"தஞ்சை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடன் கூடிய கடன் நடப்பாண்டு வழங்கப்படும்' என, கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனிநபர் பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 192 பயனாளிகக்கு மட்டும் கடன் வழங்க தஞ்சை மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுளளது. எனவே, விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் பெற பயனாளி ஊரக பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிக்கு அரசு மான்யத்தொகை 12 ஆயிரம் ரூபாய் வங்கி கடன் வழங்கப்படும்.
பயனாளியின் வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் படிவம் மூன்றில் வங்கி மேலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் பரிந்துரை பெற்று அனுப்ப வேண்டும்.
பயனாளி மாற்றுத்திறனாளியாக இருப்பின் அடையாள அட்டையின் நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளி விதவையாக இருப்பின் தாசில்தாரிடம் பெறப்பட்ட விதவை சான்றிதழுக்கான நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டு, பயனாளியின் ஃபோட்டோ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். கடன் பெற தேவையான அனைத்து விபரங்களுடன் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும் ஜுலை 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதன், 13 ஜூலை, 2011
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு!
அல்லாஹ்வின் திருப்பெயரால் !
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு பண்டாரவாடையில் 10/07/2011 அன்று மாலை நடை பெற்றது .
கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பாளை ரபீக் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேட்டை முஸ்தபா , மாநில செயலாளர் தாழை ராஜா ஆகியொர் முன்னிலை வகித்தனர் .தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் த...ேர்ந்தெடுக்கப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் - மாவட்ட தலைவர் - M கமருஜமான்
மாவட்ட செயலாளர் - மாங்குடி கனி
மாவட்ட பொருளாளர் -
மாவட்ட து .தலைவர் - தஞ்சை இப்ராம்ஷா
மாவட்ட து செயலாளர் - முகம்மது மகரூப்
மாணவரணி செயலாளர் - யூசுப் ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .
தீர்மானங்கள் -- 1 , அரசு பிரேத பரிசோதனை கூடங்களில் பெண் உடல்களுக்கு பெண் மருத்துவர்களை கொண்டும் ,பெண் ஊழியர்களை கொண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது.
2 , இஸ்லாமியர்களுக்கு தற்பொழுது இருக்கும் 3.1/2 சதவிகித இடஒதுக்கீட்டை ஐந்து சதமாக உயர்த்தி வழங்க கோரியும்,அதை கண்காணிப்பதற்கு குழு அமைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்துவது ,
3, எதிர்வரும் ஜூலை 24 நெல்லை மாவட்டம் பேட்டை நவாப் வாலாஜா பள்ளிவாசல் சொத்தை ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து மீட்க "கரசேவை" என்னும் மீட்பு போராட்டத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துக்கொள்வதெனவும்,
4 , தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்தை தடுக்க வேக கட்டுப்பாடு முறைபடுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமெனவும்,
5 , பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிய வருபவர்களை தேவை இல்லாமல் அலைக்கழித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறது என பல தீர்மானங்களோடு இப்பொதுக்குழு நிறைவு பெற்றது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)