புதன், 3 நவம்பர், 2010

துபாயில் அதிக சொத்து முதலீடு செய்வதில் இந்தியர்கள் முதலிடம்

உலக பொருளாதார நெருக்கடியில் பின்தங்கிய துபாய், இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவரை ஐரோப்பியர் ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி அங்கு இந்தியர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
முக்கியமாக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நாடாக  மட்டும் இல்லாமல் துபாய் இந்திய நிறுவனங்களுக்கும், முதலீட்டார்களுக்கும் சிறந்த இடமாக மாற தொடங்கியுள்ளது. சீனாவிடம் போட்டி போட்டு கொண்டு வரும் இந்தியா சீனாவை போலவே துபாயில் தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும், உலக சந்தையில் விற்பனை செய்வத்ற்கும்  சிறந்த இடமாக துபாயை கருதுகிறது. 

(பார்க்க: துபாய் இந்தியா, சீனா நிறுவனங்களுக்கு சிறந்த வர்த்தக சந்தை)


இந்நிலையில் தற்போது துபாயில் அதிக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதில் இந்தியர்கள் முதலிடம் பெற்று பிரித்தானியர்கள், கனடியர்கள், ஈரானியர்ளை பின்னுக்கு தள்ளியுள்ளனர். ரெயிடின் டாட் காம் என்ற வலைதளம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் துபாயில் இந்தியர்கள் வாங்கி குவித்துள்ள நில சொத்து மதிப்பு 9.3 பில்லியன் திர்ஹம்ஸ் ஆகும். இது இந்த கால அவகாசத்தில் நடந்துள்ள மொத்த 48.9 பில்லியனில் 19% சதவீதம்.

ரெயிடின் டாட் காம் துபாய் நிலத்துறை தகவல் ஆதாரத்துடன் கூட்டு வைத்துள்ள இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையை சேர்ந்த நிர்வாகி முகம்மது சுல்தான் தானி கூறுகையில் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் வரையில் 30,615 விற்பனை வர்த்தகங்கள் நடந்துள்ளன. சென்ற வருடம் 43,000 நில விற்பனை வர்த்தகங்களும் 2008ல் 31,613 நில விற்பனை வர்த்தகங்களும் நடந்துள்ளதாக கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 30 முதல் 35 நில விற்பனை வர்த்தகம் நடைபெறும் இந்த துறையில் அதிகம் விற்பனை ஆவது துபாயில் புகழ்பெற்ற ஸ்தலங்கள் ஆன டிஸ்கவரி கார்டன் மற்றும் இன்டர்நேஷனல் சிட்டி ஆகும்.

சமீபத்தில் பிரித்தானிய வங்கிகள் குழுமத்தை சேர்ந்த ஹை.ஸ்.பி.சி. (HSBC) வங்கி வெளியிட்டுள்ள உலக வர்த்தக நிலவர அட்டவணையில் இந்தியா முதல் இடத்திலும், ஐக்கிய அமீரகம் இரண்டாவது இடத்திலும் அதிக முதலீடுகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராக என்.கே.கே.பி.ராஜா மீண்டும் நியமனம் !

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், கைத்தறித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்த என்.கே.கே.பி.ராஜா மீது  நில அபகரிப்பு மற்றும் ஆள்கடத்தல் புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர், மாவட்டச் செயலாளர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சமீபத்தில் ஆள்கடத்தல் புகாரில் இருந்து ராஜா விடுவிக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பின்னர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்டச் செயலாளராக என்.கே.கே.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் வாங்கிய தனது உறவினருக்கு ஆதரவாக பேசிய பூங்கோதை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மேலிட ஆசியால் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைப் போல என்.கே.கே.பி.ராஜாவும் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சரிவர வராத சினிமாக்கார எம்.பிக்கள்

Parliament
டெல்லி: திரைத்துறையிலிருந்து எம்.பிக்களாகி நாடாளுமன்றம் சென்றவர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு சரிவர வருவதில்லை. அதேபோல ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் கூட பல நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருந்துள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில்தான் பெரும்பாலானவர்கள் முறையாக கூட்டங்களுக்கு வருகின்றனர்.
 


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் அவை நடந்த நாட்கள் 29 என்றாலும் 26 நாட்களுக்கு வருகை பதிவேட்டின் விவரங்கள் தெரியவந்துள்ளது.


ஒரு வார்த்தை கூட பேசாத சோனியா-ராகுல்:

இதில் சோனியா 9 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரை பார்க்கச் சென்றிருந்ததால் அவர் பல நாட்கள் அவைக்கு வராமல் இருந்தபோதிலும், வந்திருந்த சில நாட்களிலும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது எந்த விவாத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவரது மகனான ராகுல் காந்தி 11 நாட்கள் வந்திருந்தார். ஆனாலும் அவரும் ஒரு நாள் கூட பேசியதில்லை.

விலைவாசி பிரச்னை, அணு ஒப்பந்த இழப்பீட்டு மசோதா,காஷ்மீர் பிரச்னை, நக்சல்கள் பிரச்னை,காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட நாடு தழுவிய பல முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அவையில் நடந்தும் கூட இவர்கள் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளனர்.

அத்தனை நாட்களும் வந்த அத்வானி:

தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றவர்களில் அத்வானி முதலிடத்தில் உள்ளார். அவர் அனைத்து நாட்களும் தவறாமல் வந்துள்ளார்.

யாத்திரை மேற்கொண்டு காங்கிரஸ் மேலிடத்துக்குப் பிரச்னைகளை கொடுப்பதில் பிசியாகஇருந்தபோதிலும், ஜெகன்மோகன்ரெட்டி 15 நாட்கள் அவைக்கு வந்தார்.

தனது திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தும் கூட சசிதரூர் 19 நாட்கள் வருகை தந்தார்.

விலைவாசி உயர்வு, எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்த விவாதம், அணுஇழப்பீட்டு ஒப்பந்த மசோதா,நக்சலைட்டு பிரச்னை, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பலவற்றிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் நன்றாக பங்கேற்று பேசினர். முக்கிய விவாதங்களில் பங்கேற்காவிட்டாலும், அத்வானி நிறைய முறை குறுக்கீடு செய்து அவையில் பேசியுள்ளார்.

விலைவாசி பிரச்னை உள்ளிட்ட மூன்று முக்கிய விவாதங்களை காரணமாக வைத்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்த வேண்டுமென்று வலியுறுத்தி அவையை ஒரு வாரங்களுக்கு முடக்கும் வகையில் யாதவ தலைவர்களான முலாயமும், லாலுவும், சரத் யாதவும் செயல்பட்டனர்.

கிரிக்கெட் எம்.பிக்கள் பரவாயில்லை:

கிரிக்கெட் வீரர்களாக இருந்து எம்.பியானவர்கள் சற்று பரவாயில்லை. நாடாளுமன்றத்தை விளையாட்டுக் களமாக கருதாமல் பெரும்பாலான நாட்கள் அவைக்கு வந்து போயுள்ளனர்.

கீர்த்தி ஆசாத் 25 நாட்கள் வருகை தந்துள்ளதோடு மட்டுமல்லாது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குறித்த விவாதத்தில் சிறப்பாக பங்கேற்று பேசினார். அசாருதீனும் 22 நாட்கள் வந்துள்ளார். பா.ஜ.கவைச் சேர்ந்த நவ்ஜோத்சிங் சித்து 14 நாட்கள் வந்துள்ளார்.

சினிமாக்கார எம்.பிக்கள் மோசம்:

சினிமாத் துறையிலிருந்து எம்.பியாகி வந்தவர்கள்தான் மோசம். விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களுக்குத்தான் இவர்கள் வந்துள்ளனர்.

தெலுங்கானா புயல் விஜயசாந்தி வெறும் 2 நாட்கள்தான் அவைக்கு வந்துள்ளார். ஜெயப்பிரதா 11 நாட்கள்தான் வந்துள்ளார். ராஜ் பாபர் 15 நாட்கள்தான் வந்தார்.

கூட்டத் தொடரில் பங்கேற்றவர்களில் யார், யார் எத்தனை நாட்கள் வந்தனர் என்ற விவரம்:

அத்வானி - 26
யஷ்வந்த் சின்கா - 25
கீர்த்திஆசாத் - 25
முலாயம்சிங் - 24
லாலுபிரசாத் - 23
தேவகவுடா - 22
அசாருதீன் - 22
முரளிமனோகர் ஜோஷி - 22
ஜஸ்வந்த்சிங் - 21
வருண் - 21
பாசுதேவ்ஆச்சார்யா - 21
மேனகாகாந்தி - 19
சசிதரூர் - 19
சரத்யாதவ் - 17
ஜெகன்மோகன் ரெட்டி - 15
ராஜ்பப்பர் - 15
சித்து - 14
அஜித்சிங் - 13
ராகுல் காந்தி - 11
ஜெயபிரதா - 11
சோனியா காந்தி - 9
சுரேஷ் கல்மாடி - 3
சந்திரசேகரராவ் - 2
விஜயசாந்தி - 2

நவ. 9ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

Parliamentடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி துவங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதிகள் சொத்துக் கணக்கை சமர்பிக்க வழிவகை செய்யும் மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

மேலும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றுகிறார். மறுநாள் 9ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.

இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவிருக்கும் முக்கிய மசோதாக்கள் பற்றி இன்று மாலை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவிக்கிறார்.

இந்தக் கூட்டத் தொடரில் காமன்வெல்த் போட்டி ஊழல் விவகாரம், மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் நடந்த முறைகேடுகள், ஆதர்ஷ் குடியிருப்பு விவகாரம், காஷ்மீர் விவகாரம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளன.

இந்தோனேசியாவில் மீண்டும் குமுறியது எரிமலை-விமானங்கள் ரத்து

Volcanoஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு விமானங்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன.

மெளன்ட் மெராபி எரிமலை கடந்த சில வாரங்களாக வெடித்து குமுறி வருகிறது. ஆனால் இந்த முறை எரிமலை குமுறலால் ஏற்பட்ட புகை அதிக அளவில் வெளியாகி வருவதால் பல்வேறு விமானங்களை ரத்து செய்துள்ளன இந்தோனேசிய விமான நிறுவனங்கள்.

மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரின் சில்க்ஏர் ஆகியவை தங்களது சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும் விரைவில் தங்களது சேவை தொடங்கும் என அவை தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவைச் சற்றிலும் தற்சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கடும் புகை காரணமாக ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மார்க்க வியாபாரிகள் (அழைப்பாளர்கள் சிந்திக்கட்டும்)

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ
உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)   
    தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)
    இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.
    இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
    வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.
    நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
    மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
    காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
    வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.
    ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
    மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
    எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
    பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
    இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.
    குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
    நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
    தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
    இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
    குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.
    குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.
    குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.
    தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.
    பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.
    'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?
    புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.
    இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.
    மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.
    நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.
    ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
    ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.
    எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.
    மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.
    நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.
    நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.
    வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை.

சிறுவனுக்கு ஆபத்து வராமல் இருக்கவே கடத்தல் காரர்களை தப்ப விட்டு பிடித்தோம்: கமிஷனர் ராஜேந்திரன் விளக்கம்

சிறுவனுக்கு ஆபத்து வராமல் இருக்கவே
கடத்தல் காரர்களை
தப்ப விட்டு பிடித்தோம்:
கமிஷனர் ராஜேந்திரன் விளக்கம்  கீர்த்திவாசன் மீட்கப்பட்டது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-

சிறுவனை கடத்தி சென்றவர்கள் விஜய், பிரபு என்பதை முதலிலேயே தெரிந்து கொண்டோம். அவர்களிடம் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதையே நாங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தோம்.
இதனால் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவதை தவிர்த்தோம். முதலில் கடத்தி சென்ற காரில் இருந்து வேறு காரில் சிறுவனை மாற்றியதில் எங்களுக்கு லேசான பின்னடைவு ஏற்பட்டது. எனவே இரவு முழுவதும் கடத்தல் காரர்களுடன் தொடர்ந்து பேச வைத்தோம்.

சிறுவனின் தந்தை ரமேஷ் தொடர்ந்து பேசினார். முதலில் ரூ. 3 கோடி கேட்டார்கள். பின்னர் ரூ. 1 கோடி கொடுத்தால் விட்டு விடுவதாக கூறினார்கள். சிறுவனின் நலன் கருதி பணத்தை கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பிடிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி ரமேஷ் கடத்தல்காரர்களிடம் ரூ. 1 கோடி கொடுத்துள்ளார். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பணத்தை கொடுக்கும்போதே போலீசார் பிடித்து இருக்கலாமே என்று கருதலாம். பணத்தை வாங்க வரும்போது அவர்கள் வந்த காரில் சிறுவன் இருக்கிறானா? என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவசரத்தில் நாங்கள் ஏதாவது செய்து அது பொதுமக்களுக்கு இடைïறாகி விடக்கூடாது என நினைத்தோம்.

அவர்கள் தப்பி செல்லும் போது துப்பாக்கியால் சுட்டு பிடித்து இருக்கலாம். அப்படி நடந்தால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுவனையும் உயிருடன் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு விடும். எனவே சிறுவனை மீட்டதற்கு பிறகு அவர்களை தப்ப விட்டு பின்னர் பிடித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கீர்த்திவாசனை கடத்தியது எப்படி? கைதானவர்கள் வாக்குமூலம்

கீர்த்திவாசனை கடத்தியது எப்படி?
 
 கைதானவர்கள் வாக்குமூலம்
சிறுவன் கீர்த்திவாசன் கடத்தலில் கைதான விஜய், பிரபு ஆகியோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத் தில் கூறியிருப்பதாவது:-
 
நாங்கள் இருவரும் படித்து விட்டு சரியான வேலை இல்லாமல் இருந்தோம். எங்கள் பெற்றோருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தொழில் அதிபர் ரமேஷ் கோடி, கோடியாக சம்பாதித்தார். கிரானைட் தொழில் உள் ளிட்ட பல தொழில்களை செய்து வந்தார்.
 
அவரிடம் பல முறை உதவி கேட்டோம். ஆனால் உதவி எதுவும் செய்யவில்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம். இதனால் அவரது மகன் கீர்த்திவாசனை கடத்த திட்டமிட்டோம்.
 
மகனை கடத்தினால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவரிடம் இருந்து பெற முடியும் என்று நினைத்தோம். அதன்படி கடந்த சில மாதங்களாக கடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்காக கார் ஒன்றையும் திருடினோம். திருட்டு காரில் கடத்தி சென்றால் இடையில் எங்காவது விட்டு விட்டு சென்று விடலாம் என்று கருதினோம்.
 
அதன்படி பள்ளியில் இருந்து திரும்பும் போது டிரைவரை தாக்கி விட்டு எங்கள் காரில் கீர்த்திவாசனை கடத்தி சென்றோம். பின்னர் கார் செட்டுக்கு சென்றோம். அங்கு சென்றதும் கீர்த்திவாசனை கார் டிக்கிக்குள் அடைத்து வைத்தோம்.
 
நாங்கள் அவனது உற வினர்கள் என்பதால் அவன் பயப்படாமல் இருந்தான். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. பதட்டமின்றி ரமேசிடம் பேசி வந்தோம்.
 
மகனுக்காக ரமேஷ் எவ்வளவு பணம் வேண்டுமா னாலும் கொடுப்பார். போலீசுக்கு சொல்ல மாட்டார் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது ஓரளவுக்கு நடந்தது.
 
போலீசுக்கு சென்றாலும் மகனை பணம் கொடுத்து பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் ரமேஷ் உறுதியாக இருந்தார். அவருடன் நாங்கள் பல முறை போனில் தொடர்பு கொண்டு பணம் தரும்படி பேசினோம். நாங்கள் கேட்ட படி ரூ. 1 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
 
அந்த பணத்துடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றோம். ஆனால் போலீசார் எங்களை நோட்டமிட்டு வந்து பிடித்து விட்டனர்.
 
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

போலீசார் மென்மை போக்கை கைவிட வேண்டும்: குழந்தைகளை கடத்தியவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்; ஜெயலலிதா அறிக்கை

போலீசார் மென்மை போக்கை கைவிட வேண்டும்:
 
 குழந்தைகளை கடத்தியவர்களுக்கு
 
 கடும் தண்டனை வழங்க வேண்டும்;
 
 ஜெயலலிதா அறிக்கை
                                                                           
சென்னை, நவ. 3-
 
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
 
பணத்திற்காக குழந்தைகளைக் கடத்தும் கொடூரச் செயல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர், சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்த சிறுவன் கிருஷ் ஆனந்த் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். கடந்த ஜூலை மாதம் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா என்ற சிறுவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டான்.
 
கடந்த மாதம் 29-ஆம் தேதி கோவை நகரில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கான் மற்றும் மகன் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு, ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமற்ற முறையில் பணத்திற்காக கொல்லபட்டிருக்கின்றனர். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு படுபாதக கொலைச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்ற விதத்தை பத்திரிகையில் படித்த போது எனது நெஞ்சம் பதைபதைத்தது. இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து அனைத்துப் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
 
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவில் பெற்றுத் தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இளம் பிஞ்சுகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் கீர்த்தி வாசனை சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி என்னை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதைத் தான் நமக்கு உணர்த்துகின்றன.
 
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து; கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; கோவையில் இளம் பிஞ்சுகள் இறந்ததற்குக் காரணமான கொடூரர்களை விரைந்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 
 

அமெரிக்க பாராளுமன்ற தேர்தல் ஒபாமா கட்சி தோல்வி குடியரசு கட்சி அதிக இடங்களை பிடித்தது

அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்
 
 ஒபாமா கட்சி தோல்வி
 
 குடியரசு கட்சி அதிக இடங்களை பிடித்தது
                                                                          
அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை தேர்தல் (பாராளுமன்ற தேர்தல்) செனட் தேர்தல் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல் நடந்தது.
 
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தன. சென்ட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 37 இடங்களுக்கும், 50 மாகாண கவர்னர்களில் 37 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தன.
 
இதில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் போட்டியிட்டன.
 
பிரதிநிதிகள் சபையில் இதுவரை 344 இடங்களின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 213 இடங்களை குடியரசு கட்சி பிடித்துள்ளது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி 144 இடங்களை மட்டுமே பிடித்து உள்ளது.
 
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பெரும்பாலான இடங்களிலும் குடியரசு கட்சியே முன்னணியில் உள்ளது. இன்னும் 5 இடங்களை பிடித்தால் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் மெஜாரிட்டியை பெற்று விடும்.
 
செனட் சபையில் குடியரசு கட்சி 23 இடங்களை பிடித்து உள்ளது. ஜனநாயக கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு மொத்தம் உள்ள 100 இடங்களில் 38 இடங்கள் இருந்தன. இப்போது 10 இடங்கள் பெற்று 48 இடங்களை பிடித்து உள்ளது. எனவே ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெறும் நிலையில் உள்ளது.
 
கவர்னர் தேர்தலிலும் குடியரசு கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி ஒபாமாவுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதப்படுகிறது. அவருடைய பொருளாதார கொள்கை ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வந்தன. பொருளாதார கொள்கை சரி இல்லாததால் மக்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்து இருப்பதாக கருதப்படுகிறது.

சென்னையில் சுற்றி வளைப்பு சிறுவனை கடத்திய 2 பேர் சிக்கினர்; ரூ.1 1/2 கோடி பணத்தை மீட்க நடவடிக்கை

சென்னையில் சுற்றி வளைப்பு
 
 சிறுவனை கடத்திய 2 பேர் சிக்கினர்;
 
 ரூ.1 1/2 கோடி பணத்தை மீட்க நடவடிக்கை
சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 7-வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். கிரானைட் தொழில் அதிபர்.
 
இவரது மூத்த மகன் கீர்த்தி வாசன். இவன் முகப்பேரில் உள்ள டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
 
கீர்த்திவாசன் தினமும் பள்ளிக்கு காரில் சென்று வருவான். அவனை தினமும் காலையில், பள்ளியில் விட்டு விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வேலையை கோவிந்தராஜ் என்ற டிரைவர் செய்து வந்தார். வழக்கம் போல நேற்று முன்தினம் பிற்பகல் அவர் காரில் கீர்த்திவாசனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
 
கார் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே சிலர் காரை வழி மறித்து ஏறிக் கொண்டனர். அவர்கள் டிரைவர் கோவிந்தராஜை மிரட்டி அடித்து கீழே தள்ளி விட்டு கீர்த்திவாசனுடன் காரை கடத்திச் சென்றனர். இது குறித்து டிரைவர் கோவிந்தராஜ் உடனடியாக ரமேசுக்கு தகவல் கொடுத்தார்.
 
ரமேஷ் போலீசாரிடம் இது பற்றி புகார் தெரிவித்தார். அதன் பேரில் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
 
ஆனால் மர்ம மனிதர்கள், காரை மாற்றி தப்பியதால், தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கீர்த்தி வாசனுடன் கடத்தப்பட்ட கார் பாடி திருவல்லி சுவரர் சிவாலயம் அருகில் கேட்பாரற்று நிற்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மர்ம மனிதர்கள் கீர்த்திவாசனை அங்கிருந்து வேறொரு காரில் கடத்தி சென்றிருப்பது உறுதியானது.
 
மர்ம மனிதர்களிடம் இருந்து நீண்ட நேரத்துக்கு எந்த தகவலும் வராததால் அவர்கள் யார்? எதற்காக கீர்த்திவாசனை கடத்தினார் கள்? என்பது போன்ற விபரங்கள் தெரியாமல் இருந்தது. இரவு 11.30 மணிக்கு மர்ம மனிதர்கள் ரமேசுக்கு போன் செய்து பேசினார்கள். முதலில் அவர்கள், கீர்த்திவாசனை விடுவிக்க ரூ.4 கோடி கேட்டு மிரட்டினார்கள்.
 
ரமேஷ், கைவசம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதும் கடத்தல்காரர்கள் பேரம் பேசத்தொடங்கினார்கள். மீண்டும் 12.15 மணிக்கு பேசிய கடத்தல் காரர்கள் ரூ.3 கோடி கேட்டனர். அந்த தொகையை மேலும்குறைக்கு மாறு ரமேஷ் கேட்டுக் கொண்டதால் கடத்தல் காரர்கள் கோபத்தில் பேசுவதை நிறுத்தி விட்டனர். நேற்று (செவ்வாய்) காலை மீண்டும் கடத்தல்காரர்கள் ரமேசிடம் பேசினார்கள்.
 
போலீசுக்கு தகவல் கொடுத்து எங்களை பிடிக்க முயன்றால் கீர்த்திவாசனை உயிருடன் பார்க்க முடியாது என்று கடத்தல்காரர்கள் மிகக்கடுமையாக எச்சரித்தனர். இதனால் பயந்து போன ரமேஷ், போலீசாரை தவிர்த்து விட்டு, மகனை மீட்கும் முயற்சிகளில் தன்னந்தனியாக ஈடுபட்டதாக தெரிகிறது. போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமலே கடத்தல் காரர்களுடன் பேரம் பேசினார்.
 
நீண்ட நேரத்துக்குப்பிறகு ரூ.1 1/2 கோடி பணம் கொடுக்க ரமேஷ் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அண்ணா நகர் எச் பிளாக்கில் 5-வது தெருவில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரூ.1 1/2 கோடியை சூட்கே சில் வைக்குமாறு கடத்தல்காரர்கள் கூறினார்கள். அதை ஏற்று ரமேஷ் நேற்று மதியம் 1 மணி அளவில் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை கொண்டு போய் வைத்தார்.
 
சுமார் 10 நிமிடம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூ.1 1/2  கோடி பணத்தை எடுத்துச் சென்றனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து கடத்தல்காரர்கள் கீர்த்திவாசனை ஒரு காரில் அழைத்து வந்தனர். ரமேஷ் வீட்டுக்கு அருகில் அந்த காரை நிறுத்தி விட்டு, டிரைவர் இறங்கி ஓடி விட்டார்.
 
தெரு முனையில் தயாராக நின்றிருந்த ஒருவர் அந்த டிரைவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று விட்டார். கடத்தல்காரர்கள் மிக, மிக திட்ட மிட்டு தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டனர். இதனால் 24 மணி நேரத்துக்குள் இந்த கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்து விட்டது.
 
கீர்த்திவாசன் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் சென்னை நகரை சீல் வைத்து 30 தனிப்படை அமைத்து அதிரடி வேட்டை நடத்தினார்கள். அதன் மூலம் மர்ம மனிதர்கள் இருக்கும் இடத்தை கூட நெருங்கினார்களாம். ஆனால் கீர்த்தி வாசன் உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடக்கூடாது என்பதற்காகவே அதிரடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்கிறார்கள்.
 
தனிப்படை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 2 பேர் மட்டுமே கடத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. ஆனால் 6 பேர் கொண்ட கும்பல் மாணவன் கீர்த்திவாசனை கடத்தி பணம் பறித்துள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 6 கடத்தல்காரர்களும் தலா 2 பேர் வீதம் பிரிந்து புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.
 
கீர்த்திவாசனை முதலில் கடத்தியது 2 பேர் தான். அதன் பிறகு பாடி சிவன்கோவில் பகுதியில் வேறொரு காரில் தயாராக நின்ற மேலும் 2 பேர் கீர்த்திவாசனை புறநகருக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
கீர்த்திவாசனை கடத்திய போது 3 தடவை அவர்கள் காரையும், இருப்பிடத்தையும் மாற்றி உள்ளனர். இதற்கிடையே ரமேஷ் “எச்” பிளாக் 5-வது தெருவில் வைத்த ரூ.1 1/2 கோடி பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து எடுத்து சென்றது கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு 2 நபர்கள் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடத்தல்காரர்கள் சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து திட்டமிட்டு, மிக சாதுர்யமாக பணத்தை பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே கடத்தல் காரர்களை அவர்களது செல்போன் உரையாடல் மூலம் தனிப்படை போலீசார், பின் தொடர்ந்தபடி இருந்தனர். உளவுத்துறையினரும் சில பயனுள்ள தகவல்களைக் கொடுத்தனர். இதனால் கடத்தல் கும்பலில் ஒரு குழுவை தனிப்படை போலீசார் நேற்றிரவு சுற்றி வளைத்தனர்.
 
கடத்தல்காரர்களில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர். பிடிபட்ட 2 பேரும் மாணவன் கீர்த்திவாசனை காரில் கடத்தி சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
 
பிடிபட்ட 2 பேரிடம் ரூ.1 1/2 கோடி பணம் இல்லை என்று கூறப்படுகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்களிடம் பணம் உள்ளது. அவர்களையும், ரூ.1 1/2  கோடி பணத்தையும் மீட்க தனிப்படை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கடத்தல் கும்பலை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே கடத்தல்காரர்கள் யார்? அவர்களை பின்னணியில் இருந்து இயக்கியது யார்? போன்ற தகவல்களை கண்டு பிடிக்க தனிப்படை போலீசாரின் ஒரு பிரிவு நடவடிக்கையில் ஈடுபட்டது. முதல் கட்டமாக ரமேசுக்கு எதிரிகள் யார்- யார் உள்ளனர்? தொழில் போட்டியாளர்கள் யார்- யார்? என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் சில பயன் உள்ள தகவல்கள் கிடைத்தன.
 
ரமேஷ், தனக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 கோடி வாங்கி இருந்தாராம். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்க வில்லையாம். அந்த தொழில் அதிபர் பல தடவை கேட்டும் ரமேஷ் ரூ.4 கோடி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.
 
ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த நபர் ரூ.4 கோடியை உடனே தர வேண்டும் என்று மிரட்டினாராம். அப்போது ரமேஷ் கோபத்தில், “உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. உன்னை விட நான் பெரிய ஆள். நான் நினைத்தால் உன்னையே தூக்கி விடுவேன்” என்று சவால் விட்டாராம்.
 
இதையடுத்து கோபம் அடைந்த அந்த நபர், “ரூ.4 கோடியை திருப்பித்தரா விட்டால் உன் மகனை கடத்து வேன்” என்று பதிலுக்கு சவால் விட்டாராம். எனவே அவருக்கும் கீர்த்திவாசன் கடத்தலுக்கும் தொடர்பு உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தவிர ரமேஷ் உறவினர் ஒருவர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் ரமேஷ் சொல்ல மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத ஊழல்!

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?
இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.
தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.
தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.
பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.
அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.
ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.
இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.
ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

இந்தியா வரும் ஒபாமாவுக்கு ஒருநாள் செலவு ரூ.900 கோடி


மும்பை: அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை வருவதற்கு ஒரு நாள் செலவு ரூ.900 கோடி ( 200 மில்லியன் அமெரிக்க டாலர்) என தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முறைப்பயணமாக வரும் 6-ம் தேதி இந்தியா வரவுள்ளார். இந்தியாவில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மும்பையில் ஓபாமா தங்குவதற்கான ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி என கூறப்படுகிறது. இதில் ஓபாமாவுடன் அவரது மனைவி மிட்செல் ஒபாமா, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 3000 பேர் வருகின்றனர். பாதுகாப்புப்படையினர், விமானம், ஹெலிகாப்டர், போக்குவரத்து, தாஜ்ஹோட்டலில் தங்குவதற்கான மொத்தம் செலவு ரூ.900கோடி (200 மில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவனை கடத்தி கோடி ரூபாய் வசூலித்த கும்பல்: சென்னையிலும் பெற்றோர்கள் பீதி!


சென்னை :சென்னையில் மாணவனைக் கடத்திய கும்பல், ஒரு கோடி ரூபாய் கேட்டு பேரத்தில் இறங்கியது. மாணவனை மீட்க போலீசார் நடத்திய, "ஆபரேஷன்' வெற்றிகரமாக முடிந்து, மாணவன் கீர்த்திவாசன் பத்திரமாக மீட்கப்பட்டான். மாணவனை பணம் கொடுத்து மீட்டதாகக் கூறிய சென்னை போலீஸ் கமிஷனர், மாணவனை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரத்தை, ஒரு வாரத்தில் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எவ்வளவு பணம் கைமாறியது என்ற தகவல் வெளியிடப்பட வில்லை.

கோவை ஜவுளிக்கடை அதிபரின் மகள் முஸ்கன், மகன் ரித்திக் ஆகியோர் பணத்திற்காக கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பே, சென்னையில் அடுத்த பரபரப்பு துவங்கியது.சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிரானைட் அதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன்(13) நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து காரில் வீடு திரும்பினான். அப்போது, திடீரென காரில் ஏறிய இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, டிரைவர் கோவிந்தராஜை கீழே தள்ளவிட்டு மாணவனை கடத்திச் சென்றனர்.பள்ளி மாணவன் துணிகரமாக கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், கடத்தல் கும்பலைப் பிடிக்க முழுவீச்சில் காவல்துறை களமிறங்கியது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் இரவு கீர்த்திவாசனின் தந்தையை போன் மூலம் தொடர்பு கொண்டு மூன்று கோடி ரூபாய் பணம் கேட்டனர்.இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய மொபைல் போன் எண்களைக் கொண்டு அவர்களைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, நேற்று காலை மாணவனின் தந்தை ரமேஷை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ஒன்றரைக்கோடி ரூபாய் கொடுத்தால், கீர்த்திவாசனை விடுவிப்பதாகக் கூறினர். கேட்டபணத்தை கொடுத்து விடுவதாக ரமேஷ் தெரிவித்த நிலையில், போலீசாரின் மீட்பு பணியும் முழுவீச்சில் நடந்து வந்தது.கோவை சம்பவம் போல், எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடக் கூடாது; கடத்தப்பட்ட மாணவனை உயிரோடு மீட்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையின் மீட்பு முயற்சி அமைந்திருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையின் ஒப்புதலின் பேரில், கடத்தல்காரர்களுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளது.கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, நேற்று மதியம் 2.45 மணிக்கு அண்ணாநகரில் காரில் இருந்த சிறுவன் கீர்த்திவாசனை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஒருவழியாக, மாநிலம் முழுவதும், பெற்றோõர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவன் கீர்த்திவாசன் கடத்தல் சம்பவம், 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

மாணவன் மீட்பு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, ""அனைத்து காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாணவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். இதற்காக ஒரு சிறிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளனர்; விரைவில் அவர்கள் கைதாவார்கள். இந்த, "ஆபரேஷன்' குறித்த விரிவான தகவல்களை ஒரு வாரத்தில் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

ஒபாமா: வைகோ தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்-சிபிஎம்

Vaiko and Obamaமதுரை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகையை தனிப்பட்ட நபர் என்ற வகையில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

அக் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில்,

ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு  தெரிவிப்பதை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை தனிப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கவில்லை.

அவரது வருகையை எதிர்த்து வரும் 8ம் தேதி இடதுசாரிகள் போராட்டம்  நடத்த உள்ளோம். ஆனால் ஒபாமா உரையாற்றும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இடதுசாரி எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள்.

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் மதிமுக, இடதுசாரி இயக்கங்கள் இணைந்து பங்கேற்று வருகின்றன. இந்தியா வரும் ஒபாமாக தனி நபராக வரவில்லை. அவருடன் 200க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் வருகிறார்கள். அவர்களது நோக்கமெல்லாம் இந்தியாவில் சில்லறை வணிகத்தைத் தொடங்குவதுதான். இவற்றைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கிறோம்.

மேலும் போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆண்டர்சன் அமெரிக்காவில்தான் உள்ளார். அவரை இந்தியாவிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை.

அமெரிக்க அதிபராகவும், அந்நாட்டுக் கொள்கையின் சின்னமாகவும் ஒபாமா இருப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அமெரிக்காவின் தனியார்மய கொள்கையை இந்தியாவில் திணிக்க வரும் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே வைகோ தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் இடதுசாரிகள் முடிவெடுப்போம் என்றார்.

ஒபாமா அதிபராகும் முன் அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தபோது அவரை வைகோ சந்தித்து இலங்கை விவகாரம்  குறித்து விளக்கியது நினைவுகூறத்தக்கது.

விலைவாசியைக் குறைப்பது மாநில அரசுகளின் வேலை-கூறுகிறார் சோனியா!

Sonia Gandhiடெல்லி: விலைவாசியைக் குறைப்பது மாநில அரசுகளின் வேலை. இதற்கு மத்திய அரசை எதிர்ப்பார்ப்பதும், குறை சொல்வதும் நியாயமில்லை, என்றார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி  .

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

பிரதமர் மன்மோகன் சிங்  மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, "அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளோம். ஆனால் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை மட்டுமே எதிர்க்கட்சிகள் குறை கூறுவது நியாயமற்றது.

ஒரு சில மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் வரி விதிப்பு இந்த விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளித்து வருகிறது. முழுவதுமாக அவற்றை கட்டுப்படுத்த மேலும் காலஅவகாசம் தேவை.

மும்பை தாக்குதலுக்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு  அதிக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கவில்லை என்பதும் உண்மையே. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். இந்தப் பிரச்சினைகளை அரசு சரியாகக் கையாள திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன", என்றார்.

பாதை மாறிய நடனப்பயணம்!

இந்த செய்தி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புடையது என்றாலும்கூட இதில் நம் சமுதாய பெண்களுக்கு, ஒரு படிப்பினை இருப்பதால் இப்படி ஒரு கட்டுரை அவசியம் என கருதி தருகின்றோம். சமீபகாலமாக இந்து வெறிபிடித்த காவிக் கும்பல்கூட காறித்துப்பும் அளவிற்கு பரபரப்பாக வெளிவரும் செய்தி பிரபுதேவா, முன்னாள் ரம்லத் & இந்நாள் லதா மற்றும் இடைச்சொருகள் நயன்தாரா பற்றியது. நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சிம்புவினால் சொம்பு நசுக்கப்பட்டவர்.

பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டரின் நடனக்குழுவில் ஆடிக் கொண்டிருந்த பெண்னின் பெயர் ரம்லத், ஒரு பெயர்தாங்கி முஸ்லீமாக இருந்தவள். சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த படங்களில், பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக  ஆடிக் கொண்டிருந்த அவருக்கும் அதே கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவாவிற்கும் காதல் மலர்ந்தது. பிரபுதேவா நடனம் அமைத்த படங்களிலும் ரம்லத் குழுநடனம் ஆடினார்.  குழுவில் ஆடுகின்ற ஒரு சாதாரண நடனப் பெண்மணியை பிரபுதேவா திருமணம் செய்தார் என்கின்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. (ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும்!) பிரபுதேவாவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் தரப்பில் பலத்த எதிர்ப்பு இருந்தது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரம்லத்தை பிரபுதேவா திருமணம் செய்தார். புகழிலும், வசதியிலும் மிகவும் உச்சத்திற்கு சென்று விட்ட பிரபுதேவா, எந்தத் தடுமாற்றமும் இன்றி, தன்னுடைய காதலில் உறுதியாக நின்று, தான் காதலித்தவளையே திருமணமும் செய்தார். இன்றைக்கு நயன்தாராவின் காதலில் உறுதியாக நிற்பது போன்று, அன்றைக்கும் ரம்லத்தின் காதலில் பிரபுதேவா உறுதியாக நின்றார். ஆனால் இன்றோ பிரபுதேவா ஒம்போதுடன் (அதாங்க, நயனுடன்) உறுதியாக உள்ளார். பாவம் நடனத்தொழிலை விட்டுவிட்ட ரம்லத்தின் வாழ்க்கைதான் தற்போது நடனமாடிக் கொண்டிருகின்றது.

அதேபோல் ரம்லத் தொடர்ந்த வழக்கில் சம்மன் அனுப்பியும் இதுவரை பிரபுதேவா கோர்டில் ஆஜராகாமல் இருந்ததற்கு நீதிமன்றம் கண்டனமோ, கைதுவாராண்டோ பிறப்பிக்காமல் மறுமுறையும் சம்மன் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தினையும் ஒரு சம்மனை பிரபுதேவாவுக்கு அனுப்பும்படி கூறி இருப்பது கேலிக்குரியது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா? நடிகர் சங்கம் சம்மன் அனுப்பினால் நீதிமன்றங்கள் எதற்கு? இங்கேயும் அலகாபாத்தில் பயிற்சி எடுத்த நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா?. இப்படியெல்லாம் ஆணை பிறப்பிக்கலாம் என்றால் எனக்கும் ஏதாவது ஒரு ஊரில் நீதிபதியாக பணிநியமனம் செய்யும் கட்சிக்கே என் ஓட்டு!

தன்னுடைய காதலுக்கும், காமத்திற்கும்முன் படைத்து பாதுகாத்து கொண்டிருக்கும் வல்ல அல்லாஹ்வை மறந்துவிட்டு சென்றதின் விளைவை ஒன்றன்பின் ஒன்றாக இவள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள். தற்போது கோயில் குளம் என்று வேண்டாத சாமிகளே இல்லையாம்! முதலில் இவளின் பிள்ளைகளில் ஒன்றை அல்லாஹ் மரணிக்கச்செய்து தன் கோபப் பார்வையை காட்டினான். திருந்தவில்லை! தற்போது எந்த காதலனுக்காக அல்லாஹ்வை மறந்தாலோ, அதே காதலனை அல்லாஹ் பிரித்தும்விட்டான். தற்போதாவது தான் செய்த மகாபாவத்தினை அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்புகோரி தானும் தன் இருபிள்ளைகளையும் இஸ்லாத்தின் பக்கம் திருப்பவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் செய்யும்வேலையை கனகச்சிதமாக இந்த பிரபுதேவா செய்துகொண்டிருகின்றான். முதலில் ரம்லத்தை இந்துவாக மாற்றினான். தற்போது கிறிஸ்தவப் பெண்ணானா டயானா மரியம் குரியனை இந்துவாக மாற்றியுள்ளான். நாளை சீக்கியபென்னையோ அல்லது புத்த பெண்ணையோ இதுபோல் செய்வான். எனேவே அரசாங்கம் இவனை மதமாற்ற சட்டத்தின் படி கைதுசெய்யவேண்டும்.

மேலும் தற்போது பல இஸ்லாமியப்பெண்கள் காதல் என்ற பெயரில் இதுபோன்ற மாற்றுமத காமவெறியர்களின் பின் செல்வது அதிகரித்துள்ளது நமக்கு பெரும் கவலை தருகின்றது. அதிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அதிரை, தொண்டி, கடையநல்லூர், கீழக்கரை போன்ற இன்னும் பிற ஊர்களிலும் இதுபோல் தொடர்ந்து நடைபெறுகின்றது. சகோதரிகளே! இந்த நிகழ்ச்சி உங்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும். இதை ஏன் இங்கு குறிப்பிட்டு கூறியுள்ளோம் என்றால், இதுபோன்ற பிரபலங்களின் வாழ்க்கைகள் அனைவராலும் உற்றுநோக்கப்படும். நாளை நீங்களும் இதேபோன்று கசக்கி பிழிந்து அவனால் அனுபவித்துவிட்டு தூக்கி எறியப்படுவீர்கள். உனக்கு பணம் செலவு செய்து காப்பாற்றுவதற்கு அவன் தயாரில்லை!. ஏனெனில் அவன் உனக்கு மாமனும் அல்ல! மச்சானும் அல்ல!!. மாமன் மச்சானே தூக்கி எறிந்து விட்டுச்செல்லும் காலம் இது!. அவன் ஒருகல்லில் மாங்காயை மட்டுமல்ல, மாறாக மாமரத்தையே கோடாரியால் வெட்டிவிட்டு சென்றுவிடுவான். பாதிப்பு உனக்கு மட்டும்தான்!. உன்னை அனுபவிப்பது மட்டுமல்லாமல், மாறாக உன்னையே வைத்து அவன் பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிடுவான்.

எந்த ஒரு மாற்றுமதத்தவனும் இஸ்லாமியப்பெண்ணை மதம் மாற்றி கடைசிவரை வாழவைத்ததாக சரித்திரம் கிடையவே கிடையாது!. இதை ஒரு அறைகூவலாகவோ அல்லது சவாலாகவோ முஜீப்.காம் தெரிவிக்கின்றது. மாறாக மாற்றுமதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமை திருமணம் செய்த பெண்கள், மார்க்ககல்வி பயிலப்பட்டு கண்ணியமுடனும் கவுரவத்துடனும் மேலும் நரகத்திலிருந்தும் காப்பாற்றப்படும் வாழ்க்கை இஸ்லாத்தில் மட்டுமே கிடைக்கின்றது!