ஞாயிறு, 7 நவம்பர், 2010

டில்லியில் ஒபாமா ; பிரதமர் மன்மோகன் வரவேற்றார்; இரவில் சிங் விருந்தளிப்பு

Top newsமும்பை: இந்தியாவிற்கு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 2 ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ( 7ம் தேதி) பள்ளிக்குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். பின்னர் பல்வேறு நிகழச்சிகளை முடித்து மாலை 3. 30 மணியளவில் டில்லி வந்தார். விமானத்தில் வந்திறங்கிய ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் அவரது மனைவி குல்சரன்கவுர் வரவேற்றனர்.
இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையம் வந்ததும் பிரதமரும் , ஒபாமாவும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கைக்குலுக்கியும் நட்பு பரிமாறி்க்கொண்டனர். இரவில் பிரதமர் மன்மோகன்சிங் ஒபாமாவுக்கு விருந்தளிக்கிறார்.  டில்லி வந்த ஒபாமாவும் அவரது மனைவியும் ஹூமாயுன் கல்லறைக்கும்  சென்றனர். ஒபாமா, அங்கிருந்த குழந்தைகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று இரவு பிரதமர் விருந்து அளிக்கும் முன்பு பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒபாமா  இருவரும் தனியாக பேச்சுவார்‌த்தை நடத்த உள்ளதாகவும், இது ஏற்கனவே திட்டமிடப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்கள் நடக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இந்தியா வந்த ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டல் சென்றார். அங்கு பயங்கரவாதத்தை சந்தித்து மீண்டும் புத்துயிர் பெற்று திகழ்வதாக மும்பை மக்களை பாராட்டி பேசினார். தொடர்ந்து வர்த்தக முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசினார்.
 
பள்ளிக்குழந்தைகளுடன் குஷி ஆட்டம் : இன்று காலையில் மும்பையில் உள்ள ஹோலி நேம் பள்ளிக்குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார். இங்கு தீபம் ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இதனையடுத்து பள்ளிக்குழந்கைளின் பரதநாட்டியம், தியா டான்ஸ், ஹோலி ஆட்டம், மற்றும் மீனவ மக்களின் பாரம்பரிய ஆட்டம் என பல வகையாக ஆட்ட நிகழ்ச்சி நடந்தது.
ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்த ஒபாமாவும் அவரது மனைவியும் எழுந்து குழந்தைகளுடன் ஆடத்துவங்கினர்.குழந்தைகளும் ஒபாமாவுடன் கை கொடுத்து ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர். கடந்த ஆண்டில் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடித்தக்கது.
ஒபாமாவுக்கு நினைவு பரிசு: பள்ளிக்குழந்தைகள் ஒபாமாவுக்கு ( ஹேப்பி தீபாவளி மிஸ்டர் ஒபாமா ) தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லினர். தொடர்ந்து அவருக்கு மாணவர்கள் ஒரு நினைவு பரிசு வழங்கினர். இந்த பொருள் உலக வெப்பமயமாதலை தடுக்கும் கருத்தினை சொல்லும் விதமாக அமைந்திருந்தது.
இது குறித்து ஒபாமாவுடன் ஆடிய ஒரு மாணவன் கூறுகையில் , அதிபர் ஒபாமா , மற்றும் அவரது மனைவியுடன் நான் ஆடியது மிக மகிழ்ச்சியாகவும் , உற்சாகமாகவும் இருக்கிறது. உலக அளவில் வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவருக்கு நினைவு பரிசு ஒன்று வழங்கினோம் என்றார்.
தொடர்ந்து ஒபாமா , செயின்ட் சேவியர் கல்லூரியில் நடக்கும் விழாவில் பங்கேற்றார். இதனையடுத்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கிராம மக்கள் , விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள் இடையே ஒபாமா பேச்சு : இந்தியா வளர்ந்து வரும் நாடு அல்ல. ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடாகி விட்டது. உலக நாடுகளில் அபார சக்தி படைத்த நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது. என அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார் . அவர் மேலும் பேசுகையில்; இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு எல்லையில்லாதது. இந்த உறவு 21-ம் நூற்றாண்டில் மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் உதவும் வகையில் உள்ளது.

நாளை பிரதமரை சந்திக்க உள்ளேன். அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பில் பல முன்னேற்றங்கள் உருவாக்கப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவிகரமாக திகழ முடியும்.
தீவிரவாதம் நமக்கு சவாலாக அமைந்து உள்ளது. தீவிரவாதிகளை நாம் தனிமைப்படுத்த வேண்டும். இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் . எந்த மதமாக இருந்தாலும் அமைதியையே போதிக்கின்றன. இவ்வாறு ஒபாமா பேசினார்.

ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம்: 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை

ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம்:  50 ஆயிரம் இந்தியர்களுக்கு
 
 அமெரிக்காவில் வேலை
மும்பை, நவ. 7-
 
மும்பை வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அமெரிக்கா- இந்தியா தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். டிரிடன் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இருநாட்டு தொழில் அதிபர்களும் தொழில்கள் தொடர்பாக 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
 
ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக்கல் நிறுவனத்துடன் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இதுபோல பல்வேறு தொழில் அதிபர்களும் ஒபாமா முன்னிலையில் ஒப்பந்தம் செய்தனர்.
 
மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் புதிதாக வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாநாட்டில் ஒபாமா பேசியதாவது:-
 
இங்கு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் கலிபோர்னியாவிலும், ஓகிபோவிலும் உயர் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
 
கால்சென்டர் பணிகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கிறது. உலக தாராள மயத்தால் பல வேலைகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றன. வர்த்தகம் என்பது ஒரு வழிபாதை அல்ல இரு தரப்பிலும் அதன் மூலம் பயன் அடையவேண்டும்.
 
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிறப்பான பொருளாதார உறவு உள்ளது. இந்தியாவில் 2 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுக்கு வருகிறது. இந்தியாவின் இறக்குமதியில் 10 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வருகிறது. அமெரிக்காவின் 12-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா இருக்கிறது.
 
தொடர்ந்து இதில் முன்னேற்றம் நிலவுகிறது.
 
இவ்வாறு அவர் பேசினார்.

பாதுகாப்பு வளையத்தை மீறி குடிசைக்குள் நுழைந்து நலம் விசாரித்த ராகுல்காந்தி

பாதுகாப்பு வளையத்தை மீறி குடிசைக்குள் நுழைந்து நலம் விசாரித்த ராகுல்காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி தனது சுற்றுப் பயணத்தின் போது திடீர் என்று ஏழைகளின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது, அவர்களது குறைகளை கேட்பது என வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் பாதுகாப்பு வளையத்தை மீறி கோரக்பூரில் இருந்து மும்பைக்கு 36 மணி நேரம் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்து மும்பைக்கு வேலை தேடி செல்பவர்களின் இன்னல்களை நேரடியாக அறிந்து கொள்வதற்காக அவர் ரெயில் பயணிகளிடம் சகஜமாக உரையாடினார்.
 
அவரது இதுபோன்ற முன்னறிவிப்பில்லாத பயணங்களால் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும் என்று அதிரடிப்படையினருக்கு உத்தரபிரதேச போலீஸ் எச்சரித்தது.
 
இந்த நிலையில் பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல்காந்தி ஜகனாபாத் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.
 
அப்போது திடீர் என்று காரை நிறுத்தி பொதுக் கூட்டம் நடைபெறும் பிரதான நுழைவு வாயில் அருகே இருந்த தெருவோர வியாபாரியின் குடிசை வீட்டுக்குள் ராகுல்காந்தி நுழைந்தார்.
 
அவருடன் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் திகைத்துப் போய் விட்டனர். ராகுல் வருகையை சற்றும் எதிர்பார்க்காத தெருவோர வியாபாரி குடும்பத்தினர் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர். ராகுலை அவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
 
சிறுமி உள்பட அங்கு இருந்தவர்களிடம் ராகுல் காந்தி கைகுலுக்கி மகிழ்ந்தார். அவர்களது குறைகளை கேட்டு விடைபெற்றார்.
 
பின்னர் மேடை ஏறி பேசிய ராகுல்காந்தி தான் குடிசைக்கு சென்றதை குறிப்பிட்டார்.
 
நான் குடிசைக்கு சென்று மக்கள் குறை கேட்பதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றனர். என்னை பச்சா (குழந்தை) என்று அழைக்கின்றனர். ஆனால் நான் குழந்தை அல்ல என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பேசினார்.

ராமதாஸ் தம்பி மகன் ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்

ராமதாஸ் தம்பி மகன்
 
 ப.சிதம்பரம் முன்னிலையில்
 
 காங்கிரசில் சேர்ந்தார்
சென்னை, நவ. 7-
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தம்பி மகன் எஸ்.எஸ்.சந்திரசேகரன். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். எஸ்.எஸ்.சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் இணைந்தனர்.
 
அப்போது ப.சிதம்பரம், சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பலர் காங்கிரசுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் வழங்கும். பின்தங்கிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும்.
 
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
 
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கே.எஸ்.அழகிரி எம்.பி., யசோதா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, தாமோதரன், டி.வி.துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் - த.மு.மு.க.வினர் கைது!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய த.மு.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஹெலன்டேவிட்சன் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தாம் கையெழுத்திடவில்லை என்றும் தம்மிடம் அளிக்கப்பட்ட மனுவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டதாகவும் டேவிட்சன் கூறினார்.

ஹெலன் டேவிட்சனிடம் மனுவில் கைöழுத்து பெறவில்லை என்று அனுமன் சக்தி அமைப்பு சார்பில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறுத்தார். இந்நிலையில் ஹெலன் டேவிட்சன் தனது நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் காதர்மைதீன், மாவட்ட தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா

Obamaமும்பை: ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பையில் புனித சேவியர் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இன்று ஒபாமா உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியா வளர்ந்து வரும் தேசம் என்கிறார்கள். இதை நான் மறுக்கிறேன். இந்தியா ஒரு வளர்ந்து விட்ட தேசம் தான். உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அதிசயிக்க வைத்துள்ளது. வறுமையையும் தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் தகுதியும் பலமும் இந்தியாவிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு என்பது இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. உலகின் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்த கருத்து நிலவுகிறது என்றார்.

பின்னர் ஜிகாத் குறித்து ஒரு மாணவர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜிகாத் என்ற வார்த்தைக்கு தீவிரவாதிகள் பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துகின்றனர். இஸ்லாம் என்ற புனிதமான மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு தீவிரவாதிகள் விலகிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. அவர்களை ஒடுக்குவது நம் முன் உள்ள பெரிய சவால்.

அனைவருமே உலகின் எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அமைதியையும் நியாயத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள். அவர்கள் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தான் என்றார்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து நேற்று எந்தக் கருத்தையும் தெரிவிக்காத ஒபாமாவிடம், ஒரு மாணவி கேள்வி எழுப்புகையில், தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டதை சுட்டிக் காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா,

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த வேகம் பாகிஸ்தானிடம் இல்லை. தீவிரவத்தை பாகிஸ்தான் இன்னும் வேகம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து இரு நாடுகளும் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இரு நாடுகளுமே இணைந்து வளர்ச்சி பெற முடியும். இதில் அமெரிக்காவுக்கும் உதவ முடியும். ஆனால், எங்களது கருத்தை எந்த நாடு மீதும் திணிக்க மாட்டோம்.

ஆப்கானி்ஸ்தானிலும் அமைதியைத் திரும்பச் செய்து அந்த தேசத்தை ஸ்திரமுள்ளதாக்குவதும் சாத்தியம் தான் என்றார்.

முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஒபாமா தயாரானபோது மைக்கைப் பிடித்த அவரது மனைவி மிஷேல், குழந்தைகளே, ஒபாமாவிடம் மிகக் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.
   

முத்துசாமி, சின்னசாமி, மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு திமுகவில் புதிய பதவிகள்

சென்னை: அதிமுக, மதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முத்துசாமி, கரூர் சின்னசாமி, மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து திமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகளுக்கு பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி, கரூர் சின்னசாமி ஆகியோருக்கும், மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவை மு. கண்ணப்பன், ஈரோடு எஸ். முத்துசாமி ஆகியோர் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

செஞ்சி ந.இராமச்சந்திரன், திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

திமுக விவசாய அணிச் செயலாளராக கரூர் ம.சின்னசாமி நியமிக்கப்படுகிறார். இதே பொறுப்பில் உள்ள கே.பி.ராமலிங்கத்துடன் இவர் இணைந்து செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல்-மாவட்டந்தோறும் திமுக பணிக் குழுக்கள் நியமனம்:

இதற்கிடேயே வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் தேர்தல் பணிக் குழுக்களை திமுக நியமித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். இந் நிலையில், தேர்தல் பணிக் குழுக்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் பணியாற்றவும், மேற்பார்வையிடவும் திமுக முன்னணியினரைக் கொண்டு இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேஷம் போடும் ஜெயலலிதாவை சிறுபான்மையினர் நம்ப மாட்டார்கள்: கருணாநிதி

Karunanidhiசென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துகளைத் பல்வேறு தருணங்களில் தெரிவித்த ஜெயலலிதா, தேர்தல் நெருங்குவதால் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல வேடம் போடுகிறார். ஜெயலலிதாவை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி- முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்க்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்வதற்கு, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பதில்: முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்புப் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று இந்திய உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், அவ்வப்போது சிறுசிறு பராமரிப்புப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி மேற்கொள்வது ஒன்றும் புதிதாக நடைபெறுவது அல்ல. இது ஏதோ புதிதாக நடைபெறு வதைப் போலவும்; அதற்கு ஏதோ அடிப்படை இருப்பதைப் போலவும்; கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் விமர்சித்திருப்பது தவறு.

கேள்வி: இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பதாக ஒருவர் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில், பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. அப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதாகச் சொல்வது வேண்டுமென்றே இட்டுக்கட்டி, உள்நோக்கத்துடன் சொல்லப்படுவதாகும். இதில் எவ்வித அடிப்படையோ, உண்மையோ கிடையாது. ஒருவேளை மத்திய அரசின் `இந்திரா வீடுகட்டும் திட்டத்திற்கும்', தமிழக அரசின் `கலைஞர் வீடுவழங்கும் திட்டத்திற்கும்' வேறுபாடு தெரியாமல், அவர் அப்படிக் கூறியிருக்கலாம்.

அவர் இன்னொரு செய்தியையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்திலேதான் `ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம்' 15.2.1974 அன்று தொடங்கப்பட்டது. 1975ம் ஆண்டு ஜனவரியில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிசன வீட்டு வசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றிய போது, "வாடகை எதுவும் இல்லாமல், இலவசமாக இந்த வீடுகளை அரிசனச் சகோதரர்களுக்கு வழங்குவதென்று தமிழக முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன்னுதாரணத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக!'' என்று மத்திய உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜெகஜீவன்ராம் பாராட்டினார்.

சென்னை-அடையாறு, ஊரூர்ப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், "காந்தி அடிகள் கண்ட கனவினை முதல்வர் கலைஞர் நனவாக்கியதையெண்ணிப் பரவசம் அடைகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்'' என்று புகழ்ந்துரைத்தார்.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இலவச 'கான்கிரீட்' வீடு திட்டம்தான்; `இந்திரா வீட்டுவசதித் திட்டம்' என்று மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

`இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்' கீழ் ஒவ்வொரு குடியிருப்பும், மத்திய அரசு வழங்கும் 33,750 ரூபாயுடன், தமிழக அரசு வழங்கும் 26,250 ரூபாயையும் சேர்த்து, ரூ.60,000 செலவில் கட்டப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ், ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி 26,250 ரூபாய் என்பதில், மேலும் 15,000 ரூபாய் கூடுதலாகச் சேர்த்து 41,250 ரூபாயாக வழங்கிட தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. தற்போது, 2010, ஆகஸ்டு மாதத்தில் இருந்து `இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்' கீழ் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது என்பதையும்; மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு வழங்கியுள்ள பெயரை எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும் மாற்றும் எண்ணம் கிஞ்சிற்றும் தமிழக அரசுக்குக் கிடையாது என்பதையும் விமர்சித்த விவேகி அறிந்து கொள்வாராக!

கேள்வி: சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டுக்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே தனது ஆட்சிக் காலத்தில்தான் என்று ஜெயலலிதா, தனது 4.11.2010 நாளிட்ட அறிக்கையிலே கூறியிருக்கிறாரே?

பதில்: அவரது இந்த அறிக்கையைப் படிக்கும் சிறுபான்மையினர் எவரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக `கட்டாய மதமாற்றச் சட்டம்' கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பதையும்; `அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும்' என்று சொன்னவர் அவர் என்பதையும்; `கரசேவை'க்காக தமிழகத்தில் இருந்து தன் சார்பில் ஆட்களை அனுப்பி வைத்தவர் அவர் என்பதையும்; இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி, ``முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல; கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள்'' என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் ஜெயலலிதா என்பதையும்; சிறுபான்மையினர் மறந்து விடவில்லை.

2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை நீதியரசர் குமார் ராஜரத்தினம் தலைமையில் திருத்தி அமைத்து, அது நடைமுறைக்கே வராமல் போனதை மறந்து விட்டு; அதையும், சிறுபான்மைக் கமிஷனையும் இணைத்து ஜெயலலிதா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பது புரிகிறது.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்' 1.7.1999 அன்று தனி அமைப்பாக கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முதலில் `சிறுபான்மையினர் நல ஆணையம்' கழக ஆட்சியில் 13.2.1989 அன்று தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக வி.எம்.அப்துல் ஜப்பார் கழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்; தற்போது அதன் தலைவராக வின்சென்ட் சின்னதுரை நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

`உருது அகடமி' கழக அரசில் உருவாக்கப்பட்டது. `உலமாக்கள் நல வாரியம்' கழக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியருக்கென தனியே 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலே தான்.

ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும்; கழக ஆட்சியில் சிறுபான்மையினருக்குச் செய்யப்பட்டு வரும் நன்மைகளையும்; இந்த ஆட்சியே சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான ஆட்சி என்று நான் அறிவித்ததையும்; சிறுபான்மையினர் நிச்சயமாக மறந்துவிடமாட்டார்கள்.

இந்த உண்மைகளையெல்லாம் எந்தவிதமாக திருத்திச் சொன்னாலும்; தேர்தல் நெருங்க நெருங்க எத்தகைய வேடம் போட்டாலும்; சிறுபான்மையினர் ஜெயலலிதாவை நம்பமாட்டார்கள்!

கேள்வி: சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா மீண்டும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி நான் பலமுறை விளக்கம் அளித்திருக்கிறேன். எனினும், வேண்டுமென்றே தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெயலலிதா அவ்வப்போது சர்க்காரியா விசாரணை ஆணையத்தை கையிலெடுத்துக் கொள்கிறார்.

1972ல் எம்.ஜி.ஆரால் தரப்பட்ட புகார்களின்மீது 1976ல் தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். அந்த கமிஷன் முன் ஆஜராகி, விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல; விசாரணைக் கமிஷனுக்கு அவர் எழுத்துமூலம் தந்த வாக்குமூலத்தில்கூட - அந்தப் புகார் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வக்கீல் சொன்னதைத்தான், தனது புகார் மனுவில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து விட்டார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அட்வகேட் ஜெனரலாக இருந்த வி.பி.ராமன், அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு, வழக்கு தொடர்வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணன் 31.5.2001 அன்று, ``சர்க்காரியா கமிஷன் வழக்கை மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்போது அந்த வழக்கை மீண்டும் தொடரலாமா என்று அரசுத் தரப்பில் பேசுவது, சட்டத்தை அமல்படுத்துவதற்காக அல்ல; அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக என்றே தோன்றுகிறது'' என்று தனது கருத்தை வெளியிட்டார்.

கேள்வி: கொடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பற்றியும், சிறுதாவூரில் நில ஆக்கிரமிப்பு பற்றியும் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்: கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரை; சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்துவரும் வழக்குகள் முடிவுக்கு வந்து, அவற்றின்மீது தீர்ப்புகள் வெளியானதற்குப் பிறகே உண்மைகள் ஊருக்குத் தெரியும்.

சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை; இரண்டு, நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் அதிலே அடங்கி இருக்கின்றன. சிறுதாவூர் பங்களாவுக்கு வெளியே, தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 50 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்ததைப் பற்றிய பிரச்சனையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையினை ஏற்று, அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிஷன், ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது. எனினும், உடனடியாக அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாத அளவிற்கு, எதிர்தரப்பினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும், நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மற்றொன்று; சிறுதாவூர் பங்களாவுக்குள்ளே 30 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வளைத்துப் போடப்பட்டிருக்கும் பிரச்சனை. இதில் நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பிரச்சனைகளிலும், ஜெயலலிதா தன்னை, மிகவும் சாமர்த்தியமாக "நிரபராதி'' என்று சொல்லிக் கொள்வதன் மாசுபடிந்த பின்னணியை மக்கள் அறிவார்கள்!

கேள்வி: சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் மீட்கப்பட்ட பிரச்சினை வெட்கக்கேடானது என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறாரே?

பதில்: ஒருவேளை கீர்த்திவாசன் மீட்கப்படாமல், கடத்தப்பட்டவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், ஜெயலலிதா மகிழ்ச்சி கொண்டாடியிருப்பாரோ என்னவோ!

சிறுவனை மீட்பதற்கு பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை சமயோசிதமாக மேற்கொண்ட ஒருவகை உத்தி தானே தவிர; வேறல்ல. பிணையத் தொகை கைமாறியதற்குப் பிறகு, சிறுவன் மீட்கப்பட்டதையும்; பிணையத் தொகையைக் கைப்பற்றியதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதையும்; சென்னைவாழ் பொதுமக்கள் பெருமளவுக்கு வரவேற்றிருக்கிறார்கள். இந்த வரவேற்பைக் கண்டு பொறுக்க முடியாமல் தான் ஜெயலலிதா, வெட்கக்கேடு என்றெல்லாம் சொல்லி வேதனைப்படுகிறார்! என் செய்வது? வெட்கக்கேடு என்போர் - தமிழகத்தின் சாபக்கேடு!

மரபுகளை மீறி ஒபாமாவை வரவேற்கும் மன்மோகன்சிங் விமான நிலையத்துக்கு நேரில் செல்கிறார்

மரபுகளை மீறி
 
 ஒபாமாவை வரவேற்கும்
 
 மன்மோகன்சிங்
 
 விமான நிலையத்துக்கு நேரில் செல்கிறார்
 
அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
 
அமெரிக்காவில் இருந்து நேற்று மும்பை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்றும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
 
தாஜ் ஓட்டல் அருகே உள்ள ஹேலி நேம் பள்ளியில் மாணவர்-மாணவிகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இன்று மாலை அவர் மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
 
டெல்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மன்மோகன்சிங் அவருடைய மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
 
வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்பது மரபு அல்ல. ஆனால் ஒபாமா மீதுள்ள அன்பால் பிரதமர் மன்மோகன்சிங் மரபை மீறி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்கிறார்.
 
இன்று இரவு மன்மோகன் சிங், ஒபாமாவுக்கு தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்கிறார்.
 
மன்மோகன்சிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மன்மோகன்சிங்குக்கு ஒபாமா விருந்து அளித்தார். ஒபாமா அதிபர் ஆன பிறகு அவர் வெளிநாட்டு தலைவருக்கு அளிக்கப்பட்ட முதல் விருந்தாக அமைந்தது. இது மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட பெரிய கவுரவமாகவும் கருதப்பட்டது.
 
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டில் ஒபாமாவுக்கு விருந்து அளிக்கிறார்.
 
ஒபாமா நாளை பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். பின்னர் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமருடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்போது பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்து இடுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை ஒபாமா இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார்.

விமான பணிப்பெண்ணை கற்பழித்த துணை விமானி கைது

மும்பை: திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்து விமானப் பணிப்பெண்ணை பலமுறை கற்பழித்த, ஜெட் ஏர்வேஸ் நிறுவன துணை விமானி மும்பை விமான நிலையத்தில் வைதது கைது செய்யப்பட்டார்.

வருண் அகர்வால் (27) என்ற அந்த துணை விமானியும், 22 வயதான ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மும்பையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.

அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளார் வருண்.

உடலுறவுக்கு அந்தப் பெண் உடன்பட மறுத்தபோது அவரை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தையும் அணிவித்துள்ளார் அகர்வால். ஆனால், திருமணம் செய்ய மட்டும் தொடர்ந்து மறுத்து வந்த அகர்வால், சமீபத்தில் அவரை கைவிட்டுவிட்டார்.

மேலும் திருமணத்துக்கு வற்புறுத்திய அந்தப் பெண்ணை தாக்கி, வீட்டை விட்டும் விரட்டியுள்ளார்.

இதையடுத்து விலே பார்லே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்ததையடுத்து, நேற்று அகர்வாலை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

2006ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் அகர்வால், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்னாலேயே சுற்றியுள்ளார்.

முதலில் அந்தக் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார். ஆனால், இருவருமே உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார் அந்தப் பெண்.

பின்னர் மும்பை மரோல் மிலிட்டரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்ட்ல், உள்ள தனது வீட்டிலேயே அந்தப் பெண்ணை தங்க வைத்த அகர்வால் திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துவிட்டு சமீபத்தில் கைகழுவியுள்ளார்.

அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகர்வால் மற்றும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம்-மும்பை டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு பயம்-அவசரமாக தரையிறக்கம்

மும்பை: ஆம்ஸ்டர்டாமில் இருந்து மும்பை வந்து கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று வந்த தகவலையடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமி்ல் இருந்து 244 பயணிகளுடன் அந்த விமானம் நேற்றிரவு மும்பை வந்து கொண்டிருந்தது. 11.20க்கு தரையிறங்க இருந்த அந்த விமானத்தின் சரக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் இருப்பதாக ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய அதிகாரிகள் மும்பை விமான நிலையத்துக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து மற்ற விமானங்களை வானில் சுற்றச் சொல்லிவிட்டு, இந்த விமானத்தை 20 நிமிடங்கள் முன் கூட்டியே தரையிறங்க மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்தது.

இதையடுத்து பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, விமானம் விமான நிலையத்தின் இறுதிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டது.

நள்ளிரவு 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியானது.

உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்: தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும்: மும்பையில் ஒபாமா பேச்சு

உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்: தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும்: மும்பையில் ஒபாமா பேச்சுமும்பை, நவ.7-
 
மும்பை வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவர் மனைவி மிச்செல்லும் அங்குள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்றனர். அந்த ஓட்டல், கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

அத்தாக்குதலில் பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஒபாமா பார்வையிட்டார். பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
 
பின்னர், அங்கு திரண்டிருந்த, பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் ஓட்டல் ஊழியர்களுடன் கைகுலுக்கினார். அவர்களிடையே ஒபாமா 6 நிமிட நேரம் உரையாற்றினார். மும்பை தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. ஒபாமா பேசியதாவது:-
 
மும்பைக்கு வந்து இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, இந்தியர்களுடன் சேர்ந்து அமெரிக்கர்களும் கவலையுடன் பார்த்தோம். தாஜ் ஓட்டல், 4 நாட்கள் பற்றி எரிந்ததை எங்களால் மறக்க முடியாது.
 
அந்த தாக்குதல் நடந்தபோது, முன்பின் தெரியாதவர்கள், ஒருவருக்கொருவர் உதவினர். தாக்குதலை போலீசார் முடிவுக்கு கொண்டு வந்தனர். ஓட்டல் ஊழியர்கள், உயிர்த்தியாகம் செய்து நிறைய பேரைக் காப்பாற்றினர். தனது குடும்பத்தை பறிகொடுத்த இந்த ஓட்டல் மேனேஜர், தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருகிறார். மும்பை மக்களின் மனஉறுதியும், மீள்திறனும் பாராட்டுக்குரியவை.
 
மும்பை என்பது பல்வேறு தரப்பினர் வாழும் நகரம். பல நாட்டு மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதன் மூலம், மக்களை பிரித்து விடலாம் என்று தீவிரவாதிகள் கருதினர். ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினர். மும்பையையும், இந்தியாவையும் சீர்குலைக்க திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் தோற்றுப் போய் விட்டனர்.
 
ஏனென்றால், மறுநாளே மும்பை வாசிகள் பணிக்குத் திரும்பி விட்டனர். தாஜ் ஓட்டல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். சில வாரங்களில், தாஜ் ஓட்டல், விருந்தினர்களை வரவேற்க தயாராகி விட்டது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சீக்கியர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
 
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியை பலப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவேன். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இனிமேலும் தீவிரவாத தாக்குதல்கள் நீடிக்கக்கூடாது என்று, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.
 
நான் மும்பை தாஜ் ஓட்டலில் தங்குவது, தீவிரவாதத்துக்கு எதிராக நான் விடுக்கும் வலிமையான செய்தியா? என்று பலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், `ஆம்' என்பது தான். இந்திய மக்களின் வலிமைக்கு அடையாளமே, தாஜ் தான். மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்களை நீதியின் முன்பு பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.
 
இவ்வாறு ஒபாமா பேசினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை ஜெயலலிதா அறிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை  ஜெயலலிதா அறிக்கைசென்னை, நவ.7-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார். மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களை ஒப்பிட்டு புள்ளிவிவரங்களை அளித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டிலே இதுவரை இல்லாத ஒன்றாக பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும், கோவையில் இரண்டு இளம் பிஞ்சுகள் கடத்திக்கொலை; சென்னையில் பள்ளி மாணவன் கடத்தல்; புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பிரமுகர் வெட்டிக் கொலை; ஆலங்குடி நகர தி.மு.க. செயலாளர் படுகொலை; சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஆறு பேர் படுகொலை;

கடலூரில் நடு ரோட்டில் மீனவர் வெட்டிப் படுகொலை; வத்திராயிருப்பு அருகே வெடிகுண்டு வீச்சு; முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை; பணத்திற்காக துணை நடிகை கொலை என கொலை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரமாதம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

                                                                                                                                                       

சிறுவனை உயிருடன் மீட்க பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை மேற்கொண்ட ஒருவகை சமயோசித உத்திதான்: கருணாநிதி விளக்கம்

சிறுவனை உயிருடன் மீட்க பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை மேற்கொண்ட ஒருவகை சமயோசித உத்திதான்: கருணாநிதி விளக்கம்
                                                                            
சென்னை, நவ.7-
 
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வருமாறு:-

கேள்வி:-முல்லைப் பெரியாறு அணையில் பழுதுபார்க்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்வதற்கு, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- முல்லைப் பெரியாறு அணையில் வழக்கமான பராமரிப்புப் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று இந்திய உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
 
 அதன் அடிப்படையில், அவ்வப்போது சிறுசிறு பராமரிப்புப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி மேற்கொள்வது ஒன்றும் புதிதாக நடைபெறுவது அல்ல. இது ஏதோ புதிதாக நடைபெறுவதைப் போலவும்; அதற்கு ஏதோ அடிப்படை இருப்பதைப் போலவும்; கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் விமர்சித்திருப்பது தவறு.

கேள்வி:- இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பதாக ஒருவர் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில், பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது. அப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதாகச் சொல்வது வேண்டுமென்றே இட்டுக்கட்டி, உள்நோக்கத்துடன் சொல்லப்படுவதாகும். இதில் எவ்வித அடிப்படையோ, உண்மையோ கிடையாது.

ஒருவேளை மத்திய அரசின் இந்திரா வீடுகட்டும் திட்டத்திற்கும், தமிழக அரசின் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்திற்கும் வேறுபாடு தெரியாமல், அவர் அப்படிக் கூறியிருக்கலாம். அவர் இன்னொரு செய்தியையும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்திலேதான் ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம் 15.2.1974 அன்று தொடங்கப்பட்டது. 1975ம் ஆண்டு ஜனவரியில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிசன வீட்டு வசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றிய போது, வாடகை எதுவும் இல்லாமல், இலவசமாக இந்த வீடுகளை அரிசனச் சகோதரர்களுக்கு வழங்குவதென்று தமிழக முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன்னுதாரணத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக! என்று மத்திய உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜெகஜீவன்ராம் பாராட்டினார்.

சென்னை- அடையாறு, ஊரூர்ப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், காந்தி அடிகள் கண்ட கனவினை முதல்வர் கலைஞர் நனவாக்கியதையெண்ணிப் பரவசம் அடைகிறேன்; பாராட்டுகிறேன்; போற்றுகிறேன் என்று புகழ்ந்துரைத்தார்.
 
தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடு திட்டம்தான்; இந்திரா வீட்டுவசதித் திட்டம் என்று மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
 
இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடியிருப்பும், மத்திய அரசு வழங்கும் 33,750 ரூபாயுடன், தமிழக அரசு வழங்கும் 26,250 ரூபாயையும் சேர்த்து, ரூ.60,000 செலவில் கட்டப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ், ஒரு குடியிருப்புக்கு தமிழக அரசு வழங்கும் நிதி 26,250 ரூபாய் என்பதில், மேலும் 15,000 ரூபாய் கூடுதலாகச் சேர்த்து 41,250 ரூபாயாக வழங்கிட தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. தற்போது, 2010, ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின்ÕÕகீழ் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது என்பதையும்; மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு வழங்கியுள்ள பெயரை எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும் மாற்றும் எண்ணம் கிஞ்சிற்றும் தமிழக அரசுக்குக் கிடையாது என்பதையும்; விமர்சித்த விவேகி அறிந்து கொள்வாராக!
 
கேள்வி:- சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டுக்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதே தனது ஆட்சிக் காலத்தில்தான் என்று ஜெயலலிதா, தனது 4.11.2010 நாளிட்ட அறிக்கையிலே, கூறியிருக்கிறாரே?
 
பதில்:- அவரது இந்த அறிக்கையைப் படிக்கும் சிறுபான்மையினர் எவரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்! சிறுபான்மையினருக்கு எதிராக கட்டாய மதமாற்றச் சட்டம்கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பதையும்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என்று சொன்னவர் அவர் என்பதையும்; கரசேவைக்காக தமிழகத்தில் இருந்து தன் சார்பில் ஆட்களை அனுப்பி வைத்தவர் அவர் என்பதையும்; இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி, முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல; கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் ஜெயலலிதா என்பதையும்; சிறுபான்மையினர் மறந்து விடவில்லை.
 
2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை நீதியரசர் குமார் ராஜரத்தினம் தலைமையில் திருத்தி அமைத்து, அது நடைமுறைக்கே வராமல் போனதை மறந்து விட்டு; அதையும், சிறுபான்மைக் கமிஷனையும் இணைத்து ஜெயலலிதா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பது புரிகிறது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்1.7.1999 அன்று தனி அமைப்பாக கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
 
தமிழகத்தில் முதன்முதலில் சிறுபான்மையினர் நல ஆணையம் கழக ஆட்சியில் 13.2.1989 அன்று தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக வி.எம்.அப்துல் ஜப்பார் கழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்; தற்போது அதன் தலைவராக வின்சென்ட் சின்னதுரை நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.உருது அகடமிகழக அரசில் உருவாக்கப்பட்டது. உலமாக்கள் நல வாரியம் கழக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியருக்கென தனியே 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலே தான்.
 
ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும்; கழக ஆட்சியில் சிறுபான்மையினருக்குச் செய்யப்பட்டு வரும் நன்மைகளையும்; இந்த ஆட்சியே சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான ஆட்சி என்று நான் அறிவித்ததையும்; சிறுபான்மையினர் நிச்சயமாக மறந்துவிடமாட்டார்கள். இந்த உண்மைகளையெல்லாம் எந்தவிதமாக திருத்திச் சொன்னாலும்; தேர்தல் நெருங்க நெருங்க எத்தகைய வேடம் போட்டாலும்; சிறுபான்மையினர் ஜெயலலிதாவை நம்பமாட்டார்கள்!
கேள்வி:- சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா மீண்டும் சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- சர்க்காரியா விசாரணை ஆணையத்தைப் பற்றி நான் பலமுறை விளக்கம் அளித்திருக்கிறேன். எனினும், வேண்டுமென்றே தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஜெயலலிதா அவ்வப்போது சர்க்காரியா விசாரணை ஆணையத்தை கையிலெடுத்துக் கொள்கிறார். 1972ல் எம்.ஜி.ஆரால் தரப்பட்ட புகார்களின்மீது 1976ல் தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. புகார் கொடுத்த எம்.ஜி.ஆர். அந்த கமிஷன் முன் ஆஜராகி, விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல; விசாரணைக் கமிஷனுக்கு அவர் எழுத்துமூலம் தந்த வாக்குமூலத்தில்கூட - அந்தப் புகார் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சேலம் கண்ணன் என்ற வக்கீல் சொன்னதைத்தான், தனது புகார் மனுவில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்து விட்டார்.
 
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அட்வகேட் ஜெனரலாக இருந்த வி.பி.ராமன், அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு, வழக்கு தொடர் வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.  முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணன் 31.5.2001 அன்று, சர்க்காரியா கமிஷன் வழக்கை மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்போது அந்த வழக்கை மீண்டும் தொடரலாமா என்று அரசுத் தரப்பில் பேசுவது, சட்டத்தை அமல்படுத்துவதற்காக அல்ல; அரசியல்ரீதியாகப் பழிவாங்குவதற்காக என்றே தோன்றுகிறது என்று தனது கருத்தை வெளியிட்டார்.
 
கேள்வி:- கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பற்றியும், சிறுதாவூரில் நில ஆக்கிரமிப்பு பற்றியும் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
 
பதில்:- கோடநாடு எஸ்டேட் வழக்குகளைப் பொறுத்தவரை; சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்துவரும் வழக்குகள் முடிவுக்கு வந்து, அவற்றின்மீது தீர்ப்புகள் வெளியானதற்குப் பிறகே உண்மைகள் ஊருக்குத் தெரியும். சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை; இரண்டு, நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் அதிலே அடங்கி இருக்கின்றன. சிறுதாவூர் பங்களாவுக்கு வெளியே, தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 50 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்ததைப் பற்றிய பிரச்சினையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையினை ஏற்று, அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிஷன், ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.
 
எனினும்,  உடனடியாக அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாத அளவிற்கு, எதிர்தரப்பினர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது.  அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும்,  நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்றொன்று; சிறுதாவூர் பங்களாவுக்குள்ளே 30 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வளைத்துப் போடப்பட்டிருக்கும் பிரச்சினை. இதில் நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளிலும், ஜெயலலிதா தன்னை, மிகவும் சாமர்த்தியமாக நிரபராதி என்று சொல்லிக் கொள்வதன் மாசுபடிந்த பின்னணியை மக்கள் அறிவார்கள்!
 
கேள்வி:- சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் கீர்த்திவாசன் மீட்கப்பட்ட பிரச்சினை வெட்கக்கேடானது என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறாரே?
 
பதில்:- ஒருவேளை கீர்த்திவாசன் மீட்கப்படாமல், கடத்தப்பட்டவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், ஜெயலலிதா மகிழ்ச்சி கொண்டாடியிருப்பாரோ என்னவோ!  சிறுவனை மீட்பதற்கு பிணையத் தொகை கொடுத்தது காவல்துறை சமயோசிதமாக மேற்கொண்ட ஒருவகை உத்தி தானே தவிர; வேறல்ல. பிணையத் தொகை கைமாறியதற்குப் பிறகு, சிறுவன் மீட்கப்பட்டதையும்; பிணையத் தொகையைக் கைப்பற்றியதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதையும்; சென்னைவாழ் பொதுமக்கள் பெருமளவுக்கு வரவேற்றிருக்கிறார்கள். இந்த வரவேற்பைக் கண்டு பொறுக்க முடியாமல் தான் ஜெயலலிதா, வெட்கக்கேடு என்றெல்லாம் சொல்லி வேதனைப்படுகிறார்! என் செய்வது? வெட்கக்கேடு என்போர் - தமிழகத்தின் சாபக்கேடு!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வங்க கடலில் புயல் சின்னம்: புதுவை பகுதியில் கடல் சீற்றம்- அரிப்பு

வங்க கடலில் புயல் சின்னம்:
 
 புதுவை பகுதியில் 
 
 கடல் சீற்றம்- அரிப்புவங்ககடலில் சென்னைக்கு கிழக்கே 900 கி.மீ. தூரத்தில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. அது புதுவை- நெல்லூர் இடையே கடற்கரையை கடக்க கூடும் என வானிலை எச்சரித்து உள்ளது.
 
அப்போது காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் கடற்கரை பகுதி உஷார் படுத்தபப்ட்டு உள்ளது.
 
கடலூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
 
புயல் சினம் காராணமாக புதுவை கடலோரப்குதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
 
சின்னமுதலியார்சாவடி, கோட்டக்குப்பம், பொம்மையார் பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்குப்பம் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றம் காரணமாக சின்னமுதலியார் சாவடியில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தன. பேரலை மேலெழும்பி கடற்கரையை முட்டி மோதுகின்றன. எனவேதங்களது படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து வைத்து உள்ளனர்.