செவ்வாய், 26 அக்டோபர், 2010

அ.தி.மு.க.வில் மீண்டும் ராதாரவி!

பிரபல நடிகரும் சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

நடிகர் ராதரவி டில்லியில் கடந்த 22ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் பேசியதாக பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

என்னை காங்கிரசில் சேரும்படி அவர் அழைத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் எனது முடிவை தெரிவிப்பேன் என்றும் அவர் கூறி இருந்தார்.

எனவே, ராதரவி காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து, மீண்டும் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

துபாய் அரசு நிறுவனத்தில் (DEWA) 28ம் தேதி நேர்முக தேர்வு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசுக்கு சொந்தமான  Dubai Electricity and Water Authority (DEWA) நிறுவனத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை அல் கர்ஹூட் பாலத்துக்கு அருகில் உள்ள அல்-பூம் சுற்றுலா கிராமத்தில் உள்ள லதிபா ஹாலில் நடைபெறும். தகுதியுள்ளவர்கள் மாத்திரம் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ராமர் கோயில்: கன்னியாகுமரி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத்தினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சனும் கையெழுத்திட்டிருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, அவருக்கு விளக்கம் கேட்டு திமுக தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சனும் கையெழுத்திட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஹெலன் டேவிட்சனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

ஊட்டியில் போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் கைது!

ஊட்டி,அக்,26:தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 186 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டதால் அதன் நினைவாக, ஆண்டுதோறும் விஜயதசமி காலத்தில் அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடப்பதாக இருந்தது; ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தப்படும் என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அறிவித்தனர். இதனால், ஊட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மதியம் 1 மணியளவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சீருடையுடன், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் குவியத் துவங்கினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.

வழக்கமான கொடியேற்றம், சத்ய பிரமாணம் ஆகியவற்றை நிறைவேற்றி ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு நடத்த முற்பட்டனர். தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்றதாக 186 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லாறு ஆசிரமத்தைச் சேர்ந்த வேதாந்த மஹானந்தா மற்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் மாநில ஒருங்கிணைப்பாளர் நம்பி நாராயணன் ஆகியோர், அணிவகுப்பு முடிந்து பொதுக்கூட்டத்தில் பேசவிருந்தனர். எனினும் இவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றினர்

கீழே விழுந்தாலும் பரவாயில்லை மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது - சங்க்பரிவாரின் சாகசம்.....

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் பங்கு ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் ஹிந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் அங்கலாய்ப்பில் ஆழ்ந்துவிட்டன.


மத்திய உள்துறை அமைச்சர் காவி பயங்கரவாதத்தைக் குறித்து பேசியபொழுது, ஒரு ஹிந்துவினால் பயங்கரவாதியாக மாற முடியாது எனக் கூறி, ப.சிதம்பரம் அந்த வார்த்தை பிரயோகத்தை வாபஸ் பெறவேண்டும் என துள்ளிக் குதித்தவர்கள் தற்பொழுது ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸின் குற்றப்பத்திரிகையில் வெளியான விமர்சனங்களை கண்ட பிறகு கீழே விழுந்தாலும் பரவாயில்லை மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக நடத்தும் முயற்சிகள் சுவராஸ்யமாக உள்ளன.


கடந்த 2007 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட இந்த தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிக்குண்டு தாக்குதல் நடத்துவதற்கு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது இந்திரேஷ்குமார் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவரின் உத்தரவின் படியாகும் என ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது.


2005 அக்டோபரில் ஜெய்ப்பூர் குஜராத் சமாஜம் விருந்தினர் மாளிகையில் கூடிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கூட்டத்தில் இந்திரேஷ்குமார் பங்கேற்று வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்குரிய கட்டளைகளை பிறப்பித்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வசம் உள்ளன.


அமர்நாத் கோயில் நிலம் தொடர்பாக பிரச்சனை கொளுந்துவிட்டு எரிவதற்கு முக்கியக் காரணம் இந்திரேஷ்குமார் ஆவார். அபினவ் பாரத் என்ற கொடும் பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்புடைய இந்திரேஷ்குமாருக்கு மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூருடனும் தொடர்புண்டு என புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.


ஆனால், ஆச்சரியம் என்னவெனில், இந்திரேஷ்குமாருக்கு அஜ்மீர் குண்டுவெடிப்பில் பங்கு உறுதியான பிறகும்கூட, ராஜஸ்தான் ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாதது தான். இது ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆர்வலர்களை ஆத்திரமடைய வைத்துள்ளது இயல்பானதே.


குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதற்குரிய உறுதியான ஆதாரங்கள் இருந்த பொழுதிலும் இந்திரேஷ்குமாரின் பெயரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்காதது அவரை தப்பிக்க வைப்பதற்கான முயற்சி என ராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


அதேவேளையில், ஒரு கூட்டத்தில் பங்கேற்று உபதேசங்கள் வழங்கியதற்காக எவரும் பயங்கரவாதிகளாக மாறமுடியாது என நியாயம் கற்பிக்கிறது ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை வாக்கு வங்கிகளை கவர்வதற்காக தேசத்தை நேசிப்பவர்களான சங்க்பரிவார தொண்டர்களை மத்திய அரசு புலனாய்வு ஏஜன்சிகளை ஏவிவிட்டு வேட்டையாடி சங்க்பரிவாரத்தை தகர்க்க முயல்வது காங்கிரஸின் லட்சியம் என ஆர்.எஸ்.எஸ்ஸின் மையங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.


நியாயம் பழைய பல்லவிதான். எல்லா ஹிந்துக்களும் தேசத்தை நேசிப்பவர்கள்தான். வெடிக்குண்டுகளை தயாரிப்பதும், மனிதர்கள் திரளாக வாழும் நகரங்களிலும், தெருக்களிலும், அவர்கள் பயணம் செய்யும் ரெயில்களிலும், வழிப்பாட்டுத் தலங்களிலும் குண்டு வைப்பதும் அது தெளிவான பிறகும் கூட அவையெல்லாம் பயங்கரவாதமல்ல. காரணம், ஹிந்துக்களால் தேசத்தின் துரோகிகளாக மாறமுடியாதே. அவர்களால் இந்தியாவை விட்டு வேறு தேசங்களுக்கு செல்ல முடியாதே, ஆனால் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஏராளமான நாடுகள் உள்ளனவே. ஆகவே அவர்கள் வேலை நிமித்தமாக அரபு நாடுகளுக்கு சென்றாலும் அது தேசத் துரோகம்தான். இதுதான் சங்க்பரிவார்களின் நியாயம்.


ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சங்க்பரிவார்களின் பார்வையில் ஒரு ஹிந்து குண்டு வைத்தாலோ, கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டாலோ அவையெல்லாம் தேசத்தின் மீது கொண்ட தீராக் காதலால் மேற்கொண்ட நற்பணிகளாகும்.


ஆனால், தனது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி முஸ்லிம் போராடினால் அதுதான் தேச விரோதமாகும். ஆம்,சங்க்பரிவார்கள் மல்லாந்துக் கிடந்துக் கொண்டு வானை நோக்கி காறி உமிழ்கிறார்கள்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் இந்திரேஷ்குமார் கைதாகிறார்!!

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.

குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது.

குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து சுனில் ஜோஷியும், லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

குஜராத் கலவரம்:சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி!


டெல்லி,அக்.26:2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஷான் ஜாஃப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளது.

குஜராத் கலவரம்-சுப்ரீம் கோர்ட்டில் 2வது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எஸ்ஐடி!

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது 2வது விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி கொலை வழக்கு உள்ளிட்ட 2002ல் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

இந்த குழு தனது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்குழு கடந்த மே மாதம் தனது முதல் கட்ட விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதன் பின்னர் நேற்று தனது 2வது அறிக்கையை சமர்ப்பித்தது. எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எஸ்ஐடி தரப்பில் விசாரித்தபோது, மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவை பகிரங்கமாக அறிவிக்கப்படக் கூடிய தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 2வது அறிக்கையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக ஜாப்ரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜடாபியா, எம்.கே.தான்டன் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தது எஸ்ஐடி என்பது நினைவிருக்கலாம்.

2வது விசாரணை நிலவர அறிக்கை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பரிசீலனைக்கு வரவுள்ளகது.

ராகவன் தலைமையிலான விசாரணைக் கமிட்டியில், ஒய்.சி.மோடி, கே.வெங்கடேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பெயர்தாங்கி முஸ்லிம்களே! திருந்துங்கள் திருத்துங்கள்?

அன்றாட வாழ்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது. அது தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தாங்க போகும் வரை மட்டுமல்ல இடையில் தீய கனவுகள் போன்றவற்றால் எழுந்திருக்க நேரிட்டால் அப்போதும் கூட நாம் என்ன செய்ய வேண்டும் என தூய இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட இணையற்ற இறைவனால் அருளப்பட்ட இந்த மார்க்கத்தில் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு என சொல்லப்படாத எந்த ஒரு அம்சமும் இல்லை. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் இன்று எத்தனை பேர் இந்த அற்புதமான வாழ்க்கை நெறிமுறையை விளங்கி வைத்திருக்கிறோம். மிக மிக குறைவு. நாம் அனைவரும் நம்மை அறிவு ஜீவிகளாக தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதில் காட்டும் முனைப்பு மார்க்கத்தை அறிவதில் காட்டுவதில்லை.

இன்று முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாமல் குறைந்த பட்சம் அதன் அடிப்படைக்கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வேதனைப்படக் கூடிய விஷயம். இவர்களிடம் போய் மறுமையை பற்றி பேசினால் இவர்கள் சாதரணமாக சொல்கிறார்கள். இந்த உலகத்திலேயே பல பிரச்சனைகள் இதில் மறுமையை பற்றி பேச வந்துவிட்டார்கள் என்று சர்வ சாதரணமாக சொல்கிறார்கள். நிறைய முஸ்லிம்கள் மற்ற மதத்தை போலவே இஸ்லாத்தையும் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். இதனை பல முஸ்லிம்கள் நமக்கேன் வம்பு என்று கண்டும் காணாமல் இருந்து விடுவதையும் பார்க்கிறோம்.

எனக்கு தெரிந்த முஸ்லிம் ஒருவர் சொல்கிறார் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கருத்தைதானே சொல்கிறார். அதனை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை என்று. ஒரு முஸ்லிம் எப்படி இவ்வாறு இருக்க முடியும். இதுபோல எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை. 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் அல்குர்ஆனை ஓதுவதில்லை என்பது மட்டுமல்ல அதனை தொடுவதே இல்லை என்பதே. அப்படியே ஓதினாலும் அரபியில் மட்டும் ஓதிவிட்டு அல்குர்ஆனின் இந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்று பல பேர் பார்ப்பதில்லை. பல போலி மார்க்க அறிஞர்கள்??? இறந்தவர் வீட்டில் ஓதுவதற்காகவும் தங்கள் வயிற்று பிழைப்பிற்காகவும் இந்த குர்ஆனை வைத்திருக் கின்றனர். இவர்களுடைய பயான்களையெல்லாம் கேட்டால் முழுக்க முழுக்க தங்கள் தொழிலுக்கு ஆதரவாகவே இருப்பதை காணலாம். இவர்களுடைய இந்த பயானால் முஸ்லிம்களுக்கு இறையச்சமோ மறுமைப் பற்றிய பயமோ வேறெந்த நன்மையுமோ இல்லை. வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு மட்டுமே தொழக் கூடியவர்கள் என்று சில பேர் இல்லை பல பேர் உள்ளார்கள். அதுவும் இவர்கள் தொழ ஆரம்பிப்பதற்கு  ஒரு சில நிமிடங்கள் முன்னதாகத்தான் வருவார்கள். இவர்கள் இவ்வாறு வருவதற்கு காரணம் இதுதான் போல. அல்லாஹ் தான் அறிவான்.

இன்றைய காலத்தில் மட்டுமல்ல பல நூறு வருடங்கள் பின்னால் சென்றால் கூட இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை பெரும்பாலான முஸ்லிம்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதைக் காணலாம். இதனை கண்டிக்க வேண்டிய ஆலிம்கள்? சொற்ப வருமானத்திற்காக சர்வ சாதரணமாக கண்டும் காணாமலும் அதனை ஊக்குவிப்பதையும் காணலாம். எத்தனையோ தலைமுறைகள் வாழ்ந்தார்கள். அவர்களின் நிலை என்ன இப்போது. அல்லாஹ்தான் அறிவான். அதுபோல தான் நம்முடைய தலைமுறையும் செல்லப் போகிறது முடிவில்லாத ஒரு நீண்ட பயணத்தை நோக்கி. அந்த பயணம் வெற்றி அடைய நாம் சேர்த்து வைத்து பின்பு இந்த உலகத்திலேயே விட்டுச் செல்கின்ற செல்வம் எந்த விதத்திலும் உதவாது. ஆனால் நம்மோடு ஒன்று மட்டும் தொடர்ந்து வரும். நம்முடைய எஞ்சியிருக்கின்ற அமல்கள்.

இந்த அமல்களும் நமக்கு பயன்பட வேண்டுமானால் நாம் மார்க்கத்தை சரியாக விளங்கி வைத்திருந்தால்தான் முடியும். சில முஸ்லிம்கள் சரியாக தொழுவார்கள் நோன்பு நோற்பார்கள், ஆனால்! ஹராமான தொழிலை செய்கிறார்கள் அதில் கிடைக்கும் இலாபம் அவரின் கண்ணை மறைக்கிறது.

அதுபோல மேலும் பல முஸ்லிம்கள் வட்டித் தொழில் செய்கிறார்கள், வாங்கிய கடனை கொடுக்காமல் மோசடி செய்கிறார்கள், புறம் பேசுகிறார்கள், சொத்தை பிரித்துக் கொடுப்பதில் மோசடி செய்கிறார்கள், மற்றவர்களின் சொத்தை சாதரணமாக அபகரிக்கிறார்கள், திருமணம் என்ற பெயரில் வரதட்சணை வாங்குகிறார்கள், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பொருளாதாரத்தை வீணடிக்கிறார்கள், இறந்தவர்களை வைத்து பாத்திஹா ஓதுகிறார்கள், செய்வினை சூனியம் என்ற பெயரில் மக்களை மூடனாக்கி அவர்களின் சொத்தை சுரண்டுகிறார்கள், இறைவனுக்கு இணைவைக்கிறார்கள், பித்அத்தான காரியங்களை செய்கிறார்கள், சினிமா சீரியல்களில் சிக்கி சீரழிகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள், மார்க்கத்தைப் பயன்படுத்தி யார் ஒரு அமைப்பை தோற்றுவித்தாலும் அதன் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்கிறார்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்க மறுக்கிறார்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் உதவ மறுக்கிறார்கள், பெற்றோர்களை முறையாக கவனிப்பதில்லை, கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் இதுபோல அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொல்லப் போனால் பெயர் தாங்கி முஸ்லிம்களாகவே வாழ்கின்றனர். நீதி நேர்மை நாணயம் என்பதெல்லாம் பழங்கால நாணயத்தைபோல் மதிப்பில்லாமல் ஆகிவிட்டது.

நம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது. பாத்திஹா மௌலிது இவைகளை வருடத்திற்கு ஒருமுறை ஓதினால் போதும் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயமே உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து திருந்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு கேடுதான்.

ஆலிம்களை நம்பி மோசம் போகாதீர்கள். இந்த ஆலிம்கள் (தவ்ஹீத் ஆலிம்களை தவிர! அல்லாஹ் அறிந்தவன்) தாங்களும் திருந்த மாட்டார்கள். நம்மையும் திருத்த மாட்டார்கள். இவர்கள் பிழைப்புக்காகவும் பெருமைக்காகவும் தான் ஓதுகிறார்கள். நாம் தான் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். எனவே அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் புரட்டுங்கள். மார்க்கத்தை சுலபமாக அறிந்து கொள்ளுங்கள். இன்று எவ்வளோ தவ்ஹீத் ஆலிம்களின் நூல்களும் வந்துவிட்டன. அவற்றை படியுங்கள். இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையான  தவ்ஹீதின் பக்கம் வாருங்கள்.

மனிதர்களில் முஸ்லிம்களாக பிறந்தது அல்லாஹ்வின் உதவியால் மட்டுமே நமக்கு இதில் எந்த பங்கும் இல்லை. நம்முடைய பங்கு நாம் தூய இஸ்லாத்தை கடைப்பிடித்து உண்மை முஸ்லிம்களாக வாழ்வது மட்டுமே. இப்போது இருப்பதுபோலவே இனியும் உங்கள் நிலை தொடருமானால் பிறப்பால் மட்டுமே உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு முஸ்லிம் களுக்கும் கடமைகள் உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ளன. பேணிக் கொள்வோம். வெற்றி பெறுவோம். இம்மையிலும் மறுமையிலும்.

இந்த கட்டுடையை படித்து விட்டு செல்லும் சகோதரர்களே இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்!

இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக் களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது. ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவ தில்லை. இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக் கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும் போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல் களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப் புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்” இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும். இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. இந்த முறை யீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட் டாள் நானல்ல” என்றார்*. பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள்தான் பதிவாகிறது. பதிவானவைகள்தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ? காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய் யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் அன் றையதினம் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ் வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது. மற்றொரு சம்பவம்.

2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரண மாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது. இவைகள் ஒவ் வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும். மற் றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது. இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக் கின்றனர். பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசா ரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்...

2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள். மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர். இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது. ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும்.

தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறியடிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன. என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமை யாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது. ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன. சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறை யிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற் றார். வழக்கு சிபிசிஐடியின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார். ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார். அவரது விசாரணையின் துவக் கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது. இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார் “பி13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண் டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட தாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப் பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய் யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சி யங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல் களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறு கிறார். அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப் பற்றப்படவில்லை. அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண் டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார். குற்றம்சாட்டபட்டு கைது செய் யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை யாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா. இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில் காவல்நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது. ஆக இவர்கள் கைது செய்யச்சென்றது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும். இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்...

பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்? சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான். காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப் பது எதனால். மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார். வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை600003)

ஜப்பானில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா புறப்பட்டார்!

ஜப்பானில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா புறப்பட்டார்
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோவில் நேற்று அவர் ஜப்பான் பிரதமர் கான் நவோடாவை சந்தித்து பேசினார். அணுசக்தி ஒத் துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார கூட்டு நடவடிக்கை குறித்து இருவரும் பேசினார்கள்.
 
இந்தியா -ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அணுசக்தி ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஜப்பானை இந்தியா வலி யுறுத்தாது என்று அவர் பேட்டியில் கூறி இருந்தார்.
இந்தியா-ஜப்பான் நல்லு றவு மேம்பாடு குறித்து இரு தரப்பிலும் பேசப்பட்டது.
 
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் இன்று டோக்கியோவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றார்.
 
மலேசிய பிரதமர் முக மது நஜிப்புடன், மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் பேசுவார்கள். பின்னர் பல்வேறு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திடுவார்கள்.
 
மலேசிய பயணத்தை முடித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் வியட்நாம் செல்கிறார். 30-ந்தேதி பிரதமர் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது ஷூக்கள் வீச்சு: போராட்டக்காரர்கள் ஆத்திரம் !

 
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது ஷூக்கள் வீச்சு: போராட்டக்காரர்கள் ஆத்திரம்
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்டு. சிட்னியில் பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடலுக்கு ஒரு தனியார் டி.வி. ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இவர் கலந்து கொண்டார்.
 
ஹோவர்ட் ஆட்சி காலத்தின்போது ஈராக் போர் நடந்தது. அப்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. இது குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு ஹோவர்ட் பதில் அளித்தார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஒருவர் ஹோவர்ட் மீது 2 ஷூக்களை வீசினார். அதைப்பார்த்த அவர் விலகிக்கொண்டார். எனவே அவை அவர் மேல் படவில்லை. அதனால் கூட்டத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
 
உடனே ஷூக்கள் வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் ஹோவர்ட்டுக்கு எதிராக கோஷமிட்டார்.
 
இதை தொடர்ந்து அவரது விவாத மேடை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஷூக்கள் வீசியதால் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் ஆத்திரத்தை ஹோவர்ட் வெளிக்காட்டி கொள்ளவில்லை. புன்னகை சிந்தியபடியே டி.வி. நிலையத்தை விட்டு வெளியேறினார்.
 
அப்போது, அவரை நோக்கி ஒரு பெண் ஆவேசமாக கூச்சலிட்டாள். உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது என்றார். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. சிரித்த முகத்துடன் அமைதியாக சென்றார்.
 
இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்!



பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி தற்போது தனி நபர் தாக்குதலாக மாறி உள்ளது. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஷரத் யாதவ், ராகுல் காந்தியை கங்கையில் தூக்கி வீச வேண்டும் என்று கூறினார்.

(காங்கிரஸ் கட்சியின்) கை சின்னத்துடன் வரும் இவர்கள் 50 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.

மோதிலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, சோனியா காந்தி மற்றும் தற்போது ராகுல் காந்தி. இப்பொழுது புதிதாக ஒரு குழந்தை வந்துள்ளது. (ராகுல் காந்தி பொதுக் கூட்டங்களில் பேசும்போது தன்னுடைய சட்டையை இழுத்துவிடுவது போல் செய்து காண்பித்து) அது இப்படிச் செய்யும்.

உனக்கு என்ன தெரியும்? சிலர் காகிதத்தில் எழுதிக் கொடுப்பதை அப்படியே நீ வாசிக்கிறாய். உன்னையெல்லாம் தூக்கி கங்கை நதியில் வீச வேண்டும். ஆனால் மக்கள் நோயாளியாக இருக்கிறார்கள். இது இந்த நாட்டின் துரதிருஷ்டம் என்று ஷரத் யாதவ் கூறினார்.

கத்தர் சிறையில் தமிழக மீனவர்கள்: ஜெயலலிதா மீட்புக்குரல!

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள்
அவர்களில் சிலர் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி விசைப்படகுகளில் கிழக்கு மாகாண கடலோர கிராமமான தரீன் என்ற இடத்தில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கையில் தவறுதலாக கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். 
 இதனால் கத்தர் நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து, சிறைகளில் அடைத்துவிட்டனர்.

தமிழக மீனவர்களை  பணிக்கு வைத்த, சவுதி அரேபிய நாட்டவர் அதிக பணம் செலவாகும் என்பதால், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கிறாராம். இதனால், மாதங்கள் பல கடந்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்

தவறுதலாக கடல் தாண்டிய குற்றத்திற்காக, தமிழக மீனவர்களுக்கு கத்தார்  நீதிமன்றம் இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 28 மீனவர்கள் சினயா சிறையிலும், நான்கு மீனவர்கள் மர்கஸ் சிறையிலும் அடைபட்டுள்ளனர்.  .சிறையில் கொடுக்கப்படும் உணவுகள் அவர்களின்  உடல் நலத்திற்கு ஏற்றதாக இல்லை. மாற்று உடையின்றி, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை சுத்தம் செய்து மீண்டும் அணிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்இதன் விளைவாக தமிழக மீனவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.  தீர்ப்புப்படி இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டால், மீனவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகுமென, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களது குடும்பங்கள் தற்போது வருமானமின்றி, வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

 கூட்டணியில் பிரசினை என்றால், விமான நிலையத்திற்கு சென்று காங்கிரஸ் தலைவரைச் சந்திக்கிற கருணாநிதி,மூன்று மாதகாலமாக கத்தர் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?  கருணாநிதிக்கு எனது கடும் கண்டனங்கள். இனியாவது காலம் தாழ்த்தாது விரைந்து செயல்பட்டு மத்திய மாநில அரசுகள் 32 தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்
என்று அந்த அறிக்கையில்  ஜெயலலிதா காட்டமாகக் கூறியுள்ளார்.