புதன், 3 நவம்பர், 2010

சிறுவனுக்கு ஆபத்து வராமல் இருக்கவே கடத்தல் காரர்களை தப்ப விட்டு பிடித்தோம்: கமிஷனர் ராஜேந்திரன் விளக்கம்

சிறுவனுக்கு ஆபத்து வராமல் இருக்கவே
கடத்தல் காரர்களை
தப்ப விட்டு பிடித்தோம்:
கமிஷனர் ராஜேந்திரன் விளக்கம்  கீர்த்திவாசன் மீட்கப்பட்டது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-

சிறுவனை கடத்தி சென்றவர்கள் விஜய், பிரபு என்பதை முதலிலேயே தெரிந்து கொண்டோம். அவர்களிடம் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதையே நாங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தோம்.
இதனால் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவதை தவிர்த்தோம். முதலில் கடத்தி சென்ற காரில் இருந்து வேறு காரில் சிறுவனை மாற்றியதில் எங்களுக்கு லேசான பின்னடைவு ஏற்பட்டது. எனவே இரவு முழுவதும் கடத்தல் காரர்களுடன் தொடர்ந்து பேச வைத்தோம்.

சிறுவனின் தந்தை ரமேஷ் தொடர்ந்து பேசினார். முதலில் ரூ. 3 கோடி கேட்டார்கள். பின்னர் ரூ. 1 கோடி கொடுத்தால் விட்டு விடுவதாக கூறினார்கள். சிறுவனின் நலன் கருதி பணத்தை கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பிடிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி ரமேஷ் கடத்தல்காரர்களிடம் ரூ. 1 கோடி கொடுத்துள்ளார். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

பணத்தை கொடுக்கும்போதே போலீசார் பிடித்து இருக்கலாமே என்று கருதலாம். பணத்தை வாங்க வரும்போது அவர்கள் வந்த காரில் சிறுவன் இருக்கிறானா? என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவசரத்தில் நாங்கள் ஏதாவது செய்து அது பொதுமக்களுக்கு இடைïறாகி விடக்கூடாது என நினைத்தோம்.

அவர்கள் தப்பி செல்லும் போது துப்பாக்கியால் சுட்டு பிடித்து இருக்கலாம். அப்படி நடந்தால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுவனையும் உயிருடன் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு விடும். எனவே சிறுவனை மீட்டதற்கு பிறகு அவர்களை தப்ப விட்டு பின்னர் பிடித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: