சனி, 27 நவம்பர், 2010
கர்நாடக முதல்வராக அனந்தகுமார்?
கர்நாடக முதல்வராக இருந்து வரும் எடியூரப்பாவின் நீக்கம் உறுதி என தகவல்கள் கூறுகின்றன. அவர் நீக்கப்பட்டால் கர்நாடக முதல்வராக பெங்களூர் மக்களவை உறுப்பினர் அனந்தகுமார் அல்லது கர்நாடக அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டர் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
வளாகத்தினுள் நடந்த பாலியல் உறவால் மூடப்பட்ட சர்ச்
மிஸோரம் : மிஸோரம் மாநிலத்தில் சர்ச் வளாகத்தினுள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் பாலியல் உறவு வைத்து கொண்டதால் சர்ச் ஒரு வாரம் இழுத்து மூடப்பட்டது. மிஸோரமில் உள்ள தமாம் பகுதியில் உள்ள செர்சிப் எனும் இடத்தில் உள்ள ஐக்கிய பெண்டகோஸ்ட் சர்ச்சில் தகாத உறவு வைத்து கொண்ட திருமணமாகாத ஆணும் பெண்ணும் கையும் களவுமாக பிடிபட்டனர்.
சர்ச் வளாகத்தினுள் நடந்த இச்செயல் பாவச் செயல் என்பதால் சர்ச் இழுத்து மூடப்பட்டதாகவும், பின் பாதிரியார்களின் கலந்தாசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அவர்களை மன்னித்து விட்டதால் மீண்டும் சர்ச் திறக்க உத்தரவிடப்பட்டதாக சர்ச் நிர்வாகி வன்லால்சங்கா கூறினார்.
மாநிலத்தில் ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் சில சர்ச்சுகளில் நடைபெற்ற போது இம்மாபாதக குற்றத்துக்காக சர்ச்சுகள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டு கழுவி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்செயல் சர்ச் உள்ளே நடக்காமல் வளாகத்தினுள் நடந்ததால் சர்ச் இடிக்கப்படவில்லை என்று சர்ச் நிர்வாகம் கூறியது.

சாத்தான் வேதம் ஓதலாமா ? - கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி!
பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் கோட்பாடுகளையும் தான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியதற்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் கண்டணம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சாத்தான் வேதம் ஓதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் தஞ்சை பெரிய கோயிலுக்கு பின்புற வாசல் வழியாக கருணாநிதி சென்றது ஏன் என்றும், அங்கு நடைபெற்ற ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களின் நடனத்தை கண்டு களித்தது ஏன் என்றும் மஞ்சள் துண்டு அணிவது ஏன் என்றும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், தனது சொந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோயிலுக்குச் சென்று குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் குடும்ப சகிதம் வழிபாடு செயதது ஏன் என்றும் குடும்ப உறுப்பினரில் ஒருவர் எப்போதும் ஜோதிடரையே சுற்றிக் கொண்டிருப்பது ஏன் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
மேலும், பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் கருணாநிதி, அவர்களது கொள்கைகளைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதர்ஸ் வீட்டு ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயம்
மும்பையில் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு 31 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டி தரப்பட்டது. இந்த ஆதர்ஸ் குடியிருப்பு கட்டுவதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாற்றப்பட்டனர்.
மேலும் ஊழல் வழக்கில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணமான பைலில் பக்கம் எண்கள் 15,27,99,279 ம் பக்கங்கள் காணவில்லை, சி.பி,ஐ, விசாரித்து வரும் இந்த வழக்கில், நகர்புறம் மேம்பாட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுன்னத் வல் ஜமாத்தின் அறியாமை........................
அஸ்ஸலாமு அழைக்கும்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வடக்குமாங்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன் தவ்ஹீத் கொள்கையை சார்ந்த (த த ஜா ) அமைப்பை அல்லாத சகோதரர்கள் தொழுகும் இடத்தின் உரிமையாளரை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லப்படும் டம்மி ஜமாத்தின் வடக்குமாங்குடி செயலாளர் VM. முஹம்மது பாரூக், தலைமையில் சென்று உடனடியாக இவர்களை காலி செய்து விடு இல்லையேல் உங்களின் குடும்பங்களை
ஊரை விட்டு ஒதிக்கி விடுவோம் என மிரட்ட அவரோ இது எதோ ஜனாதிபதி உத்தரவு என நினைத்து நம் சகோதரர்களிடம் சென்று உடனடியாக இடத்தை காலி செய்து விடுங்கள் என்னால் ஜமாத்தை மீறி செயல் பட முடியாது வடக்குமாங்குடி ஜனாதிபதி பாரூக் தலைமையில் வந்து என்னிடம் முறை இட்டு சென்று உள்ளார்கள் அதனால் நீங்கள் உடனடியாக காலி செய்து விடுங்கள் என அவர் முறை இட. உடனே நம்மை காலி செய்ய சொல்லும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை என நம் சகோதரர் தொழுகைக்கு சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிக்கு வர அவர்களின் சட்டையை பிடிக்கும் வடக்குமாங்குடி ஜனாதிபதி என நினைக்கும் பாரூக் என்பவர் சற்று திமிராகவே பேசி உள்ளார்.உடனே நம் சகோதரர்கள் போலீஸுக்கு தகவல் தர அவர்களோ சட்டமே இவர்கள் தான் ஏற்றும் அளவிற்கு அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி பஞ்சாயத்தில் இறங்கினார்கள் ...ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக பெசுவதக்கு ஆள் இல்லாத நிலையில் வழுத்தூர்,அய்யம்பேட்டை போன்ற ஜமாத்தார்களின் உதவியை நாடி அவர்களையும் காவல் நிலையம் அழைத்தார்கள் பிறகு ஒரு வழியாக பேசி முடிக்கப்பட்டு டம்மி ஜமாத்தார்களுக்கு காவல் துறை அறிவுரைகளை கூறி சமாதானப்படுத்தி இனிமேல் இந்த சகோதரர்களின் வழியில் நீங்கள் குறிக்கீடு செய்யகூடாது என புத்திசொல்லி அனுப்பி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சுன்னத் வல் ஜமாத்தின் அறியாமையே இதற்க்கு காரணம் என்பது அனைத்து தரப்பின் கருத்தாக உள்ளது....

வாக்குப்பதிவு எந்திரம்: அதிமுக கோரிக்கை-ஆணையம் பரிசீலனை
சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக அதிமுக விடுத்த கோரிக்கையை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்யும் முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் தாங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோமோ அந்த கட்சிக்குத் தான் அந்த வாக்கு சென்றிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை வாக்காளர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடியோ அல்லது மாற்றமோ செய்யப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் பொது மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் எழும்போது மோசடி நடந்திருக்கிறதா, இல்லையா என்பதை நிரூபிக்க எந்த வழிவகையும் இல்லை.
எனவே, மின்னணு வாக்கு எந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பதால் தான் பெரும்பான்மையான முன்னேறிய நாடுகள் இந்த முறையை கைவிட்டுவிட்டன என்பதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி, மீண்டும் வாக்குச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மின்னணு வாக்கு எந்திரங்களில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கும் அளவிற்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்கும் வகையில், தேர்தல் ஆணையம் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தையும் கோரியது.
இந்தச் சூழ்நிலையில், அதிமுகவின் கருத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அதிமுகவின் கருத்தினை தொழில் வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு தலைமை வக்கீல் பதவிக்கு தமிழ்ப் பெண் தேர்வு
வாஷங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார்.
கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது.
கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.
கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்காசி-நெல்லை அகல ரயில்பாதை பணியில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
நெல்லை: நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளில் சில முறைகேடுகள் நடப்பதாக ரயில்வே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் முதல் நெல்லை சந்திப்பிலுள்ள ரயில்வே கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை நேற்றிரவு வரை நீடித்தது. இதில் பணிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் இதற்காக செலவிடப்பட்ட கணக்கு விபரங்களை சேகரித்தனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
சென்னை: சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, ஜெயதுரை எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாவடத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குபட்ட சட்டமன்ற தொகுதிகள் நிலவரம், திமுகவின் பலம்-பலவீனம் ஆகியவை நிர்வாகிகள் விளக்கினர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில்,
தூத்துக்குடி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கோட்டைகளில் ஒன்று என்பதை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். தூத்துக்குடியில் எனக்கு ஒரு தனி கவனம் இருப்பதற்கு முக்கிய காரணமே, அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவிலே தொடங்கியபோது அதையொட்டி கழகத்தின் காவலர்களையெல்லாம் அதற்கடுத்த திங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இரு வண்ணக் கொடியை- புதிதாக அமைக்கப்பட்ட அந்த கொடியை ஏற்றி வைப்பதென்றும்- திமுக தொடங்கியதற்கான காரணத்தை ஆங்காங்கு விளக்க வேண்டுமென்றும் அறிவித்தார்.
அப்படி முதன் முதலாக என்னால் கொடியேற்றப்பட்ட இடம், தமிழகத்திலே தூத்துக்குடி தான். அதனால்தான் அப்படி ஏற்றி வைக்கப்பட்ட அந்த கொடி ஒரு அங்குலம் தாழ்ந்தால் கூட- என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறேன்.
அங்கே ஏற்படுகின்ற மன மாச்சரியங்கள், புகைச்சல்கள், பூசல்கள் இவைகளுக்கு இடம் தராமல், கழகத்தை அங்கே எப்படி அமைதியாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்வது என்பதை பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் நடைபெறுகின்ற கூட்டங்களைவிட, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக நடைபெறுகின்ற இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
நான் பல மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களில் பேசியதைப்போல, திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் திராவிட இன மேன்மைக்காக- திராவிடர்களின் சுயமரியாதை உணர்வை பாதுகாப்பதற்காக- திராவிட இயக்கத்தின் தன்மான கொள்கைகளை பரவ செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.
அதனால்தான் அரசியல் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சமுதாய அளவில் நம்மிடம் கட்டுப்பாடு இருந்தால் போதும் என்று தந்தை பெரியார் செயல்பட்டார். அதையேற்று அண்ணாவும், அண்ணாவை பின்பற்றி நாங்களும் சமுதாயம் வளர்ச்சிபெற இந்த கருத்துக்களையெல்லாம் மைதானங்களிலே பேசினால் மட்டும் போதாது, இந்த கருத்துக்களை சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் பேசினால் தான் பயன் ஏற்படும் என்ற வகையில், அதற்கேற்ப தேர்தலில் ஈடுபடுவதென்று முடிவு செய்து, படிப்படியாக தேர்தலில் ஈடுபட தொடங்கினோம்.
அவ்வாறு தேர்தலில் ஈடுபட்டபோது, ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பது நம்முடைய குறிக்கோளில் ஒன்று என்றாலும், சமுதாயப் பணிகளை நிறைவேற்ற ஆட்சியில் இருந்து தான் தீரவேண்டுமென்ற நிலை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், 1957ம் ஆண்டு முதன் முதலாக நான் குளித்தலை தொகுதியிலே நின்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்- அவையிலே தரப்பட்ட ஒரு கொள்கை குறிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 'இசை வேளாளர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் பேசும்போது அப்போது அவையிலே பெருந்தலைவர்கள் காமராஜர், கக்கன் உட்பட அனைவரும் இருந்தார்கள்.
நான் கூறினேன், அரசின் இந்த குறிப்பிலே 'இசை வேளாளர்' என்று 'ர்' விகுதி போடப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சமுதாயங்களில் ஒன்றான நாடார் மற்றும் 'சாணார்' சமுதாயம் பற்றி இந்த புத்தகத்திலே 'சாணான்' என்று 'ன்' விகுதி போட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளதே, இது என்ன நியாயம் என்று கேட்டேன்.
உடனே முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கனை திரும்பிப் பார்த்து 'என்ன?' என்று கேட்டார். உடனே அமைச்சர் கக்கன் எழுந்து, அது தவறு தான், அந்த தவறுக்காக வருந்துகிறேன், அந்த தவறு நாளைக்கே சரிசெய்யப்படும் என்று சொன்னார்.
நான் அங்கே அமர்ந்திருந்த காரணத்தால்தான் அன்றைக்கு 'சாணான்' என்ற பெயர் அந்த பட்டியலிலே 'நாடார்' அல்லது 'சாணார்' என்று மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட கழகத்தில் உள்ள நாம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது, வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
தூத்துக்குடியில் நான் எதிர்பார்த்ததைப்போல சிறு சிறு சண்டைகள், குழுக்கள் இரண்டு மூன்று என்று இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.
மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி பற்றி உங்களுக்கு தெரியும். அவரைப்ப ற்றி அவருக்கும் தெரியும். அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். கொள்கைகளை விலை கூறாதவர். கழகத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டுமென்று கருதுகிறவர்.
அதே நேரத்தில் அவருக்கு துணையாக, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அது நாம் தேடிப்பெற்ற வெற்றி. நான் இருவரையும் இங்கே பாராட்டுகின்ற போது, இவரைவிட அதிகமாக அவரை பாராட்டி விட்டேன் என்று இவரும் கருதக்கூடாது, அவரை விட அதிகமாக இவரை பாராட்டி விட்டேன் என்று அவரும் கருதக்கூடாது.
அதனால் தான் நான் இருவரையும் சமமாக பாராட்டியிருக்கிறேன். பெரியசாமி நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பவராக இருக்கலாம். இடையில் வேறு சிலர் நமது இயக்கத்திலே வந்து இணையலாம்.
ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகளின் தண்ணீரும் வந்து சேரும்போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல பெரியசாமியும், அனிதாவும் சேர்ந்து ஜீவநதியாக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.
அதைப்போலவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கின்ற ஜெயதுரையும், அவரை வெற்றி பெற செய்ய மாவட்ட செயலாளர்களும், கழக தோழர்களும் எந்த அளவிற்கு பாடுபட்டார்கள் என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதைக்கூட என்னால் தாங்கி கொள்ள முடியாது
என்றார்.

பீகார் தோல்வி எதிரொலி... நிர்வாகிகளை மாற்றும் ராகுல்!
அகமதாபாத்: பீகாரில் கிடைத்த படுதோல்வி, மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்காமல் இருக்க காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றத் திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.
கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நியமன முறையை ஒழித்துவிட்டு தேர்தல் மூலம் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பில் இப்போது நடைமுறையில் உள்ள நியமனப் பதவிகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய ராகுல் காந்தி, கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவர் வினய் தோமர் கூறும்போது, என்.எஸ்.யு.ஐ., இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு நியமன பதவிகள் உள்ளன, அதில் மாற்றங்கள் கொண்டு வர ராகுல் விரும்புகிறார் என்றார்.
"அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்களே அரசியலில் நுழைய முடியும் என்ற நிலை இப்போது உள்ளது. நானே இதற்கு சிறந்த உதாரணம். ஆனால், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். சாமானிய மக்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று ராகுல் காந்தி பேசியதாக வினய் தோமர் தெரிவித்தார்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் உடனடியாக இருக்கும் என்றார் அவர்.

வீட்டுக் கடன் ஊழலுக்கும் 2 ஜி முறைகேட்டுக்கும் தொடர்பு!- அம்பலமாகும் உண்மைகள்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுக்கும், வீட்டு வசதிக் கடன் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. அம்பலப்படுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றவை பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே.
தொலைத்தொடர்பு துறைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லையே, எப்படி இந்த நிறுவனங்கள் புதிய தொழிலுக்கு வருகிறார்கள் என்று அப்போதே பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த 9 நிறுவனங்களும் தொடங்கப்பட்டு சில நாட்களே ஆகியிருந்தது முக்கியமானது. ஆனால் தொலைத் தொடர்பு லைசென்ஸ் பெற பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் காட்டி இருந்தன.
சில நிறுவனங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,600 கோடியைக் காட்டின. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை இந்த நிறுவனங்கள் எப்படி ஏற்பாடு செய்தன என்பது யாருக்கும் புரியாத புதிராக இருந்தது.
இந் நிலையில் இந்த 9 நிறுவனங்களும் வீட்டு வசதிக் கடன் ஊழலிலும் சிக்கியுள்ளன. மெகா குடியிருப்புத் திட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளன. முறைகேடாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசியிலிருந்து பெறப்பட்ட அந்த பணத்தை ஆதாரமாகக் காட்டித்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு உரிமையை இந்த நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்த சிபிஐ உள்பட நாட்டின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மற்றும் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளன.
டி.பி.குரூப் என்ற கார்ப்பரேட் நிறுவனம், எடிசாலட் என்ற தொலை தொடர்பு நிறுவனத்தில் 45 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இது வீட்டுக் கடனுக்கு வாங்கப்பட்ட பணத்தில் பெற்றது என்று அம்பலமாகியுள்ளது.
அதுபோல ஸ்வான் டெலிகாம் நிறுவன நிதி பரிவர்த்தனைகளிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2007ல் டெலிகாம் உரிமத்துக்கு விண்ணப்பித்தது இந்த நிறுவனம். 2008ல் உரிமம் கிடைத்தது. அதன்பிறகு 4 முறை இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த மணி மேட்டர்ஸ் நிறுவனம் இடைத் தரகர் போல செயல்பட்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமை பெற, பல நூறு கோடி ரூபாய்க்கு வீட்டு வசதிக் கடன்களை பெற்றுக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு வங்கிகளில் பல ஆயிரம் கோடியை முறைகேடான வழியில் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதை தாற்காலிகமாக கணக்கில் காட்டி 2 ஜி உரிமம் வாங்கியுள்ளன. இந்த முறைகேட்டின் அளவு ரூ. 45,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறாம்.
வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா:
இதற்கிடையே எல்.ஐ.சி. வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக் கடன் வழங்குவதில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழலில் எல்ஐசி வீட்டுக்கடன் நிறுவனத்தின் தலைவர் நாயருக்கும் பங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாயர் கைது செய்யப்பட்டார். இப்போது அவருக்கு பதில் எல்.ஐ.சி., வீட்டுக் கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராம்ப்டன் கம்பெனி பெயரில் போலி பொருட்கள் விற்பனை-3 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிராம்ப்டன் கம்பெனி பெயரில் போலி லேபிளை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள கிராம்டன் கம்பெனியும், ஒரு தனியார் கம்பெனியும் சேர்ந்து கிராம்டன் கம்பெனிக்கு தேவையான பொருட்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த தனியார் கம்பெனியைச் சேர்ந்த சிலர் அதே போன்று போலியாக பொருட்களை தயாரித்து தூத்துக்குடி பகுதியில் கிராம்டன் கம்பெனியின் லேபிளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து கிராம்டன் கம்பெனியின் முதுநிலை சட்ட ஆலோசகர் கார்த்திக் (35) தூத்துக்குடி 2-வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தெர்மல் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் தெர்மல் நகர் போலீசார் கிராம்டன் கம்பெனி பெயரில் போலி லேபிள் ஒட்டி பொருட்களை விற்பனை செய்த துரைசாமி, ராஜேஷ்குமார் மற்றும் அந்த தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீரா ராடியாவைத் தொடர்ந்து ராஜா உதவியாளர்களை விசாரிக்கிறது அமலாக்கப் பிரிவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நீரா ராடியாவை விசாரித்து முடித்துள்ள அமலாக்கப் பிரிவு, அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜாவின் மிக நெருங்கிய உதவியாளர்களான ஆர்.கே.சந்தோலியா மற்றும் ஏ.கே.ஸ்ரீவத்சவாவை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகுமாறு கூறி விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளது.
இவர்களில் சந்தோலியா, ராஜா அமைச்சராக இருந்தபோது, 2008ம் ஆண்டு அவரது தனிச் செயலாளராக இருந்தவர். சமீபத்தில் கபில் சிபல் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, இவர் தாய்ப் பணியான இந்திய பொருளாதாரப் பணிக்கு (Indian Economic Services) சேவைக்கு அனுப்பப்பட்டு விட்டார்.
ஸ்ரீவத்சவா, முதுநிலை துணை இயக்குநர் ஜெனரலாக (அகஸ்ஸ் சர்வீஸ்) இருந்தவர். இவரும் தற்போது அப்பணியலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் ராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எனவே ராடியாவைப் போல இவர்களையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
ராடியாவிடம் புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திது அமலாக்கப் பிரிவு என்பது நினைவிருக்கலாம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)