வாஷங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார்.
கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது.
கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.
கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அட்டார்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக