புதன், 20 அக்டோபர், 2010

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது தலைமையில் 18.10.2010 அன்று மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து, கூட்டம் நடந்த நாள் வரை எனக்கு பல்வேறு கொலை மிரட்டல் கடிதங்கள் விடுக்கப்பட்டன.

இது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் கூட்டமும் குண்டு வைத்து கொல்லப்படும் என்ற மிரட்டல் கடிதங்கள் வந்தன. மேற்படி கூட்டத்தில் நான் கலந்து கொள்ளக் கூடாது; அப்படியே நான் கலந்து கொண்டாலும், என்னுடைய கூட்டத்திற்கு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் வரக்கூடாது என்ற எண்ணத்தோடு இத் தகைய கொலை மிரட்டல் கடி தங்கள் விடப்பட்டன.

கருணாநிதியும், மதுரையிலே அவர்களின் கூட்டம் நடந்து முடிகிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அகிம்சாவாதியாக இருக்க வேண்டும்... என்று தன் பங்கிற்கு அறிக்கை விடுத்து இருந்தார்.

18-ந்தேதி போக்குவரத்தை வரைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மதுரையில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்கு வரத்திற்கு குந்தகம் விளை விக்கும் செயல்களில் காவல் துறையினர் ஈடுபட்டனர். மதுரை விமான நிலையத் திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை உள்ள 16 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு எனக்கே 2 1/2 மணி நேரம் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.

ஏற்கனவே, எட்டு லட்சம் பேர் கோவையில் கூடியபோது, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பும், பதினெட்டு லட்சம் பேர் திருச்சியில் கூடிய போது 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பும் வாகனங்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. மதுரையில் லட்சக்கணக்கில் திரண்டு வந்துதம் பலத்தை உலகிற்கு காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடன், லட்சிய உணர்வுடன் ஏற்பாடு செய்து வருவதை உளவுத் துறை அறிந்து இதன் அடிப்படையில், மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் மதுரையில் சேருவதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

எக்காரணத்தை முன்னிட்டும், கோவை, திருச்சியில் நடந்ததைப் போல மதுரையில் பெருமளவு கூட்டம் சேருவதை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டதால், அந்த நிமிடத்திலிருந்தே மதுரையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளின் பேரில் மதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கழக உடன் பிறப்புகளின் வாகனங்கள் மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.

அக்டோபர் 18-ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்களிலும், வேறு இடங்களிலிருந்து மதுரைக்கு வந்த விமானங்களிலும் பயணம் செய்த பயணிகள் விமானத்தில் இருந்தே தேனியை சுற்றியும், வாடிப்பட்டியை சுற்றியும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக மதுரை கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த 50 லட்சம் மக்களில், திடலில் திரண்டு இருந்த 25 விழுக்காடு மக்களைத்தான் ஊடகங்களாலும், அனைவராலும் பார்க்க முடிந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு வந்த 75 விழுக்காடு கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும் மதுரையை வந்து அடையவும் முடிய வில்லை; அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவும் முடிய வில்லை.

18-ஆம் தேதி அன்று மதுரையில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளை திறக்கக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கும்; கடைகளை திறக்கக் கூடாது என வியாபாரிகளுக்கும் காவல் துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, காசு கொடுத்தாலும் உணவும், தேநீரும், தண்ணீரும் கூட கிடைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 18.10.2010 அன்று மதுரைக்கு வந்திருந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகளும், பொது மக்களும், பசியுடனும், தாகத்துடனும்தான் நாள் முழுவதும் தவித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ககூடாது என கழக உடன் பிறப்புகளையும், பொது மக்களையும் தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும், எனது ஆட்சிக் காலத்திலும் கருணாநிதி எத்தனையோ பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் இது போன்ற தடைகள், இடையூறுகள் எங்க ளால் ஏற்படுத்தப்படவில்லை. இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கு வந்த மக்கள் கூட்டத்தை முழு அளவில் அங்கே, மதுரையில் சேரவிட்டு இருந் தால், இதுவரை உலகமே கண்டிராத ஒரு மகத்தான மக்கள் சமுத்திரத்தை அங்கே கண்டிருக்க முடியும். என்னைப் பார்க்க வேண் டும், என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக துணிச்சலுடன் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளி லிருந்து வந்த லட்சக்கணக்கானவர்களுக்கும்;

போக்குவரத்து முறைப்படுத்தப்படாததன் காரணமாகவும், வேண்டுமென்றே தடுத்து நிறுத்தப்பட்டதன் காரணமாகவும், நெரி சல் ஏற்பட்டு, கூட்ட மேடை அருகே வர முடியாமல், பல மைல்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டு என்னை காண முடியாமல், என் உரையை கேட்க முடியாமல் போன லட்சோப லட்ச கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்கே சுதந்திரம்? யாருக்கு சுதந்திரம்?

இந்திய திரு நாடு சுதந்திரம் 1947 இல் பெற்றதாக நம்பப்படுகிறது.ஆனால் யாருக்கு எங்கே சுதந்திரம் என்பது இப்போ கேள்வி குறியாக இருக்கிறது.நாம் வாழும் இந்திய தேசம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் என ஆகிக்கொண்டு இருக்கும் சூழலில் போய்கொண்டு இருக்கும் தேசமாக சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இங்கு வாழும் நம் இஸ்லாமிய சமுதாயம் சுதந்திரமாக இருக்கிறதா என்ற பல கேள்விகளை உருவாக்கும் நிலைமையில் நாம் இன்று இருக்கிறோம்..நம்மை அளிக்க வேண்டும் என துடி துடித்துக்கொண்டு இருக்கின்ற ஹிந்துத்துவாக்களின் நடுவே நாம் இன்றைய நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்..ஆனால் இந்திய அளவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களின் நிலையோ இன்றைக்கு யார் பெரியவர் யார் எந்த இஸ்லாமிய அமைப்பை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் நிலையை நாம் பரவலாக பார்க்கமுடிகிறது..அதிலே தமிழ்நாட்டில் மிகவும் மும்முரமாக செயல் படுவதைபோல் நாம் அண்மைய காலமாக பார்த்து வருகிறோம்.அதன் வரிசையிலே தான் தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகள் இன்று மக்கள் மத்தியிலே மிகவும் கேவலமாக நடந்துக்கொள்ளும் விதத்தை நாம் பார்த்து வருகிறோம். இதனால் யாருக்கு என்ன பயன் ? இன்று நம்மை அளிக்க நினைக்கும் ஹிந்துத்துவாக்களை நாம் குறை சொல்வதோடு நம்மில் இருக்கும் சமுதா அமைப்புகளின் தலைவர்கள் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தில் இருக்கும் தங்களின் உறுப்பினர்களை கட்டுபடுத்துவார்கள் என இந்த சமுதாய மக்களின் வினா வாக பரவலாக இருக்கிறது.அதே சமயம் சமுதாய தலைவர்கள் செய்யும் தவறையும் தாங்களே திருத்திக்கொள்ளவும் தாங்கள் முயற்சிக்கும் நோக்கம் வரவேண்டும் என்பதும் மக்களின் அவா.....இதை நடத்துவார்களா?

விரைவு ரயில்களில் மேலும் 7 புதிய நிறுத்தங்கள்!!

சென்னை- திருச்சி விரைவு ரயில் மற்றும் முக்கிய ரயில்கள் புதிதாக 7 இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் (6853)

தாம்பரம் (காலை 8.43- 8.45),

பண்ருட்டி (காலை 11.39- 11.40),

திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.15- 12.17),

வைத்தீசுவரன் கோவில் (பிற்பகல் 1.21- 1.22)

பூதலூர் (மாலை 3.08-3.09 மணி).

திருச்சி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (6854)

பூதலூர் (காலை 9.41- 9.42),

வைத்தீசுவரன் கோவில் (காலை 11.16- 11.17)

திருப்பாதிரிப்புலியூர் (பகல் 12.43- 12.45),

பண்ருட்டி (பிற்பகல் 1:08- 1.09).

இது வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

புவனேசுவரம்- ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (8496)

புதுக்கோட்டை (மாலை 6.13-6.15)

சிவகங்கை (இரவு 8.13-8.15)

இது நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ராமேஸ்வரம் - புவனேசுவரம்- வாராந்திர விரைவு ரயில் (8495)

சிவகங்கை (காலை 9.58-10:00 மணி)

புதுக்கோட்டை (காலை 11.43-11.45)

இது நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாராணசி- ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (4260)

புதுக்கோட்டை (இரவு 7.24-7.26மணி).

சிவகங்கை (இரவு 9.10-9.12.

இது வரும் நவம்பர் 2 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ராமேஸ்வரம் - வாராணசி வாராந்திர விரைவு இரயில் (4259)

சிவகங்கை (பகல் 1.13-1.15மணி)

புதுக்கோட்டை (பிற்பகல் 2.44-2.46 மணி)

இது வரும் நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ரயில் நிலையங்களில் அடுத்த 6 மாதங்களுக்கு சோதனை முறையில் தற்காலிகமாக ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக தேடப் பட்டு வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கைது!

தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வெங்கட் ராமன். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். நேற்று வெங்கட் ராமனின் வீட்டுக்கு 2 பேர் வந்து தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையை காட்டி உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்துள்ளனர்.



சோதனை செய்த பின் 25 சவரன் தங்க நகை மற்றும் 20000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு இதற்க்கு முறையான கணக்கு காட்டி விட்டு வருமான வரி அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறி விட்டு பைக்கில் ஏறி கிளம்பியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட வெங்கட் ராமனின் மருமகள் ராதா பைக்கை எடுத்து கிளம்பத் தயாரான நிலையில் பின்னால் இருந்தவரின் சட்டையை பிடித்து இழுத்து திருடன் என சத்தம் போட அங்கு வந்தவர்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் விளாத்தி குளம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவி சங்கர் என்று தெரிய வந்தது. இவர் மீது இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய வழக்கும், விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் நெல்லை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக ரவி சங்கரை கடந்த 2004 ம் ஆண்டு நெல்லைக்கு கொண்டு வந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி வீட்டின் பின் புறமாக தப்பி சென்றவர் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

1996 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விளாத்தி குளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோவை எதிர்த்து 634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரவி சங்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்: டெல்லி எம் எல் ஏ உச்ச நீதி மன்றத்தில் மனு!

லோக் ஜனசக்தி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ சோயிப் இக்பால் அவர்கள் சமீபத்தில் பாபர் மஸ்ஜித் நிலத்தின் மீது அலஹாபாத் உயர் நீதின்றம் அளித்த தீர்ப்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் ”இந்த தீர்ப்பு இந்திய அடிப்படைய சாசன சட்டத்திற்கு எதிரானது. முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது அலஹபாத் உயர் நீதின்மறம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்

எம்.எல்.ஏ சோயிப் அவர்களின் வழக்கறிஞர் கஷ்யப் இதை தெரிவித்துள்ளார்.

பி.டி.ஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்ற வழக்கில் இவர் சம்பந்தப்படாதவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் இந்திய நாட்டின் இறையான்மைக்கும் மதசார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அலஹாபாத் தீர்ப்பு அமைந்துள்ளதை எதிர்த்து இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

குவைத்தில் மஸ்கட் வங்கியின் சேவை தொடக்கம்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் சிறந்த சேவை செய்து தலை சிறந்த வங்கியாக திகழும் பேங்க் மஸ்கட் தனது கிளையை குவைத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.



நேற்று நடைபெற்ற விழாவில் குவைத் தலை நகர் ஆளுனர் ஷேக் அல் ஜாபர் அல் சபாஹ் அலி, குவைத் அரசு அதிகாரிகள், பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி , தலைமை செயல் அலுவலர் அப்துர் ரசாக் அலி ஈசா மற்றும் பேங்க் மஸ்கட் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி '' மஸ்கட் வங்கி குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கிடையேயான வணிக ரீதியிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் செயலாற்றும் என்று தெரிவித்தார்.

வக்ஃப் வாரியத் தலைவர்களுடன் இந்து மகா சபை பேச்சுவார்த்தை!

பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து வக்ஃப் வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகா சபை தான்.

அயோத்தி பாபர் மசூதி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். ராம ஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்குக் கிடைத்தபிறகு ராமர்கோவில் கட்டும் பணி துவங்கும்.

இவ்விவகாரம் குறித்து வரும் 28ஆம் தேதி வக்ப்வாரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக காஞ்சி ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள்,விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்ல உள்ளேன்.

அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதில் ஏற்படும் உடன்பாட்டை பொருத்தே எங்கள் அடுத்தகட்டநடவடிக்கை இருக்கும்" என்றார்.

ஐக்கிய அரசு அமீரகத்தில் பணிபுரிய இளைஞர்கள் தேவை !!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவகங்கள் மற்றும் அலுவலகங்களில் பராமரிப்புப் பணியாளர்களாக பணிபுரிவதற்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்தப் பணிகளுக்கு உடனடியாக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனுதாரர்கள் 30 வயதை கடந்தவர்களாக இருத்தல் கூடாது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியம், இலவச தங்குமிடம், மிகை நேர பணி ஊதியம் மற்றும் துபாய் நாட்டின் சட்டத் திட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள ஆடவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் எண் 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் அறிய, இந்த நிறுவனத்தை 2448 4278/69 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரக்காரர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்!

2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.

தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம். மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம். அதில் புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:

* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்

தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சவூதி: ஒரு சிகரெட்டின் விலை 200 ரியால் !!

General Authority of Civil Aviation என்று அழைக்கப்படும் குடிமைப் பறணை பொது அதிகாரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் எதிர்வரும் நவம்பர் 7 முதல் சவூதி அரேபிய விமான நிலையங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி புகைப்பவர்களுக்கு 200/- சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கிறது. துணைப் பிரதமரும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்ச்சருமான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஒப்புதலைப் பெற்று இச்செய்தி அறிவிக்கப்படுவதாக பொது அதிகாரகத் தலைமை அதிகாரி அப்துல்லா ரெஹய்மி தெரிவித்துள்ளார்.

"ஆரோக்கியமான சூழலை விமான நிலையங்களில் ஏற்படுத்த உதவுமாறு குடிமக்களையும் வெளிநாட்டவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 11 விதிகளையும் அதிகாரிகள் சரிவர மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இத்துறையின் இன்னொரு அதிகாரி நிருபர்களிடம் பின்னர் தெரிவிக்கையில் "புகைப்பவர்களுக்கு வசதியாக, தனிப்பட்ட சிறு தடுப்புப்பகுதிகள் (Smoking Zones) அமைக்கப்படும்" என்று கூறினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தாத இஸ்லாமிய வலைக்குழுமங்கள்!

பொதுவாக நாம் சினிமாவையோ அல்லது மற்றவர்களின் பழக்கவழக்கங்களையோ பற்றி தாராளமாக விமர்சனம் செய்வோம். ஆனால் நம்மை பற்றிய ஒரு விமர்சனம் வரும்போது நாம் எந்த நோக்கத்திற்காக அவர்களை விமர்சனம் செய்தோமோ அதனால் அவர்களிடம் எந்த மாதிரியான மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்பினோமோ அதுபோல நாமும் நம்மைக் குறித்து வரக்கூடிய விமர்சனத்தையும் கையாள வேண்டும்.

இன்றைய காலத்தில் பல பெரும்பான்மையான இஸ்லாமிய வலைக்குழுமங்கள் (இதில் சில விதிவிலக்கானவை) செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் வெறும் பொழுதுபோக்கிற்காகவும் விளம்பரத்திற்காகவுமே நடத்தப்படுகின்றன.

இந்த வலைத்தளங்கள் சமுதாயத்தில் நடைபெறும் மூடப் பழக்கவழக்கங்களை கண்டு கொள்ளாமலும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் போதிய கவனம் செலுத்தாமலும் வரதட்சணை ஆடம்பர திருமணம் போன்ற சமூக அவலங்களை மக்களிடம் எடுத்தச் சொல்வதில் பாராமுகமாகவும் இருந்து வருகின்றன. மொத்தத்தில் இதுபோன்ற வலைத்தளங்களால் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பயன்பாடு உள்ளதா என்பதை அந்த தளங்களுக்கு செல்பவர்கள் தான் கூற வேண்டும்.

மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்படுகின்ற இஸ்லாமிய வலை குழுமங்கள் அனைத்தும் (ஒன்றிரண்டு விதிவிலக்கும் உண்டு) இறைவனுக்கு இனைவைப்பதையும், சமுதாயத்தில் நிலவி வரும் மூடபழக்க வழக்கங்களையும், வரதட்சணையும் களைவதற்கு பதிலாக, இந்த குழுமங்கள், போலி ஒற்றுமைவாதிகளுக்கு ஆதரவாக ஆக்கங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் ஏகத்துவ பிரச்சாரர்களை எதிர்ப்பதன் மூலம் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு தடைகல்லாகவும், முட்டுகட்டையாகவும் இருந்து வருகின்றனர்.

சில வலைத்தளங்கள் எல்லா அமைப்புகளின் செய்திகளையும் வெளியிட்டு எம்மதமும் சம்மதம் என்ற தத்துவ அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. கேட்டால் நாம் இஸ்லாமியர்கள் நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற பதில். ஆனால் இணைவைப்பவனும் இணைவைக்காதவனும் எப்படி ஒரே மேடையில் ஒற்றுமையாக பேச முடியும் என்பது புரியாத புதிர். இஸ்லாமிய கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டுமானால் அது இஸ்லாத்தை பற்றி அறிந்த ஒரு முஸ்லிமால் தான் முடியும். அது ஒரு காபிரால் முடியாது. இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு ஒருவன் இறைவனுக்கு இணை வைக்கிறான். இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை செய்கிறான். இவன் எப்படி இந்த இஸ்லாமிய கயிறை பற்றிப் பிடிக்க முடியும். எனவே இந்த ஒற்றுமைக் கோஷம் அர்த்தமற்றது.

இந்த முக்கியத்துவம் இல்லாத ஒற்றுமையை முன்னிறுத்தி மக்களை நரகிற்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில் இறைவனுக்கு மாற்றமான செயலை செய்து, அல்லாஹ்வை மறுப்பவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)

எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் நடத்தும் வலைத்தளங்கள் மூலமாக நம்மைச் சார்ந்துள்ளவர்களுக்கு நம்மாலான இஸ்லாமிய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வை கொண்டு செல்வது அவசியமாக இருக்கிறது. வெறும் பெருமைகளையும் தேவையற்ற செய்திகளை போட்டு உங்களது நேரத்தையும் நம் தளங்களுக்கு வருபவர்களின் நேரத்தையும் வீணடிப்பதை விட பயனுள்ளதாக அமைந்தால் நன்றாக இருக்கும். இதன் மூலம் எதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டு நம்முடைய செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் மாற்றிக் கொள்வோமாக!