செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வெளியூர்களில் 6 மணி நேரமாக குறைகிறது: சென்னையில் 3 மணி நேரம் மின்சார வெட்டு;விரைவில் அறிவிப்பு வெளியாகும்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலையை சமாளிப்பதற்கான பல்வேறு திட்ட பரிந்துரைகளை மின் வாரியம் தயாரித்தது. அந்த பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது.

சென்னையில் தற்போது உள்ள ஒரு மணி நேர மின்வெட்டை உயர்த்தவும், பிற மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்வெட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மின்வெட்டை குறைத்து பாதிப்பு இல்லாமல் பொது மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எவ்வாறு மின் பகிர்மானம் செய்வது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள்.

வெளி மாவட்டங்களில் மின்வெட்டு 8 மணி நேரமாக இருப்பதை குறைப்பதற்காக சென்னையில் 3 மணி நேரமாக மின்வெட்டை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 2 மணி நேரமும் இரவு 10 மணிக்கு மேல் ஒரு மணி நேரமும் வெளி மாவட்டங்களில் மின் வெட்டு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்வெட்டை 6 மணி நேரமாக குறைக்க முடியும் என வாரியம் நம்புகிறது. பகலில் 4 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் ஒரு மணி நேரமும் மின்வெட்டு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர கூடுதலாக ஒருநாள் மின் விடுமுறை விடுவது எனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் 20 சதவீத மின் விநியோகத்தை 40 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதால் அவற்றை வழங்கிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மின் வாரியம் எடுத்துள்ள இந்த முடிவுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மின் வாரிய தலைவர் ராஜீவ்ரஞ்சன் இன்று சந்தித்து ஒப்புதல் பெற உள்ளார்.

முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின் வெட்டு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும். ஓரிரு நாட்களில் மின் வெட்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!


உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறையைமீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரம், வழித்தடங்கள் ஆகியவற்றையும் தாண்டி ராகுலின் நிகழ்ச்சிகள் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹரி ஓம் கூறுகையில்,

"சிவராத்திரி என்பதாலும், போக்குரவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதாலும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ராகுலுக்குப் பேரணி நடத்த நண்பகல்வரை அனுமதியளிக்கப்பட்டு 20 கி.மீ. தூரமுள்ள பாதையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராகுலின் நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நீடித்தது. நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாகவும் அவர்கள் செல்லவில்லை. அதற்குப் பதிலாக 38 கி.மீ. தூரத்துக்குப் பேரணி நடத்தப்பட்டது. அதனால்,பேரணியை ஏற்பாடு செய்தவர்கள்மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, "ராகுல் நிகழ்ச்சியில் எந்த நடத்தை விதிமீறலும் நடக்கவில்லை" என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி கூறினார். "முதலமைச்சர் மாயாவதி அரசின் சார்பாக ராகுலின் நிகழ்சியைத் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் செய்திருக்கும் முயற்சியே இது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே பாகை பகுதியில் ராகுலின் பேரணி சென்றபோது, சில முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி "ராகுலே திரும்பிப் போ" என கோஷம் எழுப்பினார்கள்.

திரு‌ச்‌சி ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் வா‌ர்ட‌னிட‌ம் தகராறு செ‌ய்ததாகக்கூ‌றி ‌‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர் பூ‌ண்டி கலைவாண‌ன், மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் ‌‌மீது வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து திருவாரூ‌ர் மாவ‌ட்ட ‌தி.மு.க. செயலாள‌ர் பூ‌ண்டி கலைவாணனை காவ‌ல்துறை‌ கைது செ‌ய்து பாளைய‌‌ங்கோ‌ட்டை ‌சிறையி‌ல் அடை‌த்து‌ள்ளன‌ர். இ‌ந்த வழ‌க்‌கி‌ல் மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேருவையு‌ம் கைது செ‌ய்ய காவ‌ல்துறை‌ ‌தீ‌விர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ண்டு வருவதாகவும் தெரிகிறது.

கலைவாணைத் தொடர்ந்து கே.எ‌ன்.நேருவையும் கைதுசெ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.