புதன், 1 டிசம்பர், 2010

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்....
என்றான் முந்தைய நாட்களில் ஒரு கவிஞன்.
எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அதை நான் தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லை.
இது இந்நாளில் வாழும் ஒரு கவிஞனின் வார்த்தை.
கடலின் ஆழத்திற்கு நீந்திச் சென்று, அங்குள்ளவற்றை படம் எடுத்து பாமரனுக்கும் காட்டு
அறி யலாளர்களாலும் எங்கே நிம்மதி என்பதை சொல்ல முடியவில்லை. வானத்தின் உயரே செவ்வாய்க் கிர கத்து காட்சிகளை பூமியில் இருந்தே கண்டு வியக்கும் விஞ் ஞானிகளாலும் எங்கே நிம்மதி என்று கண்டுபிடித்துச் சொல்ல இயலவில்லை.
வெண்ணையைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைந்தானாம் - முட்டாள் களைப் பார்த்து தமிழில் கூறும் பழமொழி இது. இந்தப் பழமொழியை உண் மைப்படுத்துவது போலவே
இன்றைய மனிதனின் நிலை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் நிம்மதியைத் தேடி அலை கிறார்கள். பல்வேறு வழிமுறை களை தேர்வு செய்கிறார்கள். விளைவு ....
புகைப்பழக்கம்
""சற்றே இளைப்பாறுங்கள் சார்மினார் புகையுங்கள்'' என்றும், ""ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி - ஒரே ஒரு சிசர்ஸ் சிகரெட்'' என் றும் விளம்பரம் செய்யப் படுவதைப் பார்த்து விட்டு, புகைப் பிடித்தலின் மூலம் நிம்மதியை தேடுபவர்கள் ஏராளம். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம் என்று கூறிக் கொண்டே, நுரையீரலையும், கல்லீ ரலையும் புண்ணாக்கிக் கொண்டு - இருமலோடும், காச நோயோடும் போராடிக் கொண்டு இருக்கிற நிம்மதியையும் தொலைத்தவர்ளே ஏராளம்.
போதை
மது, கஞ்சா, அபின் போன்றவை மூலம் போதையில் மிதக்கலாம். அதன் மூலம் தன்னிலை மறக்கலாம். தற்காலிகமாவது சற்றே நிம்மதி யைப் பெறலாம் என்று எண்ணி மயங்கியவர்கள் ஏராளம். முடிவு நிம்மதியை மட்டும் அல்லாமல், மானத்தையும், வருமானத்தையும் இழந்து வாழ்வில் அல்லல் படுபவர்களே ஏராளம்.
உழைப்பு
உழைப்பே உயர்வு தரும் என்று வேலையில் முழுமையாக கவனம் செலுத்துபவர்களுக்காகவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. முதலாளி தரும் ஊதி யத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அங்க லாய்த்துக் கொண்டு நிம்மதியைத் தேடும் தொழிலாளர்கள்
தொழிலாளிகள் பிரச்சனை பெரும் பிரச்சனை என்று கூறிக் கொண்டே முதலாளிகளும் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். நிம்மதியைத் தேடி ஓடுகிறார்கள்.
வீட்டில்...
தொழில் நிறுவனங்களில் நிம் மதி இல்லை. வீட்டுக்குச் செல் வோம், மனைவி மக்களோடு சற்று நேரம் நிம்மதியாக இருப் போம் என்று வீட்டுக்கு வந்தால், வாடகை பாக்கி, கரண்ட் பில், ரேசன் பிரச் சனை, பள்ளிக்கூடம் பீஸ் கட்ட வேண்டும், மளிகைக் கடையில் பாக்கி என்று பல்வேறு பிரச்சனை கள் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கின்றன. வீடு பலருக்கும் சுடுகாடு போல தோற்றம் அளிக் கிறது.
கடை வீதி
அலுவலகத்திலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் நிம்மதி இல்லை, சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வருவோம். அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி கிடைக் கும் என்று கடை வீதிகளில் நடந் தால், அவசரம் அவசரமாக செல் லும் மக்கள் கூட்டம், சப்தம், கூச் சல், நெரிசல், சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம், போக்குவரத்து இடையூறு மறுபுறம்... சில நேரங்களில் சாவு கிராக்கி வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டாயா? என்று சபிக்கும் ஆட்டோ, பஸ் டிரைவர்களின் சாபம்... எங்குமே நிம்மதியில்லை என்று புலம்ப வைக்கிறது.
கடற்கரை
கடை வீதிகளைத் தாண்டி கடற் கரைக்கும் செல்வோம், நிம்மதியாக கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே காற்றை அனுபவிக்க லாம் என்று முடிவெடுத்து, கற்கரை மணலில் காலை வைத்தால் அங்கும் சுனாமி பீதி, சுண்டல்காரன் தொல்லை, காதலர் சேட்டை, காமுகர் வேட்டை என்றும் கடல் உள்வாங்கி விடுமோ என்ற பீதியும் மனதை அலைபாய வைக்கிறது. நிம்மதியை கெடுக்கிறது.
கிராமங்கள்
நகர்ப்புற வாழ்வு நரக வாழ்வாக உள்ளது. எனவே நான் கிராமத்திற்கு சென்று "செட்டில்' ஆகிவிடப் போகிறேன். கிராமப்புற வாழ்வில் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்ற முடிவெடுத்து கிராமத்தில் குடியேறி னால் அங்கும் மதக் கலவரம், சாதிக் கலவரம், அரிவாள் கத்தி, கம்பு என்று தூக்கிக் கொண்டு அலை கிறார்கள். பயங்கர மான வாழ்க் கையாக கிராம வாழ்க்கை ஆகிவிட் டது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
விண்ணில்
நகர்ப்புறத்திலும் நிம்மதியாக நடக்க முடியவில்லை, கிராமப்புறத் திலும் பயமற்ற வாழ்வு இல்லை, நிம்மதி என்பது வானத்திலாவது கிடைக்குமா என்று பார்த்தால் - அங்கும் விண்கலம், சேட்டிலைட் தொந்தரவு தாங்க முடியவில்லை. அவனவன் அணுகுண்டு வெடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலை. ஓசோன் என்னும் வளி மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று கூப்பாடு வேறு.
வலியவன் - எளியவன்
இருவேளை உணவு உருப்படி கிடைக்காத ஏழைகள், வசதி உள்ளவன் மாட மாளிகையில் குளிர்சாதன அறையில் நிம்மதியாக இருக்கிறான். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான். பண வசதி படைத்தவனோ, குளிர் சாதன அறையில் பட்டு மெத்தை யில் படுத்தும் கூட மாத்திரை இல்லாமல் வாழ முடியவில்லையே, வாழ்க்கையில் எங்குதான் நிம்ம தியோ என்று ஏக்கப் பெரு மூச்சில் தூக்கம் வராமல் தவிக்கிறான். இரும்புப் பெட்டியில் உள்ள பணத்தை பாதுகாக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை.
பிரபல்யங்கள்
பாமரர்களும், பரம ஏழைகளும் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள், பிரபல்யமானவர்களாவது நிம்மதி யாக இருக்கிறார்களா? என்று பார்த்தால், பதில் இல்லை என்பது தான். இந்தியாவிலேயே இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று மற்றவர்க ளால் புகழப்படுபவர்களும் கூட இமயமலை உச்சியிலாவது நிம்மதி கிடைக்குமா? என்று ஏங்கும் நிலை.
ஆட்சியாளர்கள்
குடிமக்களுக்குத்தான் நிம்மதி இல்லை, குடிமக்களை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்காவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. ஆட்சியாளர்களால் பயமின்றி சுதந்திரமாக நடமாடவே முடிய வில்லை. குண்டு துளைக்கும் காரில் செல்ல வேண்டி உள்ளது, சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாத அவல நிலை.
காட்டில்
ஆசாபாசங்களும், சொந்த பந் தங்களும் தான் நிம்மதி கெடுவதற் குக் காரணம். ஆசாபா சங்களையும், நாடு நகரங்களையும் துறந்து, துற வறம் மேற்கொண்டு, காட்டுக்குச் சென்று விடுவோம். அங்குள்ள இலை தலைகளை அணிந்து காய் கனிகளை சாப்பிட் டுக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று எண்ணி காடுகளுக்குள் சென்றால், அங்கும் நிம்மதி இல்லை. ஏனெனில் காடு கள் என்பது பயங்கரவாதி களின் பதுங்கும் இடமாகவும், தீவிரவாதி களின் பயிற்சிப் பாசறைகளாகவும் மாறிவிட்டது.
மயானம்
கூச்சல் குழப்பம் எதுவும் இல் லாத நிலையை "மயான அமைதி' என்பார்கள். அந்த மயானத்தி லாவது சற்று நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மயா னத்தை நோக்கினால், அது பேய், பிசாசு கதைகளுக்கான ஊற் றுக் கண்ணாடியாகவும், சாராய சாம் ராஜ்யவாதிகளின் கூடாரமாக வும் திகழ்வதையே பார்க்க முடி கிறது.
எங்கே நிம்மதி?
உண்மையிலே நிம்மதி என்பது தேடி அலையக்கூடிய ஒன்றா, எல்லை இல்லை. சில வகையான பயிற்சிகளின் மூலமாகவும், தியா னங்களின் மூலமாகவும் தான் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று பிரல்யமான மனோதத்துவ நிபுணர் களும் யோகா பயிற்சியாளர்களும் கூறுகின்றனர். இன்றைய அறிவியல் உலகமும் அதனை சரிகண்டுள்ளது.
இஸ்லாம்
இறை மார்க்கமான இஸ்லாம், தியானத்தின் மூலமும், சில பயிற்சி யின் மூலமாகவும் தான் நிம்மதியை அடைய முடியும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டது.
அல்லாஹ் கூறுகிறான்...
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (திக்ரு செய்வதால்) அவர்களுடைய உள்ளங்கள் அமைதியைப் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 13:28


இந்த வேதத்தில் இருந்து உமக்கு அறிவிப்பட்டதை எடுத்து ஓதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநாட்டு வீராக. நிச்சயமாக தொழுகை மானக் கேடானவற்றை விட்டும், தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக அல் லாஹ்வை நினைவு கூர்வது (திக்ரு செய்வது) மிகவும் பெரியதாகும்.
அல்குர்ஆன் 29:45

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும், நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும், அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (திக்ரு செய்யுங்கள்)
அல்குர்ஆன் 4:103

மனிதர்கள், அல்லாஹ்வை (திக்ரு செய்வது) நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்று வதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும், அவர்களது வியாபாரங்களோ, கொடுக்கல் வாங்கலோ பாராமுகம் ஆக்காது. உள்ளங்களும், பார்வைகளும் தடுமாறக் கூடி யஅந்த (மறுமை) நாளை மட்டும் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 24:37

(அல்லாஹ்வுடைய அடியார்களாகிய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களது விலாப்புறங்கள் மீது சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ரு செய்)கிறார்கள். வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பை சிந்தித்து, ""எங்கள் ரட்சகனே! இவற்றை எல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகாதூய வன், நரக நெருப்பின் வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (என்று பிரார்த்தனை செய்வார்கள்)
அல்குர்ஆன் 3:191

நிம்மதிக்கு வழி
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், இறை நினைவு மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதை தெளிவாகக் கூறுகிறான். அதிலும் குறிப்பாக திக்ரு, தொழுகை, பிரார்த்தனை செய்வது தான் சிறந்த இறை நினைவு என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
""அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உங்கள் அமைதி பெறுகின்றன.'' (அல்குர்ஆன் 13:28)

கருத்துகள் இல்லை: