வியாழன், 14 அக்டோபர், 2010

கத்தார் விமான கேப்டன் நடு வானில் மாரடைப்பால் மரணம்-விமானம் தரையிறக்கம்

கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் கேப்டன் நடு வானில் திடீரென மரணமடைந்ததால், விமானம் உடனடியாக மலேசியாவுக்குத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. உயிரிழந்த கேப்டன் இந்தியர் ஆவார். அவருக்கு வயது 43. மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அந்த விமானம் பிலிப்பைன்ஸிலிருந்து கத்தார் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கேப்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து உதவி கேப்டன் கோலாலம்பூர் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தவுடன் விமானம் கோலாலம்பூரில் தரையிறக்கப்பட்டது. பின்னர் புதிய ஊழியர்களை ஏற்றிக் கொண்டு விமானம் கத்தாரைச் சென்றடைந்தது. இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிலாவிலிருந்து டோஹா சென்று கொண்டிருந்த விமானத்தின் கேப்டன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: