வியாழன், 14 அக்டோபர், 2010
கத்தார் விமான கேப்டன் நடு வானில் மாரடைப்பால் மரணம்-விமானம் தரையிறக்கம்
கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் கேப்டன் நடு வானில் திடீரென மரணமடைந்ததால், விமானம் உடனடியாக மலேசியாவுக்குத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
உயிரிழந்த கேப்டன் இந்தியர் ஆவார். அவருக்கு வயது 43. மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அந்த விமானம் பிலிப்பைன்ஸிலிருந்து கத்தார் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கேப்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இதையடுத்து உதவி கேப்டன் கோலாலம்பூர் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தவுடன் விமானம் கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் புதிய ஊழியர்களை ஏற்றிக் கொண்டு விமானம் கத்தாரைச் சென்றடைந்தது.
இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிலாவிலிருந்து டோஹா சென்று கொண்டிருந்த விமானத்தின் கேப்டன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு
குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு
குவைத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு கனரக மற்றும் லகுரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். 45வயதுக்குள் இருக்க வேண்டும்.
குவைத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்துடன் ஓராண்டுக்கு செல்லத்தக்க வகையில் அந்நாட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும்.
தகுதி உடையவர்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2 போட்டோக்களை இணைத்து தலைவர் , அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,அடையாறு, சென்னை -20என்ற முகவரிக்கு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் குவைத் நாட்டின் சட்டதிட்டப்படி இதர சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 99403-93617 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.omcmanpower.com/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)