செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஜப்பானில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா புறப்பட்டார்!

ஜப்பானில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் மலேசியா புறப்பட்டார்
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோவில் நேற்று அவர் ஜப்பான் பிரதமர் கான் நவோடாவை சந்தித்து பேசினார். அணுசக்தி ஒத் துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார கூட்டு நடவடிக்கை குறித்து இருவரும் பேசினார்கள்.
 
இந்தியா -ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அணுசக்தி ஒப்பந்தம் செய்துக் கொள்ள ஜப்பானை இந்தியா வலி யுறுத்தாது என்று அவர் பேட்டியில் கூறி இருந்தார்.
இந்தியா-ஜப்பான் நல்லு றவு மேம்பாடு குறித்து இரு தரப்பிலும் பேசப்பட்டது.
 
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் இன்று டோக்கியோவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றார்.
 
மலேசிய பிரதமர் முக மது நஜிப்புடன், மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் பேசுவார்கள். பின்னர் பல்வேறு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திடுவார்கள்.
 
மலேசிய பயணத்தை முடித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் வியட்நாம் செல்கிறார். 30-ந்தேதி பிரதமர் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

கருத்துகள் இல்லை: