திங்கள், 1 நவம்பர், 2010

ராமர் கோயிலை மத்திய அரசே கட்ட வேண்டும் : சிவசேனா!

அயோத்தியில் பிரச்சனைக்குரிய பாபர் மசூதி-ராம் ஜென்பூமி இடத்தில் ராமர் கோயிலை மத்திய அரசே கட்டித் தர வேண்டும் என்று சிவசேனா கோரியுள்ளது.

சோம்நாத் கோயிலைப் போன்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் கோயிலில் வழிபாடு நடத்தும் உரிமையை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும். செலவுகளைக் கணக்கிட்டு உரிய அதிகாரிகளை அந்தக் கோயிலுக்கு மத்திய அரசே நியமிக்க வேண்டும் என்று சிவசேனாவின் உத்திரப் பிரதேச மாநிலத் தவைலர் உதய் பாண்டே அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அயோத்தியைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மசூதி கட்டப்படக் கூடாது என்பதை பாபர் மசூதி - ராமர் கோயில் பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக தீர்வு காண முயல்வோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை குறித்த விவரங்களை விசுவ இந்து பரிஷத் தரவேண்டும் என்று கூறிய பாண்டே, வசூலிக்கப்பட்ட பணத்திற்கு விசுவ இந்து பரிஷத் கணக்கு காட்ட முன்வராதது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.

ஒரு கையெழுத்து வினையானது!

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கையெழுத்து போட்டு கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு எதிராக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினரிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக பொதுமக்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடமிருந்து கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க, குமரி மாவட்ட பாஜக கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. இதன் ஆரம்பமாக, நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனைச் சந்தித்து கையெழுத்து கேட்டுள்ளனர். ஹெலன் டேவிட்சனும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுகவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
விஷயம் திமுக தலைமைக்குக் கிடைத்த உடன், ஹெல்ன் டேவிட்சனிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. உடன், "ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகத் தான் கையெழுத்திடவில்லை எனவும் தொகுதி எம்பி என்ற முறையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தே தான் போட்டுக்கொடுத்ததாகவும்" ஹெலன் டேவிட்சன் மறுப்பு வெளியிட்டார். தொடர்ந்து குமரி மாவட்ட பாஜக தலைவர்களுள் ஒருவரான பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேலாயுதனும் ஹெலன் டேவிட்சன் கூறியது தான் சரி; அவர் ராமர் கோவில் கட்ட கையெழுத்து ஏதும் இடவில்லை என்று மறுப்பு வெளியிட்டார்.
இம்மறுப்பு வந்த நிமிடத்திலேயே மற்றொரு பாஜக தலைவரான நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராதா கிருஷ்ணன், "ஹெலன் டேவிட்சன் எம்பி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத் தான் கையெழுத்து போட்டார். பாஜக தலைவர் வேலாயுதன் என்ன கூறினார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஹெலனால் திமுகவுக்கு ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்கவே அவர் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். எந்த ஒரு எம்பியாவது தன்னிடம் வழங்கப்படும் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பரா? ஹெலன் இது போன்று தன்னிடம் மனுகொடுத்த எத்தனை பேருக்கு அவ்வாறு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ளார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?" என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
ஹெலன் மூலமாக மறுப்பறிக்கை வெளியிட்டு, பிரச்சனையிலிருந்து தப்பி விடலாம் எனக் கணக்குபோட்ட திமுக தலைமைக்குப் பெரும் தலைவலி தரும் வகையில், தற்போது ஹெலன் டேவிட்சன் எம்பிக்கு எதிராக குமரி மாவட்ட சிறுபான்மை மக்களிடையே எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டம் முழுவதும் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் ஹெலன் டேவிட்சனைப் பதவி விலகக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தவும் சில சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மீண்டும் 'வேலையைக் காட்டிய' செல்போன் ஆபரேட்டர்கள்!

Cell Phone'எண்களை மாற்றாமல், வேறு மொபைல் நெட்வொர்க்குக்கு மாறிக் கொள்வது' என்பது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்தியாவில் பேசப்பட்டு வரும் சமாச்சாரம். இந்த வசதி வெளிநாடுகளில் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த வசதியை இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தருவதில் அநியாயத்துக்கு அடம் பிடிக்கின்றன தனியார் செல்போன் நிறுவனங்கள்.

என்ன காரணம்?

'வெரி சிம்பிள்... பயம்தான், இருக்கிற வாடிக்கையாளர்களையும் இழந்துவிடுவோமா என்ற பயம்தான் இந்த தள்ளிப் போடலுக்கு முழு காரணம்' என்கிறார்கள் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பயத்தின் விளைவு இதோ, 6வது முறையாக மீண்டும் ஒத்திப் போட்டுள்ளது தொலைத்தொடர்புத் துறை.

செல்போன் எண்களை மாற்றாமல், நெட்வொர்க்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி 2003-ம் ஆண்டே பிரிட்டன், அமெரிக்கா [^] , ஜெர்மனி [^] உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த நாடுகளை விட அதிக வாடிக்கையர் எண்ணிக்கை கொண்ட இந்தியாவில் இந்த வசதியை செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அளிப்பது குறித்து முதல் முதலில் 2006-ம் ஆண்டுதான் பேசப்பட்டது. உடனடியாக இதனை இந்தியாவில் அமல்படுத்த போதுமான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வசதி பிஎஸ்என்எல் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் - ஏர்டெல் உள்பட- அப்போது இல்லை.

இந்தியாவில் இன்று 650 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 12க்கும் மேற்பட்ட மொபைல் நெட்வொர்க்குகள் அவர்களுக்கு செல்போன் சேவை அளித்து வருகின்றன.

வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்தும் கூட, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை தனியார் செல்போன் நிறுவனங்கள் என்பதே உண்மை.

இன்றைய நிலையில், பல்வேறு நெட்வொர்க் மூலமும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 15 பில்லியன் அழைப்புகளுக்கும் மேல் செய்கிறார்கள். எனவே ஒரு மொபைல் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாறும்போது, கூடுதல் வாடிக்கையாளர்களைத் தாங்கும் சக்தி அந்த நெட்வொர்க்குக்கு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த உறுதியை ஓரிரு மொபைல் ஆபரேட்டர்கள் தவிர வேறு யாரும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஏசி - நீல்சன் சர்வேயின்படி, 5ல் ஒரு மொபைல் வாடிக்கையாளர், இருக்கும் நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்குக்கு மாற விரும்பியது தெரியவந்தது. இதே சர்வே மீண்டும் சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட போது 5-ல் இரண்டு வாடிக்கையாளர் தற்போதுள்ள நெட்வொர்க்கில் அதிருப்தியுடன் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஆக இன்றைய சூழலில் இந்த வசதியை அறிமுகப்படுத்தினால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் வேறு நெட்வார்க்குக்குப் போகும் அபாயம் உள்ளது.

இதனைச் சமாளிக்க, பெரும் சலுகைகள், கட்டணக் குறைப்புத் திட்டங்கள், புதிய வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டி வரும். 'ஒரு செகண்ட் பில்லிங்' என்று சொல்லிக் கொண்டு, வரும் அழைப்புக்கும் (இன்கமிங்) பணம் பறிக்கும் தகிடுதத்தங்களைத் தொடர முடியாமல் போகும் என்ற பயமே தனியார் நிறுவனங்களை வாட்டுகிறது.

இதன் காரணமாகவே, விரும்பிய நெட்வொர்க்குக்கு மாறும் வசதியை இவை தள்ளிப் போட்டு வருகின்றன என்கிறார்கள்.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிலை என்ன?

நிறைய வசதிகள் இருந்தாலும், தனது மோசமான வாடிக்கையாளர் சேவை காரணமாக வாடிக்கையரிடம் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்து வைத்துள்ளது பிஎஸ்என்எல். இன்றைய சூழலில் நெட்வொர்க் மாறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் முதல் அடி பிஎஸ்என்எல்லுக்குத்தான் என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அந்நிறுவன சென்னை வட்ட அதிகாரிகள் சிலர்.

அதே நேரம் கட்டண தில்லுமுல்லுகளில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கப்பதாக ஏர்டெல், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த உண்மை புரிந்திருப்பதால், இந்த நிறுவனங்களும் நெட்வொர்க் மாற்றத்தை அடியோடு வெறுக்கிறார்களாம்.

எப்போதுதான் நெட்வொர்க் மாற்றம் சாத்தியமாகும்?

ஆரம்பத்தில் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக துறையின் அமைச்சர் [^] ஆ ராசா கூறினார். அடுத்த சில வாரங்களில் இது டிசம்பர் 2009-ஆக தள்ளிப் போடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 2010 என கெடு வைத்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஏப்ரல் 2010 ஆனது. பின்னர் ஜூலை 2010-க்கு தள்ளி வைத்தார்கள். இதுவே கடைசி டெட்லைன் என்று வேறு உறுதி கூறினார்கள்.

ஆனால் ஜூலையும் போனது. ஒருவழியாக நவம்பர் ஒன்றாம் தேதி, அதாவது இன்று, விரும்பிய நெட்வொர்க்கு மாறும் வசதியை ஹரியாணாவில் சோதனை முறையில் அமலாக்கப் போவதாக தெலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா கூறினார்.

ஆனால் இந்த முறையில் எதுவும் நடக்கவில்லை. தேதி மாற்றம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ம் தேதி நிச்சயம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு தருவோம் என்று அறிவித்துள்ளது தொலைத் தொடர்புத் துறை. அப்படியெனில் அமைச்சர் ராசா சொன்னது..?

அதை நினைத்துப் பார்க்கும் நிலையிலா அவர் இருக்கிறார்!!

'உறுதியான ஒரு டெட்லைனை அறிவித்து, அதற்குள் அனைத்து நிறுவனங்களும் 'விரும்பிய நெட்வநொர்க்குக்கு மாறும் வசதியை' அறிமுகப் படுத்த வேண்டும். இல்லையேல் அபராதம் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அரசு அறிவிக்க வேண்டும். பயன்பாட்டாளர் மீது அக்கறை இருந்தால் அரசு இதைச் செய்யும்' என்கிறார் ஒரு பிஎஸ்என்எல் அலுவலர்.

பிரேசில் அதிபராக முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா போராளி தில்மா தேர்வு

Dilma Rousseffரியோடிஜெனிரோ: முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா தலைவியான தில்மா ரூசப், பிரேசில் நாட்டின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார்.

நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் பல சித்திரவதைகளை சந்தித்தவர் தில்மா என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் அதிபர் பதவியை அவர் தற்போது அலங்கரிக்கப் போகிறார்.

பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகப் பலம் வாய்ந்த நாடாக பிரேசில் உருவாகி வரும் நிலையில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் தில்மா பெறுகிறார்.

அதிபர் பதவிக்கு நடந்த தேர்தல் முடிவுகளை பிரேசில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தில்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அதிபர் பொறுப்பை வகிப்பார்.

மொத்தம் பதிவான 95 சதவீத வாக்குகளில் 55.6 சதவீத வாக்குகளை தில்மா பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஸ் செர்ராவுக்கு 44.4 சதவீத வாக்குகள் கிடைத்தன.

தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வாவால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தில்மா. இனாசியோவின் கொள்கைகளை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாக தில்மா அறிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்ந்துப் போட்டி நடைபெறவுள்ளது. பிரேசிலின் தேசிய விளையாட்டாக கால்பந்து திகழ்ந்து வருகிறது. அதேபோல உலக அளவில் 5வது பலம் வாய்ந்த பொருளாதார சக்தியாகவும் தற்போது பிரேசில் திகழ்கிறது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் பிரேசில் நடத்தவுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்கொள்ளவுள்ளார் தில்மா.

62 வயதாகும் தில்மா, தேர்தலின்போது வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தின் புதிய கட்டத்தைத் தொடங்குவோம். பிரேசிலியர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக மதித்து நடப்பேன் என்று கூறியிருந்தார்.

2 முறை அதிபர் பதவியை இனாசியோ வகித்து விட்டதால் சட்டப்படி 3 வது முறை அவரால் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்தே தில்மாவை அவர் வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்து வந்தார்.

அதேசமயம், இனாசியோவை விட தில்மாவுக்கே பிரேசில் வாக்காளர்களிடையே அமோக ஆதரவு காணப்படுகிறது. தில்மா ஒரு போராளி. போராட்ட குணம் நிறைந்த மங்கை. இதனால்தான் அவருக்கு வாக்களித்தேன் என்று வாக்காளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கொரில்லா படையில் முன்பு இடம் பெற்றிருந்தவர் தில்மா. கொரில்லா போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். சிறைவாசம் அனுபவித்தவர். சிறையில் பல சித்திரவதைகளையும் சந்தித்தவர். தற்போது அவர் பிரேசில் அதிபராக வலம் வரப் போகிறார்.

ஹெட்லி குறித்த தகவல்களை அமெரிக்காக கொடுத்தது-கூறுகிறார் ப.சிதம்பரம்

P Chidambaramடெல்லி: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்த விவரங்களை அமெரிக்கா முன்கூட்டியே தரவில்லை என்று மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியிருந்த நிலையில், ஹெட்லி குறித்த தகவல்களை அமெரிக்கா தந்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.பிள்ளை, ஹெட்லி குறித்த தகவல்களை முன்கூட்டியே அமெரிக்கா தரவில்லை. தந்திருந்தால் அவன் இந்தியா வந்திருந்தபோதே மடக்கிப் பிடித்திருக்கலாம், மும்பை தாக்குதல் சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இன்று முற்றிலும்நேர் மாறாக பேசியுள்ளார் ப.சிதம்பரம். ஹெட்லி குறித்த தகவல்களை அமெரிக்கா ஏற்கனவே கொடுத்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.பிள்ளை கூறிய தகவல்களை மீடியாக்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கியுள்ளன. உண்மைக்கு மாறாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா அனைத்துத் தகவல்களையும் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே அனைத்துத் தகவல்களையும் நமக்கு அவர்கள் தெரிவித்திருந்தனர். மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே உளவுத் தகவல்கள் தரப்பட்டிருந்தன.

தற்போது ஹெட்லி குறித்த பல விவரங்களை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அவை முடிந்தவுடன் அவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

ஹெட்லி விவகாரத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஹெட்லியின் பெயரை அமெரிக்கா குறிப்பிட்டிருக்காவிட்டாலும் கூட மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர்கள் கொடுத்த பல தகவல்கள் நமக்கு உதவிகரமாகவே இருந்தது.

ஹெட்லியின் பெயரை 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் அமெரிக்கா நம்மிடம் தெரிவித்தது.

ஹெட்லியை நாடு கடத்துவது என்பது ஒரு சாத்தியக் கூறாகவே உள்ளது. ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

தமிழ்நாட்டு இஸ்லாமிய சமுதாய தலைவர்கள்!

தமிழ்நாட்டு இஸ்லாமிய சமுதாய தலைவர்கள்,அவர்களின் பின்னால் வழி நடக்கும் அணைத்து சகோதரர்கள்,பல்வேறு அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மாஜி உறுப்பினர்கள்,சமுதாய  நலன்களில் அக்கறை எடுத்துக்கொண்டு எந்த அமைப்பிலும் சேராமல் சமுதாய பணிகளை செவ்வன செய்துகொண்டு இருக்கும் அணைத்து நண்பர்கள்,வெளி நாடு வாழ் தமிழ் முஸ்லிம்  அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அழைக்கும்..
நாம்  கடந்த காலங்களை புரட்டி பார்க்கும் ஒரு சூழ்நிலையிலும் நிகழ் காலம் எப்படி இருக்கின்றது என்ற சூலிலும் நாம் இருந்துக்கொண்டு இருக்கிறோம். கடந்த கால காயிதே மில்லதும், பழனிபாபா போன்றவர்கள் நம்முடைய இஸ்லாம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பாதுகாப்பான ஒரு தலைவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் பலவகையில் கேள்வி படும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது.அப்படி இருந்த ஒரு சமுதாயமா இன்றைக்கு இந்த அளவிற்கு இருக்கின்றது என்பதனை நினைத்தால் வெட்கப்பட வேண்டிய சூழலுக்கு நம்மை கொண்டு சென்று விட்டது..கடந்த 1990 களில் தமிழகத்தின் நிலை என்ன? அதன் பின் 1992  நாம் எப்படி பட்ட ஒரு மோசமான நிகழ்வுகளை சந்தித்தோம் என்பதனையும் நாம் மறந்து  விட கூடாது..அதன் பின் நாம் அடி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நமக்கு வெற்றிபடிகலாகவே திகழ்ந்தது ..நம்முடைய சமுதாயத்திற்கு கேட்க இனி முஸ்லிம் லீக்கினால் எந்த ஒரு பலனும் கிடைக்காது என்ற சூழல் வந்த நேரத்தில் தான்..அல்லாஹ்வின் கருணையால் பல நற்காரியங்களை செய்துகொண்டு பிற கட்சியில் பொருளாளராக இருந்த குணங்குடி ஹனீபா பதிவு செய்து இருந்த த மு மு க வை புத்துயிர் ஊட்டும் விதமாக 1995 திருவாரூர் மாவட்டம் என நினைக்கிறேன் அங்கே நடந்த சந்திப்பு தான் முதல் சந்திப்பு அந்த சந்திப்பிலே பிஜே, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி,பாக்கர்,அலாவுதீன்,அப்துல் ஜலீல் ,போன்றவர்கள் ஒன்று கூடி நம்முடைய சமுதாயத்திற்கு ஒரு வழி காட்ட கூடிய இயக்கமாக நாம் த மு மு க வை வழிநடத்தவேண்டும் என்பதோடு பிறகு சென்னையிலே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வீதிக்கு வந்து போராட கூடிய ஒரே இயக்கம் த மு மு க என்ற நிலைமையில் அவர்களின் பின்னால் பல ஊர்களில் அண்ணன்,தம்பி,தாய்,தந்தை,ஜமாஅத் நிர்வாகி ஆகியோரின் எதிர்ப்பையும் கடந்து எப்படியும் இந்த இயக்கத்தை வெற்றி அடைய நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் பரவலாக பல வூர்களில் இருந்து செயல்பட்டு ,ஆட்சியாளர்கள்,அடக்கு முறைகள் என்று பல துன்பங்களிலும் போராடி வெற்றி கண்ட இயக்கமாக வளர்ந்தோம்,வளர்த்தோம்  ஆட்சியாளர்கள் வியக்கும் அளவிற்கு அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால்  இருந்த த மு மு க வை ஒரு சில ஆட்சியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஒரு சிலர்களின் சுயநலத்திற்காக கூறு போட நினைத்து திருச்சியிலே நடந்த மாநில செயற்குழு நம்மை இரண்டாக்கியது ஆளுக்கொரு இயக்கம் கண்டோம் .ஒவ்வொரு ஊரிலும் இருந்த சிலர்களில் பகை உணர்வு கலந்த பிரிவினையை ஏற்படுத்தியது.பின்பு நம்மின் தொப்புள் கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்கள் நம்மை பாத்து கிண்டல் அடிக்கும் நிலைமைக்கு சில நேரங்களில் தள்ளப்பட்டாலும் நம்முடைய தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் நாம் இழக்காமல் இன்று வரை அனைத்து இஸ்லாமிய இயக்கமும் அவரவர் தலைவர்களின் ஆணோசனைகளின் படி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் நாம் இந்த சமுதாயம் செய்யும் அணைத்து நற்காரியங்களிலும் ஒன்றிணைத்து செயல் பாடவும் அணைத்து அமைப்பும் ஒன்றிணைய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு....................... இது எந்த வகையில் சாத்தியம் என்பது அல்லாஹ்வை தவிர வேற யாரும் அறியாத ஒன்று ..ஒரு காலங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது நீங்கள் எந்த மதம் எந்த ஊர் என்று கேட்போம் ஆனால் இன்றைக்கு அது எல்லாம் மாறி இஸ்லாமியர்களாகிய நாம் சந்திக்கும் போது நீங்கள் எந்த அமைப்பில் உள்ளவர் என்று கேட்க்கும் அளவிற்கு இன்று நம் சமுதாயம் திகழ்ந்துக்கொண்டு இருக்கிறது...இதற்க்கெல்லாம் ஏதேனும் மாற்று வழிகள் இருக்கிறதா ? அதனை நாம் அனைவரும் கொஞ்சம் சிந்தனை செய்து பார்தொமையானால் இதற்க்கு நிச்சயம் அல்லா ஒரு நல்ல வழியை காட்டுவான்......இனி வரும் காலங்களை வீணாக்காமல் சிந்தித்து செயல் பட உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்....இன்னொரு இயக்கம் காண்பது மிக எளிது அத்தகைய நிலைக்கு சமுதாய தலைவர்கள் எங்களை தள்ளிவிட வேண்டாம்.  

நேரில் செல்லத் தேவையில்லை: 6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயம்; புதிய தலைவர் ரவிராஜபாண்டியன் பேட்டி

நேரில் செல்லத் தேவையில்லை: 6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயம்; புதிய தலைவர் ரவிராஜபாண்டியன் பேட்டி
தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது. கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது எனமேல் முறையீடு செய்தன. 6,400 தனியார் பள்ளிகள் கமிட்டியிடம் முறையீட்டு மனுக்களை அளித்தன.
 
இதற்கிடையில் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 4 மாதத்தில் 6,400 தனியார் பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகள் சார்பில் சமர்பிக்கப்படும் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் கமிட்டி தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ரவி ராஜபாண்டியனை அரசு நியமித்தது.
 
புதிய தலைவராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகம் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டிடத்தில் உள்ள கமிட்டி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
 
அவருக்கு உயர் கல்வி துறை செயலாளர் கணேசன், அனைவருக்கும் திட்ட இயக்குனர் வெங்கடேசன், பள்ளி கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, இணை இயக்குனர்கள் தர்மராஜேந் திரன், ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
பின்னர் நீதிபதி ரவிராஜபாண்டியன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
 
கேள்வி:- 6,400 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் எப்போதும் நிர்ணயிக்கப்படும்.
 
பதில்:- ஐகோர்ட்டு உத்தரவின்படி 6,400 பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
 
கேள்வி:- ஐகோர்ட்டு உத்தரவிட்டு ஒருமாதம் ஆகிவிட்டது. 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படுமா?
 
பதில்:- ஐகோர்ட்டு உத்தரவு கடைபிடிக்கப்படும். அதை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ளபடி அந்த காலக்கட்டத்திற்குள் நிர்ணயம் செய்து அறிவிப்போம்.
 
கேள்வி:- தனியார் பள்ளிகளுக்கு நேரில் செல்வீர்களா?
 
பதில்:- நேரில் செல்லத்தேவையில்லை. நேரில் போக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்படவும் இல்லை. பள்ளிகள் வழங்கும் ஆவணங்களை வைத்து கட்டணம் முடிவு செய்யப்படும்.
 
கேள்வி:- தகவல் தராத 534 பள்ளிகள் பற்றி?
 
பதில்:- இணையதளத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இதனால் அதை பற்றி இப்போது பதில் சொல்ல முடியாது.
 
கே:- கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
 
பதில்:- அது என்னுடைய பணியல்ல. கல்வித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
 
கேள்வி:- பள்ளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
 
பதில்:- பள்ளிகள் நல்ல முறையில் கல்வியை போதிக்க வேண்டும்.
 
இவ்வாறு நீதிபதி ரவிராஜ பாண்டியன் கூறினார்.

சிறுவனை கட்டிப்போட்டனர் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி படுகொலை; வேன் டிரைவர்கள் வெறிச்செயல் அம்பலம்

சிறுவனை கட்டிப்போட்டனர்
 
 கற்பழிப்பு முயற்சியில்
 
 சிறுமி படுகொலை;
 
 வேன் டிரைவர்கள் வெறிச்செயல் அம்பலம்
கோவை துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் ஜெயின். இவரது மகள் முஸ்தின் (11), மகன் ரித்திக் (8) ஆகியோர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 29-ந்தேதி குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், கோவை போலீஸ் கமிஷனர் எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டான். ஆரம்பத்தில் பணத்துக்காக கடத்தியதாகவும், போலீசுக்கு பயந்து அக்காள்-தம்பியை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் கூறினான்.
 
பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.
 
மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் “அண்ணா” என்றே அழைத்து இருக்கிறார்கள்.
 
குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான்.
 
எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.
 
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான்.
 
சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.
 
அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.
 
நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
 
அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
 
இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்-தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
 
எனவே டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோர் இதற்கு முன்பு எங்கு வேலை பார்த்தார்கள்? ஏற்கனவே இது போன்று சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இது நில மோசடிக்காலம்!

எல்லாப் பெருநகரங்களிலும் நிலமோசடி மிகச் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பல பேரைக் கொன்று நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன அல்லது குறைந்த விலைக்குக் கைமாறியுள்ளன. மும்பையிலும் இது நடக்கிறது என்றாலும், கார்கில் போரில் உயிர் நீத்தவர்களை முன்னிலைப்படுத்தி, அரசியல்வாதிகள் நடத்தியுள்ள நாடகம்தான் இப்போது மும்பை அரசுக்குத் தலைவலியாகியுள்ளது.

 மும்பையில் கொலாபா என்ற இடத்தில் எல்லா விதிமுறைகளையும் மீறி "ஆதர்ஷ் ஹவுசிங் சங்க'த்துக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இத்தனை விதிமுறைகளும் மீறப்பட்டதற்கு ஒரே காரணம், கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக இங்கே வீடு கட்டப்படுகிறது என்பதுதான். இத்தனை விதிமுறை மீறல்களும் செய்துவிட்ட பின்னர், இங்கே ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. இங்கே கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான, சகல வசதிகளுடனும் கூடிய 103 குடியிருப்புகளில் 3 பேர் மட்டுமே நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள். மற்ற வீடுகள் முதலமைச்சர் சவாண், அமைச்சர்கள், அரசுச் செயலர்கள் போன்ற எல்லோர் பெயரிலும் இருக்கின்றன.

 இந்த ஊழல் அம்பலப்பட்ட பிறகு, இதில் இரண்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்த மனை ஒதுக்கீடுகளை "ஆதர்ஷ் ஹவுசிங் சங்க'த்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந்த ஊழலும்கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளின்போது வெளிப்பட்டதுதான்.

 இந்த உயர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும் இடம் கடலோர ஒழுங்காற்று மண்டலத்தின் வரையறைக்குள் வருவதால், இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதற்காகத்தான் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்டது. இந்த இடம் கார்கில் போரில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்காகக் கட்டப்படுகிறது என்றும், இதில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்துக்கான நலத்திட்டம் என்பதால் இதில் அரசு விதிமுறைகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால், இப்படியான வசதிமிக்க குடியிருப்புகள் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்குச் சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுந்தபோதுதான், இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்தது.

 கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்துக்காக கார்கில் நிதி திரட்டுகிறோம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளை இதுவரை யாராலும் வெளிப்படுத்த முடியாததாகவே இருந்துவருகிறது. இப்போது வெட்கமே இல்லாமல், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் பெயரைச் சொல்லி, சுயநலத்துக்குக் கடை விரித்திருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், உடன்போன அதிகாரிகளும்.

 கார்கில் வீரர்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றியது ஒருபுறம் இருக்க, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறார் மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை அமைச்சர் நாராயண ராணே. ஸ்ரீஷேத்ர மகாபலீஸ்வர தேவஸ்தான அறக்கட்டளைக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலம், ராணே மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலத்தை பஞ்சால் என்பவரின் பெயருக்கு மாற்றி, பிறகு அமைச்சரின் மனைவி பெயருக்கு மாற்றியிருக்கிறார்கள். அதாவது அமைச்சரின் மனைவி அப்பாவி. அவருக்கு இது கோயில் நிலம் என்பதே தெரியாது என்று உலகத்துக்கும் நீதிமன்றத்துக்கும் சொல்லிக் கொள்ள முடியும்.

 அதைவிட மோசமானது என்னவென்றால், 2008-ல் வருவாய்த் துறை ஆவணங்களிலேயே இந்தக் கோயில் நிலம் இல்லாதபடி அழித்தொழித்துவிட்டதுதான். கோயில் அறக்கட்டளையினர் நீதிமன்றத்தின் படிகளில் ஏறித்தான் ஆவணங்களைக் காட்டினார்கள். ஆனால் அரசு ஆவணங்களில் இது அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலத்தை பஞ்சால் 15 ஆண்டுகளுக்கு முன்பு 1.4 லட்சத்துக்கு வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இன்னொரு கொடுமையும் புனே அருகே நடந்துகொண்டிருக்கிறது. புனே நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் "லாவசா' கட்டுமான நிறுவனம் சகல வசதிகளுடனும் 2,000 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் மலைமீது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்று அனுமதிக் கடிதம் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், 1,052 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரியம், எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், "லாவசா' கட்டுமான நிறுவனத்தின் பூர்வாசிரமத்தில் 22 விழுக்காடு பங்கு வைத்திருந்தவர்கள் யார் தெரியுமா? மத்திய அமைச்சர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சூலே!

 இந்த நகரியத்துக்குத் தேவையான தண்ணீர் புனே நகரிலிருந்து திசை திருப்பப்படுகிறது. அதாவது புனே நகரின் மொத்தத் தேவையில் 10 விழுக்காட்டை இந்த நகரியமே எடுத்துக்கொள்ளும். இதுதவிர, மின்சாரத்தையும் விழுங்குவார்கள். மனை மற்றும் வீடுகட்டும் தொழில் என்பது இப்போது பொறியாளர்கள், வியாபாரிகள் கையிலிருந்து நழுவிப்போய் பலகாலம் ஆகிவிட்டது. இப்போது இந்த வியாபாரிகளைப் பினாமிகளாக முன்னிறுத்தி அரசியல்வாதிகள் இந்தியப் பெருநகரங்களில் சட்டப்படியான கொள்ளையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது தமிழகத்தில் சென்னையிலும் நடைபெறுகிறது. ஆனால், இதை வெளிப்படுத்திப் போராட்டம் நடத்த தைரியமான, அரசியல்சாய்வு இல்லாத, மக்கள் நலவிரும்பிகள் தேவை. தமிழ்நாட்டில் அப்படிப்பட்டவர்கள் இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை..

ராசா அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர்: ஜெயலலிதா

சென்னை, நவ.1:  பொதுவாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் கடைப்பிடிக்கத் தவறிய மத்திய அமைச்சர் ராசா, பொறுப்பு வாய்ந்த, அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ராசா இன்னமும் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் எப்படி தொடர்கிறார் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஒரு கருத்தினை தெரிவித்த பிறகும், ராசா தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இதன் மூலம், ஒழுக்க முறைகளை, நன்னடத்தைகளை முற்றிலும் கடைபிடிக்காதவர் ராசா என்பது தெளிவாகிறது. பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் கடைபிடிக்கத் தவறிய ராசா, பொறுப்பு வாய்ந்த, அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியை வகிக்க தகுதியற்றவர்.   

2008-ஆம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு 'சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டது' என்று கருத்து தெரிவித்த போதே தன்னுடைய பதவியை ராசா ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.  ஆனால், அந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிடுவதற்கு முன்பே வழக்கு தொடுத்தவரை நிர்பந்தப்படுத்தி வழக்கை திரும்பப் பெறச் செய்துவிட்டார் ராசா.


2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியான 1.10.2007 என்பதை 25.9.2007 என்று முன்தேதியிட்டு மாற்றி அமைத்ததை எதிர்த்து எஸ் டெல் நிறுவனம் தொடுத்த வழக்கில், விளையாட்டு தொடங்கிய பிறகு விதிகளை மாற்றுவதைப் போல் உள்ளது என்று தெரிவித்து,  இந்த மாற்றம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொலைதொடர்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ.பி. ஷா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று தெரிவித்ததோடு, பிரதமரை தவறுதலாக மேற்கோள் காட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் ஆணையை 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உறுதி செய்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.   ஆனால், அதைச் செய்யாமல், டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தொலைதொடர்புத் துறை மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைத்தார் ராசா.  இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தை மிரட்டி, வழக்கை திரும்பப் பெறவும் செய்து இருக்கிறார் ராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை செய்த பின்னர், அதில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று தன்னுடைய முதனிலை விசாரணை அறிக்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய கண்காணிப்பு ஆணையர்  பதிவு செய்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.  

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளில் ராசாவின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் இருப்பதையும், இதன் விளைவாக சட்ட விரோதமான செயல்களின் மூலம் ஒன்பது நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று இருப்பதையும் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர்  சுட்டிக்காட்டிய போதாவது தனது பதவியை ராசா ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

ஆனால், ராசா ராஜினாமா செய்யவில்லை.

தற்போது இந்தப் பிரச்சினை கடைசியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது.  


இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா உடந்தையாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், மத்திய கண்காணிப்பு ஆணையர் முதல் உச்ச நீதிமன்றம் வரை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்ட ஒவ்வொரு அமைப்பும் குற்றஞ்சாட்டியும், ராசாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து திரும்பப் பெற கருணாநிதிக்கு மனம் வரவில்லை.


இந்திய நாடு, தமிழ் நாடு, தமிழக மக்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்புகள் ஆகியவை பற்றி எல்லாம் கருணாநிதிக்கு துளியும் கவலையில்லை! இவற்றையெல்லாம் கருணாநிதி ஒரு பொருட்டாகவே கருதவில்லை!

இது இந்திய தேசத்திற்கு மிகப் பெரிய அவமானமே தவிர வேறு ஒன்றுமில்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற கருத்து இறுதித் தீர்ப்பு அல்ல: ஆ. ராசா

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

 ÷நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தல் பங்கேற்ற அமைச்சர் ராசா, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அலைகற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இவ்வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு ஆ.ராசா முதலில் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

 ÷இருப்பினும் செய்தியாளர் ஒருவர் அவரைத் தொடர்ந்து இதே கேள்வியை எழுப்பினார். அப்போது அவர் கூறியது:

 ÷உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல. இதுதொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. அவர்களிடம் பேசிய பின்னரே கருத்து கூற முடியும். இப் பிரச்னையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.

 ÷மத்திய அமைச்சரவையில் மாற்றம் குறித்த கேள்விக்கு, தனக்கு உடல்நிலை சரியில்லையெனவும், இதுதொடர்பாக மற்றொரு தருணத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டுத் சென்றார்

அயோத்தி கோவில்: சிவசேனா கோரிக்கை

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலிலிருந்து 14 கி.மீ., சுற்றளவுக்குள் மசூதி ஏதும் அமையக்கூடாது என, சிவசேனா கோரியுள்ளது. உத்தரபிரதேச மாநில சிவசேனா தலைவர் உதய் பாண்டே கூறுகையில், "அயோத்தியில் பிரச்னைக்குரிய பகுதியில் மத்திய அரசு ராமர் கோவிலை கட்ட வேண்டும். தற்போது ராமர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு தரிசிக்க வரும் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் பணத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் கணக்கு காட்ட வேண்டும்' என்றார்.

ஒபாமா வருகை தரும் பலன்: எம்.பி.,க்கள் எதிர்பார்ப்பு!

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர இடம் பெற, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தருவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய எம்.பி.,க்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒபாமாவின் உரையில் இது தொடர்பான அறிவிப்பு இடம் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 6ம் தேதி இந்தியா வருகிறார். 8ம் தேதி டில்லியில் பார்லி., கூட்டுக் கூட்டத்தில், எம்.பி.,க்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார். அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற ஒபாமா ஆதரவு தெரிவிப்பார் என, எம்.பி.,க்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால், அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என்றும் கூறுகின்றனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில், "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என, அதிபர் ஒபாமா உறுதி அளித்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் ஒபாமா கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இந்தக் கருத்தை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரும், காங்., தலைவர் ஷகீல் அகமதுவும் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஷகீல் அகமது இதுபற்றி கூறுகையில், "இந்தியா - அமெரிக்கா இடையேயான பரஸ்பர புரிந்துணர்வும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்ற உறுதிப்பாடும், ஒபாமாவின் இந்திய விஜயம் மற்றும் பார்லிமென்டில் அவர் ஆற்றும் உரை மூலம் மேலும் வலுப்படும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறவும் ஒபாமா ஆதரவு தெரிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்' என்றார்.

சமாஜ்வாடி பொதுச் செயலர் மோகன் சிங் கூறுகையில், "பாகிஸ்தான் மற்றும் சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒபாமா கவனத்தில் கொண்டு, கவலை தெரிவிக்க வேண்டும். மேலும், அமெரிக்காவில் விதிக்கப்படும் கடுமையான வரி விதிப்பால், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தொழில் பிரச்னையைச் சந்திக்கிறது. இவற்றை தீர்ப்பதற்கான அறிவிப்பையும் ஒபாமா வெளியிட வேண்டும்' என்றார்.

பரஸ்பர நட்புணர்வு வளர ஒபாமா பயணம் உதவிடும் என்று பா.ஜ.,வின் ஜாவேட்கர் தெரிவித்தார். இதேபோல வேறு பல எம்.பி.,க்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் நாப்கின் அணிந்து பால் பாட்டிலில் இருந்து மது குடிக்க வைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு மாணவிகள் !

லண்டன் : லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவிகள் பலர் பல்கலைகழகத்தின் உள்ளே குழந்தைகளின் நாப்கின் அணிந்து கொண்டு ஒன்றுமில்லாததிலிருந்து குடிப்படதை போல் பாவித்து குழந்தைகளின் பால் பாட்டிலில் இருந்து மது குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவிக்கிறது.



பொதுவாக முதல் ஆண்டு மாணவிகளை ராகிங் செய்வதற்காக சில நிகழ்ச்சிகளை நடத்துவதை போல் குழந்தைகளும் இளம் வயது தாய்மார்களும் எனும் கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சியை தயார் செய்த மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவிகளின் மேல் குழந்தைகளின் நாப்கினை கட்டி தரையில் உருள செய்தனர். பெற்றோராக நடித்த மூத்த மாணவிகள் நகைகளை அணிந்து கொண்டு பிள்ளைகளை திட்டுவது போல் முதலாம் ஆண்டு மாணவிகளை திட்டினர்.

மேலும் புதிய மாணவிகளை தங்கள் மடியில் உட்கார வைத்து குழந்தைக்கு கொடுக்கும் புட்டி பால் பாட்டிலில் மதுவை குடிக்க வைத்தது கேவலமான ரசனையாக இருந்ததாக பார்த்தவர்கள் கூறினர். மேலும் உணவை தட்டில் கொட்டி கைகளை கட்டி புதிய மாணவிகளை வாயால் எடுத்து சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது குறித்து பல்கலைகழக நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்" - சவூதி இளவரசர் வலீத் !

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக்  கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.

ஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கருத்து தெரிவித்துள்ளார். இச்செய்தியை அரேபியன் பிசினஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

"நியூயார்க் மசூதி கட்டுமானத் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்." என்று  இளவரசர் வலீத் பின் தலால் அல் சவூத் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

சாலையில் பறந்த 1,000 ரூபாய் நோட்டுகள்!

போக்குவரத்து நிறைந்த சென்னையின் சாலை ஒன்றில் திடீரென பறந்த 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு எடுக்க குவிந்ததால்  அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த ஆவடி காமராஜர் சிலை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் முக்கியமான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் ஞாயிற்றுக் கிழமை மதியம் 1 மணியளவில் வாகனங்கள் `சர்', `சர்' என்று பறந்து கொண்டிருந்தன.

அப்போது, திடீரென ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து 1,000 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்து சாலையில் விழுந்தன. இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சாலையின் இருபக்கம் நின்று கொண்டிருந்தவர்களும் ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுக்க ஆரம்பித்தனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும் சாலையின் ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஓடி வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

மக்கள் போட்டி, போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க குவிந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. அப்போது அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஏட்டு கல்யாணி, திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்ததை பார்த்து, ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ என்று அங்கு விரைந்து வந்தார்.

ஆனால், பொதுமக்கள் போட்டி, போட்டுக் கொண்டு நடுரோட்டில் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தார். அவர், ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.33 ஆயிரம் ஆகும். அவர், அந்த பணத்தை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகருப்பனிடம் ஒப்படைத்தார். பெரியகருப்பன் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ரூ.33 ஆயிரத்தையும் சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

நடுரோட்டில் பறந்த இந்த பணம் யாருடையது? வாகனத்தில் சென்ற யாரேனும் இந்த பணத்தை தவற விட்டனரா? அல்லது கொள்ளையடித்தவர்கள் பணத்தை பங்கு போட்டபோது தகராறு ஏற்பட்டு, அவர்கள் கையில் இருந்து வெளியே வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்வதற்கு முன் சிறுமி முஷ்கினை கற்பழித்த கயவர்கள்!

Coimbatore twin murderகோவையிலிருந்து கடத்தி வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட சிறுமி முஷ்கினை, கொலை செய்வதற்கு முன்பு கயவர்கள் இருவரும் கற்பழித்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியையும், அவளது தம்பியையும் கொலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியின் மகள் முஷ்கின். 11 வயது சிறுமி. அவளது தம்பி ரித்திக் ஜெயின், வயது 8. இருவரையும் மோகன் என்கிற மோகனகிருஷ்ணன் என்கிற கால் டாக்சி டிரைவர் தனது கால் டாக்சியில் கடத்திச் சென்று பி.ஏ.பி கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்த செயல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

சிறுமியின் உடல் நேற்று முன்தினம் பல்லடம் அருகிலும், சிறுவன் ரித்திக்கின் உடல் நேற்று பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோடு அருகே கால்வாயில் வைத்தும் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மோகனகிருஷ்ணனுக்கு உடந்தையாக இருந்த மனோகரன் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு கயவர்களும், முஷ்கினையும், ரித்திக்கையும் கொலை செய்வதற்கு முன்பு, முஷ்கினை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறுகையில்,

கடந்த 29-ந் தேதி காலை 8 மணியளவில் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் குமார் ஜெயின் மகன் ரித்திக் (7) மற்றும் மகள் முஷ்கின் (11) ஆகியோரை கால் டாக்சி டிரைவர் மோகன் கடத்தி சென்றார்.

அவர் கோவையை அடுத்த உக்கடத்தை தாண்டியதும் திருமூர்த்தி மலையை சுற்றி காண்பிக்கிறேன் என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றார். இரு குழந்தைகளுக்கும் டிரைவர் மோகன் ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் அவர்கள் 2 பேரும் ஒன்றும் சொல்லாமல் டாக்சியிலேயே அமைதியாக இருந்து விட்டனர். டாக்சியின் டேப்ரிக்கார்டரில் பாட்டு போட்டதும் குழந்தைகள் இரண்டு பேரும் சிறிது நேரத்தில தூங்கி விட்டனர்.

மோகன் நேராக பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியில் உள்ள தனது நண்பர் மனோகரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மனோகரன் இல்லை.

வீட்டில் இருந்த மனோகரனின் தாயார் டாக்சியில் பள்ளி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளீர்களே. என்ன விஷயம்? என்று கேட்டுள்ளார். அதற்கு மோகன் சுற்றுலாவுக்காக அழைத்து வந்துள்ளேன் என்று கூறி விட்டு டாக்சியை எடுத்துக் கொண்டு கோவில்பாளையம் என்ற மலைப்பகுதிக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் மனோகரன் வீட்டுக்கு மோகன் சென்றார். அப்போது மனோகரன் வீட்டில் இருந்தார். உடனே அவரிடம் விஷயத்தை கூறியதும் மனோகரன் டாக்சியில் ஏறிக் கொண்டார்.

பின்னர் அவர்கள் இரண்டு பேரும் குழந்தைகளை கடத்திக் கொண்டு தளிக்கு சென்றனர். அங்கிருந்து குழந்தைகளின் பெற்றோருக்கு டெலிபோன் செய்து ரூ. 20 லட்சம் கேட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

அப்போது அவர்கள் இரண்டு பேரும் திடீரென மனம் மாறி சிறுமி முஷ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு உடன்படாததால் முஷ்கினை தாக்கியுள்ளனர். உடன் இருந்த சிறுவன் ரித்திக்கையும் அவர்கள் தாக்கினர். அதன் பின்னர் 2 பேரையும் பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர்.

இரண்டு பேரையும் கொன்ற பின்னர் மனோகரனை காட்டுப்பகுதியிலிருந்து அங்கலக்குறிச்சியில் கொண்டு போய் விட்டு விட்டு மோகன் மீண்டும் தோட்டத்தில் திரும்பி வந்து பதுங்கியிருந்தார். அங்கு முதலில் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மனோகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 363 (கடத்தல்), 364 ஏ (பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல்), 302 (கொலை), 201 (தடயங்களை மறைத்தல்), 376 (பாலியல் பலாத்காரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சைலேந்திரபாபு.

மீட்கப்பட்ட இரு குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர் ஜெயின் மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு இருவரது உடல்களும் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஜெயின் சமூக மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரும் கொடூர கொலைகாரர்களை விசாரணையே இல்லாமல் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டபடி வந்தனர்.

ஜெயின் சமூகத்தவர்கள், தமிழ்நாடு  முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர், பல்வேறு அமைப்பினர், பள்ளி மாணவ, மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்...

தேர்தலுக்காக ஜெ. பேசி வருவதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்-கருணாநிதி!

சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி வருவதையும், எழுதி வருவதையும் மக்கள் ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த இரண்டு நாட்களாக ஜெயலலிதா, காவிரி பிரச்சினை பற்றி, தனது நிழல் எழுத்தாளர் எழுதிக்கொடுத்த அறிக்கைகளின் மூலம்; நீட்டி முழக்கியிருக்கிறார். இதே ஜெயலலிதாதான், 7.11.2003 அன்று தமிழக சட்டப் பேரவையில் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசும்போது: ``காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அது மாநில அரசின் குற்றம் அல்ல; பிரதமரின் குற்றம், மத்திய அரசின் குற்றம் என்று பகிரங்கமாகச் சொல்கிறேன்'' என்று பேசினார்.

2002-ம் ஆண்டில் காவிரி ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என்றும்; பல் இல்லாத ஆணையம் என்றும் முதல்வர் என்கிற தன் நிலை மறந்து வர்ணித்தவர் ஜெயலலிதா.

2002-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காவிரி ஆணையம் தன் கடமையைச் செய்யவில்லை என்றும், அது கர்நாடகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றும், எனவே அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் பிரதமரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை என்றும், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான் இன்றைக்கு ஏதோ காவிரி நதிநீர் ஆணையத்தின்மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பாசாங்கு செய்துகொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

காவிரி ஆணையம் பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சபர்வால், அர்ஜித் பசாயத் ஆகியோர்; ``பிரதமருக்கு 2002 நவம்பர் 5-ந் தேதியிட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை படித்து வேதனைப்பட்டோம். ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். காவிரி ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா கூறியுள்ள கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது. அப்படி பேசியிருப்பது முறையற்றதுமாகும்.

காவிரி ஆணையத் தலைவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லியிருப்பது சரியல்ல. இன்னும் நான்கு நாட்களுக்குள் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, காவிரி ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். ஆணையத்தைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் ஜெயலலிதா சொன்ன கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கண்டனம் தெரிவித்தவுடன், அப்படியே பல்டி அடித்து, காவிரி ஆணையத்தின்மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதாதான்; இன்றைக்கு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்குமேயானால், கர்நாடகத்தில் உள்ள அணைகளின் மதகுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை காவிரி மேலாண்மைக் குழுவுக்கோ அல்லது காவிரி நதிநீர் ஆணையத்துக்கோ வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்றும் பொறுப்பினை காவிரி நதிநீர் ஆணையத்திடம் ஒப்படைக்கலாம் என்று; இதுவரை அவர் மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக - கடந்த காலத்தில் அவர் சொன்னவற்றையெல்லாம் பொதுமக்கள், குறிப்பாக காவிரி தீரத்து விவசாயப் பெருங்குடி மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தீய நம்பிக்கையில்; அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு எந்தப் பிரச்சினை பற்றி எழுதவும், பேசவும் உரிமை உண்டு. ஜனநாயகம் அனுமதி அளித்திருக்கும் உரிமையாகும் அது. ஆனால், அந்த உரிமையை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்துவதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. பொதுவாக அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட நாம் அதை பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் முதல்வர், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வந்ததற்குப் பிறகு; இந்தப் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியிருப்பதால்தான்; முழுக்க முழுக்க உண்மைக்கு எதிராக இருக்கிறதே என்று உள்ளம் பதை பதைக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று முதல் முதலாக 17.1.1970-ல் மத்திய அரசு க்கு கடிதம் எழுதியது நான்தான்.

8.7.1971 அன்று நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு  சட்டப் பேரவையில் முதல்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்ததும் நான்தான்.

1989-ல் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, இந்தியப் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம்  கேட்டபோது, வி.பி.சிங் தொலைபேசியிலே 1990-ம் ஆண்டு என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தியவன்தான் நான். எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவர் மன்றம் அமைய முழுமுதல் காரணமாக இருந்தது நான் என்பதை காவிரிப் பிரச்சினை பற்றிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

நடுவர் மன்றத்தின் மூலம் இடைக்கால தீர்ப்பு வழங்கவேண்டும் என்று 28.7.1990 அன்று கழக ஆட்சியிலேதான் கேட்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் தெரிவித்தபோது; கழக ஆட்சியில் 10.1.1991 அன்று உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அதன் விளைவாக, அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பு கிடைத்தது.

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது, 9.6.1992 அன்று மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர்; நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டி கடிதம் எழுதினார். டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிராதாரமாக விளங்கும் இந்த முக்கியமான பிரச்சினையில்; மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்திற்கு 9 மாதங்கள் கழித்து பதில் எழுதிய ஜெயலலிதா தான்; இன்றைக்கு காவிரிப் பிரச்சினை பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

1991-ம் ஆண்டு கிடைத்த நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினை; அதற்கு பிறகு 5 ஆண்டுகள் ஆட்சியிலே இருந்தபோது ஓராண்டு கூட அதனை நிறைவேற்றிக் கொடுக்க மனமும், முயற்சியும் இல்லாதவராக - இயலாதவராக இருந்த ஜெயலலிதாதான்; இன்றைக்கு தமிழக அரசுக்கு ஏராளமான அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார்.

நான்காவது முறையாக நான் முதல்வராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான், 1998-ம் ஆண்டில் 9 மணி நேரம் இடைவிடாமல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தமிழகம்-கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி; அதன் விளைவாக காவிரி நதிநீர் ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. அதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் அனுமதியையும் பெற்றவன் நான். அப்போது, மத்திய அரசுக்கு தோழமைக் கட்சியாக இருந்தது அ.தி.மு.க. எனினும், பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோரது கூட்டு முயற்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து ஏடுகளும் வரவேற்றன.

ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில் அவர்களாகவே அணையைத் திறந்தால்தான் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரும்! என்று 21.3.1991-ல் திருவாய் மலர்ந்தருளிய ஜெயலலிதாதான்; இன்றைக்கு நடுவர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசை குறை கூறியிருக்கிறார்.

2001 முதல் 2006 மே மாதம் வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, எத்தனை ஆண்டுகள் காவிரியில் ஜுன் மாதம் 12-ந் தேதியே மேட்டூர் அணையை விவசாயத்திற்காக திறந்திருக்கிறார்?

2002-ம் ஆண்டில் 6.9.2002 அன்றும்; 2003-ம் ஆண்டில் 7.10.2003 அன்றும்; 2004-ம் ஆண்டில், 12.8.2004 அன்றும்; 2005-ம் ஆண்டில் 4.8.2005 அன்றும் தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவரது ஆட்சியின்போதுதான் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவையை மறந்திட வேண்டிய கொடுமை நிகழ்ந்தது. அப்போதெல்லாம் கர்நாடக அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகை வாங்கி தமிழக விவசாயிகளுக்கு ஜெயலலிதா வழங்கினாரா? அப்படி வழங்கியிருந்தால் இப்போது தமிழக அரசுக்கு அறிவுரை சொல்ல அவர் அருகதை உள்ளவர் ஆவார்.

தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை அண்டை மாநிலங்களில் இருந்து கோரிப் பெற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. இந்த பொறுப்பை நிறை வேற்றிட, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா அரசுகளுடன் சுமுக உறவை வளர்த்துக் கொண்டு, நமக்கு தேவையான தண்ணீரைப் பெற வேண்டிய ஒரு அணுகு முறையைத்தான் கழக அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஜெயலலிதாவைப் போல எந்தப் பிரச்சினையிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியிலும்; ஏனோதானோ என்ற முறையிலும் கழக அரசு நடந்துகொள்ள எப்போதும் நினைத்ததில்லை.

சுமுகமான அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் கழக அரசு, இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாத நிலை ஏற்பட்டபோது, கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பின்வருமாறு கடிதங்கள் அனுப்பியதோடு மட்டும் நின்று விடாமல், கர்நாடக முதல்வருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன .

தலைமைச் செயலாளரிடமிருந்து கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 3.7.2010 அன்றும்; என்னிடமிருந்து கர்நாடக முதல்வருக்கு 18.7.2010 அன்றும்; பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளரிடமிருந்து கர்நாடக அரசு நீர் ஆதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு 24.9.2010 அன்றும் கடிதங்கள் எழுதப்பட்டன. மீண்டும் கர்நாடக முதல்வருடன், நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஆணையிடுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு நேர்முகக் கடிதம் ஒன்றையும் 2.10.2010 அன்று அனுப்பினேன். அதன் பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு, இடர்ப்பாடு காலத்தில் தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைப்படி தண்ணீரை விடுவிக்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளருக்கு 4.10.2010 அன்று அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் சூழ் நிலையைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் கர்நாடக முதல்வருக்கு சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை விடுவிக்க கடிதம் ஒன்றை, 25.10.2010 அன்று எழுதி, அக்கடிதத்துடன் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் 26.10.2010 அன்று கர்நாடக முதல்வரை நேரடியாக சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்த முயற்சிகளுக்கிடையே, மத்திய அரசு தலையிட்டு, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை விடுவிக்க அறிவுறுத்தக் கோரியும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டியும்; தமிழக முதல்வரிடமிருந்து இந்தியப் பிரதமருக்கு 29.8.2010 நாளிட்டு கடிதமும் மற்றும் அதிகாரிகள் நிலையில் 13.8.2010 மற்றும் 24.9.2010 நாளிட்டு கடிதங்களும் அனுப்பப்பட்டன.

காவிரிப் பிரச்சினையில், கழக அரசு காலத்தே ஆற்றிவரும் பங்களிப்புகளின் ஆழத்தையும், அருமையையும்; ஜெயலலிதாவின் எதிர்மறை அணுகுமுறையையும், ஆணவப் போக்கையும் தமிழக விவசாயிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கும்போது; சட்டப்பேரவைத் தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு, உள்நோக்கத்தோடு காலந்தாழ்த்தி இப்போது அவர் வெளியிடும் பொருளற்ற அறிக்கைகளை எல்லாம் மக்கள் கிஞ்சிற்றும் பொருட்படுத்த மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை-நல்லகண்ணு!

 மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்  துக்கு முதிர்ச்சி இல்லை என்று கூறியுள்ளார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு.

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக ஒரு அணி அமையும் என்பது நடக்க முடியாதது, சாத்தியமில்லாதது. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் புதிய அணி அமையும் என்பதற்கு வாய்ப்பில்லை. காரணம், விஜயகாந்த்துக்கு மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லை.

அதேபோல காங்கிரஸ் பக்கம் அதிமுக சாய்வதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. அது வெறும் யூகம்தான். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம்.

இந்த இரு தேசிய கட்சிகளிடமிருந்தும் சம தொலைவை நாங்கள் பராமரிக்கிறோம். பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ், நமது நாட்டின் இறையாண்மையை அமெரிக்கா  சுரண்ட அனுமதிக்கிறது.

கர்நாடகத்திலிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற திமுக அரசு போதிய நடவடிக்கை  எடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினை குறித்து திமுக அரசு மிகவும் குறைந்த அளவிலான ஆர்வத்தையே காட்டுகிறது என்றார் நல்லகண்ணு.