சனி, 4 டிசம்பர், 2010

ஓட்டுக்கு வேண்டுமானால் நன்மையாக இருக்கும்.ஆனால் நாட்டுகு நல்லதல்ல.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது; மனித வளம் பெருகி வருகிறது. ஆனால், வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்பது, அதாவது, விவசாய வேலை, கட்டட வேலை செய்ய, போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கட்டட வேலை செய்ய, கொத்தனார், எடுபிடி வேலைக்கு சித்தாள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. காரணம், அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தால், அந்த அரிசியை வாங்கி தொழிலாளிகள் சாப்பிட்டுவிட்டு, இலவச, "டிவி'யைப் பார்த்துக் கொண்டு சுகமாக இருப்பது, அவர்களைச் சோம்பேறிகளாக்கி விட்டது. ஆகவே, வேலைக்குத் தினமும் வருவதில்லை. இரண்டு நாட்கள் வீட்டில் சும்மா இருந்து விட்டு, மறுநாள் வேலைக்கு வருவர். அன்று கிடைக்கும் கூலியில், டாஸ்மாக்கில் மதுபானம் அருந்தி விட்டு, வீட்டில் இருந்து விடுவர். இந்த மிதப்பால், வேலை தருபவர்களை மதிப்பதே இல்லை! முன்பெல்லாம், வேலை கேட்டு வருபவர்களை, இப்போது அவர்களது வீடுதேடிச் சென்று, வேலைக்கு வாருங்கள் என்று நாங்கள் கெஞ்ச வேண்டியுள்ளது. முதலில், இந்த இலவசங்களை ஒழித்தால் தான் நிலைமை மாறும். இப்படி அவர் கூறுவதில் நியாயம் இருப்பது போல தெரிகிறது. முதல்வர் செய்த நன்மைகளில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றுதான், நடுத்தர மற்றும் பாமர மக்களுக்கு உருப்படியான, உதவிகரமாக உள்ளது. மற்றவையெல்லாம், ஓட்டுகளைப் பெற செய்யப்பட்டவை. இலவசங்களை அள்ளி வீசி, உழைப்பாளிகளைச் சோம்பேறிகளாக்கி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! ஓட்டுக்கு வேண்டுமானால் நன்மையாக இருக்கும்.




--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71




__._,_.___