ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஹோண்டுராஸ் கால்பந்து மைதானத்தில் 14 பேர் சுட்டுக் கொலை

Honduras Firingடெகுசிகல்பா (ஹோண்டுராஸ்) : ஹோண்டுராஸ் நாட்டின் வட பகுதியில் கால்பந்து மைதானத்தில் நடந்த மோதலின்போது மூண்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சான் பெட்ரோ சுலா என்ற இடத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் கால்பந்துப் போட்டி நடந்தது. அப்போது திடீரென சிலர் மைதானத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அனைவரது கையிலும் துப்பாக்கிகள் இருந்தன.

மைதானத்திற்குள் புகுந்த அவர்கள் போட்டியைப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பத்து பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நால்வரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

அப்பகுதியில் போதைப் பொருள் கடத்தல் மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி மோதல்கள் வெடிப்பது சகஜமாகும். மேலும் கோஷ்டி மோதல்களுக்கும் இப்பகுதியில் பஞ்சம் இல்லை. எனவே கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் இதுபோல ஒரு கோஷ்டி மோதலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

சான் பெட்ரோ சுலா நகரில்தான் கோகைன் போதைப் பொருளை சுத்திகரித்து அதை அமெரிக்காவுக்கு பெருமளவில் கடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொன்ற பாதகனை தூக்கில் போடுங்கள்-நடிகர் விஜய் ஆவேசம்

Vijayகோவை: கோவையில் இரண்டு குழந்தைகளை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த அந்த பாதகனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியுள்ளார்.

கோவையில் இரண்டு அப்பாவிக் குழந்தைகளைக் கடத்தி அநியாயமாக தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த பாதகன் மோகன் என்கிற மோகன் ராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரின் உள்ளத்தையும் பதறடித்துள்ளது இந்த சம்பவம்.

இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து வேதனையும், கோபமும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது.

துள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.

பணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும்.

இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை. மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும் என்று கூறியுள்ளார் விஜய்.

தான் நடித்து வரும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது உடுமலைப் பகுதியில் தங்கியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் !

சென்னை விமான நிலையத்தில் இருபது லட்சம் ரூபாய மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலை நகர் கொழும்புவிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் விமானம் மூலன் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு பயணி சுமார் ஒரு கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர். அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.
இது குறித்து சுங்க வரித்துறை ஆணையர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் அப்துல்லா ஜியாவுதீன் என்ற பயணி 50 தங்க கட்டிகளை (மொத்தம் 970 கிராம்) தனது ஆசனவாய் வழியாக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்ப்பபட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இது தவிர சரவணன் வித்யா ஆகிய பயணிகளிடமிருந்து 70 டிஜிட்டல் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். பெண் பயணியான வித்யா மிகவும் வித்தியாசமான வகையில் டிஜிட்டல் கேமராக்களை தனது ஜாக்கெடுக்குள்ளும், தொடை மற்றும் கால் பகுதிகளிலும் உடலோடு ஒட்டி கடத்தி வந்ததாக ஆணையர் பெரியசாமி தெரிவித்தார்.

மக்கா, மதீனாவில் உடல் நல பாதிப்பால் 29 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மரணம்!

ஹஜ் யாத்திரை சென்ற 29 இந்திய யாத்ரீகர்கள், பல்வேறு உடல் நல பாதிப்பு காரணமாக மக்காவிலும், மதீனாவிலும் மரணமடைந்துள்ளனர்.

அடுகத்த மாதம் ஹஜ் புனித யாத்திரை தொடங்குகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் யாத்ரீகர்கள் குவிந்து வருகின்றனர்.

இப்படி வந்துள்ள இந்தியர்களில் 29 பேர் இதுவரை இறந்துள்ளனர். அனைவரும் பல்வேறு உடல் நல பாதிப்புகளால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களில் 8 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.

அருந்ததி ராய் வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் ஆர்ப்பாட்டம்!

காஷ்மீர் குறித்து கருத்து கூறிய எழுத்தாளர் அருந்ததி ராயைக் கண்டித்து இன்று டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக மஹிளா மோர்ச்சா தொண்டர்கள் அதன் டெல்லி பிரிவு தலைவர் ஷிகா ராய் தலைமையில் அருந்ததி ராய் வீட்டுக்குச் சென்று வீட்டுக்கு முன்பாக அருந்ததியை எதிர்த்து கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே போராட்டக்காரர்கள் இடத்தைக் காலி செய்து விட்டனர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இருப்பினும் விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை.

டாக்டர் ராமதாஸின் தம்பி, நவ.7ல் மகனுடன் காங்.கில் இணைகிறார்!

திண்டிவனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தம்பியான சீனிவாச கவுண்டர் தனது மகன் சந்திரசேகரனுடன் நவம்பர் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸின் தம்பி சீனிவாச கவுண்டர். இப்படி ஒருவர் இருப்பதே பாமக வட்டாரத்தைத் தாண்டி மற்றவர்களுக்கு அதிகம் தெரியாது. அந்த அளவுக்கு சீனிவாசகவுண்டரின் இருப்பு வெளிச்சத்திற்கு வராமலேயே இருந்துள்ளது.

சமீபத்தில் தானும், தனது மகனும் தொடர்ந்து ராமதாஸ் குடும்பத்தாரால் கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு கட்சியில் உரிய மரியாதையும், கெளரவமும் தரப்படுவதில்லை என்றும் சீனிவாச கவுண்டரும், சந்திரசேகரனும் குற்றம் சாட்டியிருந்தார்கள். மேலும் தாங்கள் விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாகவும் கூறியிருந்தார் சந்திரசேகரன்.

இந்த நிலையில், தங்கபாலு முன்னிலையில், நவம்பர் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தன்னுடன் தனது ஆதரவாளர்கள் பெரும் திரளாக காங்கிரஸில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் 6வது முறையாக முதல்வராவது மக்களின் கையில்தான் உள்ளது-கருணாநிதி

Karunanidhiசென்னை: ஒருவரே முதல்வராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் நாம் அல்ல. பலர் முதல்வராக வரலாம்; ஜனநாயகத்திலே அதற்கு வழியிருக்கிறது; அதற்கு முறையிருக்கிறது. ஜனநாயகம் என்றால் அதுதான். நான் 6வது முறையாக முதல்வராக வருவேனா என்பது எனது கையிலோ, உங்களது கையிலோ இல்லை. அது மக்களின் கையில் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

சென்னையில் தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நிபந்தனையின்றி பயன்பெற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்த விழாவைக் காண மழையும் வந்து மண்டபத்தின் சாளரங்கள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த மழை நாம் விரும்புகின்ற நேரத்தில் வந்திருக்கிறது. சில பேர் எண்ணிக் கொண்டிருந்தார்கள், மழையுமில்லை, ஆறுகளில் தண்ணீரும் இல்லை, வயல்களில் விளைச்சலும் இல்லை; எல்லாம் வறண்டு போய் இந்த ஆட்சிக்கு சரியான சாபம் கிடைக்கும், எதிர்ப்பு கிளம்பும் என்றெல்லாம் எண்ணியிருந்தனர்.

இந்த வேளையில் எல்லோரையும் முந்திக் கொண்டு "நானிருக்கிறேன் தமிழக மக்களுக்கு உதவ'' என்று மழை வந்து, அணைகள் நிரம்பி, தண்ணீர் விடமாட்டேன் என்று சொன்ன கர்நாடகம் கூட, விட்டுத்தான் தீரவேண்டும் என்கிற நிலைமைக்கு மழை பொழிந்து, நம்முடைய நன்றியை மழைக்கும் தெரிவிக்க வேண்டியவர்களாக இங்கே கூடியிருக்கின்றோம்.

நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க அழைப்பு விடுத்தீர்கள். நான் என் சார்பாக மாத்திரமல்ல, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, குறிப்பாக உழவர்கள் சார்பாக, தொழிலாளர்களின் சார்பாக மழைக்கு நன்றி கூறுகின்றேன். சிலப்பதிகார வரிகளை நினைவூட்டி - "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று சொல்லி நன்றி கூறுகின்றேன்.

இந்த நாள் மிக முக்கியமான நாள். எப்படிச் சொல்கிறேன் என்றால், தேவர் திருமகனாருடைய குருபூஜை கமுதியில் நடைபெறுகின்ற நாள். தமிழ்நாட்டிலே உள்ள எல்லா தலைவர்களும் அங்கே தங்களுடைய கட்சித் தோழர்களோடு அணிவகுத்திருக்கின்றார்கள்.

நான் எந்த ஆண்டும் தவறாமல் அந்த விழாவிற்குச் செல்லக்கூடியவன். இடையிலே உடல் நலிவுற்ற போது, ஓரிரு ஆண்டு செல்லாமல் இருந்திருப்பேனேயல்லாமல், அந்த விழாவிற்குத் தமிழக மக்களும், தமிழகத் தலைவர்களும் சென்று எந்த நினைவுச் சின்னத்தை, எந்தக் கல்லறையை எந்தத் தேவர் திருமகனுடைய சிலையை வணங்குகிறார்களோ, அந்தக் கல்லறையை தமிழகத்தினுடைய அரசுப் பொறுப்பிலே நான் இருந்த காலத்திலே தான் அமைத்துக் கொடுத்தேன்.

கமுதிக்கு செல்கின்ற வழியில், மதுரையிலே இருக்கின்ற மிகப் பிரம்மாண்டமான தேவர் திருமகனுடைய சிலையை அமைத்து, அதை அன்றைய ஜனாதிபதி கிரியை அழைத்துத் திறந்து வைத்தவனும் நான்தான். இப்போதும் தமிழ்நாட்டிலே உள்ள தேவர் சிலைகள் அனைத்தையும் விட, பிரம்மாண்டமான பெரிய சிலை மதுரையிலே இருக்கின்ற தேவர் சிலைதான் என்று மாற்றாரும் புகழ்கின்ற நிலை இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்படிப்பட்ட மகத்தான புகழ் பெற்றவர் அவர்.

தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டுமென்று பணியாற்ற வேண்டுமென்று நாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இன்றைய தினம் சூளுரைத்துக் கொண்டு, இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்தச் சூளுரையை தம்முடைய வாழ்நாளில் தேச பக்தராக, விடுதலை வீரராக இருந்து கொண்டு - பொறுப்பேற்றுக் கொண்டு அந்தப் போரை நடத்தியவர் தேவர் திருமகன் ஆவார்.

"நன்றி மறப்பது நன்றன்று'' என்பது தமிழர்களுடைய மரபு. அந்த மரபில் நன்றியை மறப்பவர்கள் இப்போது ஆங்காங்கு ஒருவர் இருவர் தோன்றுகின்ற இந்தக் காலக்கட்டத்தில்; அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், "நாங்கள் இருக்கிறோம் உனக்கு நன்றி பாராட்ட; நாங்கள் பாராட்டுவது நன்றி அல்ல, நாங்கள் உனக்குக் கூறுவது வாழ்த்து; இது நன்றி என்று கருதிக் கொள்ளாதே; உனக்கு வாழ்த்துக் கூறுகிறோம்'' என்று சொல்லி வாழ்த்துக் கூறியிருக்கின்றீர்கள். யாருடைய வாழ்த்து பலிக்கிறதோ, பலிக்கவில்லையோ; பாட்டாளி மக்களாகிய - தொழிலாளர் தோழர்களாகிய உங்களுடைய வாழ்த்து பலிக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த வாழ்த்துக்களை யெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நம்முடைய வாரியத் தலைவர்கள் பொன்குமார் ஆனாலும், மற்றும் குமரி அனந்தன் ஆனாலும், சேம நாராயணன் ஆனாலும், ரவிச்சந்திரன் ஆனாலும் அத்தனைபேரும் அமைப்புக்களுக்குத் தலைவர்களாக - வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்பதைவிட; அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு தலைவர்களாக இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.

இந்த பொன்குமார் இந்தத் தொழிலாளர்களுக்காக, பாட்டாளிகளுக்காக - அதிலும் குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்காக ஆற்றிய பணிகளை தொலைவிலே இருந்து பார்த்து - "இவர் அங்கிருக்கிறாரே?'' என்று ஏங்கியவன் நான். என்னுடைய ஏக்கத்தைப் போக்க அவர் என் பக்கத்திற்கே வந்து விட்டார்.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக அரசு செயல்படுத்திவரும் 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி, வருமான வரம்புமின்றி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 33 நல வாரியங்களிலும் இதுவரை பதிவு செய்துள்ள 2 கோடியே 9 லட்சத்து 89 ஆயிரம் உறுப்பினர்களில் 41 ஆயிரத்து 653 பேருக்கு ரூ.108 கோடியே 42 லட்சம் செலவில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

2006, மே மாதத்திற்குப் பிறகு, இந்த 33 நல வாரியங்களின் மூலம் இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.909 கோடியே 40 லட்சத்து 98 ஆயிரம் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் நிதி உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குப் பிறகும் அரசியல் காரணத்திற்காக, இவை நலம் தரக்கூடிய திட்டங்கள் அல்ல; பயனுள்ள திட்டங்கள் அல்ல; என்று இழித்தும் பழித்தும் பேசுகிறவர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது; அப்படிப்பட்டவர்கள் நலம் பெற என்ன திட்டத்தை அறிவிப்பது என்று புரியாமல்தான் நான் திகைக்கின்றேன். அவர்கள் உடல் நலம் கெட்டிருந்தால், நாம் அவர்களைக் காப்பாற்றலாம்; மன நலம் கெட்டவர்களை நாம் எப்படிக் காப்பாற்ற முடியும்?

பொறுப்பை உணராமல், அந்தப் பொறுப்பிலே இருந்து தங்களை விலக்கிக் கொண்டு, ஏதோ அரசாங்கம் என்றால், ஒருவரை மாற்றி விட்டு இன்னொருவர் வந்து அமரவேண்டும் என்பதுதான் அரசாங்கம் என்று ஒரு நிலை எடுத்தால்; ஜனநாயகத்தில் நான் ஒத்துக் கொள்கிறேன்; நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் ஜனநாயத்தைப் பற்றி உணராதவர்கள் அல்ல; ஒரு கட்சியே தொடர்ந்து ஆளவேண்டும்.

ஒருவரே முதல்வராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் நாம் அல்ல. பலர் முதல்-அமைச்சராக வரலாம்; ஜனநாயகத்திலே அதற்கு வழியிருக்கிறது; அதற்கு முறையிருக்கிறது. ஜனநாயகம் என்றால் அதுதான். அதற்காக ஒரே நாளில் எல்லோருமே முதல்வர் என்று சொல்லிவிட்டுப் போய் நாற்காலியிலே அமர்ந்தால், மக்கள் யார் யாரை அங்கே உட்கார வைக்க வேண்டுமோ, யார் யாரை எழுந்து வா வெளியே என்று சொல்ல வேண்டுமோ அவர்களை அப்படிச் சொல்வதற்கு, அப்படிச் செய்வதற்கு மக்கள் தயாராக இருந்தால், அதுவும் ஜனநாயகம்தான்.

எனவே, ஜனநாயகம் என்ற பெயரால் சர்வாதிகாரம் கூடாது; ஜனநாயகம் என்ற பெயரால் சர்வாதிகார ஆட்சி நடத்தக் கூடாது. ஆறாவது முறையும் நீங்களே ஆட்சிக்கு வரவேண்டும் என்றெல்லாம் இங்கே சிலர் சொன்னார்கள். அது உங்கள் கையிலும் இல்லை; என் கையிலும் இல்லை. அது இந்த நாட்டு மக்களுடைய கையில் இருக்கிறது; ஏழை, எளிய மக்களுடைய கையிலே இருக்கிறது; தொழிலாள தோழர்களுடைய கையிலே இருக்கிறது.

நண்பர்கள் சிலர் இங்கே பேசும்போது சொன்னார்கள் - இப்படித் தொழிலாளர்களுக்காக, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட வேண்டும்; அவர்களுக்குப் பயனளிக்க வேண்டுமென்ற எண்ணம் முதல்-அமைச்சருக்கு இளமைப் பருவத்திலேயே வந்திருக்கும் போலும் என்று சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

"நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல; பணக்கார வீட்டுத் தாழ்வாரத்திலே தவழ்ந்தவன் அல்ல; சாதாரண மனிதன். நான் ஒன்றும் பிறக்கும்போதே வாயிலே தங்கக் கரண்டியோடு பிறந்தவன் அல்ல; வைர மாலை, முத்து மாலையைக் கழுத்திலே அணிந்து கொண்டு பிறந்தவன் அல்ல; உங்களைப் போன்ற - உங்கள் வீட்டிலேயிருக்கின்ற ஏழைத் தாய்மார்களைப் போன்ற, ஏழைத் தந்தைமார்களைப் போன்ற; சாதாரணமான தந்தை, சாதாரணமான தாய்தான் எனது தாயும், தந்தையும். அவர்கள் என்னை எப்படி வளர்த்தார்கள்?

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எனக்கு ஆருயிர் நண்பராக இருந்தவர். இன்றைக்கும் ஞாபகத்தோடு சொல்கிறேன். திருவாரூர் தெற்கு வீதியில் ராமச்சந்திரன் என்கிற ஒரு சிகையலங்காரத் தொழிலாளிதான். நான் அரசியல் தெரிந்துகொள்ள, பத்திரிகைகளைப் படிக்க நான் செல்லுகின்ற இடங்களிலே மிக முக்கியமான இடம் அவருடைய முடிதிருத்தும் நிலையம்தான். அங்கே போய் வாசக சாலைகளிலே படிப்பதைப் போல, போய் அமர்ந்ததும், அங்குள்ள பத்திரிகைகளை எடுத்துப் படிப்பேன்.

அந்தப் பத்திரிகைகளிலே "பகுத்தறிவு'', "குடியரசு'' இந்த ஏடுகள் தந்தை பெரியாருடைய கட்டுரைகள், தோழர் கைவல்ய சாமியினுடைய கட்டுரைகளை ஏந்தி வருகின்ற கட்டுரைகள் - இவற்றை எல்லாம் அந்தப் பத்திரிகைகளிலே இருக்கும். அவற்றைப் படித்துப் படித்து, நானும் சுயமரியாதை உணர்வோடு பகுத்தறிவு உணர்வோடு பெரியாருடைய கொள்கைகளை ஜாதி மதமற்ற கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அந்த சின்னஞ்சிறு வயதிலே நாங்கள் பகுத்தறிவுப் பள்ளிக்கூடமாக அன்றைக்கு நினைத்து ஏற்றுக் கொண்டு, அந்தத் தோழமையோடு இன்றளவும் அவர்களையும் மறவாமல் எண்ணி, என்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திலேகூட அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

"முடிதிருத்துவோர்'' என்று எண்ணவில்லை. "முடி''யைத் திருத்துவோர் நாட்டிலே ஆளுகின்றவர் தவறாக நடந்தால், அந்த முடியை அமைக்கின்றவனும், திருத்துகின்றவனும் "முடி''யைத் திருத்துபவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் "முடிதிருத்துபவர்'' என்று சொன்னேன். அந்த ராமச்சந்திரன் அன்றைக்கு எனக்குக் கற்றுக் கொடுத்த, எனக்குப் பயிற்றுவித்த, எனக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை ஊக்கப்படுத்திய அந்த முறைகளெல்லாம் இன்றைக்கும் உதவுகின்றன.

நான் கலப்புத் திருமணத்தை, கூட்டத்திலே மாத்திரம் பேசுபவன் அல்ல; என்னுடைய வீட்டிலேயே அதைச் செய்து காட்டியவன். என்னுடைய மகன் அழகிரிக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் மணம் முடித்தேன்.

என்னுடைய மருமகளாக இருக்கின்ற காந்திமதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்த பெண். "சரி, பெண்ணை எடுத்தாய் அந்தச் சமுதாயத்திற்குப் பெண்ணைக் கொடுத்தாயா?'' என்று கேட்டால்; என்னுடைய பேத்தி கலைச்செல்வியை, நாமக்கல்லிலே இருக்கின்ற ஒரு டாக்டருக்கு அருந்ததியர் வகுப்பிலே பிறந்த ஒருவருக்கு அந்தப் பெண்ணைக் கொடுத்திருக்கிறேன். எனவே, ஜாதி, மத வித்தியாசத்தை என்றைக்கும் பார்த்தவன் அல்ல நான்.

இன்றைக்கும் என்னுடைய அந்தரங்க உதவியாளராக என்னுடைய அன்புக்குரிய உதவியாளராக - இடைவிடாமல் எனக்குப் பணியாற்றுகின்ற உதவியாளராக என்னைக் காப்பாற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற உதவியாளராக இருக்கின்ற தம்பி அருந்ததிய வகுப்பைச் சேர்ந்தவர்தான். எனக்கு ஜாதி, மதம் இவைகளிலே நம்பிக்கை உள்ளவர்களைப் பிடிக்காதது மாத்திரமல்ல; நானும் ஜாதி, மத நம்பிக்கையில்லாதவனாகத்தான் என்னுடைய பொது வாழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

அதனால்தான் இங்கே நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப்போல், "இவன் எப்படி இந்தத் தொழிலாளர்களுக்கெல்லாம் பாதுகாவலனாக இருக்கின்றான்? என்ன காரணம்?'' என்று யாரும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நானே சாதாரண, சாமான்ய, பின்தங்கிய, மிக மிகப் பின்தங்கிய - பின்தங்கிய, பின்தங்கிய என்று எத்தனை பின்தங்கிய என்று போட்டுக் கொண்டாலும், அவ்வளவு பின்தங்கிய சமுதாயத்திலே பிறந்தவன் என்ற காரணத்தாலேதான்.

இன்றைக்கு அந்த மக்களுக்காக உழைக்கின்ற அந்த உள்ளத்தை நான் பெற்றிருக்கின்றேன். ஏதோ பாராட்டினார்கள், முதல்வர் என்பதற்காக வாழ்த்தினார்கள் என்று அலட்சியப்படுத்தாமல், உங்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பொன்னே போல் போற்றி; நீங்கள் காலால் இட்ட கட்டளையை, தலையால் செய்கின்ற ஒரு தொண்டனாக என்றென்றும் இருப்பேன்.

ஆணவத்தால், அகம்பாவத்தால் முதல்-அமைச்சர் என்ற அந்த கர்வத்தால், உங்களை நான் பார்க்கமாட்டேன். உங்களுடைய தோழன், தொண்டன், உறவினன், உடன்பிறப்பு என்ற முறையிலேதான் என்றென்றும் உங்களோடு இருப்பேன் என்றார் கருணாநிதி.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி குஜராத்தை விட்டு மும்பை போனார் அமீத் ஷா !

Amit Shahஅகமதாபாத்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி குஜராத்தை விட்டு வெளியேறி மும்பைக்குப் போய் விட்டார் முன்னாள் குஜராத் அமைச்சரும், சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அமீத் ஷா.

குஜராத் உயர்நீதிமன்றம் அமீத் ஷாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அதை எதிர்த்து இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.
  
அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது என்று கூறி விட்டது. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை காலை அமீத் ஷா குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும். நவம்பர் 15ம் தேதி வரை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை குஜராத்துக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை குஜராத்தை விட்டு வெளியேறினார் அமீத் ஷா. அவர் மும்பை போவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒபாமா வருகையை இடதுசாரிகள் எதிர்ப்பதா? வைகோ கண்டனம்!

 ஒபாமா வருகையை இடதுசாரிகள் எதிர்ப்பதா? 
 
 வைகோ கண்டனம்
                                                                           
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 8-ந் தேதியன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக வேதனையையும் தருகிறது.
 
கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் ஒரு கருப்பு இனத்து தந்தையின் மகனாக பிறந்த பாரக் ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் ஆகி உள்ளார்.
 
இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காக போற்றுகின்ற ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தி படத்தையும் வைத்துள்ளார்.
 
ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள ஒபாமாவை, இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்க கடமைப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இடதுசாரிக கட்சிகள், அமெரிக்காவின் கொள்கைகள் இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், ஒபாமாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் எனக் கூறி உள்ளன.
 
ஒபாமா, தனது தேர்தல் பிசாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஈராக்கில் இருந்து பெருமளவு அமெரிக்க படைகளை திரும்ப பெற ஆணை பிறப்பித்து உள்ளார். மீதம் உள்ள ஐம்பதாயிரம் பேரும், அடுத்த ஆண்டு இறுதிக்கு உள்ளாகத் திரும்ப அழைக்கப்படுவர் என்று உறுதி அளித்து உள்ளார்.
 
அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி.
 
இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசல பிரதேசத்தை இந்திய பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்தியது உண்டா?
 
இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?
 
இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளான போது, தனது நாடு விடுதலைப்புலிகளை தடை செய்து இருந்தபோதிலும் ஒபாமா, போரை நிறுத்தச் சொல்லி மூன்று முறை குரல் கொடுத்தார்.
 
முள்ளிவாய்க்கால் கொடூரம் நிகழ இருந்த நேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு பெரும்அவலம் நேருகிறது என்று வேதனையோடு ஒபாமா அறிவித்ததையும் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
 
கருப்பு இனத்தில் இருந்து வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள ஒபாமாவை இந்திய நாட்டின் கோடானு கோடி மக்களும் கட்சி, மத எல்லைகளை கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டுகிறேன். இடதுசாரிகள், தங்கள் போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
 
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

கார்கில் வீடு ஒதுக்கீடு “பினாமி” பெயரில் வீடு வாங்கிய காங். தலைவர்கள்

கார்கில் வீடு ஒதுக்கீடு “பினாமி” பெயரில் வீடு
 
 வாங்கிய காங். தலைவர்கள்
                                                       
கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்கு வீடுகள் கட்டுவதற்காக மும்பை கொலாபா கடற்படை தளம் அருகே நிலம் ஒதுக்கப்பட்டது. ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டன.
மொத்தம் 6 மாடிகள் கொண்ட குடியிருப்பாக வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டன. ஆனால் இந்த திட்டம் மாற்றப்பட்டு 31 மாடிகளை கொண்ட பிரமாண்டமான குடியிருப்பாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்த வீடுகளை கார்கில் தியாகிகளுக்கு கொடுக்காமல் அரசியல் வாதிகளும், ராணுவ தளபதிகளும் தங்க ளது பினாமி பெயரில் வீடுகளை ஒதுக்கி கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.
 
இதில் மிகப் பெரிய ஊழலே நடந்து உள்ளது. மராட்டிய முதல்-மந்திரி அசோக் சவான் நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளார். அவருடைய மாமியார், மைத்துனர், மைத்துனி, ஆகியோர் பெயர்களில் 3 வீடுகளை அசோக் சவான் பெற்று உள்ளார்.
 
அதே போல முன்னாள் கடற்படை தளபதி மாத வேந்திரசிங், முன்னாள் ராணுவப்படை ஜெனரல் என்.சி.விஜ், ஜெனரல் தீபக் கபூர் ஆகியோரும் வீடுகளை பெற்றுள்ளனர்.
 
மொத்தம் 103 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும் பாலானவை “பினாமி” பெயரிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள் யார்-யார்? பினாமி பெயரில் வீடுகளை பெற்றுள்ளனர் என்ற தகவல்கள் வெளியே கசிய தொடங்கி உள்ளது.
 
அசோக் சவான் மட்டும் அல்லாமல் அவருடைய மந்திரி சபையில் உள்ள பல மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் பினாமி பெயரில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
ஆதர்ஷ் வீட்டு வசதி கூட்டுறவு ஒன்றியத்தில் 1999-ம் ஆண்டு 30 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். 2010-ல் இது 103 ஆக உயர்ந்தது.
 
உயர்த்தப்பட்ட உறுப்பினர்களில் தான் மந்திரி மற்றும் அரசியல் தலைவர்களின் பினாமிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
 
காங்கிரஸ் மந்திரிகளுடன் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 2 மந்திரிகளும் அந்த கட்சியின் சில தலைவர்களும் பினாமி பெயரில் வீடுகளை பெற்று உள்ளனர்.
 
முன்னாள் முதல்-மந்திரி நாராயண ரானேவின் நெருங்கிய நண்பர் ரூபாலி ராவ் என்பவரும் வீடு ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.
 
கடற்படை தளம் அருகே இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட அனுமதிப்பது இல்லை. ஆனால் மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்ததால் உடனடியாக அனுமதிகள் கிடைத்து உள்ளன. நகர வடிவமைப்பு துறை, வருவாய்துறை, மாநகராட்சி என அனைத்து துறைகளும் அனுமதி வழங்கி உள்ளன.
 
ஆனால் சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதியை மட்டும் பெறாமலேயே கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர்.
 
இந்த கட்டிட அனுமதி பெறப்படும் போது தற்போதைய முதல்-மந்திரி அசோக் சவான் மாநில மந்திரியாக இருந்தார். அவர் துறை சார்பிலும் கட்டிடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
கட்டிடம் அனுமதி வழங்கியதில் தற்போதைய மத்திய மந்திரிகள் விலாசராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் இருவரும் முன்பு மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த போது இந்த கட்டிடத்துக்கு பல்வேறு அனுமதிகளை வழங்கி இருக்கிறார்கள்.
 
நாராயண ரானே முதல்- மந்திரியாக இருந்த போது கட்டிடம் கட்ட முதல் அனு மதி வழங்கப்பட்டது. அடுத்து விலாசராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்த போதும் சில அனுமதிகள் பெறப்பட்டன. சுஷில் குமார் ஷிண்டே முதல்-மந்திரியாக இருந்த போது இறுதி அனுமதியை வழங்கியுள்ளார்.
 
எனவே விலாசராவ் தேஷ் முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரும் ஊழலில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் பினாமி பெயரில் வீடு பெற்று இருக்கிறார்களா? என்பது இதுவரை தெரியவில்லை. விசாரணைக்கு பிறகே இது பற்றி முழுமையாக தெரிய வரும்.
 
முதல்-மந்திரி அசோக் சவானுக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததுமே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அசோக்சவான், சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
 
ஆனால் ராஜினாமா கடிதத்தை சோனியா ஏற்க வில்லை. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
 
அவர்கள் இன்று மாலை அசோக் சவானிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு அறிக்கையை சோனியாவிடம் தாக்கல் செய்வார்கள். அசோக் சவான் மீது தவறு இருப்பதாக தெரிந்தால் அவரது ராஜினாமா ஏற்கப்படும்.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6-ந் தேதி மும்பை வருகிறார். அவர் பயணம் முடிந்ததும் அசோக் சவான் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மராட்டிய மந்திரிகள் சிலரும், காங்கிரஸ் தலைவர்களும் வீடு ஒதுக்கீட்டை பெற்று உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
 
மத்திய மந்திரிகள் விலாசராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கைகள் பாயலாம். அவர்களும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் மத்திய மந்திரி பதவியையே இழக்க வேண்டியது வரும்.
 
அசோக் சவான் மீது பாரதீய ஜனதா இன்னொரு ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளது. மும்பை குடிசை மறுவாழ்வு திட்டத்தில் கட்டிடம் கட்டுவதில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் செய்து விட்டதாக பாரதீய ஜனதா தலைவர் ஏக்நாத் கத்சே கூறியுள்ளார்.
 
பாரதீய ஜனதா அகில இந்திய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வீடு ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒபாமா சுற்றுப்பயணம் டெல்லியில் 2,000 போலீசார் பாதுகாப்பு!

ஒபாமா சுற்றுப்பயணம் 
 டெல்லியில் 2,000 போலீசார் பாதுகாப்புஅமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6, 7, 8, 9 ஆகிய 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லி வருகிறார். 2 நாட்கள் டெல்லியில் தங்குகிறார். பின்னர் மும்பை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். ஒபாமா சுற்றுப் பயணத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
 
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். பாதுகாப்பு தொடர்பாக டெல்லி போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் டெல்லியில் ஒபாமா செல்லும் சாலைகளின் வரை படத்தை வாங்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.
 
ஒபாமா செல்லும் சாலையின் ஒவ்வொரு பகுதியும் சல்லடை போட்டு சோதனை செய்யப்படுகிறது. சாலையின் கீழ் செல்லும் குழாய்கள் பற்றியும் அமெரிக்க அதிகாரிகள் விவரம் கேட்டு அந்த இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
ஒபாமா செல்லும் ராஜ்காட் காந்தி சமாதி, பாராளுமன்ற கட்டிடம், ஐதராபாத் ஹவுஸ், அவர் தங்கும் மவுரியா ஷெரட்டன் ஓட்டல் ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.
 
ஒபாமா பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவ படை மற்றும் அதிவிரைவு படை உள்பட 2000 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 
ஒபாமா பாதுகாப்புக்கு அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் காமன்வெல்த் போட்டி பாதுகாப்புக்கு ரூ.150 கோடி செலவில் இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்டன. அவை ஒபாமா பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
 
36 இடங்களில் நவீன கண்காணிப்பு காமிராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

கேரளா: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிய SDPI.

திருவனந்தபுரம்,அக்.30:கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து வார்டுகளில் இரண்டாவது இடத்தையும், 47 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது எஸ்.டி.பி.ஐ.எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட 114 வார்டுகளில் 63 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தது எஸ்.டி.பி.ஐ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்ட 22 வார்டுகளில் பன்னிரெண்டு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரு கூட்டணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக திகழ்ந்தது.
மாவட்ட பஞ்சாயத்திற்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ பெண் வேட்பாளர் நாஃபிலா 1362 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட ஐந்து ப்ளாக் டிவிசனில் நான்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க இடதுசாரி-வலதுசாரி முன்னணிகள் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து விசித்திரமான கூட்டணியை உருவாக்கியதால் எஸ்.டி.பி.ஐ தோல்வியுறக் காரணமானது என எஸ்.டி.பி.ஐ தலைவர் எ.இப்ராஹீம் குட்டி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க சி.பி.எம்-காங்கிரஸ், சி.பி.எம்-பா.ஜ.க, காங்கிரஸ்-பா.ஜ.க என்ற விசித்திரமான கூட்டணி உருவானது. எஸ்.டி.பி.ஐ தோற்கடிக்க ஜமாஅத்தே இஸ்லாமியும் பல இடங்களில் இதரக் கூட்டணிகளுடன் சேர்ந்ததாகவும் இப்ராஹீம் குட்டி தெரிவித்தார். கொல்லம், கண்ணூர், காஸர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நிர்ணாயக சக்தியாக விளங்கியுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்...

மன்மோகன் சிங் மக்கள் பிரதிநிதியா? அல்லது பணமுதலைகளின் எடுபிடியா?

பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளலாம் ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்! இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

தமிழ் ஈழ போராட்டத்தின் வீழ்ச்சிக்கு கருணாநிதி தான் முக்கிய காரணம் : பழ நெடுமாறன்.

சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார். இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:

“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.

அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.

5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.

இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.

குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.

அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன. சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.

இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.

வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

முன்னாள் மந்திரி அமித் ஷா குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு !

முன்னாள் மந்திரி அமித் ஷா குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகுஜராத் மாநிலத்தில் ஷொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அந்த மாநில உள்துறை முன்னாள் மந்திரி அமித் ஷா பதவி இழந்தார்.
 
போலீசாரால் கைது செய்யப்பட்டு 3 மாதமாக சிறையில் இருந்த அவருக்கு, குஜராத் ஐகோர்ட்டு 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீன் வழங்கியது.
 
ஆனால், இந்த ஜாமீனை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
 
வருகிற 15-ந் தேதி வரை அமித் ஷா குஜராத் மாநிலத்தை விட்டு வெளியே தங்கி இருக்கும் படியும், அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படியும் அமித் ஷாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
மேலும் வழக்கு விசாரணையை 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதற்குள் அமித் ஷாவின் பதில் மனுவுக்கு சி.பி.ஐ. பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்..

இந்தியா- சீனா இடையேயான உறவை பலப்படுத்த உறுதி: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி!

இந்தியா- சீனா இடையேயான உறவை பலப்படுத்த உறுதி: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டிஜப்பான், மலேசியா, வியட்நாம் ஆகிய 3 நாடுகளில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி திரும்பினார்.

தன்னுடன் விமானத்தில் வந்த நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்று என்னால் சொல்ல முடியாது.

சீனாவுடனான பிரச்சினைகள் குறித்து அந்த நாட்டின் பிரதமர் வென் ஜியாபோவுடன் பேசினேன்.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினைக்கு நியாயமான வழியில் இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பது என்றும், அவநம்பிக்கைகளை போக்கி பரஸ்பர உறவை பலப்படுத்துவது என்றும் தீர்மானித்து இருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

கர்நாடகத்திடம் கருணாநிதி பயப்படுவது ஏன்? - ஜெ கேள்வி!

Jayalalithaசென்னை: காவிரிப் பிரச்னை தொடர்பாக இரு மாநில உறவு பாதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர் பேட்டியளிக்கும்போது, தமிழக முதல்வர்  கருணாநிதி  மட்டும் பயப்படுவது ஏன் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:

"காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால் – நான் சொல்கிற பதில்களினால் – இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை" என்று முதல்வர் கருணாநிதி பதில் அளித்திருக்கிறார்.

கர்நாடக மாநில அமைச்சர், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கும் அளவில் துணிந்து பேட்டி அளிக்கும் போது, கருணாநிதி மட்டும் ஏன் பயப்படுகிறார்?

காவிரிப் பிரச்சினை என்பது தமிழகத்தின் உயிர்நாடி. இது குறித்த நிகழ்வுகளை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து, அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர், "நீங்கள் சொல்கிற செய்திகளையெல்லாம் நான் பத்திரிகைகளிலே பார்க்கவில்லை; பார்த்த பிறகு சொல்கிறேன்" என்று கூறியிருப்பது சரியல்ல.

காவிரியில் உரிய அளவு நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக எடுக்க வேண்டும்..."

-இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு செயல்படும் லட்சணம் இதுதானா? - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

Supreme Courtஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

செல்போன் சேவைக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 2ஜி ஒதுக்கீட்டில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், மத்திய அரசு க்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக பல தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது. துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ ராசாவின் பெயர் இதில் பலமாக அடிபடுகிறது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. கடந்த 21-ந் தேதி அன்று விசாரணை நடந்தபோது, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், "ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறப்பட்டது. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்குமாறு தொலை தொடர்பு துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு குறித்து விசாரிக்க கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் ஆஜரானார்.

நீதிபதிகள் கோபம்!

அவர், 'மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. மிகவும் சிக்கலாகவும் பெரிய அளவிலும் ஆவணங்கள் இருப்பதால் விசாரணையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை' என தெரிவித்தார்.

இதனால், நீதிபதிகள் கடுமையாக கோபம் அடைந்தனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. மெத்தனமாக செயல்படுவது குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

இன்னும் 10 ஆண்டுகள் தேவையா?

நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில், நீங்கள் (சி.பி.ஐ.) இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா? இது தான் அரசு செயல்படும் லட்சணமா? இதே நிலைப்பாட்டை மற்ற வழக்குகளிலும் நீங்கள் மேற்கொள்வீர்களா? ஏற்கனவே, ஒரு ஆண்டு முடிந்து விட்டது நினைவிருக்கிறதா?," என்றனர்.

உடனே, ராவல், டதகுந்த, திறமையான மூத்த அதிகாரிகளைக் கொண்டு அனைத்து விதமான வழிமுறைகளிலும் விசாரணையை நடத்த வேண்டி இருக்கிறது. எனவே, கால அவகாசம் தேவை" என்றார்.

இதையடுத்து, "அப்படி என்றால், இந்த வழக்கு விசாரணையை முடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்களா?" என நீதிபதிகள் கேட்டனர்.

ஆறு மாதங்களுக்குள் சி.பி.ஐ. விசாரணையை முடித்து விடுவதாக ராவல் பதிலளித்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஆஜராகவில்லை. எனவே, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மேலும், அந்த விசாரணையின்போது கோபால் சுப்பிரமணியம் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் சில கேள்விகளுக்கு பதில்களை பெற வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

234 தொகுதிகளும் வேண்டும்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்!

EVKS Ilangovanதமிழகத்தில் அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு 234 தொகுதிகளுமே வேண்டும், என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் பொதுக் கூட்டம் நடந்தது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டு பேசினர். இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:

அகிலஇந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரண்குமார் ரெட்டி பேசும்போது இளைஞர் காங்கிரசாருக்கு தேர்தலில் அதிக எம்.எல்.ஏ., சீட் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு தமிழ்நாட்டில் 130 சீட்டு கொடுக்க வேண்டும். என்னை போன்ற கிழடுகளுக்கு 100-சீட்டாவது வேண்டும்.

ஆக காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும்.

இதுபோன்ற விஷயங்கள்தான் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே கிரண் குமார் ரெட்டி இன்று டெல்லி செல்லும் போது இதை அவரிடம் எடுத்து சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சோனியாகாந்தி கலந்து கொண்ட திருச்சி பொதுக் கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டதைப் பார்த்த பின்னர் இங்கு சிலர் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். சோனியா நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டு, மகன் ராகுலை துணைப் பிரதமராகவும், மகள் பிரியங்காவை டெல்லியில் முதல்வராகவும், மருமகன் ராபர்ட் வதேராவை மகாராஷ்டிரா முதல்வராகவும் ஆக்கியிருக்க முடியும்.

யாராவது தடுத்திருக்க முடியுமா? ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. காரணம் சோனியா தன் குடும்பத்துக்காக வாழாமல் நாட்டுக்காக வாழும் தலைவர்.

காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என மக்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. சிலர் காங்கிரஸ் மீது மரியாதை உண்டு.நான் காங்கிரசுக்காக கஷ்டபட்டேன் என்றுசொல்லுகிறார்கள். இவர்கள் ஜவர்லால் நேரு மீது சென்னையில் செருப்பு வீசவில்லையா? இந்திரா காந்தி ரத்தம் சிந்தியபோது எப்படி எல்லாம் பேசினார்கள்? இதை காங்கிரஸ்காரர்கள் மறந்து விடவில்லை.

இளம் தலைவர் ராகுல் பின்னால் ஒரு பட்டாளம் வந்து கொண்டு இருக்கிறது. எனவே காங்கிரசார் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார்கள்.

இளைஞர் காங்கிரசார் தமிழக அமைச்சர்களின் சொத்து கணக்கை கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். நீங்கள் கேட்டால் யாரும் கோபப்பட மாட்டார்கள். நான் கேட்டால் கோபம் வருகிறது. ஜி.கே.வாசன் சில விஷயங்களை சொல்லும்போது லேசாக முகம் சுழிக்கிறார்கள். ஆகவே நாங்கள் பேசவேண்டியதை உங்களிடம் சொல்கிறோம். நீங்கள் பேசுங்கள். தமிழ் நாட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்போல நல்ல தலைவர்களும் உள்ளனர்.

ஆனால் ஒருவர் காங்கிரஸ் கட்சியை முடக்கி வைத்து விட்டார். அவர் பெயரை நான் சொல்லி இருப்பேன். ஜி.கே.வாசன் இருப்பதால் சொல்லவில்லை. அவர் தமிழக காங்கிரஸ் கட்சியை வேறொரு கட்சிக்கு அடகு வைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் நாம் விரும்பும் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்", என்றார்.

வீட்டு வசதி திட்ட ஊழல்: மராட்டிய முதல்வர் ராஜினாமா?

Sonia with Ashok Chavanமும்பை: மும்பையில் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மராட்டிய முதல்வர் அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் சனிக்கிழமை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அசோக் சவானின் மாமியார் உள்பட 3 உறவினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ தளபதிகள் ஆகியோருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தில்லியில் இன்று சோனியாவை நேரில் சந்தித்து சவான் விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் நான் ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளேன் என்று சோனியாவிடம் தெரிவித்தேன்." என்றார்.
சோனியாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சவாண் அளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, மும்பை வீட்டு வசதி திட்ட முறைகேடு தொடர்பாக தனக்கு அறிக்கை தரும்படி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோரிடம் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ரவி ராஜ பாண்டியன் நியமனம்!

தனியார் பள்ளி கட்ட நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரவி ராஜ பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைபடுத்த கடந்த மே மாதம் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அந்த குழு வெளியிட்ட கட்டண நிர்ணயத்தின் படியே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் அந்த உத்தரவை மதிக்காமல் கட்டணங்களை அதிகமாக வசூல் செய்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்த வழக்கு உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்த போது மேல்முறையீடு செய்த 6400 பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்து 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்க நீதிபதிகள் அரசை கேட்டுக்   கொண்டனர். பெற்றோர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளின் கட்டண விவரம் அரசு இணைய  தளத்தில் வெளியிடப் பட்டது.

கட்டண விவரம் வெளியிடப் பட்ட அடுத்த நாளே நீதிபதி கோவிந்தராஜன் தன் உடல்நிலை காரணமாக குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். கோவிந்தராஜனின் ராஜினாமா குறித்த செய்திகளை தமிழக அரசு இது நாள் வரை மறுக்கவோ ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவோ தேர்விக்காத நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரவி ராஜ பாண்டியனை கட்டண நிர்ணயக் குழு தலைவராக நியமித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லிப்ஸ்டிக் போட்டி!

உத்தர்காண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள இந்திய நுட்பவியல் கழகத்தில் வியாழக் கிழமையன்று நடைபெற்ற லிப்ஸ்டிக் இடும் போட்டி கடும் கண்டனத்திற்குள்ளாகி இருக்கிறது.

ஐஐடி ரூர்கியில் ஆண்டுதோறும் மாணவர் விழா நடைபெறும். இந்த விழாவில் மாணவர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும். இந்த ஆண்டு "தாம்ஸோ 10" என்ற பெயரில் அவ்விழா நடைபெற்றது. வியாழக் கிழமையன்று நடைபெற்ற இவ்வாண்டு விழாவில் விசித்திரமான போட்டி ஒன்றுக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் மாணவிகளுக்கு லி்ப்ஸ்டிக் இடவேண்டும். கையால் இடுவது என்று நினைக்க வேண்டாம். மாணவர்கள் லிப்ஸ்டிக்கை தங்கள் வாயில் வைத்தவாறு தங்கள் எதிரே வந்து நிற்கும் மாணவிக்கு லிப்ஸ்டிக் இட வேண்டும். வாயில் வைத்திருக்கும் லிப்ஸ்டிக் கீழே விழாமல் குறைந்த நேரத்தில் நேர்த்தியாக லிப்ஸ்டிக் வரையும் மாணவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்த இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மிகவும் கேவலமான போட்டியை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில் பாரதீய வித்யா பரீஷத், ஹிந்து ஜார்கன் மஞ்ச் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ரூர்கி ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் ஈடுபட்டவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐஐடியின் கதவை நாங்கள் பூட்டுவோம் என்று ஏபிவிபி தலைவர் ராஜன் சிங் புந்திர் கூறினார்.

இதனையடுத்து இந்நிகழ்ச்சி குறித்து விசாரிக்க உத்தர்காண்ட் மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து மாணவர்களை ஐஐடி நிர்வாகம் நீக்கி உள்ளதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஐஐடியில இத்தகயை நிகழ்ச்சி நடத்தப்பட்டது தமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று ஐஐடி ரூர்கியின் பதிவாளர் கூறியுள்ளார்.

ஒபாமாவின் புது டில்லி விஜயம் - ஒரு மணிநேரத்திற்கு 15 இலட்சம் ரூபாய் செலவு !

புது டில்லி: அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருகையை முன்னிட்டு புது டில்லியில் வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
வருகிற நவம்பர் 7, 8 - ந்தேதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் ஒபாமா, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்திக்க இருக்கிறார். இந்தியா ராணுவத்திற்கு அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து புதிய வகை விமானங்கள் வாங்குவதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.  இதற்கிடையே ஒபாமா, அவருடைய அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென புது டில்லியின் சொகுசு ஹோட்டல்கள் அனைத்தும் நவம்பர் 5 ந்தேதி முதல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஒபாமா மற்றும் அமைச்சர்கள் மெளர்யா ஹோட்டலிலும்,  உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் தாஜ் மற்றும் தாஜ் பேலஸ் ஹோட்டல்களிலும் தங்க உள்ளனர். இவர்களின் ஒரு நாள் ஹோட்டல் வாடகை மணிக்கு 15 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, புது டில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஒபாமா மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களுக்கு வெளிபுற பாதுகாப்பும், அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒபாமாவின் ரகசிய பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உள்புற பாதுகாப்பும் அளிக்க உள்ளனர். மேலும் ஒபாமாவின் அதிகாரிகள் சிலர், டில்லியின் புகழ்பெற்ற சந்தைகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் டில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

துபை, இங்கிலாந்து சரக்கு விமானங்களில் வெடிமருந்துகள் !

எமனிலிருந்து துபை வந்த பெடரல் எக்ஸ்பிரஸ் சரக்கு விமானத்தில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரிண்டரில் இந்த வெடிமருந்துகள் இருந்தன. இதனைக் கண்டுபிடித்த துபை காவல்துறை இந்த
சதித்திட்டத்தில் அல்காய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களின் சம்பந்தம் இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த சரக்கு விமானம் எமனிலிருந்து துபை வழியாக அமெரிக்கா செல்ல இருந்தது. துரிதமாக செயல்பட்டு இதனைக் கண்டுபிடித்ததால் மிகப் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாக துபை காவல்துறை தெரிவித்துள்ளது. இதே போல் இங்கிலாந்துக்கு வந்த யுபிஎஸ் விமானத்திலும் இவ்வாறான வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விமானங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு விமானத்தில் வெடிமருந்துகள் இருந்த பொதிகளும் சிகாகோவில் உள்ள ஒரு யூதக் கோவிலின் முகவரி இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். இதனால் யூத பயங்கரவாதிகளுக்கும் இந்தச் சதித்திட்டத்தில் சம்பந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை. இந்தச் சதி திட்டத்தைக்கண்டறிவதற்கு எமன் அரசாங்கம் பெருமளவு உதவி செய்ததாக ஒபாமா குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்களுக்கு பிறகு எமனிலிருந்து தனது சரக்கு விமான சேவையை யுபிஎஸ் விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. 

பேஸ் புக் விளையாட்டு - குழந்தையை கொன்ற தாய்!

பேஸ் புக்கில் விளையாடிக் கொண்டு இருந்த போது  குழந்தை அழுது  இடையூறு ஏற்படுத்தியதால்  கோபத்தில் தன் மூன்று மாத குழந்தையை கொலை செய்ததாக குற்றம்சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் தோபியாஸ்.

புளோரிடாவை சேர்ந்த தோபியாஸ் சம்பவ தினத்தன்று பேஸ் புக்கில் farmville எனும் விளையாட்டை அதிக ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கையில் தன் குழந்தை அழுததால் அதை தூக்கிப் போட்டுள்ளார். மீண்டும் ஒரு முறை தோபியாஸ் குழந்தையை தூக்கி போட்டுள்ளார் அதன் காரணமாக குழந்தையின் தலையில் அடிபட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றத்திற்காக தொபியாசுக்கு 25 முதல் 50 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.....