புதன், 3 நவம்பர், 2010

இந்தியா வரும் ஒபாமாவுக்கு ஒருநாள் செலவு ரூ.900 கோடி


மும்பை: அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை வருவதற்கு ஒரு நாள் செலவு ரூ.900 கோடி ( 200 மில்லியன் அமெரிக்க டாலர்) என தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முறைப்பயணமாக வரும் 6-ம் தேதி இந்தியா வரவுள்ளார். இந்தியாவில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகிறார். இந்நிலையில் மும்பையில் ஓபாமா தங்குவதற்கான ஒரு நாள் செலவு ரூ. 900 கோடி என கூறப்படுகிறது. இதில் ஓபாமாவுடன் அவரது மனைவி மிட்செல் ஒபாமா, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 3000 பேர் வருகின்றனர். பாதுகாப்புப்படையினர், விமானம், ஹெலிகாப்டர், போக்குவரத்து, தாஜ்ஹோட்டலில் தங்குவதற்கான மொத்தம் செலவு ரூ.900கோடி (200 மில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: