வெள்ளை மாளிகை: நண்பர்களுடன் கூடைப்பந்தாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று இடிபட்டதில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் உதடு கிழிந்தது.
சனிக்கிழமை ஓய்வு தினம் என்பதால், வாஷிங்டனில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானத்தில் தனது உறவினர்கள், நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் அதிபர் ஒபாமா. அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் ஒபாமாவிடம் இருந்து பந்தைப் பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் மிகவும் சாமர்த்தியமாக பந்தை தன் வசமே ஒபாமா வைத்திருந்த போது, மற்றொரு வீரரின் கை மூட்டு ஒபாமாவின் உதட்டில் பலமாக இடித்துவிட்டது.
எதிர்பாராத அந்த நிகழ்வால் ஒபாமாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், முதலுதவி அளித்தனர்.
பின்னர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உதட்டில் 12 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேர ஓய்வுக்குப் பிறகு தனது பணிகளை கவனிக்க வெள்ளை மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக