மும்பையைச் சேர்ந்த தங்கம் ஏற்றுமதியாளர்கள் சிலர், இந்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி., மூலம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதற்காக, பென் நகர கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தனர். அவர்களின் இந்த பணத்தைக் கொண்டு, முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் 480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கியின் தலைவர் சிசிர் தர்கார், அவரது மனைவி, வங்கியின் இயக்குனர் பிரேம் குமார் உள்ளிட்ட ஆறு பேரை, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வரும் 6ம் தேதி வரை, அவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக