மும்பை: இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலதனம் 100 பில்லியன் டாலரைத் தாண்டியது. இந்தத் தகவலை செபி வெளியிட்டுள்ளது.
1992-ம் ஆண்டு வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தாராளமாக அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியப் பங்குகளில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
இந்த வகையில் இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டு மூலதனம் 100 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்த நவம்பர் மாதத்தின் முதல் எட்டு தினங்களில் மட்டும் 3.5 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடு இந்திய பங்குச் சந்தையில் குவிந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா பங்குகளை வாங்க 2 பில்லியன் டாலர் வெளிநாட்டிலிருந்து குவிந்துள்ளது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் அதிக பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தாலும், அவர்களுக்கு புதிய பங்குகள் விரும்பும் அளவுக்கு கிடைப்பதில்லையாம். இதனால், வெளிச்சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குகிறார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக