ஞாயிறு, 2 ஜனவரி, 2011

Recruitment - KSA

1. Contract Engineer : 20
Qualification: B.E./B.Tech in Electronics/Electronics & Communications/Information  Technology Engineering from a recognized Institute/University.
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems.
Age limit: Maximum 40 years as on 01.12.2010
Salary package: 1500 -1800 USD Per month
2. Technicians : 40
Qualification: Diploma (Engg.) in Electronics/ Electronics & Communications/ Information Technology Engineering from a recognized Institute/ University.
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems.
Age limit: Maximum 40 years as on 01.12.2010
Salary package: 1000 -1300 USD Per month
3. Riggers : 40
Qualification: ITI/Metric (10th pass).
Experience:  Minimum 3 years post qualification experience in hoisting of Microwave Antennas and waveguide.
Age limit:  Maximum 40 years as on 01.12.2010
Salary package: 500 - 700 USD Per month     


Place of Posting: Jordan
Contract Period : 1 year initially which is likely to be extended as per the requirement of project
On posting, Engineers, Technicians and Riggers in Jordan, Company will provide Shared accommodation, to and fro ticket, cost of visa and medical etc. The candidates will be allowed to visit India once in a year on company's cost. The candidates should have a valid passport.
Interested and willing candidates may send their detailed typed resume, Copies of Educational, Experience Certificates, valid Passport Copy and 3 passport size photographs to the following address or by email ovemcl@gmail.com on or before 07.01.2011. For further details contact 044-24464268 and 24464269
Further details contact : 044-24464268 and 24467562
OVERSEAS MANPOWER CORPORATION LTD.,
1ST FLOOR, TNHB COMMERCIAL COMPLEX,
48, DR. MUTHULAKSHMI SALAI, ADYAR, CHENNAI 600 020.
Land mark : Next to Adyar Telephone Exchange

தி.மு.க. தோற்க வேண்டும்.! ஏன்?

டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட நல திட்டங்களை செய்து வருகிறார்களே இவர்களை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? என சில விவரம் புரியாதவர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.


       ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே கலைஞர் ஆட்சியில் இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆற அமர உட்கார்ந்து அரசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் சோற்றை மட்டுமே சாப்பிட பழகி கொண்டவர்களால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சிறிய குடும்பத்தை பட்டினி இல்லாமல் நடத்துவதற்கு தினசரி இருநூறு ரூபாயாவது வேண்டும். அடிப்படை தேவைகளுக்கே மாதம் ஆறாயிர ரூபாய் வேண்டும் எனும்போது தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு மக்கள் கண்கள் பிதுங்கி விடுகிறார்கள்.


    அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு குடி மகனுக்கும் மாதம் பத்தாயிரம் உதவி தொகையா தர முடியும்? என்று சிலர் கேட்கலாம் தமிழகத்தில் இருக்கின்ற எந்த மக்களும் உதவி தொகை எதிர்பார்க்கவில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்தால் தங்களது வருவாய்க்குள் செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி கொள்ளலாம் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் கடைதெருவிற்கு போனால் சட்டை பையில் பணத்தை எடுத்து போயி கைப்பையில் பொருள் வாங்கிவரலாம். இப்போதோ கைப்பையில் பணம் எடுத்து போனாலும் கூட சட்டை பை நிறைய பொருள் கிடைப்பதில்லை.

    
விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றால் திருப்பூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் உற்பத்தி இழப்பு என்பது பல கோடி ரூபாயை தாண்டிவிடும்.

    
இன்று தமிழகம் முழுவதிலுமே பலமணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. பலசிறிய தொழிற்சாலைகள் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு போய்விட்டன. இதனால் பல தொழிலாளர் குடும்பங்கள் வீதி வந்துவிட கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது



   நமது தமிழக அரசோ மின்சார உற்பத்தியை சீர்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை இரண்டாயிரத்து ஒன்பதில் கூட அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரளவு பிரச்சனையை சமாளித்து இருக்கலாம். அரசின் மெத்தன போக்கால் விவசாயம், தொழில்துறை, வீடுகள், மருத்துவமனைகள் கூட இருள் அடைந்து வருகிறது.

   
இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யுனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்டுத்துபவர்களுக்கு யுனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஏற்றியிருப்பது கடும் வேதனைக்குரியது, இன்றைய நிலையில் 300 யுனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அதுவும் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கணக்கீடு டிஜிட்டல் மீட்டர்கள், இண்டிகேட்டர் எரிந்தால் கூட மரவட்டை மாதிரி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது எல்லாம் சாதாரணமாக ஒரு குழல்விளக்கு எரிந்தால் கூட முன்னூறு ரூபாய்க்கு மேல் தான் மின்சாரகட்டணம் வருகிறது.


   தமிழகத்தின் பல ஊர்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே சுத்தமாக கிடையாது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்பேரஷன் குழாயில் குடிதண்ணீர் வந்தே வருட கணக்காகிறது. தர்மபுரி, திருப்பூர், நான்குனேறி, ராதாபுரம், மதுரையின் சில பகுதிகளில் குடிதண்ணீருக்காக ஒரு குடும்பம் மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

 
நிலத்தடி நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலே தமிழகத்தில் குடீநீர் பிரச்சனையே ஏற்படாது. ஆனால் நிலத்தடி நீர் சுண்டி போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் ஆளும் தரப்பு செய்து கொண்டியிருக்கு


   பல நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெருவிளக்கை கூட பராமரிக்க அக்கறையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக தலூக்கா தலைநகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துக்களே இருப்பில் இருப்பது இல்லை.

    
கலைஞர் மருத்துவ காப்பிடு திட்டம் மிகபெரும் சேவைதிட்டமாக அரசாங்கத்தால் விளம்பரபடுத்தப்படுகிறது. உண்மையில் அந்த திட்டத்தால் சில ஏழைகள் பயன்பட்டாலும் கூட, பெருமளவு பயனையும், இலாபத்தையும் அனுபவிப்பது ஆளும் கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் மருத்துவ மனைகளே ஆகும்.

    
அரசாங்கத்திலிருந்து நோயாளிக்கு ஒரு லட்சரூபாய் வரை சலுகை வழங்குவதாக கூறப்பட்டாலும் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏரளமான கட்டண தொகைகளை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து கரந்து விடுகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு தான் கிசிக்கை என்று இருக்கும். போது நோயாளிகளுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியாத போது மக்களின் அறியாமையை பல மருத்துவ மனைகள் சுயலாபத்தோடு பயன்படுத்துகின்றனர். ஆளும் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலே காப்பிட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கொள்ளப்படுகிறது. இது மருத்துவர்களால் பேப்பர் கேஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பிறகு சில செயற்கை கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணமாக்கப்படுவதாகவும் கேள்வி.



    சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் பெருமையடித்து கொள்கிறது. உண்மையில் இந்த கல்விமுறை பாடப்புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையோ, மாணவர்களும், பெற்றோர்களும் திணரும் வண்ணமே உள்ளது.

    
தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருமே தங்களுக்கு என்று தனிதனி கல்லூரிகளை கட்டி வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கும் போது மக்களுக்கு பயன்படும் வண்ணம் கட்டண விகிதங்களை அரசாங்கத்தால் எப்படி தீர்மானிக்க முடியும்?

    
கல்வியை வியாபார பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்த்தவர்கள், ஆங்கிலத்தை வரவேற்று தமிழை அழித்தவர்கள் கல்விக்காக எப்படி சேவை செய்வார்கள்


       சமுதாயத்தில் நடைமுறை தலைமுறையினரை தமிழ் பண்பாட்டை அறிய முடியாத வண்ணம் இன்று நாடு ஆகிவிட்டது. தமிழக்காக ஒடும் ஏயிலை இடைமறித்து தண்டவாளத்தில் தலைவைத்து, பாளையங்கோட்டை சிறையில் பாம்பும், தேளும் நடுவில் கடுஞ்சிறை அனுபவித்தவர் ஆட்சியில் தமிழ் பண்பாடு காற்றோடு போனதோ இல்லையோ பணக்கார தமிழன் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

      
தி.மு.க. அரசு சொன்னதைதான் செய்யும், செய்ததை தான் சொல்லும் என்று நமது முதல்வர் அவர்கள் அழகான கவிதை மொழியில் பேசி ஐம்பது லட்சம் ஏக்கர் நிலத்தை நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கராக பிரித்து தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள்


    ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிய போகிறது. இதுவரை எத்தனை பேர்கள் நிலத்தை பெற்றார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் கேட்டால் ஐம்பது லட்ச ஏக்கர் நிலமில்லை, இருந்தால் காட்டுகள் பிரித்து தருகிறோம் என்கிறார்.

     
இதை தான் ஆரம்பத்தில் வை. கோபால்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் மேடைகளில் கேட்டபோது ஏழைகள் நிலம் பெறுவது பிடிக்காதவர்கள் என்று எரிச்சல்பட்டார் முதல்வர், இன்று அவர் கூறுகிறபடியே பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கும் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்களையாவது பிரித்து கொடுங்கள் என்று ஏழைகள் கேட்டால் காவல் துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி தனது நிஜமான அரக்க தனத்தை வெளிகாட்டுகிறார்.



     பன்னாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்களை கை வைத்து புதிய பிரச்சனைகளை கூட கிளப்ப வேண்டாம். அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சார்ந்த திமிங்கலங்கள் பல காலமாக அபகரித்து அனுபவித்து வருகிறார்கள் அதை கையகப்படுத்தி மக்களுக்கு கொடுத்தாலே ஏராளமான பேர் பயனடைவார்கள்.

   
தமிழக அரசே கூட திருவள்ளூர் மாட்டம் காவேரி ராஜபுரத்தில் 199 ஏக்கர் நிலத்தையும், பல்லவாடத்தில் 800 ஏக்கர் நிலத்தையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மா பட்டியில் 5000 ஏக்கர் நிலத்தையும் கைவசம் வைத்துள்ளது.

       
கையளவு இடமிருந்தால் கூட கண்ணீர் விடும் ஏழைக்கு தானமாக கொடுப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த நிலங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி தயாநிதிமாறன் போன்றோருக்கு பட்டாபோட்டு கொடுக்க போகிறாரோ என்னவோ? நிலைமை இப்படியிருக்க தி.மு. அரசு செய்யும் பல நல்திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எதிர்கட்சிகள் பொறாமைபடுவதாக ஆளும் தரப்பு வாய்வலிக்க புலம்புகிறது.



     தற்போதைய தமிழக அரசின் இலவச திட்டங்கள் எந்த கோணத்தில் மக்களால் பார்க்கப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் மக்களிடத்தில் கூட சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இலவச அடுப்பு கொடுத்தார்கள் ஏரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு ஏறிவிட்டதனால் அடுப்பு துருபிடித்து கிடக்கிறது.

  
இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி தந்தார்கள். ஒரு நாள் ஒடியது மறுநாளில் வெறும் புள்ளி மட்டும் தான் தெரிந்தது. ஒடாத டி.வி யை மூலையில் போடுவதா அல்லது வெங்காயத்திற்கோ மரவள்ளி கிழங்கிற்கோ, காயலான் கடையில் போடுவதா?

   
அடுத்ததாக இலவச நீர் மோட்டார் தரப்போவதாக தலைவர் அறிவித்து இருக்கிறார். அதை வாங்கி எந்த பழைய இரும்பு கடையில் போடுவது என்று மக்கள் பேசி கொள்கிறார்கள்.

     
இதுமட்டுமல்ல இந்த இலவச திட்டங்களை எல்லாம் அறிவிப்பதை விட்டுவிட்டு நிலப்பதிவு அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், காவல் துறை போன்வற்றில் ஊழல் நடக்காமல் சாமானியனும் நிவாரணம் பெற வழி செய்தாலே கலைஞரை கை எடுத்து கும்மிடலாம் என்றும் பேசி கொள்கிறார்கள். இந்த பேச்சியெல்லாம் கலைஞர் காதில் எப்படியேறும்.

     
இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.

   
ஆனால் மன்னிக்க முடியாத, கூடாத ஒரு கொடும் செயலை கலைஞர் கடைபிடித்து வருகிறார். இத்தனை நாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து ஏரளமான பணத்தை சுரண்டி வைத்திருக்கிறோம். அந்த பணத்தில் கால் பங்கை செலவழித்தாலே ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களையே விலைக்கு வாங்கி விடலாம் என்று செயல்படுகிறார். இதன் மூலம் ஜனநாயகம் என்பது செத்த சவமாகிவிடும். அதனால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் பிழைக்க சர்வ நிச்சயமாக தி.மு.க தோற்க வேண்டும்.