புதன், 15 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சாமி மனு

Subramanian Swamyடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தன்னை அரசுத் தரப்பு வக்கீலாக சேர்க்குமாறும், முன்னாள் அமைச்சர் ராஜாவை குற்றவாளி என்று அறிவிக்குமாறும் கோரி டெல்லி தீஸ்ஹஸாரி கோர்ட்டில் இன்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜாவுடன் தொடர்புடைய ஹவாலா புரோக்கர்கள் குறித்த விவரம் இன்று நடந்த சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயினுக்கும், ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகள் அவரது டைரி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுவே ராஜாவுக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. எனவே ராஜா மீது விசாரணை நடத்த வேண்டும், அவரை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரவுள்ளேன்.

ராஜாவை இன்றே கோர்ட் குற்றவாளி என்று அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

ராடியாவின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் ராஜா நிச்சயம் அமைச்சராகியிருக்க மாட்டார். ராடியாவின் ஊடுறுவல் எதிர்க்கட்சிகள் வரையும் பரவியுள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாவை தொலைத் தொடர்பு அமைச்சராக்கியுள்ளார் ராடியா. தயாநிதி மாறன் அமைச்சராகக் கூடாது என்பதில் அவர் தீவிரமாகவும் இருந்துள்ளார். இந்த நன்றிக் கடனுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் ராஜா, ராடியாவுக்கு செய்துள்ளார் என்றார் சாமி.

கருத்துகள் இல்லை: