ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்டு. சிட்னியில் பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடலுக்கு ஒரு தனியார் டி.வி. ஏற்பாடு செய்து இருந்தது. அதில் இவர் கலந்து கொண்டார்.
ஹோவர்ட் ஆட்சி காலத்தின்போது ஈராக் போர் நடந்தது. அப்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. இது குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு ஹோவர்ட் பதில் அளித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒருவர் ஹோவர்ட் மீது 2 ஷூக்களை வீசினார். அதைப்பார்த்த அவர் விலகிக்கொண்டார். எனவே அவை அவர் மேல் படவில்லை. அதனால் கூட்டத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே ஷூக்கள் வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் ஹோவர்ட்டுக்கு எதிராக கோஷமிட்டார்.
இதை தொடர்ந்து அவரது விவாத மேடை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஷூக்கள் வீசியதால் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் ஆத்திரத்தை ஹோவர்ட் வெளிக்காட்டி கொள்ளவில்லை. புன்னகை சிந்தியபடியே டி.வி. நிலையத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது, அவரை நோக்கி ஒரு பெண் ஆவேசமாக கூச்சலிட்டாள். உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது என்றார். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை. சிரித்த முகத்துடன் அமைதியாக சென்றார். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக