சனி, 9 அக்டோபர், 2010
தாரை வார்த்த ஜமாஅத் நிர்வாகம் .....
அஸ்ஸலாமு அழைக்கும்,
தஞ்சை மாவட்டம் வடக்கு மாங்குடி பள்ளிவாசலுக்கு சொந்தமான பெண்கள் மதரசாவை தனியார் பள்ளிக்கு குத்தகை என்ற பெயரால் தாரை வார்த்த ஜமாஅத் நிர்வாகம் .....
வடக்கு மாங்குடி என்ற சிறிய ஊரில் பள்ளிவாசலுக்கு என்று நிறைய சொத்துக்கள் இருக்கிறது.ஆனால் அந்த சொத்துக்கள் எல்லாம் பள்ளி நிர்வாகத்திடம் இல்லை பள்ளி நிர்வாகத்தை சரிவர செய்திடாத சில நிர்வாகிகள் கையாலாகாத தனத்தினால் அந்த சொத்துக்களை சில தனி நபர்களுக்கு குத்தகை என்ற பெயரால் தாரைவார்த்து கொடுத்து இருக்கிறார்கள்.அந்த வழியிலே தான் மேலே குறிப்பிட்ட பெண்கள் மதரசாவும் ஒன்று இதை அந்த தனியார் பள்ளிக்கு குத்தகையின் பெயரால் அடகுவைத்து விட்டார்கள். அந்த மதரசாவை இனாமாக கொடுத்தவர் பள்ளிக்கூடத்திற்கு அடகு வைப்பதற்கு அல்ல.பெண்கள் மதரசா நடத்துவதற்குத்தான்.தனி நபரின் பிடியில் இருந்து அந்த பெண்கள் மதரசாவை மீட்க வடக்கு மாங்குடி சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் முன்வருவார்களா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக