சனி, 27 நவம்பர், 2010

சாத்தான் வேதம் ஓதலாமா ? - கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி!

பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் கோட்பாடுகளையும் தான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியதற்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் கண்டணம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சாத்தான் வேதம் ஓதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் தஞ்சை பெரிய கோயிலுக்கு பின்புற வாசல் வழியாக கருணாநிதி சென்றது ஏன் என்றும், அங்கு நடைபெற்ற ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களின் நடனத்தை கண்டு களித்தது ஏன் என்றும் மஞ்சள் துண்டு அணிவது ஏன் என்றும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், தனது சொந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோயிலுக்குச் சென்று குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் குடும்ப சகிதம் வழிபாடு செயதது ஏன் என்றும் குடும்ப உறுப்பினரில் ஒருவர் எப்போதும் ஜோதிடரையே சுற்றிக் கொண்டிருப்பது ஏன் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
மேலும், பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் கருணாநிதி, அவர்களது கொள்கைகளைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: