ந்தேதி காலை 10.30 மணிக்குதான் எனக்கு ராஜீவ்காந்தி சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தெரியும். இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஈடுபடாது. இது ஒரு அபாண்டமான அவதூறு.

இது குறித்து சோனியாகாந்திக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளேன். உண்மையான காங்கிரஸ்காரர்கள் இந்த அவதூறை நம்பவேண்டாம். அத்துடன் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும், என்மீது அபாண்ட பழியை சுமத்தவும், ராஜீவ்காந்தி சிலையை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸ்கட்சியில் உள்ள எந்த தனிமனிதர்களையும் நான் விமர்சிக்கவில்லை.

அவர்கள் மீது குற்றம்சாட்டி பேசியதும் இல்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு அழைத்தது தமிழர்களை கொச்சைப்படுத்தியதாக எழுந்த மனவேதனையில்தான் எனது உணர்வுகளைக் கொட்டினேன். மற்றப்படி காங்கிரஸ் கட்சி தலைவர்களை நான் என்றுமே மதிக்கத்தவறியதில்லை.
 
நான் என்றுமே தனிமனித உணர்வுகளை மதிப்பவன். தமிழக முதல்-அமைச்சர் என்னைத் தூண்டிவிட்டு பேச சொல்லுகிறார் என்பதெல்லாம் அ.தி.மு.க. வினரும், அ.தி.மு.க. அணிக்கு மாறவேண்டும் என விரும்பும் சிலரும் பரப்பிவிடும் அபாண்டமான அவதூறு. கலைஞர் என்றுமே எனது கருத்துகளில் உடன்பாடு அல்லது முரண்பாடு எதுவாக இருந்தாலும் அதில் தலையிட்டதில்லை, இதை பேசு, அதைபேசு என்று கூறியதில்லை.
 
முதலமைச்சர் மீதே இவ்வாறு அவதூறு பரப்புவதில் இருந்தே இதன் உள்நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி தயவில்தான் விடுதலை சிறுத்தைகட்சி வெற்றி பெற்றது. எனவே திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பார்க்கும்போது எனக்கும் ஒரு தார்மீக உரிமையுள்ளது.
 
விடுதலைசிறுத்தை கட்சி தயவில் வெற்றி பெற்ற 9 காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டணி தர்மத்திற்கு மாறாக நான் முன்வைக்கமாட்டேன். திருமாவளவனை கைது செய்யும்வரை போராடுவோம் என காங்கிரஸ் கட்சியில் சிலர் கூறுகின்றனர். கைது, சிறை போன்றவற்றுக்கு அஞ்சக்கூடிய கட்சி அல்ல விடுதலைச்சிறுத்தை கட்சி.

ஆனால் குற்றம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரே இவ்வாறு பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தங்கபாலுதான். நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவாக பேசியுள்ளேன்.
 
இன்னும் சில காங்கிரஸ் முன்னணி தலைவரிடமும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளேன். எனவே எந்த வகையிலும் கூட்டணி உறவு பாதிக்காது. யார் தூண்டினாலும், சீண்டினாலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அமைதி காக்க வேண்டுகிறேன். ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றம் தீவிரமாக நடந்து வருகிறது.
 
ஈழத்தமிழர்களுக்கான நிவாரணபணி மறுவாழ்வு, மறு கட்டுமானபணிகள் முறையாக நடைபெறவில்லை. மத்திய அரசு அளித்த உதவித்தொகை தமிழர்களை சென்றடையவில்லை. இன்னும் 1 1/2 லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

போராளி என்ற பெயரில் 11 ஆயிரம் பேர் இருட்டுக் கொட்டகையில் சிறை வைக்கப்பட்டு வதை செய்யப்படுகின்றனர். இளம் பெண்களும், இளைஞர் களும் கடத்தப்படுவதும், கொலைசெய்யப்படுவதும் தொடர்கிறது.
 
இளம் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபசாரம் செய்வதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போதைப்பொருட்கள் வெளிப்படையாக புழக்கத்தில் விடப்படுகிறது. சிங்களர்கள் திட்டமிட்டு தமிழர்களை சீர்குலைத்து வருகின்றனர். இந்திய அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை அரசுக்கு உள்ளது.
 
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பை உச்ச நீதி மன்றம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஹ்மதி!

புது டில்லி : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, "உச்சநீதிமன்றம் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஹ்மதி கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்த மக்கள் சமூகத்தின் நிலைப்பாடு எனும் தலைப்பில் இன்ஸ்டியூடூட் ஆப் ஆஃப்ஜக்டிவ் ஸ்டடிஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அஹ்மதி, பாபர் மசூதி இடிப்புக்கு முன் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி மசூதி இடிக்கப்படுவதற்கு ஏராளமான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்நிலத்தை உடன் மத்திய அரசிடம் ஒப்படைத்து மசூதி இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி உச்சநீதிமன்றத்தில் அப்போது இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வெங்கடாச்சலையா மற்றும் ரேயிடம் வலியுறுத்தியதை நினைவூட்டினார்.

அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்று அந்நிலத்தை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருந்தால் பாபர் மசூதி இன்றும் அதே இடத்தில் இருந்திருக்கும் என்று கூறிய அஹ்மதி, அதற்குப் பதிலாக அடையாள கரசேவை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தவறானது என்றும் பாபர் மசூதி இடிப்புக்காக கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்ட ஒரு நாள் தண்டனை நகைப்புக்கிடமானது என்றும் கூறினார்.

மேலும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே கருத முடியவில்லை என்றும் இந்திய அரசியல் சாசனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் அஹ்மதி கூறினார். மேலும் இவ்விழாவில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையது சஹாபுதீன் உள்ளிட்ட பலர் இது முஸ்லீம் மற்றும் இந்து நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் அல்ல என்றும் அரசியல் சாசனம் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கபட வேண்டுமே தவிர குரான் மற்றும் கீதையின் அடிப்படையில் அல்ல என்றும் கூறினர்.

மரண அறிவிப்பு!

தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடி  மெயின் ரோடு
சோனி முகம்மது கனி அவர்களின்    மகனும்
தஞ்சைமாவட்ட தி மு க பிரதிநிதியும்,
 ஜமாஅத் முன்னாள் செயலாளருமான 
           S.M. முஹம்மது பஷீர் (கூல்) அவர்கள்
இன்று (25-10-2010) பகல் 3.30 மணிக்கு காலமாகிவிட்டார். 
....................இன்னாலில்லாஹி  வ இன்ன இலைகி ராஜிவூன்...........................
அன்னாரின் ஜனாசா நாளை காலை 10.00 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன்   தெரிவித்துக்கொள்கிறோம் .......

அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுஉலக நல்வாழ்விற்கு நாம் அனைவரும் துஆ செய்வோம்.......

மரண அறிவிப்பு!

இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிவூன்..
வடக்கு மாங்குடி முன்னாள் ஜமாஅத் செயலாளரும்,மாவட்ட தி மு க பிரதிநிதியுமான
கூல் S.M.முகம்மது பஷீர் அவர்கள் இன்று பகல் 3 .30 மணிக்கு காலமாகிவிட்டார்கள்...மற்ற விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள ஷார்ஜா மாகாணத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முற்றிலும் லாபமற்ற 0% கடன் உதவியை பிரபல வங்கியான ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற வகை 0% லாபமற்ற கடன் வசதி போல் அல்லாமல் இதில் எந்த வகை மறைவு தொகை மற்றும் சேவைத் தொகை ஆகியவை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்திற்கு தேவையான பணத்தை பெற்று கொண்டு மீண்டும் அதை மாத தவணையாக செலுத்தினால் போதும். ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கியின் அதிகாரி ஜஸ்சம் முஹம்மத் அல் பலுசி தெரிவிக்கும் போது "பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு பின்பு தான் இந்த திட்டத்தை துவங்கியுள்ளோம். இவ்வாறான தேவை தற்போது பெரிதும் தேவை உள்ள நிலையை அறிந்து கொண்ட பின்பே இதை துவங்கியுள்ளோம்" என்றுள்ளார்.

மேலும் அவர் இத்திட்டத்தை விவரிக்கையில் இந்த திட்டம் நடைமுறை படுத்த பல்வேறு 'ஹஜ்' பயண ஏஜென்சி நிறுவனங்களை அனுமதி அளித்துள்ளோம். இந்த திட்டத்தை விளம்பர படுத்துவதற்கான செலவினங்களை அவர்கள் செலுத்துவார்கள் என்றார்.

உலக வர்த்தக நிலவர அட்டவணை: இந்தியா மேலும் முன்னேற்றம், துபாய் மீண்டும் உயிர்த்தெழுகிறது !

ஆறு மாதங்களுக்கான உலக வர்த்தக நிலவர அட்டவணையை பிரபல வங்கியான பிரித்தானிய வங்கிகள் குழுமத்தை சேர்ந்த ஹை.ஸ்.பி.சி. (HSBC) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அதிக முதலீடுகளை பெற்று முன்னுக்கு செல்கிறது. இரண்டாவதாக ஐக்கிய அமீரகம் அதிக தொழில் முதலீடு பெறுகிறது. பொதுவாக எல்லா நாடுகளும் நல்ல முன்னேற்றத்துடன் காணப்படுகிறது.



ஹை.எஸ்.பி.ஸி. உலக வர்த்தக நிலவர அட்டவணை (HSBC Trade confidence index) என்பது ஒரு உலகளாவிய வர்த்தக முதலீடுகளின் தகவல்களை பெற்று கணக்கிடப்பட்டு பெரும் தகவல் அட்டவணை ஆகும். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிக சந்தைகளை கணக்கிடப்படும். இதில் 17 உலக முக்கிய வர்த்தக சந்தையை முக்கியமாக கண்கானித்து அதன் மூலம் முடிவுகள் வெளியிடப்படும். அதில் கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மெக்ஸிகோ, சவுதி அரேபியா, சிங்கப்பூர், வியட்நாம், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகும். கணக்கீடு மூலம் பெரும் புள்ளிகள் பூஜ்யம் முதல் இருநூறு வரை ஆகும். பூஜ்யத்தில் இருந்தால் அது பின்னைடைவு புள்ளிகள் ஆகும், 100 புள்ளிகள் என்பது சமமான அளவு ஆகும், அதற்கு மேல் உள்ள புள்ளிகள் முன்னேற்ற நிலை ஆகும்.

அடுத்த ஆறுமாதங்களுக்கு விட்டுள்ள புள்ளிகள் விவரம் வருமாறு, இந்தியா (140), ஐக்கிய அமீரகம் (125), மெக்ஸிகோ (124), இந்தோனேசியா (124), வியட்னாம் (122), பிரேசில் (122), சவுதி அரேபியா (118), மலேசியா (114), சீனா (111), கனடா (110), ஆஸ்தேரிலியா (110), பிரித்தானியா (1109), அமெரிக்கா (108), ஜெர்மனி (106), பிரான்ஸ் (106), ஹாங் காங் (140)

ஹை.எஸ்.பி.ஸி வங்கி தலைமை அதிகாரி பிருகுராஜ் சிங் கூறுகையில் "2010ல் 133பெற்று இருந்த இந்தியா தற்போது 140 பெற்று முன்னேறியுள்ளது. 30 கோடி முதல் 200 கோடி ஆண்டு வருமானம் பெரும் 315 நிறுவனங்களுடன் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் ஐக்கிய அமீரகம் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையை எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஐக்கிய அமீரக வெளியுறவு வர்த்தக அமைச்சர் ஷேய்கா லுப்னா அல் காசிமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் மேலே குறிப்பிட்டுள்ளா 17 நாடுகளின் 5124 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர் !

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.