தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிராம்ப்டன் கம்பெனி பெயரில் போலி லேபிளை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள கிராம்டன் கம்பெனியும், ஒரு தனியார் கம்பெனியும் சேர்ந்து கிராம்டன் கம்பெனிக்கு தேவையான பொருட்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த தனியார் கம்பெனியைச் சேர்ந்த சிலர் அதே போன்று போலியாக பொருட்களை தயாரித்து தூத்துக்குடி பகுதியில் கிராம்டன் கம்பெனியின் லேபிளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து கிராம்டன் கம்பெனியின் முதுநிலை சட்ட ஆலோசகர் கார்த்திக் (35) தூத்துக்குடி 2-வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தெர்மல் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் தெர்மல் நகர் போலீசார் கிராம்டன் கம்பெனி பெயரில் போலி லேபிள் ஒட்டி பொருட்களை விற்பனை செய்த துரைசாமி, ராஜேஷ்குமார் மற்றும் அந்த தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக