புதன், 1 டிசம்பர், 2010

Wikileaks - விக்கிலீக்கின் அடுத்த ரகசிய கசிவு எது?

இலண்டன்: உலகையே பரப்பாக்கியிருக்கும் விக்கி லீக்ஸ் ரகசிய கசிவு இனைய தளம், விரைவில் அமெரிக்க வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆவனங்களை வெளியிட இருப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பத்திரிக்கையான போர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் புகழ்பெற்ற வங்கிகள் சில எவ்வாறு செயல்பட்டன, அதன் மேலாண்மை உயரதிகாரிகள் எவ்வாறெல்லாம் சுயநலமாக செயல்பட்டு முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்த ஆவனங்களை அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் விக்கிலீக்ஸ் இனைய தளம், அமெரிக்காவின் வெளியுறவு தொடர்பான ஆவனங்கள்,ஆப்கன் யுத்தம் மற்றும் இராக் யுத்தம் குறித்த தகவல் பரிமாற்றங்களை இனையத்தில் வெளியிட்டு அமெரிக்க அரசாங்கத்திற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் நம்பகத்தன்மை உலக நாடுகளிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.  இந்த ஆவனங்களில் அமெரிக்கா, பிற நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை உளவு பார்த்த தகவலும் வெளியாகியுள்ளன என்பதால் அமெரிக்க அரசு, இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட அனைத்து நட்பு நாடுகளுக்கும் வெளியாகும் ஆவனங்கள் குறித்து முன் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: