"அமெரிக்க வர்த்தகம் வலுவடைய வேண்டியிருக்கிறது" என்று குறிப்பிட்ட ஒபாமா மேலும் கூறுகையில் " அப்படி வளம் பெற்றால், நாம் மேலும் அதிக பொருட்களை விற்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். எனது ஆசிய சுற்றுப்பயணத்தில் என்னுடன் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்களும் உடன் வருகின்றனர். அவர்களின் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கவும் அவற்றின் விற்பனைக்கு உதவுவதன் மூலமும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்." என்று கூறினார்.
ஒபாமாவின் இந்தியப் பயணத்தின் மூலம் மட்டும்அமெரிக்காவுக்கு 1200 கோடி டாலர்கள் அளவுக்கான வர்த்தக ஒப்பந்தம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் வழி அமெரிக்காவில் சுமார் 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இந்திய-அமெரிக்க தொழிலதிபர்களின் ஒரு சந்திப்பிலும் ஒபாமா பேசவுள்ளார். இஃதன்றி, இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக