வியாழன், 4 நவம்பர், 2010

விசாரணை என்ற பெயரில் தமிழக நர்ஸ் பலாத்காரம்-கேரள போலீஸ் அட்டூழியம்

Rape Victimதிருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டு வழக்கில் சிக்கிய வேலூர் நர்சை 4 போலீசார் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹோம் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அந்த வீ்ட்டில் நகை, பணம் காணாமல் போனது. இது குறித்து விசாரித்த திருக்காக்கரை போலீசார் நர்சை கைது செய்தனர். நகைகளை மீட்பதற்காக வேலூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றபோது 4 போலீசார் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த பெண்ணை பிடித்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருக்காக்கரை சிறையில் அடைத்தனர். பிறகு அவர் திருச்சூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் கேரள மனித உரிமை ஆணைய உறுப்பினர் நடராஜா, திருச்சூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது சிறையில் இருந்த அந்த பெண், போலீசார் தன்னை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய விவரங்களை கூறி கதறியுள்ளார். இதனால் இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இதற்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை  செய்ததாகவும் கூறியுள்ளார்.

வழக்கில் சிக்கிய தமிழக பெண்ணை 4 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனே விசாரணை நடத்தும்படி கேரள உள்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சோனியா, மன்மோகன், பின் லேடன், தாவூத் இப்ராகிம்: 'உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள்'!

Sonia Gandhi and Manmohan Singhபாஸ்டன்: உலகில் அரசியல்ரீதியில் மிக சக்தி வாய்ந்த மனிதராக சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை போர்ப்ஸ் இதழ் தேர்வு  செய்துள்ளது. இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் போபர்ஸ் இதழ் உலகின் மிகுந்த அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசியல், பொருளாதாரம்  , வர்த்தகம், மதம், தீவிரவாத-போதை மருந்து கடத்தல் புள்ளிகள் என பல்வேறு துறைகளில் அதி முக்கிய நபர்களை இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது.

இதில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோ உலகின் மிக சக்தி வாய்ந்த நபர் என்ற முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த இடத்திலிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

செளதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 3வது இடத்திலும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் 4வது இடத்திலும், போப் ஆண்டவர் பெனடிக்ட் 5வது இடத்திலும், ஜெர்மனி  அதிபர் ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் கேமரூன் 7வது இடத்திலும் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 9 இடத்தைப் பிடித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் 18வது இடத்தில் உள்ளார். மன்மோகன் சிங் கடந்த முறை 36வது இடத்தில் இருந்தார். இப்போது 18 இடங்கள் முன்னேறி உள்ளார் 18வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி 29வது இடத்தையும், தலாய் லாமா 39வது இடத்தையும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 31வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 34வது இடத்திலும், லட்சுமி மித்தல் 44வது இடத்திலும், ரத்தன் டாடா 61வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பின் லேடன்-தாவூத் இப்ராகிம்:

இந்தப் பட்டியலில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் 57வது இடத்தையும், மெக்சிகோவின் மாபெரும் போதை மருந்து கடத்தல் புள்ளியான ஜோவாகின் கஸ்மேன் 60வது இடத்தையும், மும்பை தாதா தாவூத் இப்ராகிம் 63 இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த மூவரும் உலக அமைதி, நன்மைக்கு எதிரானவர்கள் என்றாலும், இவர்களது பலமும், சக்தியும் இவர்களை இந்தப் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது-விஜய்காந்த்

Vijayakanthசென்னை: தீய சக்திகள் ஒன்று சேர்கிற போது, நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது. தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும் என்று தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் திருநாள் தீபாவளி நாளாகும். நியாயங்கள் மட்டுமே வெற்றி பெறுவதும் இல்லை. அநியாயங்கள் தாமே அழிந்து விடுவதும் இல்லை. அநியாயத்தை எதிர்த்து, போரிட்டு வெற்றி பெற்றால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்.

தீயசக்திகள் ஒன்று சேர்கின்ற போது, நல்லவர்கள் ஒன்று சேராமல் இருந்து விடக் கூடாது. தீய சக்திகளை ஒழிக்க நல்லவர்கள் ஒன்று சேர்ந்து போரிட வேண்டும். இருளை அகற்ற தீபத்தை ஏற்ற வேண்டும். புற இருளை மட்டுமல்ல, அக இருளையும் இந்த நன்னாளில் அகற்ற வேண்டும். அதுவே தீபாவளி நமக்குத் தரும் பாடமாகும். இந்த நன்னாளில் எல்லோரும் நல்வாழ்வைப் பெற்றிட அனைவருக்கும் என் இதயமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சரத்குமார்:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு கட்டுப்பாடான சமுதாயம் அமையும் போது தான் பண்டிகைகள் ஏற்படுத்தும் உற்சாகத்தையும் ஒருமைப் பாட்டையும் முழு உணர்வோடும், நம்பிக்கையோடும் அனுபவிக்க முடியும்.

மேலும், வறுமை இருள் அகன்று, அறியாமை இருள் அகன்று மக்கள் அனைவரும் சுபிட்சமாக நல்வாழ்வு வாழ இந்த இனிய தீப ஒளித் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் இதயங்கனிந்த இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்!

நடுவானில் பறந்தபோது விமான பாகம் உடைந்து விழுந்தது; 459 பயணிகள் தப்பினர்
                                                                           
சிங்கப்பூரில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. 459 பயணிகள் இருந்தனர்.
 
விமானம் புறப்பட்டு 5-வது நிமிடத்தில் விமானத்தில் ஒருபக்க எந்திரத்தில் உள்ள மேல்பகுதி பாகம் உடைந்து விழுந்தது.
 
உடனே பைலட் விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

தேர்தல் கூட்டணி அ.தி.மு.க. அணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா?

தேர்தல் கூட்டணி
 
 அ.தி.மு.க. அணியில் பா.ம.க., தே.மு.தி.க. சேருமா?சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தமிழ்நாட்டில் கூட்டணி பற்றிய பேச்சுகளும், தீவிரம் அடைந்துள்ளன.
 
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இருந்தன. தற்போது புதிய தமிழகம் கட்சியும் இதில் சேர்ந்துள்ளது.
 
இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இறங்கி இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. கட்சிகளை சேர்த்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புவதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதையடுத்து அதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன.
 
தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்புவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தைகளில் 2-வது கட்ட தலைவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுபோல் பா.ம.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் “சீட்” ஒதுக்க அ.தி.மு.க. மேலிடம் தயாராக இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கூட்டணி பற்றிய நேரடி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும், அந்த கட்சிகள் கேட்கும் இடங்கள் எத்தனை என்பதும் அதற்கு முன்பு பேசி முடிவு செய்யப்படும் என்றும் அந்த கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

                                                                          

ஒபாமா மும்பை வருகை-தென்னை மரங்களில் தேங்காய்கள் அகற்றம்

Obamaமும்பை: மும்பையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செல்லும் இடங்களை `போர்ஸ் ஒன்' கமாண்டோ படையினர் ஆய்வு செய்தனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுதினம் (6ம் தேதி) இந்தியா வருகிறார். முதலில் அவர் மும்பை வந்திறங்கவுள்ளார்.

இதையொட்டி மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உளவுப் பிரிவினர், மத்திய பாதுகாப்புப் படையினர், மாநில போலீசாருடன் அமெரிக்க அதிபரின் சிறப்புப் பாதுகாப்பு படையினர், அந் நாட்டு உளவுப் பிரிவினரும் மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிபர் ஒபாமா செல்வார் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் மகாராஷ்டிர  போலீஸ் கமாண்டோக்களான `போர்ஸ் ஒன்' படையினர் முகாமிட ஆரம்பித்துள்ளனர்.

ஒபாமா மற்றும் அவருடன் வரும் குழுவினர் தங்கும் தாஜ் ஹோட்டல், டிரைடன்ட் ஹோட்டல், தாஜ் பிரசிடெண்ட், கிராண்ட் ஹயாத் ஹோட்டல்களை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.

மேலும் சேவியர்ஸ் கல்லூரி, ஹோலி நேம் பள்ளி, மும்பை பல்கலைக்கழகம்  ஆகிய இடங்களில் ஏதோ ஒன்றுக்கு ஒபாம செல்வார் என்று தெரியவந்துள்ளது. இந்த இடங்களும் பாதுகாப்புப் படையினர் வசம் வந்துவிட்டன.

ஆனால் இது தொடர்பான தகவல்களை பாதுகாப்பு
ஒபாமா வருகையையொட்டி `கேட்வே ஆப் இந்தியா' பகுதியில் 3 நாட்கள் படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாஜ் ஹோட்டல் அருகேயுள்ள சாலைகளும் இரண்டு நாட்கள் மூடப்படவுள்ளன.

மேலும் ஒபாமா செல்லும் பாதைகளிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனைகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

தென்னை மரங்களில் தேங்காய்கள் அகற்றம்:

மகாத்மா காந்தி மும்பை வரும் போது தங்கும் மணி பவனை ஒபாமா பார்வையிட ஆர்வமாக உள்ளார். இதன் வளாகத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

இந்த இடத்தைப் பார்வையிட்ட ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த மரங்களில் இருந்த தேங்காய்களை அகற்றுமாறு கூறியதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அகற்றினர்.

மும்பை தாக்குதல்-பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு:

இதற்கிடையே தனது இந்தியப் பயணத்தையொட்டி இந்திய தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஒபாமா அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானிடம் நாங்கள் மென்மையாக நடந்துகொள்வதாக கூற முடியாது. மும்பை தாக்குதல் நடந்ததில் இருந்தே, அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தானுக்கு சர்வதேச பொறுப்பு உள்ளது என்றும், இதை ஒளிவுமறைவின்றியும், முழுமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்றும் நாங்கள் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறோம்.

இதுதொடர்பாக, ஏற்கனவே அளித்த உறுதிமொழியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, ஆசிய பிராந்தியத்துக்கே நல்லது. தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிக்க, கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

எனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக இந்தியாவுக்கு செல்கிறேன். ஏனென்றால், ஆசிய தொடர்புக்கு இந்தியாவைத்தான் அடித்தளமாக நான் கருதுகிறேன். மேலும், ஜி-20 போன்ற பன்னாட்டு அமைப்புகளுடனான தொடர்புக்கும் இந்தியாவையே அடித்தளமாக கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்தியாவும், அமெரிக்காவும் பிரிக்க இயலாக நட்புறவை கடைபிடிக்கின்றன.

நான் சந்தித்த தலைவர்களிலேயே அசாதாரண தலைவர், பிரதமர் மன்மோகன் சிங்தான். அந்த நல்ல நண்பருடன் இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவின் எழுச்சி இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, ஆசியாவுக்கும் உலகத்துக்குமே நன்மை பயக்கும்.

அமெரிக்க நிறுவனங்கள், இந்திய கம்பெனிகளிடம் `அவுட்சோர்சிங்' பணிகளை ஒப்படைப்பதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தது, சரியானதுதான். அமெரிக்க அதிபர் என்ற முறையில், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பது எனது கடமை.

அமெரிக்க சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் நுழைய நாங்கள் வாய்ப்பு அளிப்பது போல, இந்திய சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் நுழைய இந்தியாவும் வாய்ப்பளிக்க வேண்டும்.

அணு விபத்து இழப்பீடு மசோதாவில் உள்ள சில அம்சங்கள் குறித்து அமெரிக்க நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இதுபற்றி இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ள, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணு சக்தி நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.

காந்தியின் போதனைகள்-ஒபாமா புகழாரம்:

மகாத்மா காந்தி, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவில் கழித்தார். இந்தியாவுக்காக பாடுபட்டார். ஆனால், அவரது போதனைகள் உலகம் முழுவதற்கும் இப்போதும் பொருத்தமானவையாக உள்ளன.

அவரது பணிகள், அமெரிக்காவில் கறுப்பின உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர்கிங் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அதன்மூலம், அமெரிக்காவில் நல்ல மாற்றம் ஏற்பட காந்தி உந்து சக்தியாக திகழ்ந்தார்.

இந்தியாவுக்கு செல்வதன் மூலம் அவரது நினைவுகளை கெளரவிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

லலித் மோடியின் ரூ.100 கோடி அரண்மனைகளுக்கு ”சீல்”!

Lalit Modiஜெய்ப்பூர்: லண்டனில் தஞ்சமடைந்துள்ள லலித் மோடியின் இரு அரண்மனைகளுக்கு ராஜஸ்தான் அரசு சீல் வைத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி நிதி  முறைகேடுகள் செய்ததால் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது ரூ.450 கோடிக்கு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியம் மற்றும் அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் இருந்து தப்ப அவர் லண்டனில் பதுங்கியுள்ளார். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இந்த அமைப்புகள் பல முறை நோட்டீஸ் அனுப்பிவிட்டன.

ஆனால், இந்தியாவுக்கு வந்தால், தனது உயிருக்கு அண்டர்வேர்ல்ட் தாதாக்களால் ஆபத்து இருப்பதாகவும், இதனால் தன்னை சிபிஐ, அமலாக்கப் பிரிவு அல்லது கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் லண்டனில் வைத்தே விசாரித்துக் கொள்ளலாம் என்றும் கூறி வருகிறார்.

லலித் மோடி 2007ம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இரு அரண்மனைகளை விதிமுறைகளை மீறி வாங்கினார். ரூ.9 லட்சத்துக்கும், ரூ.21 லட்சத்துக்கு லலித் மோடி மற்றும் அவரது மனைவி மினால் மோடி பெயரில் இவை வாங்கப்பட்டன. இந்த அரண்மனைகளில் உண்மையான மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகமாகும்.

பாஜக ஆட்சியில் வசந்தரா ராஜே முதல்வராக இருந்த போது இவை வாங்கப்பட்டன. வசந்த ராஜேவுக்கு மோடி மிக மிக நெருக்கமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் ராஜஸ்தானில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் லலித் மோடியின் இரு அரண்மனைகளுக்கும் ஜெய்ப்பூர் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

விதிகளை மீறி இந்த சொத்துக்களை லலித் மோடி வாங்கியதால் அவற்றை இப்போது மாநகராட்சி மூலம் ராஜஸ்தான் அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.