மிஸோரம் : மிஸோரம் மாநிலத்தில் சர்ச் வளாகத்தினுள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் பாலியல் உறவு வைத்து கொண்டதால் சர்ச் ஒரு வாரம் இழுத்து மூடப்பட்டது. மிஸோரமில் உள்ள தமாம் பகுதியில் உள்ள செர்சிப் எனும் இடத்தில் உள்ள ஐக்கிய பெண்டகோஸ்ட் சர்ச்சில் தகாத உறவு வைத்து கொண்ட திருமணமாகாத ஆணும் பெண்ணும் கையும் களவுமாக பிடிபட்டனர்.
சர்ச் வளாகத்தினுள் நடந்த இச்செயல் பாவச் செயல் என்பதால் சர்ச் இழுத்து மூடப்பட்டதாகவும், பின் பாதிரியார்களின் கலந்தாசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அவர்களை மன்னித்து விட்டதால் மீண்டும் சர்ச் திறக்க உத்தரவிடப்பட்டதாக சர்ச் நிர்வாகி வன்லால்சங்கா கூறினார்.
மாநிலத்தில் ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் சில சர்ச்சுகளில் நடைபெற்ற போது இம்மாபாதக குற்றத்துக்காக சர்ச்சுகள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டு கழுவி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்செயல் சர்ச் உள்ளே நடக்காமல் வளாகத்தினுள் நடந்ததால் சர்ச் இடிக்கப்படவில்லை என்று சர்ச் நிர்வாகம் கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக