திங்கள், 11 அக்டோபர், 2010

தஞ்சை மாவட்டத்தில் தொடர் திருட்டு............

தஞ்சை மாவட்டத்தில் தொடர் திருட்டு............ அண்மை காலமாக தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பஸ் பயணிகளை (பெண்களை குறி வைத்து) நடந்து வருகிறது. தினம் தினம் நாம் செய்தி தாள்களில் படிக்கும் பொது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகிறது. பெண்கள் கொஞ்சம் பலகினமானவர்கள் என்று திருடர்கள் அவர்களையே குறிவைக்கிறார்கள். திருடுவது ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்..தங்கள் கொண்டு செல்லும் பொருட்களையும்,நகைகளையும்,செல் போன்களையும்,பணத்தையும் சரி வர நாம் பாதுகாக்காமல் இருப்பதே இந்த திருட்டுக்கு நாம் ஊக்கம் கொடுப்பதாகும் தன்னிடம் இருக்கும் நகைகளை மறைத்து வைத்து இருந்தாலும்,நம்முடன் இருக்கும் செல் போன்களை பஸ்ஸில் பேசாமல் இருந்தாலும் நம்முடைய பொருட்கள் காணாமல் போவதற்கு வழி இல்லை.. சிலர் தன்னிடம் இருக்கும் நகைகளையும், செல் போன்களையும் அடுத்தவர் கண்களில் பட வேண்டும் என்பதற்காக வெளியில் காண்பிப்பார்கள் இதுவே நம்முடைய பொருட்களை கொள்ளை அடிப்பதற்கு வாய்ப்பாகும். கொள்ளை போன சம்பவத்தை சில பெண்கள் காவல் நிலையத்தில் போய் புகார் கொடுப்பதும் கிடையாது அதனால் கொள்ளையர்களும் மிக துணிச்சலுடன் தன்னுடைய கொள்ளை சம்பவத்தை ஈசியாக அரங்கேற்றி விடுகிறார்கள். நம் வீட்டு பெண்களிடம் நாம் நல்லபடியாக எடுத்து சொல்லி இதை போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க ஆண்களும், பெண்களும் முன்வருவார்கள??