நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தன்னுடைய குஜராத் சுற்றுப் பயணத்தின் போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தான் கல்வி பயின்ற குஜராத் மாநிலம் பரோடாவிற்கு இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக வந்துள்ளார். அவரைச் சந்திப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முயன்றுள்ளார். காந்திநகர் அல்லது பரோடாவில் குறைந்தது 30 நிமிடம் இச்சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு மோடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ராமகிருஷ்ணன் ஏற்காமல் மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் காரணமாக உலகம் முழுவதும் அவப்பெயரைப் பெற்றுள்ள மோடியைச் சந்திக்க விருப்பமில்லை என்று விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக