வியாழன், 3 மார்ச், 2011

உச்ச நீதிமன்றம் கண்டனம்: தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி பதவி விலகல்!

இந்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி நியமனத்தை   உச்சக நீதிமன்றம் கண்டனம் செய்ட்தது  நடுவண்  அரசுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பி.ஜே . தாமஸ் நியமனம் சட்ட விரோதமானது என்றும், இவர் நியமனத்தில் சட்டமீறல்கள் நடந்திருப்பதோடு மேல்மட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றும், இந்தப் பொறுப்பில் அவர் நீடிக்க தகுதி இல்லையென்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நான் பதவி விலக மாட்டேன்  என்று கூறி வந்த தாமஸ் இன்று காலையில் அவசரம் அவசரமாக  பதவி விலகல் செய்துள்ளார்.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து வரும் பி.ஜே. தாமஸ் கேரளாவில் உணவு துறை செயலராக இருந்தபோது ஊழல் செய்தார் என்பது குற்றச்சாட்டு. இவரது காலத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் சுருட்டினார் என கூறப்படுகிறது.
தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக தாமஸ் நியமனம் செய்யப்பட்ட போது பா.ஜ.க  கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால் இதனை மத்திய அரசு ஒரு பொருட்டாக அன்று எடுக்கவில்லை.
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை  அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நடந்த போது, தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமசை அது தொடர்பான விசாரணை நடக்கும் போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக எப்படி நியமிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
தாமஸ்  இந்தப் பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் அவர் எப்படி நியாயமான ஊழல் தடுப்பு அதிகாரியாக செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்குப் பின்   இந்தப் பொறுப்பில் இருந்து தாமஸ்  நீக்கப்பட வேண்டும். இவரைச் சட்ட விரோதமாக நியமனம் செய்தது செல்லாது என்றும்  உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
உயர் மட்டக்குழுவினர் இவர் மீதான நிலுவை வழக்கை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? இந்தப் பரிந்துரைகள் கவனமாக கையாளப்படாததையே காட்டுகிறது. வரும் காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுரை  கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலை‌மையில் உயர் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமரைச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தாமஸ் முன்வந்து பதவி விலகல்  செய்வதாக அறிவித்தார்.
"இத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி" என நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றயை தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதனை வரவேற்பதாவும் பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.  மேலும் இந்தத் தீர்ப்பின் மூலம் பிரதமரின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியிருக்கிறது என்றார்.
இந்தத் தீர்ப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குப் பெரும் அடியாக விழுந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இடது சாரி கட்சியினரும் "இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" என கோரியுள்ளனர்.

லிபியா : அரசுப்படைகள் - போராட்டக்காரர்கள் கடும் யுத்தம்

லிபியாவின் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் அரசுப்படைகளுக்கும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான யுத்தம் கடுமையாக நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் படைகளை மீட்பதற்காக அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படும் என கடாபி அறிவித்ததையடுத்து அரசுப்படையினர் அந்தப்பகுதிகளில் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
 
அஜ்தபியா மற்றும் பிரேகா நகரங்களில் சண்டை உக்கிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ 20 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசியும் அரசுப்படையினர் தாக்கி வருகின்றனர். இதுவரை இந்த நகரங்கள் போராட்டக்காரர்களின் வசமே இருந்து வருகிறது.
 
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் சொந்த நாட்டு மக்கள் மீது கடாபி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். கடாபியின் நெருங்கிய நண்பரும் வெனிசுலா அதிபருமான ஹியுகோ சாவஸ் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு முன் வந்துள்ளார். அவருடைய சமாதானத்திட்டத்திற்கு கடாபியும் ஒப்புக் கொள்வார் எனத் தெரிகிறது. ஆனால் இந்த சமாதானத்திட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் கடாபி நாட்டை விட்டு வெளியேறும்வரை எந்த சமாதானத்திற்கும் வர மாட்டோம் என முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரசாரம்-ஊர்வலம் வீடியோ படமாக எடுக்கப்படும்: தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடு; வேட்பாளர்கள் குடும்ப சொத்து கணக்கை காட்ட வேண்டும்

தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் கட்டுப்பாடு பற்றி அவர் கூறியதாவது:-
 
* கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.
 
* ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
 
* பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.
 
 * பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.
 
* விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
 
 * அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.
 
* தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.
 
* தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.
 
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.
 
* வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
 
* தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.
 
* கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.
 
* மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட 1.3.2011 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிட்டன. இதன்படி புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படக்கூடாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படாத புதிய திட்டங்களையும் தொடங்கக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், 1959-ல் கூறப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
 
இந்த விதிகள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க தேர்தல் பொதுப்பார்வையாளரும் மற்றும் தேர்தல் செலவீன கணக்குகளை கண்காணிக்க ஒரு செலவீன பார்வையாளர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். வேட்பாளர்களின் செலவீனங்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு செலவீன பார்வையாளரின் கீழ் ஒரு உதவி செலவீன பார்வையாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் நியமனம் செய்யப்படுவார்கள்.
 
மேலும், ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் வீடியோ கண்காணிப்புக்குழு எடுக்கப்பட்ட படங்களை கண்காணிக்கும் குழு மற்றும் கணக்குக்குழு ஆகியவை நியமனம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காவல் நிலைய ஆளுமை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் பறக்கும்படை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
 
ஒவ்வொரு பறக்கும்படையின் கீழும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழு அமைக்கப்பட்டு அவைகள் சோதனைச் சாவடிகளாக ஆங்காங்கே செயல்படும். தேர்தல் செலவினங்கள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.   தலைமைத் தேர்தல் அலுவர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கால் சென்டர் 24 மணி நேரமும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை செயல்பட உள்ளன.
 
வாக்காளர்கள் கட்டணமின்றி 1965 என்ற எண்ணினைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் தலைமைத் தேர்தல் அலுவல கத்திலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் செயல்பட உள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு மேற்படி குழுக்களின் சான்று கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
 
இந்தக் குழு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு கட்டணம் செலுத்தி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிடுகின்றனரா? என்பதைக் கூர்ந்து கவனித்து விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்.   மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் தொடர்பான கணக்குகளை உரிய பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் 3 நாட்களில் தனது தேர்தல் கணக்குகளை ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்குள் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கட்சிக்கு வந்த சோதனை !

தேர்தல் தேர்தல் தேர்தல் இதுல என்ன அப்படி இருக்கு ?

தமிழகத்தை ஆன்ட ஜெயலலிதா ஒரு பக்கம் , ஆளும் கருணாநிதி ஒரு பக்கம் ,ஆழ வழி தேடும் விஜயகாந்த் ஒரு பக்கம் ,கொள்கையே இல்லாத ப ம க ஒரு பக்கம்,விடுதலை சிறுத்தை,கம்யுனிஸ்ட்டுகள் ஒரு பக்கம் இதை எல்லாம் தாண்டி நாங்கள் தான் தேசிய கட்சி என்று மார்தட்டும் காங்கிரஸ் ஒரு பக்கம் இதை நினைத்தாலே சிரிப்புதான் வரும்.

அதோடு மட்டும் இல்லை ஒவ்வொரு மதமும் அவரவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகவே சமுதாய அமைப்புக்களையும் கட்சியையும் ஒரு பக்கம் வைத்து அட்டை பூச்சியை போல ஒட்டிக்கொள்ள இடம் தேடும் காட்சியும் இங்கே அரங்கேறும் .

அதற்க்கு ஒரு படி மேலே சென்று நமது இஸ்லாமிய சமுதாய கட்சிகளும் மற்றும் அமைப்புக்களின் வீர வசனமும் ,வாய் சவடாலும் ,நாங்கள் அதை செய்வோம் ,இதை செய்வோம் என்று சொல்லும் காட்சியும் அவ்வப்போது அரங்கேரியும் கொண்டு இருக்கும் .

இதன் தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வர தேர்தலும் படு விமர்சையாக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ராணுவம் ,காவலர்கள் ,அதிகாரிகள் என்று அணி வகுக்க பணனாயகத்தின் உச்சிக்கு சென்று நடப்பது தான் இன்றைய இந்திய தேர்தல் .

ஆனால் இதிலே இந்த முறை பெரிய குழப்பம் தான் நேருகிறது நாட்டை ஆளும் தேசிய கட்சிக்கு .

தேர்தலுக்கு தயாரான பெரிய கட்சிகள் எல்லாம் மவுனமாக இருக்க லட்டர் பேடுகளையும் குறைந்த அளவு மக்களையும் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கட்சிகளின் ஆராவாரம் இந்த நாடே தாங்காத அளவிற்கு இருக்கும் .அதே போல தான் இப்பவும் இருந்தது ஒரு வகையாக எல்லா சிறிய கட்சிகளையும் சரி செய்த திராவிட கட்சிகள் இன்னும் கூட்டணி முழுமை பெறாமல் தொங்கு பாலம் போல தொங்கும் காட்சியே இன்னும் நிலவுகிறது .

தி மு க கூட்டணியை பொறுத்தவரை தனக்கு சிறுபான்மையாக செயல் படும் முஸ்லிம் லீக் ,விடுதலை சிறுத்தை,கொள்கையை பற்றி கவலை படாத ப ம க ,விடுதலை சிறுத்தை மற்றும் நண்டு குஞ்சு என்று தங்களை தாங்களே புகழ்ந்துக்கொள்ளும் சிறு சிறு கட்சிகள் இன்னும் லட்டர் பேடுகளை எல்லாம் சரி செய்து விட்ட நிலையில்........

அ தி மு க கூட்டணியை பார்த்தோம் என்றால் இரண்டு கம்யுனிஸ்ட் ,அதை போன்று அவருக்கு கொள்கை பரப்பியாக இருக்கும் ம தி மு க , அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய புறப்பட்ட ம ம க ,மற்றும் சிறிய சிறிய லட்டர் பேடுகள் போன்றவற்றை சேர்ந்த ஒரு கூட்டணி

எதற்கும் பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருக்கும் விஜயகாந்த் ,
ஐவர் குழுவை வைத்து இரண்டு முறை பேசிப்பார்த்த காங்கிரஸ் இப்போ ஆசாத்தையும் அனுப்பி பேசிப்பார்க்க உங்களுடைய பேச்சுக்கள் எல்லாம் டெல்லியிலே மட்டும் தான் நான்தான் இங்கே அரசியல் சிங்கம் என்று கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் மத்ததை எல்லாம் தேர்தலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பேசும் கருணாநிதியில் பேச்சால் ஆடிப்போன ஆசாத் தனது விமான பயணத்தை விரைவாக வைத்து டெல்லி சென்றது தேசிய கட்சி .

இப்போ எந்த கூட்டணியில் நாம் சேரப்போகிறோம் என்று தெரியாமல் கேப்டனும் , எந்த கட்சி நம்மை சேர்த்துக்கொள்ளும் என்ற புலம்பலில் காங்கிரசும் இன்றைக்கு ஒரு முடிவிற்கு வராமலேயே எல்லா கட்சிகளையையும் நிமிர்ந்து பார்க்க வைத்துக்கொண்டு பூச்சாண்டி வேலைகளை செய்துக்கொண்டு வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு இருக்கும் கூட்டணி அப்படியே தொடருமா அல்லது பேசிய கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா ?
இல்லை மூணாவது அணி அமையுமா என்ற கேள்வியை தன்னை தானே கேட்டுக்கொண்டு முனுமுனுப்பது எல்லோரின் காதுலயும் விழ ஆரம்பிக்கிறது.

ஆறாவது முறையாக கருணாநிதி தான் முதல்வர் என்றும் ,

இந்த முறை ஜெயலலிதாதான் முதல்வர் என்றும் மாறி மாறி பேசிக்கொள்ளும் மக்கள் மாற்று ஆட்சி வருமா என்று எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .இதற்க்கான முடிவை காங்கிரஸ் எப்போது வெளி இடும் என்ற எண்ணத்தில் மக்கள் எல்லாம் கண் விளித்து காத்துக்கொண்டு இருப்பதையும் நாம் அறியலாம் .

இதற்க்கு காலம் பதில் சொல்லுமா காங்கிரஸ் பதில் சொல்லுமா இல்லை இதற்க்கு மக்களாகியா நாங்கள் தான் பதில் சொல்ல முடியும் என்று மக்கள் தான் சொல்ல வேண்டுமா பொறுத்து இருந்து பார்ப்போம் .

மேற்கு நாடுகள் தலையிட்டால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும்; கடாபி எச்சரிக்கை

லிபியாவில் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் எச்சரித்து உள்ளன.
பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து எச்சரித்தது.
அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.
மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-
லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.
அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

2006 சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் வெற்றி விவரம்

2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம் வருமாறு:-
 
சென்னை 1.பராயபுரம் (அ.தி.மு.க.), 2.துறைமுகம் (தி.மு.க.), 3.ஆர்.கே.நகர் (அ.தி.மு.க.), 4.பூங்காநகர் (அ.தி.மு.க.), 5.பெரம்பூர் (மார்க்.கம்யூ.), 6.புரசைவாக்கம் (தி.மு.க.), 7.எழும்பூர் (தி.மு.க.), 8.அண்ணாநகர் (தி.மு.க.), 9.தியாகராயநகர் (அ.தி.மு.க.), 10.ஆயிரம் விளக்கு (தி.மு.க.).
 
11.சேப்பாக்கம் (தி.மு.க.), 12.திருவல்லிக்கேணி (அ.தி. மு.க.), 13.மைலாப்பூர் (அ.தி. மு.க.), 14.சைதாப்பேட்டை (அ.தி.மு.க.), 15.கும்மிடிப் பூண்டி (அ.தி.மு.க.), 16.பொன்னேரி (அ.தி.மு.க.), 17.திருவொற்றியூர் (தி.மு.க.), 18.வில்லிவாக்கம் (தி.மு.க.), 19.ஆலந்தூர் (தி.மு.க.), 20.தாம்பரம் (தி.மு.க.).
 
21.திருப்போரூர் (பா.ம.க.), 22.செங்கல்பட்டு (பா.ம.க.), 23.மதுராந்தகம் (காங்.), 24.அச்சரப்பாக்கம் (தி.மு.க.), 25.உத்திரமேரூர் (தி.மு.க.), 26.காஞ்சீபுரம் (பா.ம.க.), 27.ஸ்ரீபெரும்புதூர் (காங்.), 28.பூந்தமல்லி (காங்.), 29.திருவள்ளூர் (தி.மு.க.), 30.திருத்தணி (அ.தி.மு.க.).
 
31.பள்ளிப்பட்டு (காங்.), 32.அரக்கோணம் (தி.மு.க.), 33.சோளிங்கர் (காங்.), 34.ராணிபேட்டை (தி.மு.க.), 35.ஆற்காடு (பா.ம.க.), 36.காட்பாடி (தி.மு.க.), 37.குடியாத்தம் (மார்க்.கம்யூ), 38.பேரணாம்பட்டு (தி.மு.க.), 39.வாணியம்பாடி (தி.மு.க.), 40.நாட்ராம்பள்ளி (தி.மு.க.).
 
41.திருப்பத்தூர் (பா.ம.க.), 42.செங்கம் (காங்.), 43.தண்டராம்பட்டு (தி.மு.க.), 44.திருவண்ணாமலை (தி.மு.க.), 45.கலசபாக்கம் (அ.தி.மு.க.), 46.போளூர் (காங்.), 47.அணை கட்டு (அ.தி.மு.க.), 48.வேலூர் (காங்.), 49.ஆரணி (தி.மு.க.), 50.செய்யூர் (காங்.).
 
51.வந்தவாசி (தி.மு.க.), 52.பெரணமல்லூர் (பா.ம.க.), 53.மேல்மலையனூர் (பா.ம.க.), 54.பசெஞ்சி (தி.மு.க.), 55.திண்டிவனம் (அ.தி.மு.க.), 56.வானூர் (அ.தி.மு.க.), 57.கண்டமங்கலம் (தி.மு.க.), 58.விழுப்புரம் (தி.மு.க.), 59.முகையூர் (பா.ம.க.), 60.திருநாவலூர் (அ.தி.மு.க.).
 
61.உளூந்தூர்பேட்டை (அ.தி.மு.க.), 62.நெல்லிக்குப்பம் (தி.மு.க.), 63.கடலூர் (தி.மு.க.), 64.பண்ரூட்டி (பா.ம.க.), 65.குறிஞ்சபாடி (தி.மு.க.), 66.புவனகிரி (அ.தி.மு.க.), 67.காட்டுமன்னார் கோவில் (விடுதலை சிறுத்தைகள்), 68.சிதம்பரம் (அ.தி.மு.க.), 69.விருத்தாச்சலம் (தே.மு. தி.க.), 70.மங்களூர் (வி. சிறுத்தைகள்).
 
71.ரிஷிவந்தியம் (காங்.), 72.சின்னசேலம் (தி.மு.க.), 73.சங்கராபுரம் (தி.மு.க.), 74.ஓசூர் (காங்.), 75.தளி (காங்.), 76.காவேரிப்பட்டினம் (பா.ம.க.), 77.கிருஷ்ணகிரி (தி.மு.க.), 78.பபர்கூர் (தி.மு.க.), 79.அரூர் (மார்க்.கம்யூ), 80.மொரப்பூர் (தி.மு.க.).
 
81.பாலக்கோடு (அ.தி. மு.க.), 82.தர்மபுரி (பா.ம.க.), 83.பென்னாகரம் (தி.மு.க.), 84.மேட்டூர் (பா.ம.க.), 85.தாரமங்கலம் (பா.ம.க.), 86.ஓமலூர் (பா.ம.க.), 87.ஏற்காடு (தி.மு.க.), 89.சேலம்-1 (அ.தி.மு.க.), 90.சேலம்-2 (தி.மு.க.).
 
91.பொன்னமராவதி (தி.மு.க.), 92.ஆத்தூர் (காங்.), 93.தலைவாசல் (தி.மு.க.), 94.ராசிபுரம் (தி.மு.க.), 95.சேர்ந்தமங்கலம் (தி.மு.க.), 96.நாமக்கல் (காங்.), 97.கபில மலை (பா.ம.க.), 98.திருச்செங்கோடு (அ.தி.மு.க.), 99.சங்ககிரி (தி.மு.க.), 100.எடப்பாடி (பா.ம.க.).
 
101.மேட்டுப்பாளையம் (அ.தி.மு.க.), 102.அவினாசி (அ.தி.மு.க.), 103.தொண்டாமுத்தூர் (காங்.), 104.சிங்கநல்லூர் (அ.தி.மு.க.), 105.கோவை மேற்கு (அ.தி.மு.க.), 106.கோவை கிழக்கு (தி.மு.க.), 107.பேரூர் (அ.தி.மு.க.), 108.கிணத்துக்கடவு (அ.தி. மு.க.), 109.பொள்ளாச்சி (அ.தி.மு.க.), 110. வால்பாறை (காங்.).
 
ஈரோடு 111.உடுமலைப்பேட்டை (அ.தி.மு.க.), 112.தாராபுரம் (தி.மு.க.), 113.வெள்ளக் கோவில் (தி.மு.க.), 114.பொங்கலூர் (தி.மு.க.), 115.பல்லடம் (அ.தி.மு.க.), 116.திருப்பூர் (மார்க்.கம்யூ.), 117.காங்கேயம் (காங்.), 118.மொடக்குறிச்சி (காங்.), 119.பெருந்துறை (அ.தி.மு.க.), 120.ஈரோடு (தி.மு.க.),
 
121.பவானி (பா.ம.க.), 122.அந்தியூர் (தி.மு.க.), 123.கோபி செட்டிபாளையம் (அ.தி.மு.க.), 124. பவானிசாகர் (தி.மு.க.), 125. சத்தியமங்கலம் (தி.மு.க.), 126. குன்னூர் (தி.மு.க.), 127. ஊட்டி (காங்.), 128. கூடலூர் (தி.மு.க.), 129.பபழனி (தி.மு.க.), 130. ஒட்டன்சத்திரம் (அ.தி.மு.க.).
 
131. பெரியகுளம் (அ.தி. மு.க.), 132. தேனி (அ.தி. மு.க.), 133. போடி நாயக்கனூர் (தி.மு.க.), 134. கம்பம் (தி.மு.க.), 135. ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க.), 136. சேடப்பட்டி (அ.தி.மு.க.), 137. திருமங்கலம் (தி.மு.க.), 138. உசிலம்பட்டி (அ.தி.மு.க.), 139. நிலக்கோட்டை (அ.தி.மு.க.), 140.சோழவந்தான் (தி.மு.க.).
 
141. திருப்பரங்குன்றம் (அ.தி.மு.க.), 142. மதுரை மேற்கு (காங்.), 143. மதுரை மத்தி (தி.மு.க.), 144. மதுரை கிழக்கு (மார்க்.கம்யூ.), 145.பசமயநல்லூர் (தி.மு.க.), 146.மேலூர் (அ.தி.மு.க.), 147.நத்தம் (அ.தி.மு.க.), 148.திண்டுக்கல் (மார்க்.கம்யூ.), 149.ஆத்தூர் (தி.மு.க.), 150. வேடசந்தூர் (காங்.).
 
151. அரவாக்குறிச்சி (தி.மு.க.), 152. கரூர் (அ.தி.மு.க.), 153. கிருஷ்ணராயபுரம் (தி.மு.க.), 154. மருங்காபுரி (இந்திய கம்யூ), 155. குளித்தலை (தி.மு.க.), 156. தொட்டியம் (காங்.), 157. உப்பிலியாபுரம் (தி.மு.க.), 158. முசிறி (தி.மு.க.), 159. லால்குடி (தி.மு.க.),
 
160. பெரம்பலூர் (தி.மு.க.), 161. வரகூர் (அ.தி. மு.க.), 162. அரியலூர் (காங்.), 163. ஆண்டிமடம் (தி.மு.க.), 164. ஜெயங்கொண்டம் (அ.தி.மு.க.), 165. ஸ்ரீரங்கம் (அ.தி.மு.க.), 166. திருச்சி-1 (தி.மு.க.), 167. திருச்சி-2  (தி.மு.க.), 168. திருவெறும்பூர் (தி.மு.க.), 169. சீர்காழி (தி.மு.க.), 170. பூம்புகார் (தி.மு.க.).
 
171. மயிலாடுத்துறை (காங்.), 172. குத்தாலம் (தி.மு.க.), 173. நன்னிலம் (இந்திய கம்யூ.), 174. திருவாரூர் (தி.மு.க.), 175. நாகப்பட்டினம் (மார்க்.கம்யூ.), 176. வேதராண்யம் (தி.மு.க.), 177. திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூ.), 178. மன்னார்குடி (இந்திய கம்யூ.), 179. பட்டுக்கோட்டை (காங்.), 180. பேராவூரணி (அ.தி.மு.க.).
 
181. ஒரத்தநாடு (அ.தி.மு.க.), 182. திருவோணம் (தி.மு.க.), 183. தஞ்சாவூர் (தி.மு.க.), 184.திருவையாறு (தி.மு.க.), 185.பாபநாசம் (அ.தி.மு.க.), 186.வலங்கைமான் (அ.தி. மு.க.), 187. கும்பகோணம் (தி.மு.க.), 188. திருவிடைமருதூர் (அ.தி.மு.க.), 189.திருமயம் (காங்.), 190.கொளத்தூர் (அ.தி.மு.க.). புதுக்கோட்டை 191. புதுக்கோட்டை (அ.தி.மு.க.), 192. ஆலங்குடி (இந்திய கம்யூ), 193. அறந்தாங்கி (தி.மு.க.), 194. திருப்பத்தூர் (தி.மு.க.), 195.பகாரைக்குடி (காங்.), 196. பதிருவாடனை (காங்.), 197. இளையாங்குடி (தி.மு.க.), 198. சிவகங்கை (இந்திய கம்யூ), 199. மானாமதுரை (அ.தி.மு.க.), 200. பரமக்குடி (காங்.).
 
201. ராமநாதபுரம் (காங்.), 202. கடலாடி (தி.மு.க.), 203. முதுகளத்தூர் (தி.மு.க.), 204. அருப்புக்கோட்டை (தி.மு.க.), 205. சாத்தூர் (தி.மு.க.), 206.விருதுநகர் (ம.தி.மு.க.), 207.சிவகாசி (ம.தி.மு.க.), 208.ஸ்ரீவில்லிபுத்தூர் (இந்திய கம்யூ.), 209. ராஜபாளையம் (அ.தி.மு.க.), 210. விளாத்திகுளம் (அ.தி.மு.க.).
 
211. ஒட்டப்பிடாரம் (அ.தி.மு.க.), 212.கோவில்பட்டி (அ.தி.மு.க.), 213.சங்க ரன் கோவில் (அ.தி.மு.க.), 214. வாசுதேவநல்லூர் (ம.தி.மு.க.), 215. கடையநல்லூர் (காங்.), 216. தென்காசி (தி.மு.க.), 217.ஆலங்குளம் (தி.மு.க.), 218.திருநெல்வேலி (தி.மு.க.), 219. பாளையங்கோட்டை (தி.மு.க.), 220. சேரன்மகாதேவி (காங்.).
 
221. அம்பாசமுத்திரம் (தி.மு.க.), 222. நாங்குனேரி (காங்.), 223. ராதாபுரம் (தி.மு.க.), 224. சாத்தான்குளம் (காங்.), 225. திருச்செந்தூர் (தி.மு.க.), 226. ஸ்ரீவைகுண்டம் (காங்.), 227. தூத்துக்குடி (தி.மு.க.), 228. கன்னியாகுமரி (தி.மு.க.), 229. நாகர்கோவில் (தி.மு.க.), 230. குளச்சல் (காங்.). திருவட்டார் 231. திருவட்டார் (மார்க். கம்ïயூ), 232. பத்மநாபபுரம் (தி.மு.க.), 233. விளவன்கோடு (மார்க்.கம்யூ), 234.கிள்ளியூர் (காங்.).

தேர்தல் தேதி: கருணாநிதி அதிருப்தி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி குறித்து முதல்வர் கருணாநிதி   அதிருப்தி தெரிவித்துள்ளார். இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்று ஆணையத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 17 நாட்கள்தான் உள்ளன. வாக்குகளை அளித்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இடைவெளி. தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்படி. மேற்கு வங்கத்தில் ஆறு கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு அந்த மாநிலத்திலே வாக்குகளை எண்ணும்போது இங்கேயும் எண்ணப்பட வேண்டுமாம். அது தேர்தல் விதிமுறை.ஆனால், எதற்காக ஒரு மாத காலம் இடைவெளிவிட்டு, அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே அனைவரையும் சிரமத்துக்கு ஆளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். என்ன காரணமோ தெரியாது.தேர்தல் ஆணையம் மாநில அரசுகளை கலந்து கொண்டுதானே தேர்தல் தேதியை அறிவித்திருக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படி அல்ல. ஏனென்றால் தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உரியதல்ல. சுதந்திரமான அமைப்பு. யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.அவசரமாக புதிய அமைச்சரவை: இப்போதுள்ள சட்டப் பேரவை முடிவுற்று, அடுத்த சட்டப் பேரவை மே 17-ம் தேதியே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால் இப்போதுள்ள சட்டப் பேரவையின் காலம் மே 16-ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, மே 17-ம் தேதிக்குள் தமிழகத்திலே புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். மே 14-ம் தேதியன்று யார் யார் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அறிவிக்கப்பட்டு-அதிலே எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாக வேண்டும்.அந்தக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, தங்கள் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அதாவது முதல் அமைச்சராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் ஆளுநரைச் சந்தித்து, ஆளுநர் அவர்களை அமைச்சரவை அமைக்கச் சொல்லிக் கேட்பார்.அதன் பின், அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு அந்த அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு புதிய சட்டப் பேரவையை மே 17-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கெல்லாம் இருக்கின்ற நாட்கள் மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள்தான். அதற்குள் இத்தனைப் பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால், முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்து இருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்து இருக்கும். எண்ணிப் பார்த்து விட்டுத்தான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்து இருக்கிறது.அவசரம் காட்டுவது ஏன்? மே 17-ம் தேதிதான் புதிய சட்டப் பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தேர்தல் தேதியை அறிவித்து இருக்கலாம் அல்லவா?ஏப்ரல் 13-ம் தேதியே அவசர அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?சட்ட மேலவை அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னிச்சையாக எழுந்து தமிழகத்திலே சட்ட மேலவை தேர்தல் நடத்துவதைப் பற்றிக் கேட்டு பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடத்தலாம் என்று நீதிபதி சொல்லக்கூடிய அளவுக்குச் செய்து இருக்கிறார். தேர்தல் ஆணையம் அவ்வாறு அந்த வழக்கறிஞரை கேள்வி எழுப்பக் கூறியதா? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு

: தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், கே.வீ. தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்தது. பிப்ரவரி 20, 25 ஆகிய தேதிகளில் திமுகவுடன் காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை விவரங்களை பிப்ரவரி 23, மார்ச் 1 ஆகிய தேதிகளில் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் காங்கிரஸ் குழுவினர் நேரில் தெரிவித்தனர்.""கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியக் கூடாது. சுதந்திரமாக திமுக முடிவெடுக்க வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பிப்ரவரி 28-ம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதை உறுதிப்படுத்தியது.சோனியாவுடனான சந்திப்புக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, ""தொகுதி பங்கீட்டில் இழுபறி எதுவும் இல்லை. 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். அது குறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார்'' என்றார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் புதன்கிழமை இரவு சென்னை வந்தார்.மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்த அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். இரவு 9.15 முதல் 10.45 மணி வரை 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸýக்கு 65 தொகுதிகள் வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தியதாகவும், திமுக தரப்பில் 53 முதல் 55 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று உறுதியுடன் இருந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள செய்தியாளர் அறையில் நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால், நிருபர்களைச் சந்திக்காமல் குலாம் நபி ஆசாத்தும், தங்கபாலுவும் வேகமாக வெளியேறினர்.அவர்கள் சென்ற பிறகு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ""காங்கிரஸýடன் வியாழக்கிழமையும் பேச்சுவார்த்தை தொடரும்'' என்றார். கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுமா? என்ற கேள்விக்கு தொகுதிகள் எங்கே இருக்கிறது? என்று கேட்டார் அவர்.திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு...பாமக----------------------------------31விடுதலைச் சிறுத்தைகள் கட்சி----------10கொங்குநாடு முன்னேற்றக் கழகம்---------7இந்திய யூனியன் முஸ்லிம் லீக்------------3மூவேந்தர் முன்னேற்றக் கழகம்------------1மொத்தம்-------------------------------52

பயங்கரவாதி சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் கொன்றது ஏன்?



"அண்மைக்காலமாக இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள்  வலது சாரி இந்துத்துவா அமைப்புகளே  நிகழ்த்தியது" என்று சுவாமி அசிமானந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தது தெரிந்ததே. இந்தச் சதிச் செயல்களின் மூளையாக இருந்த ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்ற பயங்கரவாதியைக்  கொன்றதற்காக பெண் சாமியாரும் அபினவ் பாரத் என்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை பயங்கரவாத அமைப்பின் அமைப்பாளருமான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுனில் ஜோஷி கைது செய்யப்படும் பட்சத்தில் அவனால் பெரும் தலைவலி ஏற்பட்டு, சில உயர்தலைகள் சிக்க நேரிடும் என்பதாலும், அவனை விட்டுவைப்பது இன்னும் பல குண்டுவெடிப்புகளை வெளிச்சப்படுத்தும்,அது நல்லதல்ல என்பதாலும் சுனில் ஜோஷி "நீக்கப்பட்டதாக" பலதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃதன்றி,  தேவாஸ் நகர காவல் துறை,  குற்றப்பிரிவு மாஜிஸ்திரேட் பத்மேஷ் ஷா முன்பு தாக்கல் செய்துள்ள 432 பக்க குற்றப்பத்திரிக்கையில், "சுனில் ஜோஷியின் ஆணிய மனப்பான்மையினை ஒரு பெண்ணாகிய தன்னால் சகித்துக்கொள்ள இயலாததாலேயே தான் எரிச்சலடைந்ததாக" பிரக்யாசிங் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 'சங்க'ப்  பணத்தை கையாண்ட விதமும் அவன் கொலைக்குக் காரணம் என்று தெரிவிக்கிறது.

தாகூர், ஆனந்த ராஜ் கட்டாரியா, ஹர்ஷத் சோளங்கி,  வாசுதேவ் பார்மர்,  மற்றும் ராமச்சந்திர பட்டேல் ஆகியோர் மீது குற்றப் பிரிவு 302 (கொலை ) மற்றும்  120B (குற்றச் சதி ), ஆயுதத் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றம் சுமத்துகிறது அந்தக் குற்றப் பத்திரிகை.

ஐந்து மாநில தேர்தல்: புகார் தெரிவிக்க இலவச போன்

ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான புகார்களை, 1965 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்து தீர்வுகாண விரும்புபவர்களுக்கு வசதியாக, 1965 என்ற இலவச தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்திலும் புகார் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், இணைய தள முகவரிகளை அறிவிப்பார்கள் என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று அறிவித்தார்.

உள்ளடி வேலைகள் துவங்கியாச்சு : கட்சிகளின் நிர்வாகிகள் கலக்கம்


உளுந்தூர்பேட்டை : வேட்பாளராக வேண்டும் என்பதற்காக, உள்ளடி வேலைகள் துவங்கியுள்ளதால், உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியில், கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் ஜுரம், அரசியல் கட்சியினரை ஆட்கொள்ள துவங்கியுள்ளது. சுவர் விளம்பரத்திற்கு, அரசியல் கட்சியினர், போட்டி போட்டு, இடத்தை, "ரிசர்வ்' செய்கின்றனர். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, உளுந்தூர்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகளே, மற்றவர்களை கவிழ்க்க, உள்ளடி வேலையில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் குமரகுரு மீது, எதிர்ப்பு கோஷ்டியினர், புகார்களை தெரிவித்துள்ளனர். இதனால் அவர், மேலிடத்தில் இருந்து, "டோஸ்' வாங்கியுள்ளார். அ.தி.மு.க.,வில் இப்படி என்றால், தி.மு.க.,வின் நிலை, வேறு மாதிரியாக உள்ளது. இந்த தொகுதிக்குள், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்கள் இணைந்துள்ளன. ஆனால், கட்சி நிர்வாகிகள், ஒன்றிணைந்து செயல்படுவதில்லை. போட்டி போடுவதிலேயே, குறியாக உள்ளனர். மற்ற ஒன்றிய நிர்வாகிகளை, உள்ளடி வேலை செய்து கவிழ்க்க, காரணங்களை தயார் செய்து வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு : கபில் சிபல் யோசனை


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் அதன் பயன்பாடு குறித்து கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறினார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, போதுமான அளவிற்கோ, திறமையாகவோ ஒதுக்கப்பட வில்லை. இந்த விவகாரத்தில் எந்தவிதமான கொள்கைகளும் கடைபிடிக்கப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விற்பனை ஆகியவற்றில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

கடந்த 2000ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் மற்றும் எத்தனை நிறுவனங்களுக்கு அவை ஒதுக்கப்பட்டன என்ற விவரங்களை மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் சி.ஏ.ஜி., கேட்டுள்ளதை வரவேற்கிறோம். இது தொடர்பாக, தொலைத்தொடர்பு துறையும் ஆய்வு நடத்தி வருகிறது. மத்திய அரசை பொறுத்தவரை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேவைப்படுவதை வழங்க தயாராக இருக்கும் அதே நேரத்தில், எதையும் இலவசமாக தரும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரை, ஒருவர் மீது ஒருவர் அவதூறாக பேசுவதை விடுத்து, மக்களுக்காக ஒன்றாக பணியாற்ற முன்வர வேண்டும். ஸ்பெக்ட்ரமை ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? இது முழுக்க முழுக்க இணைந்து பணியாற்றுவதை பொறுத்தது. பெரிய நிறுவனங்களை போல், வர்த்தக ரீதியிலான போட்டி அல்ல இது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

மேற்கு வங்க தேர்தலில் மந்திரி மம்தா போட்டியில்லை : ஆட்சியை கட்சி பிடித்தால் முதல்வராக முடிவு

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. "மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு திருப்தியளிக்கவில்லை. அங்கு கட்சிகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. எனவே, தேர்தலின் போது 100 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளின் தாக்குதல் சில பகுதிகளில் அதிகம் உள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த ஏழு முறை நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என, காங்கிரஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.
ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தீவிர முயற்சியால் கடந்த லோக்சபா மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இடதுசாரிகளின் வெற்றி வாய்ப்புகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. இதன் மூலம், நடைபெற உள்ள தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கருதப்படுகிறது.


மேற்கு வங்கத்தில் புத்ததேவ் அரசின் பல்வேறு குறைகளை மக்களிடையே எடுத்துக்கூறி செல்வாக்கு பெற்று வருகிறார் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவர் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் பதவிக்காக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக களம் இறங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "இந்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை' என, மம்தா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


பேட்டி: கோல்கட்டாவில் இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் மட்டுமே செய்வேன். ரயில்வே பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவாதம் நாளை நடைபெற உள்ளது. எனவே, இந்த முக்கிய பணி இருப்பதால் நான் இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அப்போது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆறு மாத காலத்தில் நான் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எங்கள் வெற்றிப் பயணம் துவங்கி விட்டது. எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் தயாராக உள்ளது. தேர்தல் பிரசாரத்தை எந்த வன்முறையும் இன்றி அமைதியாக நடத்த அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.


எந்தவித காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் அரசியல் நாகரிகத்துடன் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் 8 அல்லது 9ம் தேதிகளில் தேர்தல் பிரசாரத்துக்காக டில்லியிலிருந்து கோல்கட்டா வர இருக்கிறேன். காங்கிரசுடனான கூட்டணி குறித்து எந்த கவலையும் கொள்ளத்தேவையில்லை. காங்கிரசுடனான எங்களது உறவு நல்ல முறையில் இருக்கிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிக் கனியை பறிக்க தீவிரமாக உள்ளதால், ஆளும் இடதுசாரி கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைக்க தயாராகி விட்டன.


ஆளும் கட்சி தொண்டர்கள் நடத்தும் முகாம்களில் ஆயுத பயிற்சி அளித்து திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுவதை பூதாகரமாக பிரசாரம் செய்ய உள்ளார் மம்தா. மாணவர் சங்க தலைவர் கொலை உள்ளிட்ட விஷயங்களை பெரிது படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டதை சுட்டிக்காட்ட இருக்கிறார் மம்தா.


கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது மேற்கு வங்க மாநில இளைஞர்களுக்காக, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டதாகவும், அதே போன்ற யுக்தியை இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் செய்து வருவதாக, மேற்கு வங்க இடது சாரி கமிட்டி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றை முன்னிறுத்தி ஆளும் கட்சி தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளது.