சிறுவன் கீர்த்திவாசன் கடத்தலில் கைதான விஜய், பிரபு ஆகியோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத் தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இருவரும் படித்து விட்டு சரியான வேலை இல்லாமல் இருந்தோம். எங்கள் பெற்றோருக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தொழில் அதிபர் ரமேஷ் கோடி, கோடியாக சம்பாதித்தார். கிரானைட் தொழில் உள் ளிட்ட பல தொழில்களை செய்து வந்தார்.
அவரிடம் பல முறை உதவி கேட்டோம். ஆனால் உதவி எதுவும் செய்யவில்லை. இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம். இதனால் அவரது மகன் கீர்த்திவாசனை கடத்த திட்டமிட்டோம்.
மகனை கடத்தினால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவரிடம் இருந்து பெற முடியும் என்று நினைத்தோம். அதன்படி கடந்த சில மாதங்களாக கடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். இதற்காக கார் ஒன்றையும் திருடினோம். திருட்டு காரில் கடத்தி சென்றால் இடையில் எங்காவது விட்டு விட்டு சென்று விடலாம் என்று கருதினோம்.
அதன்படி பள்ளியில் இருந்து திரும்பும் போது டிரைவரை தாக்கி விட்டு எங்கள் காரில் கீர்த்திவாசனை கடத்தி சென்றோம். பின்னர் கார் செட்டுக்கு சென்றோம். அங்கு சென்றதும் கீர்த்திவாசனை கார் டிக்கிக்குள் அடைத்து வைத்தோம்.
நாங்கள் அவனது உற வினர்கள் என்பதால் அவன் பயப்படாமல் இருந்தான். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. பதட்டமின்றி ரமேசிடம் பேசி வந்தோம்.
மகனுக்காக ரமேஷ் எவ்வளவு பணம் வேண்டுமா னாலும் கொடுப்பார். போலீசுக்கு சொல்ல மாட்டார் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது ஓரளவுக்கு நடந்தது.
போலீசுக்கு சென்றாலும் மகனை பணம் கொடுத்து பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் ரமேஷ் உறுதியாக இருந்தார். அவருடன் நாங்கள் பல முறை போனில் தொடர்பு கொண்டு பணம் தரும்படி பேசினோம். நாங்கள் கேட்ட படி ரூ. 1 கோடி பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
அந்த பணத்துடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றோம். ஆனால் போலீசார் எங்களை நோட்டமிட்டு வந்து பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக