சனி, 27 நவம்பர், 2010

தென்காசி-நெல்லை அகல ரயில்பாதை பணியில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிகள் தாமதமாக நடப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே ரயில் பாதை அமைக்கும் பணிகளில் சில முறைகேடுகள் நடப்பதாக ரயில்வே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் முதல் நெல்லை சந்திப்பிலுள்ள ரயில்வே கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நேற்றிரவு வரை நீடித்தது. இதில் பணிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் இதற்காக செலவிடப்பட்ட கணக்கு விபரங்களை சேகரித்தனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: