General Authority of Civil Aviation என்று அழைக்கப்படும் குடிமைப் பறணை பொது அதிகாரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் எதிர்வரும் நவம்பர் 7 முதல் சவூதி அரேபிய விமான நிலையங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி புகைப்பவர்களுக்கு 200/- சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கிறது. துணைப் பிரதமரும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்ச்சருமான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஒப்புதலைப் பெற்று இச்செய்தி அறிவிக்கப்படுவதாக பொது அதிகாரகத் தலைமை அதிகாரி அப்துல்லா ரெஹய்மி தெரிவித்துள்ளார்.
"ஆரோக்கியமான சூழலை விமான நிலையங்களில் ஏற்படுத்த உதவுமாறு குடிமக்களையும் வெளிநாட்டவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள 11 விதிகளையும் அதிகாரிகள் சரிவர மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இத்துறையின் இன்னொரு அதிகாரி நிருபர்களிடம் பின்னர் தெரிவிக்கையில் "புகைப்பவர்களுக்கு வசதியாக, தனிப்பட்ட சிறு தடுப்புப்பகுதிகள் (Smoking Zones) அமைக்கப்படும்" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக