ஞாயிறு, 28 நவம்பர், 2010

சவூதியில் அல்காய்தாவுடன் தொடர்பு! 149 பேர் கைது.

ரியாத்: தீவிரவாத அமைப்பான அல்காய்தாவுடன் தொடர்புடைய நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்துக்கொண்டு செயல்படுவது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
பல நாடுகளில் இருந்து சவுதிக்கு வரும் ஹஜ் பயணிகளிடம் தீவிரவாத செயல்களுக்காக மறைமுகமாக பணம் வசூலிக்கும் வேலையில் சில நபர்கள் ஈடுபட்டு வந்த்தாக தெரியவந்தது. மேலும் அவர்கள் சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும்  கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அல்காய்தா அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து  அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சவூதி காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 149 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 124 பேர் சவுதியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். இவர்களிடமிருந்து  2.24 மில்லியன் சவூதி ரியால் கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: