வியாழன், 16 டிசம்பர், 2010

படங்களும் - செய்திகளும் (நாளிதழ் செய்திகள்)

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


1. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏற்றினால் விரைவில் பழமைக்கு மாறிவிடுவதுதான் நல்லதோ ?

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நேற்றிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ( ஐ.ஓ.சி) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ( எச்.பி) ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த இரு நாட்களில் பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு என்று அறிவிக்கும் என்று கூறப்பட்டது. நிச்சயமாக இந்த நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ2.50க்கு மேல் உயர்த்தலாம் என்று கூறப்பட்டது.

           Laundry Detergent Powder. Photo by Tendersprout



2. சில வருடங்களுக்கு முன்பு,  நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன.  பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின.  தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான். தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் "பேஸ்'டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது.  தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன.  நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க'ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது. 
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை.  இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம்.  இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.

 
3. மகள் இறந்தது கூட தெரியாமல், பட்டினியால் மயக்கமடைந்த முதியவரை, இளைஞர்கள் சிலர்காப்பாற்றியுள்ளனர். சமீபத்தில், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அகலப்படுத்தப்பட்ட போது, அந்த பணியை மேற்கொண்டவர்கள், அப்பகுதியில் உள்ள கந்தன் பார்க்கில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். அவர்களது பணி முடிந்த பின், அந்த குடிசைகளை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.அவர்கள் விட்டுச் சென்ற குடிசையில் இருந்து, நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் குடிசைக்குள் நுழைந்து பார்க்க, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல்... அதன் அருகே, நினைவுகளைத் தொலைத்த முதியவர் ஒருவர். உடனே, சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் போனது.விரைந்து வந்த காவல்துறை, அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் உடலை பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவித்து, டீ மற்றும் பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து, காவல்துறை முதலில் கருணை காட்டியது; அதன் பின் விசாரணையை துவக்கியது. 90 வயதில் கண்கள் வெளிறிப்போய், திக்கித் திக்கி பேசத் துவங்கினார் அந்த முதியவர்.
"என் சொந்த ஊர் திருநெல்வேலி... எங்க ஊர் சாமியின் பேரான பேராட்சிதான் என்னோட பேரு. ஊரில பொழப்பு சரியா இல்லை. அதனால, பொண்டாட்டி, புள்ளையோட மெட்ராஸ் வந்துட்டோம். அங்கங்க கிடைச்ச வேலையை வைச்சு, பிழைப்பு நடத்தினோம். உடம்பு சரியில்லாம இருந்த என் பொண்டாட்டி, கொஞ்சநாள் முன்னால செத்துப் போயிட்டா. அம்மா போன அதிர்ச்சியில, என் பொண்ணு முத்துலட்சுமிக்கு கை, கால் விளங்காம போயிடுச்சு. அவளை தனியா எங்கேயும் விட முடியாதுங்கறதால, என்னோடவே வைச்சுகிட்டு, கிடைக்கிறதை சாப்பிட்டுட்டு இருந்தோம்.நாங்க ரோட்டில சிரமப்பட்டு நடந்து வர்றதைப் பார்த்து, ஆம்புலன்சில் வந்தவங்க, இங்க கொண்டுவந்து இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க. இந்த குடிசைங்க காலியா இருந்ததால, இங்க வந்து ஒண்டிகிட்டோம்.பசி வயித்த கிள்ளிச்சு... யாரும் இந்தப் பக்கம் வராததால, சாப்பிட எதுவும் கிடைக்கல. வெளியே போய் பிச்சை கேட்கஉடம்பு ஒத்துழைக்கலை. பசி அதிகமானதால மயக்கமாயிட்டோம். இப்ப நீங்க வந்து எழுப்பிய பின்னாலதான், என் பொண்ணசெத்துட்டான்ன தெரிஞ்சது...'அழக்கூட முடியாமல், "ஹீனமான' குரலில் முதியவர் பேசிமுடிக்க, காவல் துறையினர் கண்களிலும் கண்ணீர் மழை. முதியவர் மீது பரிதாபப்பட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர்.ஆனால், அங்கிருந்த இதயமற்ற ஊழியர்கள், "கவனிக்க ஆள் இல்லை' எனக் கூறி, அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். தங்களின் வாதம் எடுபடாத நிலையில், காவல்துறை கடமையைத் தொடர புறப்பட்டு விட்டது. அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தமிழக அரசின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களோ, " ஏற்கனவே முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனிக்க ஆள் இல்லாததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டனர். அவரை, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் எனஊழியர்கள் சொல்லி விட்டனர்' என தெரிவித்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டனர்.கருணை, அன்பு, பரிவு போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தொடர்ந்து ஒதுக்கித் தள்ளிய நிலையில், காஞ்சிபுரம் தாசில்தார் வரதராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக, சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, முதியவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.அவரின் தலையீட்டால், கந்தன்பார்க்கிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் முதியவரின், "உயிர் காக்க' அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.
 
4.  பார்வையை காரணம் காட்டிபள்ளிக்கு வர ஆசிரியர்கள் அனுமதி மறுத்த பெண்தற்போது பிழைப்புக்கு சிரமப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் வாத்தியார் தோப்பை சேர்ந்த பில்லன் மகள் கவிதா(18). இவருக்கு மாலைக்கண்நோய் இருந்தது. மண்டபம் அரசு தொடக்கப் பள்ளியில் நன்கு படித்துக் கொண்டிருந்த கவிதாவின் பார்வைநாளடைவில் குறையத் துவங்கியதை காரணம் காட்டிபள்ளிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்துநான்காம் வகுப்புடன் கவிதாவின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வீட்டில் முடங்கிய கவிதாவுக்குகுடும்பத்தார் மட்டுமே உலகமாகினர். காலம் கடந்த நிலையில் பெற்றோருக்கு முதுமை ஏற்படவேபிழைப்புக்கு வழிதேட துவங்கினார்கவிதா. தனது எதிர்காலத்திற்கு உதவி கேட்டுதாய் சமுத்திரவள்ளியுடன் ராமநாதபுரம் வந்த கவிதாஅதிகாரிகளிடம் மனு அளித்தார்.
அவர் கூறியதாவது:நன்கு படித்துக்கொண்டிருந்த எனக்குபள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பகல் பார்வையில் சிரமம் இல்லாமல் இருந்தது. படிப்பை நிறுத்திய பின்வீட்டில் முடங்கியதால்முழுமையாக பார்வை குறைந்து வருகிறது. அப்பா இறந்த நிலையில்எனது எதிர்காலம் கருதி உதவிகேட்டு வந்தேன்.இவ்வாறு கவிதா கூறினார்.உதவி செய்ய விரும்புவோர், 96593 92763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.



                              

5. பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க, "மிர்ச்சி ஜோன்க்' என்ற அமைப்பு களம் இறங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் டில்லியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால், டில்லி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த மாதம் டில்லியில் நடந்த ஒரு சம்பவத்தில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலால் கடத்தி, கற்பழிக்கப்பட்டார். பின், மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணை, மர்ம நபர்கள் காரில் ஏற்றி வந்து, அவர் பணிபுரியும் நிறுவனத்தின் அருகே வீசிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் டில்லி நகரையே உலுக்கியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் போலீசார் ஒரு பக்கம் ஈடுபட்டு வந்தாலும், "மிர்ச்சி ஜோன்க்' என்றழைக்கப்படும் ஒரு அமைப்பும் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு, "டிப்ஸ்'களை இந்த அமைப்பு எடுத்துக் கூறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. மேலும், பெண்களுக்கு தற்காப்பு கலைகளும் இந்த அமைப்பின் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. தனியாக செல்லும் பெண்கள், எப்போதும் கைப்பைகளில் சிறிய பாக்கெட்டில் மிளகாய் அல்லது மிளகு தூளை வைத்துக் கொள்ள வேண்டும்; சாலையை ஒட்டியுள்ள நடைபாதைகளில் மட்டுமே நடந்து செல்ல வேண்டும்; போலீஸ் உள்ளிட்ட முக்கியமான டெலிபோன் எண்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு கூறியுள்ளது.
பெண்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவதற்காக, கைதேர்ந்த கலைஞர்களையும், ஆலோசனை கூறுபவர்களையும் இந்த அமைப்பு வைத்துள்ளது. அவர்களைக் கொண்டு, டில்லி நகரின் பல்வேறு இடங்களில் தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு குறித்து அதன் இயக்குனர் ஷாலினி மாலிக் கூறுகையில், "பெண்களின் பாதுகாப்பிற்காக பெண்களே நடத்தும் ஒரு இயக்கம் இது. தற்காப்புக் கலைகளையும், விழிப்புணர்வையும் பெறும் பெண்கள், குற்ற செயல்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதோடு, மற்ற பெண்களையும் காப்பாற்ற முடியும்' என்றார். அவசரத்திற்கு உதவுவதற்காக, ஹெல்ப் லைன் ஒன்றையும், "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு அமைத்துள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஹெல்ப் லைனுக்கு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஈவ் - டீசிங், குடும்பத் தகராறு குறித்தவையே ஆகும்.

6. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மாந்திரீகம் செய்வதாக, நான்கு பேரிடம் 5.50 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாயுடன் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (32). இவரது, குடும்பத்தில் பிரச்னை இருந்தது.(இப்பொது அதைவிட பிரச்சினை அதிகமாகி விட்டதே ) இது குறித்து நோட்டமிட்டு அறிந்த 35 வயது நபர், மணி ஆசாரி என்ற பெயரில், கடந்த 11ம் தேதி, அறிமுகம் ஆனார். கஷ்டம் நீங்க மாந்திரீகம் செய்ய வேண்டும் எனக்கூறி, அவரிடம் மூன்று பவுன் நகை, 800 ரூபாய் வாங்கியுள்ளார். மாந்திரீகத்தை நம்பி ராஜா (28), முத்துக்குமார் (32), அப்துல் சமது மனைவி பைரோஷா (36) ஆகியோரும் பணம், வெள்ளி பொருட்களை கொடுத்தனர். இரண்டு நாட்களாக பூஜை செய்த அவர், நேற்று காலை தலைமறைவானார். நாராயணன் புகாரின்படி, இன்ஸ்பெக்டர் பாலாஜி, ராஜேஷ் எஸ்.ஐ., விசாரிக்கின்றனர்.

             Thyroid Fast Heart Beat Big Abdomen picture in wellpage  Overweight male - taken with fish-eye lens for exaggerated...

7. உணவு பழக்கம் மாறிவரும் சூழ்நிலையில், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இடுப்பு பருமனாவது டயபடீஸ் உட்பட பல தீராத நோய்க்கு அறிகுறி என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இடுப்பு பருமனானவர்கள் பற்றிய ஒரு ஆய்வு நடைபெற்றது. இதில், பெண்களில் 35.3 சதவீதம் பேருக்கும், ஆண்களில் 22.4 சதவீதம் பேருக்கும் இடுப்பு பருமன் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது டயபடீஸ் உட்பட பல தீராத நோய்க்கான அறிகுறி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




தேவையற்ற கொழுப்பு காரணமாக வயிறு, இடுப்பு பருமனாவதால் மோசமான விளைவுகள் ஏற்படும்.  இதனால் சுவாச கோளாறு, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்சுலின் சுரப்பதை தடை செய்வதால் டயபடீஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலானவர்கள் இத்தகைய விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என மெட்ராஸ் டயபடீஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.  பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் இடுப்பு அளவு பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் நடைபயிற்சி, கட்டுப்பாடான உணவு முறை மூலம் இடுப்பு பருமனை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த டயபடீஸ் நோய் நிபுணர் அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.



இதுக்கு நம்ம சென்னையே தேவலாம். இப்படியா ஊரை நாரடிக்கிறது. இதைவிட மோசமான படங்கள்
நமது குரூப்பில் வெளியிட தகுதியில்லாததால் இதை மட்டும் உங்கள் பார்வைக்காக.

8. அமைச்சரவையில் ஒரு பெண்கூட அமைச்சராக இல்லாததை கண்டித்து உக்ரைனில் மகளிர் உரிமை ஆதரவாளர்கள் சிறுநீர் நிரப்பிய பாட்டில்களை தலைமை செயலகத்துக்குள் வீசி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் ஆண்களே. ஒரு பெண் கூட அதில் இடம் பெறவில்லை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 30 க்கும் மேற்பட்ட மகளிர் உரிமை ஆதரவாளர்கள் அரசு தலைமை செயலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் பார்த்து கொண்டிருக்கையில் வழக்கத்துக்கு மாறாக, நூதன முறையில் திடீரென தண்ணீர் மற்றும் சிறுநீர் நிரப்பிய பாட்டில்களை வீசி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதனால், உள்ளே இருந்த அதிகாரிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பிறகு, துப்புரவு தொழிலாளர்கள் வந்து அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71

கருத்துகள் இல்லை: