ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள ஷார்ஜா மாகாணத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள முற்றிலும் லாபமற்ற 0% கடன் உதவியை பிரபல வங்கியான ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற வகை 0% லாபமற்ற கடன் வசதி போல் அல்லாமல் இதில் எந்த வகை மறைவு தொகை மற்றும் சேவைத் தொகை ஆகியவை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
புனித பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்திற்கு தேவையான பணத்தை பெற்று கொண்டு மீண்டும் அதை மாத தவணையாக செலுத்தினால் போதும். ஷார்ஜாஹ் இஸ்லாமிய வங்கியின் அதிகாரி ஜஸ்சம் முஹம்மத் அல் பலுசி தெரிவிக்கும் போது "பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு பின்பு தான் இந்த திட்டத்தை துவங்கியுள்ளோம். இவ்வாறான தேவை தற்போது பெரிதும் தேவை உள்ள நிலையை அறிந்து கொண்ட பின்பே இதை துவங்கியுள்ளோம்" என்றுள்ளார்.
மேலும் அவர் இத்திட்டத்தை விவரிக்கையில் இந்த திட்டம் நடைமுறை படுத்த பல்வேறு 'ஹஜ்' பயண ஏஜென்சி நிறுவனங்களை அனுமதி அளித்துள்ளோம். இந்த திட்டத்தை விளம்பர படுத்துவதற்கான செலவினங்களை அவர்கள் செலுத்துவார்கள் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக