திங்கள், 7 மார்ச், 2011

மீண்டும் திமுக-காங். பேச்சு எதிரொலி: சிபிஎம்மை அழைத்து பேசிய அதிமுக

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதலால் ஒரு வேளை, காங்கிரஸ் தனது கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் கடந்த 3 நாட்களாக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்திருந்த அதிமுக, இன்று காலை திடீரென திமுக, காங்கிரஸ் இடையே மறுபடியும் சமரச முயற்சிகள் தொடங்கியதையடுத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் பேச அழைத்தது.

வழக்கமாக அதிமுக அலுவலகத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை இன்று ஒரு ஹோட்டலில் நடந்தது.

எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் என்பது அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மிக மிகப் பொருத்தம். அதைத்தான் தற்போது அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

கடந்த பல வருடங்களாக மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் நேற்று வந்த விஜய்காந்துக்கு 41 தொகுதிகளை உடனடியாக அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. ஆனால், மதிமுக-இடதுசாரிகளுக்கு இன்னும் சீட்களை ஒதுக்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணையலாம் என்று ஜெயலலிதா நினைப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை நேற்று முன் தினமே முடிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கட்சிகளும் அந்த எதிர்பார்ப்பில் தான் இருந்தன. இந் நிலையில் திமுக-காங்கிரஸ் மோதல் தீவிரமானதையடுத்து இந்தக் கட்சிகளுடன் பேசுவதையே அதிமுக திடீரென நிறுத்திவிட்டது.

நேற்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் இரவு 10 மணி வரை அதிமுகவிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தனர். ஆனால், ஒரு போன் கூட வரவில்லை. இதனால் இந்தக் கட்சிகள் பேயறைந்த நிலையில் இருந்தன.

மதிமுக, இடதுசாரிகள் இல்லாத கூட்டணியில் சேர காங்கிரசுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்பதால், இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா தனி திட்டம் போட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஜெயலலலிதாவுக்கு வேண்டிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த வேலைகளை டெல்லியில் முடுக்கி விட்டுள்ள நிலையில் மதிமுக, இடதுசாரிகள் பெரும் கவலையில் மூழ்கியிருந்தனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 41 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது. சிறிய கட்சிகளுக்கு 8 இடங்களை ஒதுக்கியுள்ளது. இப்போது மீதம் உள்ளது 185 இடங்கள். இதில் தனது அணியில் காங்கிரஸ் இணைந்தால் அவர்களுக்கு 60 இடங்களை வரை தர ஜெயலலிதா தயாராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் வந்துவிட்டால் இடதுசாரிகளும் தாங்களாகவே வெளியே போக வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் சீட்கள் இல்லை என்ற காரணத்தால் வைகோவும் வெளியேற வேண்டிய நிலை வரலாம்.

ஜெயலலிதா எந்த நேரமும் எடுத்தேன் கவிழ்த்தேன் வேலையை செய்யக் கூடியவர் என்பதாலும், அவருக்கு அட்வைஸ் தந்து வரும் ஆர்எஸ்எஸ்-பாஜக சார்புடைய மூத்த பத்திரிக்கையாளருக்கு வைகோ, இடதுசாரிகள் என்றால் வேம்பாகக் கசக்கும் என்பதாலும் மதிமுகவும் இடதுசாரிகளும் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தன.

லேட்டஸ்ட் நிலவரம் குறித்து விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது செயற்குழுக் கூட்டத்தை இன்று அவசரமாகக் கூட்டியது. அதில் ஏதாவது ஏடாகூடமான முடிவெடு்த்துவிடுவார்களோ என்று அதிமுக நினைத்திருந்த நிலையில், இன்று காலை திடீரென திமுக-காங்கிரஸ் இடையிலான பிரச்சனையில் அரசியல் நிலைமை மாறியது.

ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு தூது விட்டது. இதையடுத்து சில பல சமரசங்களுடன் இரு தரப்பும் மீண்டும் ராசியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அதிமுக, தற்போது தனது கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் பேச முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்தது. வழக்கமாக பேச்சுவார்த்தை நடக்கும் அதிமுக அலுவலகத்துக்கு வரச் சொல்லாமல் ஒரு ஹோட்டலில் வைத்து இந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், இதில் தொகுதி உடன்பாடு ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உங்களை கூட்டணியில் தான் வைத்திருக்கிறோம் என்று சிபிஎம்முக்கு சிம்பாலிக்காக சொல்லும் வகையிலேயே இன்றைய சந்திப்பு நடந்துள்ளது.

முன்னதாக இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக அழைத்துள்ளது. நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே நீடிப்போம். அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.

கேள்வி: கம்யூனிஸ்டு கட்சிகள் அதிமுகவில் இருந்து வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளாரே?

ராமகிருஷ்ணன்: நாங்கள் ஊழலையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து வருகிறோம். எனவே இந்த கருத்து முரண்பாடானது. அதற்கு வாய்ப்பில்லை.

கேள்வி: காங்கிரஸ்-அதிமுக கூட்டணி ஏற்படலாம் என்று கூறப்படுகிறதே, அப்படியானால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

ராமகிருஷ்ணன்: இன்று மாலை அதிமுக எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இதில் இறுதி முடிவு ஏற்படும். எனவே காங்கிரஸ்- அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.

சிபிஎம்முக்கு அழைப்பு வந்துள்ளதால் மதிமுகவும், சிபிஐயும் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. அடுத்த ரவுண்டு நமக்குத்தான் என்ற நம்பிக்கையிலும், நிம்மதிப் பெருமூச்சிலும் அவை உள்ளன.

காங்-அதிமுக கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை!-இது மார்க்சிஸ்ட்:

இந் நிலையில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதற்கான அறிகுறி எதுவும் தங்களுக்குத் தெரியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

அவரிடம் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்று நிருபர்களின் கேட்டதற்கு, அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் நாங்கள் (மார்க்சிஸ்ட்) இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இந் நிலையில், கூட்டணிக் கட்சிகளை விட்டு விட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான அறிகுறி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை.

அதிமுகவுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் பிரச்சனை என்பது புதிதல்ல. ஏற்கனவே, மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் பிரச்சனை எழுந்தது. அது, அவர்கள் பிரச்சனை. விரைவில் தீர்த்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.

ஒரு கூட்டணியில் சிக்கல் என்றால் அடுத்த கூட்டணிக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்பது அரசியல் நடைமுறைதானே. என்ன நடக்கிறது என்பதை நீங்களே விரைவில் பாருங்கள் என்றார்.

இந் நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே டெல்லியில் மீண்டும் சாமதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்று மாலை பேச்சுவார்த்தை அதிமுக அழைத்துள்ளது.

இன்று மாலை அதிமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியிலேயே நாங்கள் தொடர்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை திமுக-காங்கிரஸ் சிக்கல் தீ்ர்ந்துவிட்டால் இடதுசாரிகள் தேவைப்படுவர் என்பதால் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் இன்று மாலை சந்தி்ப்புக்கு அதிமுக அழைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் இதில் தொகுதிகள் முடிவாவது சந்தேகமே என்கிறார்கள்.

அதே நேரத்தில் அதிமுகவில் முக்கிய கட்சியான மதிமுகவுக்கு இன்னும் அழைப்பு வராதது குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் ஆரம்பம் ஆகிறது: ஜி.கே.வாசன்



மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் மட்டுமின்றி தேசத்தின் எதிர்காலமும் வகுப்பறையில் இருந்து ஆரம்பம் ஆகிறது என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி ஜி.கே.வாசன்,

கல்விச்சாலைகள் வந்தால் நம் நினைவுக்கு வருவது காமராஜர் தான். 60 வருடத்திற்கு முன்பே கிராமம் தோறும் பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். அதில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு ஏற்படக்கூடாது என் பதற்காக சீருடையை கொண்டு வந்தார். பின்னர் அவர்களுக்கு மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். இது தற்போது ஆல மரம் போல் விழுது விட்டு தழைத்து பரவிகிடப்பது நமக்கு பெருமையாக உள்ளது.

மாணவர்களுக்கும், கல்லூரிக்கும் மட்டும் அல்லாமல் குடும்பம் மற்றும் தேசத்தின் எதிர்காலமும் வகுப்பறையில் இருந்து ஆரம்ப மாகிறது. எனவே கல்லூரி என்பது எதிர்காலத் தின் முக்கிய காலகட்டமாக செயல்படுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், கல்லூரிக்கும் விசுவாசம் உடையவர்களாக இருக்க வேண்டும். உங்கள் லட்சியம் உயர்வாக இருக்க வேண்டும்.

தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம் உள்பட பல துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2011 12 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.52 ஆயிரத்து 57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம்.


அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். அதேபோல் 11 வது 5 ஆண்டு திட்டத்தின் கீழ் 16 புதிய மத்திய பல்கலைக்கழகம் தொடங்க ரூ.155 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமும், 10 புதிய தேசிய தொழில் ஆராய்ச்சி நிறுவனமும் தொடங்கப் படவுள்ளது. கல்வி என்பது கல்லூரியுடன் முடிவு பெறுவதல்ல. இதை வாழ்க்கை முழுவதும் படித்து பயன்பெற வேண்டும் என்றார்.

ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக திமுக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்றனர்

ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக திமுக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்றனர்


பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழுங்குவதற்காக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சசர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், இணை அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட 4 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் மத்திய அமைச்சசர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், இணை அமைச்சர்கள் நெப்போலியன், ஜெகத் ரட்சகன் உள்ளிட்ட 4 பேரும் புறப்பட்டுச் சென்றனர். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்த முடிவின்படி, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய அவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கட்சி தலைமையின் முடிவின்படி பிரதமர் அவர்களை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை வழங்குவதற்காக செல்ல உள்ளதாக கூறினார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன், கட்சியின் முடிவின்படி எங்களின் தலைவர் கலைஞரின் அறிவுறுத்தலின்படி, மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள 6 பேரும், பிரதமர் அவர்களை சந்தித்து எங்களுடைய ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறோம் என்றார்.
மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். மற்றொரு இணை அமைச்சர் காந்தி செல்வன் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார்.


மேற்கண்ட 6 பேரும் வகித்த பதவிகள்:

கேபினட் மந்திரிகள்

1. மு.க.அழகிரி   ரசாயனம் மற்றும் உரம்
2. தயாநிதி மாறன்   ஜவுளித்துறை

ராஜாங்க மந்திரிகள்

1. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்   நிதித்துறை
2. டி.நெப்போலியன்   சமூக நீதி, அமலாக்கம்.
3. எஸ்.ஜெகத்ரட்சகன்   தகவல் ஒலிபரப்பு
4. காந்தி செல்வன்   சுகாதாரம், குடும்ப நலன்.

கடாஃபி கோட்டையில் கடும் மோதல்!

கெய்ரோ, மார்ச் 6: லிபிய அதிபரின் கோட்டையாகக் கருதப்படும் தலைநகர் திரிபோலியில் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கடும் மோதல் நடந்ததாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.  திரிபோலியில் காலை 9.15 மணியில் இருந்து விண் அதிரும் வகையில் துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டது. கடாஃபியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டைதான் இது என்று திரிபோலி மக்கள் கூறினர்.  ஆனால் இதை அரசு தரப்புத் தொலைக்காட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதிர்ப்பாளர்கள் வசம் இருந்த முக்கிய நகரங்களை கடாஃபியின் படை கைப்பற்றிவிட்டது. இதைத்தான் திரிபோலியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதாகவும் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.  திரிபோலிக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள அஸ்-ஸôவியா நகரம் இப்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த  இந் நகரை கடாஃபியின் ராணுவம் மீட்டுவிட்டதாகவும் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஆனால் இது பொய்ப்பிரசாரம் என்று அந்நகரவாசிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.  நாட்டின் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் உள்ள நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன. இப்பகுதிகளை கடாஃபி ஆதரவாளர்கள் மீண்டும் கைப்பற்றுவதென்பது எளிதான காரியமல்ல. கிளர்ச்சியாளர்கள் கை தொடர்ந்து ஓங்கி வருகின்றது என்று மக்கள் தரப்பில் கூறப்படுவதாக அல்-ஜஸீரா தொலைக்காட்சி கூறுகிறது.  கடந்த 18 நாள்களாக கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. பதவியைவிட்டு விலகக் கோரி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அவருக்கு தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகின்றன. இருப்பினும் பதவி விலக முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். "உங்களால் முடிந்ததை செய்யுங்கள்' என்று அந்நாடுகளுக்கு சவால்விடுக்கிறார்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது:  லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை நிச்சயம் உலக மக்கள் அறிந்தே ஆக வேண்டும். இதனால் லிபியாவுக்கு தனிக் குழுவை ஐ.நா.வோ, ஆப்பிரிக்க யூனியனோ அனுப்பி வைக்கலாம். இதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. லிபியாவில் அக்குழு சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். அக்குழுவுக்கு எவ்வித இடையூறும் வராது என்று உறுதியளிக்கிறேன். விசாரணைக் குழு லிபியாவுக்கு வந்தால் உண்மை தெரியவரும். அதன் மூலம் என் தலைமையிலான அரசின் மீது உலக மக்கள் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயம் நிச்சயம் மாறும்.  லிபியாவில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மக்கள் புரட்சியல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அல்-காய்தா தீவிரவாதி பின்லேடன்தான் கிளர்ச்சியை தூண்டிவிடுகிறார். இக்கிளர்ச்சியை நான் அடக்காவிட்டால் ஒட்டுமொத்த லிபிய மக்களும் அவருக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். இதுபோன்ற மோசமான நிலையை நீங்கள் சந்திக்க வேண்டுமா? யோசியுங்கள்...  இந்த கிளர்ச்சி லிபியாவுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமானப் பிரச்னை. இதை கட்டுப்படுத்தத் தவறிவிட்டால் ஐரோப்பிய கண்டத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார் கடாஃபி.

பரிதவிப்பில் அதிமுக கூட்டணி கட்சிகள்


சென்னை, மார்ச் 6: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலைகளால் அதிமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், ம.தி.மு.க. ஆகியவை தங்களது நிலைமை என்ன என்று தெரியாத பரிதவிப்பில் சிக்கியுள்ளன.  திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக தலைமை தாமதிப்பதால் காங்கிரஸ் அணிக்காக அதிமுகவில் இடங்கள் ஒதுக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.  தே.மு.தி.க.வுடனான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு இடங்களும் ஒதுக்கப்படுவது வரையில் இடதுசாரிகள், ம.தி.மு.க.வுடனான பேச்சு வார்த்தை தாமதம் ஆனது.  தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையும் விரைவில் முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதற்கிடையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதுவரையில் இடதுசாரிகள், மதிமுகவினருடன் அதிமுக குழுவினர் பேசி வந்தனர். திமுக அணியில் காங்கிரஸ் இல்லை என்று தெரிந்தவுடன் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என சொல்லப்படுகிறது.  இந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.  அதற்கான பேச்சுவார்த்தைக்காக மூன்று கட்சிகளின் தலைவர்களும் இரவு 9 மணி வரையில் காத்திருந்தனர். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வராததால் இந்தத் தலைவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மொத்தமுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 140 தொகுதிகளிலாவது அதிமுக போட்டியிடுவது வழக்கம். இந்த முறை தேமுதிகவுக்கு 41 இடங்களை ஒதுக்கிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய மூன்று பழைய கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிமுக தலைமை எப்படி திருப்திகரமாக இடங்களைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.  திமுகவுடன் இனி சமரசம் பேசப் போவதில்லை என காங்கிரஸ் தரப்பில் வெளியாகியிருக்கும் தகவல், ஒருவேளை அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற சந்தேகத்தை இடதுசாரிகள் மற்றும் மதிமுகவுக்கு எழுப்பி இருக்கிறது.  எனவே காங்கிரஸ் கட்சியை அதிமுக சேர்த்துக் கொண்டால் இடதுசாரிகள் நிச்சயமாக அந்த அணியில் இருந்து வெளியேறியாக வேண்டிய நிலை ஏற்படும். மதிமுகவைப் பொருத்தவரை காங்கிரஸ் வருவதால் பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், தொகுதிகள் எண்ணிக்கையில் பிரச்னை வரும் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில், திமுக அணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சியும் அதிமுக அணியில் இடம் பெறுவது எப்படி சாத்தியம்? ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளும் இல்லாமல் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான தொகுதிகளை அதிமுகவால் ஒதுக்க முடியும். இதுதான் இந்த மூன்று கட்சிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் ஆகும்.  அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என கூறினார். இடதுசாரிகள் வருமா என கேட்டதற்கு, ஓரிரு நாள்களில் தெரியும் என்று கூறினார்.  இதுபற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது, திமுக அணியில் இடதுசாரிகள் இடம் பெறுவதற்கான சாத்தியமே கிடையாது என்று உறுதியாகக் கூறினார். "இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளைப் பிரச்னையாக்கியதே இடதுசாரிக் கட்சிகள்தான். நாங்கள் எப்படி திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள முடியும்?' என்று பதில் கேள்வி எழுப்பினார் அவர்.  இதற்கிடையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருப்பதாகக் காங்கிரஸ் தலைவரின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஒரு தேசியத் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருப்பது, அதிமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுகவுக்கு சற்று ஆறுதலை அளிக்கக் கூடும்.  இதற்கெல்லாம் திங்கள்கிழமை மாலைக்குள் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா : இருதரப்பும் மனம் திறக்க பெரும் தயக்கம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்த பின்னும், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மனம் திறக்க இரு தரப்பினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இன்று டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். இதற்கிடையில்,முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மத்தியில் ஆட்சிக்கு முழு ஆதரவு தர முன்வந்திருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., - காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என, அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.,வின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் பீதியடைந்தது போன்ற அறிக்கை விடாததோடு, கூட்டணியை புதுப்பிப்பதற்காக தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இரு தரப்பினரும் மனம் திறந்து பேசாமல் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர்' என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அரசியல் விவகார ஆலோசகர் அகமது படேலும் நேற்று ஆலோசனை நடத்தினாலும் தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் மே.வங்கம் மற்றும் கேரளாவில் அதிக இடங்களைப் பெறும் திட்டத்திற்கு தி.மு.க.,வுடன் அணிசேராமல் இருப்பது நல்லது என்ற கருத்து பொதுச் செயலர் ராகுலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த இருமாநிலங்களிலும் அதிகம் எதிரொலிக்காமல் இருக்க இது உதவும் என்ற கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, ""காங்கிரசைச் சேர்ந்த யாரும் எங்கள் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு மத்திய அமைச்சர்களும் நாளை (இன்று) டில்லி சென்று தங்களின் ராஜினாமா கடிதங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பர்,'' என்றார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவதால் ஏற்படும் ஆதரவு இழப்பை சரிக்கட்ட, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகனுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
தவிரவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்த பலமான கூட்டணி வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமாக இருப்பதை விரும்புகிறது. ஏற்கனவே, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருக்கம் கொள்வது உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு வசதியாகும். அதனால், வெளிப்படையாக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஆதரவு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக லக்னோவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சி சேருமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி. எங்கள் கட்சி ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால், அரசுக்கு ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை' என்றார்.

காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா: பிரகாஷ் கரத் கருத்து

தி.மு.க. கூட்டணி முறிந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதற்காக அறிகுறி எதுவும் இல்லை என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் கரத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே இருக்கின்றன.


இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் கரத்திடம், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த அவர், கூட்டணி கட்சிகளை விட்டு விட்டு காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நிலையில் நாங்கள் (மார்க்சிஸ்ட்) இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.


தி.மு.க. விலகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கைகோர்க்குமா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் பிரச்சினை என்பது புதிதல்ல. ஏற்கனவே, மத்திய மந்திரி பதவிகளை பெறுவதிலும் இலாகா ஒதுக்கீட்டிலும் பிரச்சினை எழுந்தது. அது, அவர்கள் பிரச்சினை. விரைவில் தீர்த்து கொள்வார்கள் என கருதுகிறேன். என்ன நடக்கிறது என்பதை நீங்களை விரைவில் பாருங்கள். ஒரு கூட்டணியில் சிக்கல் என்றால் அடுத்த கூட்டணிக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும் என்றார்.

தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும்? கலைஞர் பதில்

முதல் அமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக, நீங்கள் முடிவை அறிவித்து 24 மணி நேரம் ஆகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?
பதில்: இல்லை. இல்லை.
கேள்வி:  தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா?
பதில்: மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கட்சியினர் வருவார்கள் என்பது இன்று அல்லது நாளை தெரியும்.

கேள்வி:  தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும்?
பதில்:  தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது பத்திரிகையில் வெளிவரும்.
கேள்வி:  தி.மு.க. காங்கிரஸ் உறவு முறிவதற்கு 3 சீட்டுதான் காரணமா?
பதில்:  அதுவும் ஒரு காரணம்.
இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

காங்கிரசிடம் இருந்து அழைப்பு வரவில்லை : கலைஞர்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக பொருளாளரும், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐவர் குழுவுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலுவும், பாமக தரப்பில் அக்கடசியின் தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன், தமிழரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

சென்னை அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை.   திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது பற்றி இரண்டொரு நாளில் தெரியும்’’ என்று தெரிவித்தார்.