வெள்ளி, 5 நவம்பர், 2010

தயாநிதி திருமணம்-அழகிரிக்கு 'கைகொடுத்த' ஸ்டாலின்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் மத்திய அமைச்சரும் தனது சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் திருமண ஏற்பாடுகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந் நிலையில் ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் நேற்று மதுரை வந்தார்.

மு.க.அழகிரி வீட்டில் திருமண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் பங்கேற்ற அவர், பின்னர் திருமணம் நடைபெறும் தமுக்கம் மைதானத்திற்கும் சென்று பார்வையிட்டனர். மணமேடை, உணவு அருந்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட ஸ்டாலின் சில ஆலோசனைகளயும் வழங்கினர்.

பின்னர் வீடு திரும்பிய ஸ்டாலினுக்கும், செல்விக்கும் அழகிரி மதிய விருந்தளித்தார். இதையடுத்து விமானம் மூலம் மாலையே சென்னை திரும்பினர்.

தயாநிதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீத்தாராமனின் மகள் அனுஷாவுக்கும் வரும் 18ம் திருமணம் நடைபெறுகிறது.

மணமேடை, உணவு அருந்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

பிளாக்ஸ் போர்டுகள்-அழகிரி கண்டிப்பு:

இதற்கிடையில் திருமண நிகழ்ச்சிகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு மு.க.அழகிரி கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: