புதன், 15 டிசம்பர், 2010

சமுதாய ஒற்றுமை?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..................................
எனக்கு கருத்து தெரிந்த நாள் முதல் நானும் இந்த பச்சிளம் பிறைக்கொடியை ஏந்தி பல கூட்டங்களில்
கலந்து கொண்டு தான் இருந்தேன்..அந்த நேரங்களில் இருந்த நம் சமுதாய அமைப்பாக தாய்ச்சபை என்று சொல்லக்கூடிய இந்த முஸ்லிம் லீக் இருந்ததை நாம் மறக்க முடியாது..பிறகு அப்துஸ் சமத் சாஹிப் அவர்களும், லத்தீப் சாஹிப் அவர்களும் ஒரு சில அரசியல் சானக்கியர்களால் பிரிக்கப்பட்டு இரு வேறு அணிகளாக வளம் வந்தார்கள் இதற்க்கு காரணம் என்ன?  பின்பு போகும் இடமெல்லாம் செருப்பு மாலைகளாக விழுந்தது வேறு விஷயம்....எங்கள் ஊரிலும்  அந்த செருப்பு மாலை விழுந்தது........................ராஜகிரி போன்ற ஊர்களில் உள்ளேயே வரவிடாமல் செருப்பு கயிறு கட்டி தடுத்ததும் நினைவிற்கு வருகிறது.
அதே அரசியல் சானக்கியரால் தேர்தல் நேரத்தில் இரு அணிகளாக இருந்த சமுதாய தலைவர்கள் தாங்கள் செய்யக்கூடிய தோல் பதனிடும் தொழில்கள் பாதிக்க கூடாது என்ற நோக்கில் ஒருவர் கருணாநிதி பக்கமும்,ஒருவர் ஜெயலலிதா பக்கமும் இருந்தார்கள்  என்பதும் மறக்க முடியாது......பின்பு அந்த இரு அணிகளிலும் பிரிந்து பல அணிகளாக சென்றவர்களும் இன்றைக்கு லட்டர்பேடு இயக்கங்களாக இருப்பது மறக்க முடியாது...................
இதே சமயத்தில் கோழையாக வாழ்வதை விட வீரமாக மரணிப்பதே மேல் என்ற வெற்றி முழக்கத்துடன் என்னை போன்ற வாலிபர்களை சுண்டி இழுத்த மாவீரர் சஹீத் பழனி பாபாவின்   முழக்கங்கள் இந்த தமிழகத்தையே ஆட்டிபடைத்தது.....பல வாலிபர்கள் தன்னை பழனி பாபாவுடன் இணைத்துக்கொண்டனர்.எங்கள் ஊரிலே பழனிபாபா உடைய உறுப்பினர் என்றால் விரோதியை பார்க்கும் அளவிற்கு எங்களை ஓரங்கட்டினார்கள்.நாங்கள் வைத்து இருந்த உறுப்பினர் அடையாள அட்டையை ஜமாஅத் வாங்கி கிளித்துப்போட்டது ஒரு காலம். ஆனால் அதே ஊரிலே ஜும்மா மேடையில் பழனி பாபாவையும் ஏற்றியதும் எங்களுக்கு மறக்க முடியாது.பின்பு பழனிபாபாவின் வீர மரணத்துக்கு பின் இந்த சமுதாயத்தை காப்பாற்ற வல்ல இறைவன் துணையோடு புறப்பட்ட சமுதாய இயக்கங்கள் ஒரு பக்கம்...இந்த சமுதாய இயக்கங்களின் வருகைக்கு பின்னால் தான் அரசு இயந்திரங்கள் இஸ்லாமியர்களுக்கு மரியாதை தந்தது என்பதை நாம் கொஞ்சம் கூட மறுக்க முடியாது........ஒரு நேரங்களில்
காக்கி உடை அணிந்து யார் வந்தாலும் எழுந்து நின்று அவர்களுக்கு பயந்த இந்த சமுதாயத்தின் வாலிபர்களை துணிவுடன் செயல் பட வைத்தது இந்த  சமுதாய இயக்கள் என்பதும் மறுக்க முடியாது......அதன் பின்னும் எத்தனையோ இயக்கங்கள் பல தலைவர்களின் பின்னாலே அணிவகுத்தது......இன்றைய கால கட்டங்களில் காவல் நிலையம்.ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு  கேந்திரங்களுக்கேல்லாம் எல்லாம் இஸ்லாமியனும் சென்று வரலாம் என்ற தைரியத்தையும் அல்லாஹ்வின் நாட்டத்தால் கொண்டு வந்ததும் இந்த சமுதாய அமைப்புக்கள் தான் என்பதையும் மறுக்க முடியாது.........இப்படி இருக்க இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .. ஆனால் ஒற்றுமையாக இந்த சமுதாயம்  தமிழகத்தில் இருக்க வேண்டும் என இன்று சொல்லிக்கொண்டு வருகிறோமே  நாம் அந்த ஒற்றுமைக்காக என்ன செய்தோம்.இதுவரை அதற்க்கான முயற்சிகள் என்ன என்பதை நாம்  அனைவரும் சற்று பகிர்ந்துக்கொள்ளலாமே?

கருத்துகள் இல்லை: