புதன், 14 செப்டம்பர், 2011

தமிழக முதல்வரே !


மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்.......

அனுப்புனர்  - 

பி .எ. முகம்மது கனி , 
தஞ்சை மாவட்ட செயலாளர், 
மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம்,( MMMK ) 
ரஹுமானியா தெரு , 
வடக்கு மாங்குடி - 
போன் - 8760650038 . 

 பெறுனர் - 

உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் , 
ஆட்சியர் அலுவலகம், 
தஞ்சாவூர். 

பொருள்  -- மதுக்கடை அனுமதி ரத்து செய்யும் சம்பந்தமாக ! 
ஐயா , உங்கள் மீதும் என்மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. 

தஞ்சாவூரின் மையப்பகுதியில் ஆட்சியர் அலுவலகமும்,மாவட்ட நீதிமன்றமும்,கிளை சிறையும் மற்றும் எண்ணற்ற அரசு அலுவலகமும், இஸ்லாமிய சமுதாயத்தின் வழிபாட்டு தளமும் (பள்ளிவாசல் )  அமைந்து  இருக்கும்  காந்திஜி சாலையில் புதிதாக ஒரு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்வதை  எங்களின் தஞ்சை நகரநிர்வாகிகளின்  மூலமாக கவனத்தில் கொண்டேன் .அதன் பின் அந்த இடத்தை நேரில் சென்று பார்வை இட்டதில் முக்கிய சாலையின்  சந்திப்பான அந்த இடத்தில் மதுக்கடை திறப்பது கண்டிப்பாக வருந்தத்தக்கது என்பதை உணர்ந்து உடனடியாக உங்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களின் தஞ்சை நகர நிர்வாகிகளின் மூலமாக தாங்களுக்கு   1/09 /2011 அன்றைய தேதியில் ஒரு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டது .அதன் பின் சில நாட்கள் கழித்து தாங்களை நேரில் சந்தித்து அதன் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம் என்று  ஆட்சியர் அலுவலகம் வந்தபோது தாங்கள் இல்லை என தெரிந்து  தங்களின்  நேர்முக உதவியாளரை சந்தித்தோம் . அவரும் புதிதாக திறக்க இருக்கும் மதுக்கடை திறக்கும் எண்ணம் இல்லை என்ற நல்ல செய்தியை  எங்களின் தஞ்சை நகர நிர்வாகி இடம்  சொன்னார்கள் நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம். 

ஆனால் அடுத்த சில நாட்களாக அதே இடத்தில் மதுக்கடை திறப்பது உறுதி என்று சில நபர்கள்  திறக்க முயற்சி எடுப்பதாகவும் நாங்கள் கேள்வி பட்டோம் . பள்ளிவாசலுக்கு எதிரில் அந்த இடத்தில் மதுக்கடை திறந்தாள் எந்த அளவிற்கு சமூக கேடுகள் வரும் என்பதை தாங்கள் கண்டிப்பாக அறிந்து இருப்பீர்கள் .அதேபோல அரசின் முக்கிய அலுவலகம் இருக்கும் சாலைக்கு வரும் சந்திப்பில் மதுக்கடை இருக்குமானால் அங்கு தினம் தினம் சண்டை சச்சரவுகள் வரும் என்பதும் தாங்களுக்கு தெரியும். 

இந்த மதுக்கடையை திறந்த பின் மூடுவதற்கு பல போராட்டங்கள் செய்வதற்கு பதிலாக இதை திறக்காமல் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம் என்பதை தாங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஐய்யா இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி  இந்த மதுக்கடை திறப்பதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
                                                                                                                                      
நாள்- 14/09/2011                                                        ''என்றென்றும் சமுதாய சேவையில் '' 
                                                                                                                        பி.எ. முகம்மது கனி. 


நகல் -- 

மாண்புமிகு தமிழக  முதல்வர்  அவர்கள் , சென்னை. 
D.M. டாஸ்மாக்  தஞ்சை மாவட்டம் , தஞ்சாவூர். 
S.R.M. டாஸ்மாக் மேலாளர் ,திருச்சி . 
கலால் ஆணையர். தஞ்சாவூர்.