டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை அரசுத் தரப்பு வக்கீலாக சேர்க்குமாறும், முன்னாள் அமைச்சர் ராஜாவை குற்றவாளி என்று அறிவிக்குமாறும் கோரி டெல்லி தீஸ்ஹஸாரி கோர்ட்டில் இன்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜாவுடன் தொடர்புடைய ஹவாலா புரோக்கர்கள் குறித்த விவரம் இன்று நடந்த சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயினுக்கும், ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகள் அவரது டைரி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுவே ராஜாவுக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. எனவே ராஜா மீது விசாரணை நடத்த வேண்டும், அவரை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரவுள்ளேன்.
ராஜாவை இன்றே கோர்ட் குற்றவாளி என்று அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ராடியாவின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் ராஜா நிச்சயம் அமைச்சராகியிருக்க மாட்டார். ராடியாவின் ஊடுறுவல் எதிர்க்கட்சிகள் வரையும் பரவியுள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாவை தொலைத் தொடர்பு அமைச்சராக்கியுள்ளார் ராடியா. தயாநிதி மாறன் அமைச்சராகக் கூடாது என்பதில் அவர் தீவிரமாகவும் இருந்துள்ளார். இந்த நன்றிக் கடனுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் ராஜா, ராடியாவுக்கு செய்துள்ளார் என்றார் சாமி.
புதன், 15 டிசம்பர், 2010
நிரா ராடியா-ராஜாவின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ ரெய்ட்-காரணம் ராஜாவின் டைரி!!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு,அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
இந்த அதிரடி சோதனையின்போது ஹவாலா புரோக்கர் ஒருவர் சிக்கியுள்ளார். ராஜாவின் வீடுகளில் கடந்த வாரம் நடந்த அதிரடி சோதனையின்போது ராஜாவின் முக்கிய டைரி ஒன்று கிடைத்தது. அதில் இடம் பெற்றிருந்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது 2வது ரெய்டை சிபிஐ மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
டிராய் முன்னாள் தலைவர் வீட்டிலும் ரெய்டு:
இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.
நீரா ராடியா ஒரு என்ஆர்ஐ. கடந்த 9 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளார். அவரது நிறுவனத்தின் முதலீடு ரூ. 300 கோடி என்கிறார்கள். இந்த பிசினஸுக்குத் தேவையான இவ்வளவு பெரிய முதலீடு எப்படி கிடைத்தது என்பது பெரும் புதிராக உள்ளது. எங்கிருந்து இந்தப் பணத்தை அவர் பெற்றார் என்பதும் மர்மமாக உள்ளது.
காட்டிக் கொடுத்த ராஜா டைரி:
கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ. வளையத்துக்குள் வந்திருக்கிறார் மகேஷ் ஜெயின் என்கிற ஹவாலா புரோக்கர். இவரது பெயரும் ராஜாவின் டைரியில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த டைரியிலிருந்து கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையிலேயே இன்றைய ரெய்டு தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த அதிரடி சோதனையின்போது ஹவாலா புரோக்கர் ஒருவர் சிக்கியுள்ளார். ராஜாவின் வீடுகளில் கடந்த வாரம் நடந்த அதிரடி சோதனையின்போது ராஜாவின் முக்கிய டைரி ஒன்று கிடைத்தது. அதில் இடம் பெற்றிருந்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது 2வது ரெய்டை சிபிஐ மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
டிராய் முன்னாள் தலைவர் வீட்டிலும் ரெய்டு:
இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.
நீரா ராடியா ஒரு என்ஆர்ஐ. கடந்த 9 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளார். அவரது நிறுவனத்தின் முதலீடு ரூ. 300 கோடி என்கிறார்கள். இந்த பிசினஸுக்குத் தேவையான இவ்வளவு பெரிய முதலீடு எப்படி கிடைத்தது என்பது பெரும் புதிராக உள்ளது. எங்கிருந்து இந்தப் பணத்தை அவர் பெற்றார் என்பதும் மர்மமாக உள்ளது.
காட்டிக் கொடுத்த ராஜா டைரி:
இந்த டைரியிலிருந்து கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையிலேயே இன்றைய ரெய்டு தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சிபிஐ ரெய்ட்: நக்கீரனை களங்கப்படுத்தும் ஆங்கிலத் தொலைக்காட்சி!
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.
இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)
இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.
ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்.
ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது செத்துக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் குறித்துக் கவலையுடன் கூடிய செய்திகளை தமிழ் மீடியாக்கள் வெளியிட்டு வந்த நேரத்தில், அந் நாட்டு அதிபர் ராஜபக்சேவை ஆதரித்து (இந்த மீடியாக்களுக்கு மட்டும் இலங்கை அரசு உடனுக்குடன் விசாவும் அனுமதியும் தந்தது நினைவுகூறத்தக்கது) கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தவை இந்த மீடியாக்கள்.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நடந்து வரும் சிபிஐ விசாரணையிலும் தங்களது 'புத்தியை' திணிக்க ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி முயல்வது உண்மையில் இந்த சோதனையின் நோக்கம் என்ன என்பது குறித்தே அடிப்படை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை ஈழத் தமிழர்களை ஆதரித்து வருவதால் தான் ஜெகத் காஸ்பரையும் நக்கீரனையும் மத்திய அரசு குறி வைக்கிறதோ என்ற எண்ணம் கூட எழுகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடந்து வருகிறது. ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரிமணியம், பெசன்ட் நகரில் உள்ள நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பாதிரியார் ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாகியுள்ளன.
இதில் காமராஜ், ராஜாவின் நண்பர் என்பதால் சோதனை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ராஜா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டியிலும் ரெய்டுநடந்து வருகிறது.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் உறவினர்கள் வீடுகளும் ரெய்டுக்குள்ளாகியுள்ளன.
பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீடு 2வது முறையாக சோதனைக்குள்ளாகியுள்ளது.
பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்ஷாவின் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட100க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ரெய்டுகள் முடிந்து சிபிஐ அந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து மேலும் பல விவரங்கள் வெளிவரும்.

சமுதாய ஒற்றுமை?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..................................
எனக்கு கருத்து தெரிந்த நாள் முதல் நானும் இந்த பச்சிளம் பிறைக்கொடியை ஏந்தி பல கூட்டங்களில்
கலந்து கொண்டு தான் இருந்தேன்..அந்த நேரங்களில் இருந்த நம் சமுதாய அமைப்பாக தாய்ச்சபை என்று சொல்லக்கூடிய இந்த முஸ்லிம் லீக் இருந்ததை நாம் மறக்க முடியாது..பிறகு அப்துஸ் சமத் சாஹிப் அவர்களும், லத்தீப் சாஹிப் அவர்களும் ஒரு சில அரசியல் சானக்கியர்களால் பிரிக்கப்பட்டு இரு வேறு அணிகளாக வளம் வந்தார்கள் இதற்க்கு காரணம் என்ன? பின்பு போகும் இடமெல்லாம் செருப்பு மாலைகளாக விழுந்தது வேறு விஷயம்....எங்கள் ஊரிலும் அந்த செருப்பு மாலை விழுந்தது........................ராஜகிரி போன்ற ஊர்களில் உள்ளேயே வரவிடாமல் செருப்பு கயிறு கட்டி தடுத்ததும் நினைவிற்கு வருகிறது.
அதே அரசியல் சானக்கியரால் தேர்தல் நேரத்தில் இரு அணிகளாக இருந்த சமுதாய தலைவர்கள் தாங்கள் செய்யக்கூடிய தோல் பதனிடும் தொழில்கள் பாதிக்க கூடாது என்ற நோக்கில் ஒருவர் கருணாநிதி பக்கமும்,ஒருவர் ஜெயலலிதா பக்கமும் இருந்தார்கள் என்பதும் மறக்க முடியாது......பின்பு அந்த இரு அணிகளிலும் பிரிந்து பல அணிகளாக சென்றவர்களும் இன்றைக்கு லட்டர்பேடு இயக்கங்களாக இருப்பது மறக்க முடியாது...................
இதே சமயத்தில் கோழையாக வாழ்வதை விட வீரமாக மரணிப்பதே மேல் என்ற வெற்றி முழக்கத்துடன் என்னை போன்ற வாலிபர்களை சுண்டி இழுத்த மாவீரர் சஹீத் பழனி பாபாவின் முழக்கங்கள் இந்த தமிழகத்தையே ஆட்டிபடைத்தது.....பல வாலிபர்கள் தன்னை பழனி பாபாவுடன் இணைத்துக்கொண்டனர்.எங்கள் ஊரிலே பழனிபாபா உடைய உறுப்பினர் என்றால் விரோதியை பார்க்கும் அளவிற்கு எங்களை ஓரங்கட்டினார்கள்.நாங்கள் வைத்து இருந்த உறுப்பினர் அடையாள அட்டையை ஜமாஅத் வாங்கி கிளித்துப்போட்டது ஒரு காலம். ஆனால் அதே ஊரிலே ஜும்மா மேடையில் பழனி பாபாவையும் ஏற்றியதும் எங்களுக்கு மறக்க முடியாது.பின்பு பழனிபாபாவின் வீர மரணத்துக்கு பின் இந்த சமுதாயத்தை காப்பாற்ற வல்ல இறைவன் துணையோடு புறப்பட்ட சமுதாய இயக்கங்கள் ஒரு பக்கம்...இந்த சமுதாய இயக்கங்களின் வருகைக்கு பின்னால் தான் அரசு இயந்திரங்கள் இஸ்லாமியர்களுக்கு மரியாதை தந்தது என்பதை நாம் கொஞ்சம் கூட மறுக்க முடியாது........ஒரு நேரங்களில்
காக்கி உடை அணிந்து யார் வந்தாலும் எழுந்து நின்று அவர்களுக்கு பயந்த இந்த சமுதாயத்தின் வாலிபர்களை துணிவுடன் செயல் பட வைத்தது இந்த சமுதாய இயக்கள் என்பதும் மறுக்க முடியாது......அதன் பின்னும் எத்தனையோ இயக்கங்கள் பல தலைவர்களின் பின்னாலே அணிவகுத்தது......இன்றைய கால கட்டங்களில் காவல் நிலையம்.ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு கேந்திரங்களுக்கேல்லாம் எல்லாம் இஸ்லாமியனும் சென்று வரலாம் என்ற தைரியத்தையும் அல்லாஹ்வின் நாட்டத்தால் கொண்டு வந்ததும் இந்த சமுதாய அமைப்புக்கள் தான் என்பதையும் மறுக்க முடியாது.........இப்படி இருக்க இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .. ஆனால் ஒற்றுமையாக இந்த சமுதாயம் தமிழகத்தில் இருக்க வேண்டும் என இன்று சொல்லிக்கொண்டு வருகிறோமே நாம் அந்த ஒற்றுமைக்காக என்ன செய்தோம்.இதுவரை அதற்க்கான முயற்சிகள் என்ன என்பதை நாம் அனைவரும் சற்று பகிர்ந்துக்கொள்ளலாமே?

மரண அறிவிப்பு!
வடக்குமாங்குடி மேலத்தெரு கோடாலி அஜீஸ் (அஜ்ஜி) அவர்கள் 14 /12 /2010 மாலை சுமார் 5.30 காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுஉலக நல்வாழ்விற்கு நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)