ஞாயிறு, 6 மார்ச், 2011

சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?-அரசியல் குழப்பம் நீடிக்கிறது

மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகிக் கொண்டதை அடுத்து, தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.   தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகள் விரைவாக முடிவெடுத்து வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் 2 கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைத் தவிர வேறு சில கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாடாக தே.மு.தி.க.க்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு செய்யப்பட்டது. அதுபோல் விடுதலை சிறுத்தைகளுக்கு 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.   மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதிலும், எந்தெந்த தொகுதி ஒதுக்குவது என்பதிலும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் நிலையில், 63 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தியதாக தகவல் வெளியானது. இதனால், தி.மு.க. நிலை பற்றி முடிவு செய்வதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.   இந்த கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகிக் கொள்வது என்றும் பிரச்சினை அடிப்படையில் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளிப்பது என்றும் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. எனவே சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் என்ன நிலை எடுக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து 3-வது அணி அமைத்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசின் நிலை உறுதி செய்யப்படாத நிலையில், தமிழக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை: