செவ்வாய், 7 டிசம்பர், 2010

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு!

தமிழகத்தை புயல் தாக்கக்கூடும் எனச் செய்தி வந்துள்ளதால், மின் விபத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தகுந்த நபர்களை கொண்ட குழு அமைத்து, அவசரத் தேவைக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான மின்மாற்றி மற்றும் மின் பாதைகளில் மின் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், துணை மின் நிலையம் மற்றும் பிரிவுகளில், தகுந்த கவனத்துடனும் விபத்து நிகழா வண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்க்க அறுந்து கிடக்கும் மின் கம்பிகளையும் மற்றும் மின்சாரப் புதை வடங்களையும் தொடவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது. வீட்டிலுள்ள மின் தளவாடங்களை ஈரமான பொருட்களை பயன்படுத்தி, கையாள வேண்டாம். மின் மாற்றி மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்கம்பங்கள், இழுவைக் கம்பிகள் மற்றும் பிற மின் சாதனங்களை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே மெயின் சுவிட்சுகளை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு, அருகிலுள்ள மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மேலும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், செல்வதையும் தவிர்க்கவும். மின்சார விபத்துகள் தொடர்பாக 044- 2852 1949 / 2859 4234/2852 1109 / 155333 ஆகிய எண்களில் தெரிவித்து, உதவி பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71

__._,_.___

கருத்துகள் இல்லை: