டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நீரா ராடியாவை விசாரித்து முடித்துள்ள அமலாக்கப் பிரிவு, அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜாவின் மிக நெருங்கிய உதவியாளர்களான ஆர்.கே.சந்தோலியா மற்றும் ஏ.கே.ஸ்ரீவத்சவாவை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகுமாறு கூறி விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளது.
இவர்களில் சந்தோலியா, ராஜா அமைச்சராக இருந்தபோது, 2008ம் ஆண்டு அவரது தனிச் செயலாளராக இருந்தவர். சமீபத்தில் கபில் சிபல் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, இவர் தாய்ப் பணியான இந்திய பொருளாதாரப் பணிக்கு (Indian Economic Services) சேவைக்கு அனுப்பப்பட்டு விட்டார்.
ஸ்ரீவத்சவா, முதுநிலை துணை இயக்குநர் ஜெனரலாக (அகஸ்ஸ் சர்வீஸ்) இருந்தவர். இவரும் தற்போது அப்பணியலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் ராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எனவே ராடியாவைப் போல இவர்களையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
ராடியாவிடம் புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திது அமலாக்கப் பிரிவு என்பது நினைவிருக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக